கர்ப்ப காலத்தில் ஸ்கேன் செய்யும் போது, பெற்றோர்கள் கருவில் உள்ள தங்கள் குழந்தையின் வளர்ச்சியைப் பார்பதற்கும் அவர்களின் வளர்ச்சி சரியாக தான் உள்ளது என்பதை உறுதி செய்வதை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
கர்ப்பக்காலத்தில் எடுக்கப்படும் ஸ்கேன்களுக்கு குழந்தை சரியான நிலையில் இருக்க வேண்டும்.
இருப்பினும், சில நேரங்களில் குழந்தை சரியான நிலையில் இல்லாமல் இருப்பதால் ஸ்கேன் செய்யும் போது தெளிவான படங்களைப் பெறுவது சவாலாக இருக்கும்.
இந்த வலைப்பதிவில், சிறந்த ஸ்கேன் முடிவைப் பெற, கர்ப்ப காலத்தில் ஸ்கேன்களின் போது குழந்தையை சரியான நிலைக்கு கொண்டுவர குறிப்புகளை (tips to turn baby during scan in tamil) பார்க்கலாம்
ஸ்கேன் செய்யும் போது குழந்தையை சரியான நிலைக்கு கொண்டுவர குறிப்புகள் (Tips to turn baby during scan in tamil)
தாய் படுக்கும் நிலையை மாற்றி முயற்சிக்கவும்
உங்கள் குழந்தையின் சரியான நிலைக்கு கொண்டு வர வெவ்வேறு முறையில் பரிசோதனை செய்யவேண்டும்.
நஞ்சுக்கொடிக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் என்பதால், உங்கள் இடது பக்கத்தில் படுத்துக் கொள்ளத் தொடங்குங்கள்.
மெதுவான அசைவுகள் கொடுங்கள்
உங்கள் இடுப்பை அசைப்பது அல்லது மெதுவாக இடுப்பை சாய்த்து கொள்ளுவது சில சமயங்களில் உங்கள் குழந்தையை சரியான நிலைக்கு கொண்டுவர உதவியாக இருக்கும்.
இதனோடு, ஸ்கேன் செய்யும் போது சிறிய நடை பயிற்சி அல்லது உங்கள் நிலையை மாற்றுவது கருவின் அசைவை தூண்டும்.
இனிப்பு சாப்பிட்டு முயற்சிக்கவும்
கர்ப்ப காலத்தில் இனிப்பான உணவுகள் எடுத்து கொள்ளுவது, சாக்லேட்டுகள் அல்லது அதிக அளவு உள்ள சர்க்கரை பானங்களை உட்கொள்ளுவதால், கருவை அசைக்க உதவும் மற்றும் இந்த சுவைகளுக்கு பதில்களை வெளிப்படுத்தும் வகையில் குழந்தையை மெதுவாக நகர தொடங்கும்.
இந்த முடிவுகள் மாறுபட்டாலும், இது ஒரு வலி இல்லாத முயற்சியாக இருக்கும். நீங்கள் தனிப்பட்ட முறையில் ஆலோசனையை பெற விரும்பினால் உங்கள் மருத்துவரை அணுகவும்.
வயிற்றில் மசாஜ் செய்யலாம்
உங்கள் வயிற்றை மெதுவாக மசாஜ் செய்வது மூலம் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் ஒரு அமைதியான உணர்வை அளிக்கும். லேசான அழுத்தத்தைப் பயன்படுத்தும்போது அதாவது மென்மையான மற்றும் வட்ட இயக்கங்களை முயற்சி செய்யலாம்.
மென்மையான தொடுதல் மற்றும் மசாஜ் செய்வது உங்கள் குழந்தையை சரியான நிலைக்கு மாற்ற உதவி செய்யும்.
முடிவுரை:
முதல் முயற்சியின் போது உங்கள் குழந்தை திரும்பவில்லை என்றால் நம்பிக்கையை இழக்காதீர்கள்.
பொறுமையாக இருங்கள், உங்கள் மருத்துவர் உடன் குழந்தையின் நிலையை பற்றி முழுமையாக பேசுங்கள் , மேலும் உங்கள் குழந்தையின் நிலை மற்றும் முன்னேற்றத்தை சரியாக கண்காணிக்க கூடுதல் ஸ்கேன் அல்லது சந்திப்புகளை திட்டமிடலாம்.
உங்கள் குழந்தையின் அசைவுகளைப் பற்றி நீங்கள் கவலைப்பட்டால், ஸ்கேன் செய்யும் போது உங்கள் கரு மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெறவும்.