கருமுட்டை மற்றும் விந்தணுக்களின் தரத்தை எப்படி அதிகரிப்பது?

2478
Improve Egg and Sperm Quality

கருத்தரித்தலில் பெண்களுக்கு முக்கியமானது கருமுட்டை, அதே போன்று ஆண்களுக்கு விந்தணுக்களின் தரம் முக்கியமானது. இவற்றில் உண்டாகும் குறைபாடுகள் கருத்தரித்தலில் சிக்கலை உண்டு செய்துவிடும்.

ஒரு பெண் குழந்தை பிறக்கும் போதே மூன்று லட்சம் கருமுட்டைகளை கொண்டு தான் பிறக்கின்றன. குழந்தை வளரும் போது இந்த கருமுட்டையின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வரும்.

பெண் குழந்தை வளர்ந்து பூப்படையும் போது ஒவ்வொரு மாதமும் ஒரு கருமுட்டை மட்டுமே முழு வளர்ச்சி அடைந்து கர்ப்பபையை சென்றடையும். பிறகு இவை விந்துவுடன் இணைந்து கருத்தரித்தலை உண்டு செய்யும்.

கருமுட்டையானது விந்தணுக்களுடன் இணையாத நிலையில் கர்ப்பப்பை சுவருடன் இணைந்து ரத்தமாக வெளியேறும். இந்த உதிரபோக்கு தான் மாதவிடாய் சுழற்சி என்று அழைக்கப்படுகிறது.

அதனால் தான் ஒவ்வொரு பெண்ணுக்கும் கருமுட்டை என்பது மிக முக்கியமானதாக பார்க்கபடுகிறது.

ஒவ்வொரு பெண்களுக்கும் கருமுட்டை என்பது மிக முக்கியம். மேலும் கருப்பையில் உள்ள ஆரோக்கியமான முட்டைகள் அவளது மாதவிடாய் சுழற்சியின் சீரான தன்மை, எதிர்காலத்தில் கருவுறுதல் மற்றும் கருத்தரிக்கும் திறனை தீர்மானிக்கிறது.

கருமுட்டையின் தரத்தை ஆரோக்கியமானதை உறுதி செய்வது போன்று அதன் பாதிக்கும் காரணிகள் குறித்தும் அறிந்துகொள்ள வேண்டும்.

உணவு, ஊட்டச்சத்து அன்றாட வாழ்க்கையில் மன அழுத்தம் மற்றும் ஓய்வு அளவு, சமூக வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் காரணிகள், ஹார்மோன்கள் மற்றும் உடலில் சுழற்சி போன்றவை எல்லாமே இதை பாதிக்கும்.

அதனால் மேற்கண்ட இந்த அத்தனை விஷயங்களிலும் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்.

கரு முட்டையின் தரம் ஏன் முக்கியமானது?

Importance of egg quality

இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் கருவுறுதலில் மூலமே பெண்களின் கருமுட்டைகளின் ஆரோக்கியம் தான். கருமுட்டை தான் கர்ப்பத்தை தக்கவைப்பதற்கான வாய்ப்புகளை தீர்மானிக்கிறது.

ஒரு கருமுட்டை அண்டவிடுப்பிற்கு தயாராக 90 நாட்கள் ஆகும். இது முழு முதிர்ச்சி அடையும் முன் உடல்நலம், வாழ்க்கை முறை, ஹார்மோன்கள், மன அழுத்தம், உணவு முறை போன்ற காரணிகளால் ஆரோக்கியமாகவோ அல்லது குறைபாடாகவோ உருவாகிறது.

பெண் குழந்தை பிறக்கும் போதே கருமுட்டைகளுடன் பிறக்கிறார்கள். அதனால் அவர்கள் வளரும் போது கருமுட்டை உருவாக்க முடியாது என்று சொல்லப்பட்டது.

ஆனால் கருப்பையில் உள்ள ஸ்டெம் செல்கள் ஒரு பெண்ணின் இனப்பெருக்க ஆண்டுகளில் புதிய முட்டைகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை என்பதை சமீபத்திய ஆராய்ச்சி நிரூபித்துள்ளது.

எனினும் முட்டையின் தரத்தில், வயது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கருப்பைகள் முட்டைகளை வைத்திருக்க முடியாது என்று நினைக்க வேண்டாம்.

மருத்துவ சிகிச்சை மூலம் 40 வயது ஆனாலும் கருத்தரிக்கலாம். எனினும் உங்கள் உடல்நலம் மற்றும் வாழ்க்கை முறை கவனமாக இருக்க வேண்டும்.

விந்தணுக்களின் தரம் ஏன் முக்கியம்?

importance of sperm quality

பெண்களுக்கு எப்படி கருமுட்டை அவசியமோ அதே போன்று ஆண்களுக்கும் விந்தணுக்களின் தரம், எண்ணிக்கை மற்றும் இயக்கம் மூன்றும் முக்கியமானது.

பெண்ணின் சினைப்பையில் இருந்து வெளியேறும் சினைமுட்டை உடன் ஆணின் விந்தணுக்கள் சேரும் போது கருத்தரிப்பு நிகழ்கிறது

ஆண்களின் விந்துப்பையில் கோடிக்கணக்கான விந்தணுக்கள் வேகமாக பெண்ணின் கருப்பையை நோக்கி ஓடும். எனினும் விந்து திரவம் தான் விந்தணுக்கள் பெண்ணின் சினைமுட்டையை வேகமாக சென்றடைய உதவுகிறது.

கோடிக்கணக்கில் ஆண்கள் விந்தணுக்களை கொண்டிருந்தாலும் அவை அனைத்தும் தரமானது.

வேகமாக இயங்கும் நீந்தும் தன்மை கொண்டவை அல்ல. சில அப்படியே நின்று விடும். வேகமான நகரும் தரமான விந்தணுக்கள் மட்டுமே பெண்ணின் சினைமுட்டையை சென்றடையும். அதனால் வீரியமுள்ள விந்தணு அவசியம்.

அதனால் விந்தணுக்கள் தரத்தை மேம்படுத்த ஆண்கள் சரியான உணவு முறை பழக்கவழக்கங்கள் வாழ்க்கை முறை குறிப்புகள் கடைப்பிடிக்க வேண்டும்.

கருமுட்டை மற்றும் விந்தணுக்கள் வளர உதவும் உணவுகள்– Foods to Improve Egg and Sperm Quality in Tamil

Foods to Improve Egg and Sperm Quality in Tamil

கருமுட்டை மற்றும் விந்தணுக்களின் ஆரோக்கியம் என்பது உணவிலும் அடங்கியிருக்கிறது. முழு வளர்ச்சி அடைந்த ஆரோக்கியமான கருமுட்டை மற்றும் தரமான விந்தணுக்கள் மட்டுமே ஆரோக்கியமான குழந்தையை உருவாக்கும் அதற்கான உணவுகளை எடுத்துகொள்வது நல்லது.

ஊட்டச்சத்து

ஊட்டச்சத்து என்பது உகந்த ஆரோக்கியத்துடன் பராமரிக்க சரியான அளவு ஊட்டச்சத்தை பெறுவதாகும். உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியமான கருமுட்டை மற்றும் விந்தணுக்களை உற்பத்தி செய்யவும் உதவும்.

மேலும் நல்ல ஊட்டச்சத்து என்பது நீங்கள் விரும்பும் உணவுகளை தவிர்க்க வேண்டுமென்பது அல்ல. சரியான உணவுகளை எடுத்துகொள்வது.

மிக மிக அவசியம். குழந்தையை பெற முயற்சிக்கும் போது புரதம், கார்போஹைட்ரேட், ஆரொக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற சீரான உட்கொள்ளலுடன் ஆரோக்கியமான ஊட்டச்சத்து அவசியம்.

கார்போஹைட்ரேட்டுகள்

கார்போஹைட்ரேட்டுகள் ஆற்றல் மூலமாகும். இது சிக்கலான மற்றும் எளிமையானது. சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளில் காய்கறிகள் மற்றும் முழு தனியங்களான கம்பு.

ஓட்ஸ் மற்றும் கோதுமை, பருப்பு வகைகள், பட்டாணி மற்றும் பீன்ஸ் ஆகியவை அடங்கும். எளிய கார்போஹைட்ரேட்டுகளில் வெள்ளை சர்க்கரை, பழங்கள் மற்றும் பழச்சாறுகள் அடங்கும்.

கருவுறுதல் அதிகரிக்க எளிய கார்போஹைட்ரேட்டுகளை தவிர்த்து சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

அதாவது முழு தானிய ரொட்டி, பழுப்பு அரிசி, முழு தானியங்கள் மற்றும் பாஸ்தா சுத்திகரிக்கப்பட்டவற்றுக்கு பதிலாக நாள் ஒன்றுக்கு குறைந்தது ஐந்து பகுதி காய்கறிகள் வரை எடுக்கலாம்.

இதில் துத்தநாகம், செலினியம், வைட்டமின்கள் பி போன்றவை கருவுறுதலை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன இவை ஹார்மோன் சமநிலைப்படுத்தும் கருவுறுதலை அதிகரிக்கும் உணவின் இன்றியமையாத பகுதி.

நார்ச்சத்து

குடல் ஆரோக்கியமாக இருக்க நார்ச்சத்து அவசியம். பழங்கள், ஓட்ஸ்,காய்கறிகள் மற்ரும் பீன்ஸ் போன்ற கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் முழு தானியங்கள் பருப்புகள் போன்றவற்றை சேர்க்கலாம்.

தானியங்கள், முழு தானியங்கள், பருப்புகள் மற்றும் விதைகள் தேவையான நார்ச்சத்தை உங்களுக்கு அளித்திடும்.

புரதங்கள்

கருவுறுதலுக்கு புரதம் மிக முக்கியமானது. இது இரத்த சர்க்கரையை சமநிலையில் வைக்க செய்கிறது. உயிரணுக்களை உருவாக்குவதற்கும் சரி செய்வதற்கும் ஹார்மோன்களை உற்பத்தி செய்யவும் இனப்பெருக்க செயல்பாடுகளை மேம்படுத்துவதிலும் புரதங்கள் தேவை.

புரதத்தின் ஆதாரங்களான எண்ணெய், மீன், முட்டை பருப்பு வகைகள், பீன்ஸ் வகைகள் மற்றும் விதைகள் என எடுத்துகொள்ளலாம். இறைச்சி எடுக்காதவர்கள் பருப்பு, சூரியகாந்தி , எள் விதைகள் சேர்க்கலாம்.

கொழுப்புகள்

கொழுப்புகள் டிரான்ஸ் கொழுப்புகள் தீங்கு விளைவிக்கும் மற்றும் கருவுறுதலை குறைக்கும். போதுமான அத்தியாவசிய கொழுப்புகள் எடுக்கவில்லை எனில் ஹார்மோன் உற்பத்தி சமரசம் செய்யப்படலாம்.

அதனால் வறுத்த உணவுகள், கேக் பிஸ்கட், சிப்ஸ் மற்றும் பேஸ்ட்ரிகளில் இருக்கும். அண்டவிடுப்பின் சிக்கல்களை உண்டு செய்யும். மேலும் ஆண்களும் டிரான்ஸ் கொழுப்பு அமிலங்களை தவிர்க்கவும்.

மாறாக ஆலிவ் எண்ணெய், ஒமெகா 3 எண்ணெய்கள் போன்றவை கருவுறுதலை மேம்படுத்தக்கூடியவை.

பைட்டோஸ்ட்ரோஜன்கள்

இது ஹார்மோன் சமநிலை விளைவை கொண்டுள்ளவை. பருப்பு வகைகள், சோயா பீன்ஸ் கொண்டைக்கடலை, பருப்பு வகைகளில் இவை உள்ளது. மேலும் இது ஆண் பெண் பாலின ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவதில் பங்கு வகிக்கின்றன.

முக்கிய தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள்

வைட்டமின் ஏ கருவுறும் திட்டத்தில் மிக முக்கியமானது. பீட்டா கரோட்டின் போன்ற வைட்டமின் ஏ கேரட், தக்காளி, மாம்பழம், பூசணி, முட்டைக்கோஸ், முட்டையின் மஞ்சள் கரு, வோக்கோசு, சிவப்பு குடைமிளகாய், கேரட் மற்றும் ப்ரக்கோலி போன்றவற்றில் உள்ளது.

இவை தவிர வைட்டமின் பி6, வைட்டமின் பி12, ஃபோலிக் ஆசிட், வைட்டமின் சி, வைட்டமின் ஈ, போன்ற குழுமங்கள் அவசியம்.

கால்சியம்

இது குழந்தையின் பற்கள் மற்றும் எலும்புகளுக்கு போதுமான கால்சியம் தேவைப்படும் கால்சியம் நிறைந்த மத்தி, பால், சால்மன், கொடிமுந்திரி.

பாதாம், ஆரஞ்சு, பப்பாளி, தர்பூசணி, கீரைகள், கொட்டைகள், எள் போன்ற பால் அல்லாத மூலங்களில் பருப்பு வகைகள், இலை பச்சை காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள்.

துத்தநாகம்

ஆண்களுக்கும் பெண்களுக்கும் இனப்பெருக்க ஹார்மோன்களின் ஆரோக்கியத்துக்கும் பராமரிப்பிற்கும் இந்த தாது முக்கியமானது. விந்தணு மற்றும் ஆண் ஹார்மோன்களின் உற்பத்திக்கு துத்தநாகம் தேவை.

இது முட்டை, பாதாமி, முழு தானியங்கள், உலர்ந்த பழங்கள், கடற்பாசி, சூரியகாந்தி விதைகள், அனைத்து காய்கறிகள், தர்பூசணி காளான், பீட்ரூட், எண்ணெய் மீன், வெங்காயம், கொட்டைகள், பட்டாணி மற்றும் பீன்ஸ் சேர்க்கலாம்.

செலினியம்

இது நல்ல ஆக்ஸிஜனேற்றத்துக்கான அவசிய சத்து. டுனா, பூண்டு, முட்டை, கேரட், காளான்கள், முழு கோதுமை , ப்ரக்கோலி மற்றும் பூண்டு போன்றவை அடங்கும்.

மெக்னீசியம்

ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் பற்களுக்கு இது கால்சியத்துடன் தேவை. பால் பொருள்கள், கொட்டைகள், பச்சை காய்கறிகள், முட்டை , அவகேடோ, உலர்ந்த பாதாமி, பருப்பு அரிசி, வாழைப்பழங்கள் மற்றும் சூரியகாந்தி விதைகள் ஆகியவை அடங்கும்.

தண்ணீர்

ஆரோக்கியமான உணவு திட்டத்தில் இன்றியமையாதது உடல் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீரால் ஆனது. இனப்பெருக்க உறுப்புகள் உட்பட அனைத்து உறுப்புகளுக்கும் ஊட்டச்சத்துக்கள் செல்வதற்கும், நச்சுகள் அகற்றப்படுவதற்கும் தண்ணீர் அவசியமானது.

இது உடல் சேமிக்கப்பட்ட கொழுப்பை வளர்சிதை மாக்க உதவுகிறது. நாள் ஒன்றுக்கு 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடியுங்கள்.

மேற்கண்ட உணவு முறைகளை பின்பற்றினால் கருமுட்டை மற்றும் விந்தணுக்கள் ஆரோக்கியம் மேம்படும். இது குறித்து மருத்துவர் அளிக்கும் குறிப்புகளை தெரிந்துகொள்வோம்.

கருவுற விரும்பும் தம்பதியர்கள் மருத்துவரை அணுகும் போது கருமுட்டை வளர்ச்சி மற்றும் விந்தணுக்கள் குறைபாடு பற்றி கூறியிருந்தால் நீங்கள் உங்கள் உணவு திட்டத்தை மாற்றுங்கள்.

அதில் முதலாவதாக புகைப்பழக்கம், மதுப்பழக்கம் தவிருங்கள். இருவரும் மன அழுத்தம் இல்லாத மகிழ்ச்சியான வாழ்க்கையை திட்டமிடுங்கள். தூக்கம் போதுமான அளவு இருக்கட்டும்.

விந்தணுக்கள் அதிகரிக்க மாத்திரைகள் டாக்டர் கொடுத்திருந்தாலும் வீட்டில் உணவு முறையில் ஆரோக்கியத்தை கொண்டு வரலாம். அதில் முதலாவது பச்சைகாய்கறிகள். குறிப்பாக கீரைகள். கீரையில் முருங்கைக்கீரை கொடுக்கலாம்.

பாதாம், பிஸ்தா, முந்திரி, ஏலக்காய் போன்றவை சேர்க்க வேண்டும். பழங்காளில் ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம் போன்றவற்றை அதிகம் கொடுக்க வேண்டும்.

அதே போன்று காய்கறிகள், பழங்கள் என எதுவாக இருந்தாலும் பச்சை, மஞ்சள், ஆரஞ்சு நிற பழங்கள், காய்கறிகள் எடுத்துகொள்ள வேண்டும்.

பெண்களின் கருமுட்டை வளர்ச்சிக்கும் இந்த உணவுகள் உதவும் என்றாலும் அதோடு பெண்கள் சிட்ரஸ் பழங்களை சேர்க்க வேண்டும்.

வாழைப்பழம், ஆரஞ்சு, அவகேடோ என இன்னும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்த பழங்களை எடுத்துகொள்ள வேண்டும்.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!

இவை தவிர மிதமான உடற்பயிற்சி, யோகா செய்யலாம். ஆரோக்கியமற்ற உணவுகள் தவிர்ப்பது என எல்லாம் ஒன்று சேரும் போது கருமுட்டை மற்றும் விந்தணுக்கள் தரம் மேம்படும். கருவுறுதல் எளிதாக இருக்கும்.

5/5 - (66 votes)
டாக்டர். தீப்தி ஜம்மி (இயக்குனர், ஜம்மி ஸ்கேன்கள்) எம்.பி.பி.எஸ்., எம்.எஸ் (மகப்பேறு மற்றும் பெண்ணோயியல்) கரு மருத்துவத்தில் பிந்தைய முனைவர் பெல்லோஷிப் டாக்டர்.தீப்தி சர்வதேச மற்றும் தேசிய மாநாடுகளில் கரு மருத்துவத்தில் தங்கப் பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார், மேலும் பல மதிப்புமிக்க பிராந்திய இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி நேர்காணல்களில் தோன்றியுள்ளார்.