கர்ப்ப கால கால் வீக்கம் பொதுவானது என்றாலும் சிலருக்கு கூடுதலாக சில அறிகுறிகள் பாடாய்படுத்தும். சிலருக்கு அறிகுறிகளே இல்லாமல் இருக்கும். சிலருக்கு கர்ப்பகால வாழ்க்கை சிரமமாக இருக்கும். அதனால் கர்ப்பகாலம் முழுமையும் மகிழ்ச்சியை தேடுவார்கள். உடல் மாறும் போது சற்று அசெளகர்யம் உணரலாம். அதில் ஒன்று கர்ப்ப காலத்தில் கால் வீக்கம் (Swelling During Pregnancy in Tamil) இருப்பது.
கர்ப்பிணி பெண்களில் சுமார் 50% பேர் கால் வீக்கம் மற்றும் கணுக்கால் வீக்கத்தை கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக கர்ப்பத்தின் மூன்றாம் மாதங்களில் இது இன்னும் கடினமான நிலையை உண்டாக்குகிறது.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு கை கால் மற்றும் கணுக்கால் வீக்கம்(Swelling During Pregnancy in Tamil) ஏன் ஏற்படுகிறது?
கர்ப்ப காலத்தில், வளரும் குழந்தையின் தேவைகளை வழங்குவதற்காக உடலில் ஐம்பது சதவீதம் அதிகமான உடல் திரவங்களை உருவாக்குகிறது. இந்த திரவங்கள் வீக்கத்தை உண்டாக்கும். கர்ப்ப காலத்தில் பெண்களின் எடை அதிகரிப்பில் தோராயமாக 25% கூடுதல் திரவங்களால் உண்டாகிறது.இந்த நேரத்தில் உங்கள் கால்கள் கணுக்கால் மற்றும் பாதங்களில் எடிமா அல்லது சாதாரண வீக்கத்தை நீங்கள் கவனிக்கலாம். கர்ப்ப கால கால் வீக்கம் என்பது கர்ப்ப கால பொதுவான பிரச்சனை ஆகும்.
கர்ப்ப காலத்தில் வீக்கம் எடிமான என்பது எவ்வளவு பொதுவானது?
கர்ப்ப காலத்தில் எடிமா (Edema) பொதுவானது. கர்ப்பத்தின் கடைசி மாதங்களில் கால்கள் மற்றும் பாதங்களில் வீக்கம் ஏற்படுவதை கவனிக்கலாம். இது பொதுவாக கர்ப்பத்தின் கடைசி சில மாதங்களில் உடலில் நீர் தேங்குவதால் உண்டாகிறது. இது உடலின் ஒட்டுமொத்த இரத்த அளவு அதிகரிப்பதால் உண்டாகிறது.
எடிமா எப்போது உண்டாகிறது?
கர்ப்ப காலத்தில் எடிமா எப்போது வேண்டுமானாலும் உண்டாகலாம். ஆனால் பெரும்பாலும் கர்ப்பத்தின் இரண்டாம் ட்ரைமெஸ்டரில் 5 வது மாதத்தில் இவை உண்டாகிறது. பிறகு 3 வது மூன்றூ மாதங்களில் உயர்கிறது. பின்வரும் காரணிகள் கர்ப்பகாலத்தில் எடிமாவை பாதிக்கலாம்.
- நீண்ட நேரம் நின்றுகொண்டே இருப்பது
- வெப்பமான வானிலை
- நீண்டநாட்கள் உடல் செயல்பாடு
- சோடியத்தின் அதிகப்படியான நுகர்வு
- குறைந்த பொட்டாசியம் உணவுகள்
- அதிக அளவு காஃபின் எடுத்துகொள்வது.
கர்ப்பிணி பெண்களுக்கு கால் வீக்கம் உண்டாக என்ன காரணங்கள்
உடலில் வீக்கத்துக்கு முக்கிய காரணம் நீர் தேக்கம். கர்ப்ப காலத்தில் தண்ணீர் தேங்குவதால் கால்களில் வீக்கம் உண்டாகலாம். இரத்த அளவு மாற்றங்கள், வளர்ந்து வரும் கருப்பை இடுப்பு நரம்புகள் அழுத்தத்தை சேர்க்கும். இந்த அழுத்தம் காரணமாக கால்களில் இரத்தம் மெதுவாக சென்று அதில் தேங்கி இருக்கும். இது நரம்புகளிலிருந்து திரவத்தை பாதங்கள் மற்றும் கணுக்கால் திசுக்களில் தேக்கிதண்ணீர் வெளியேற்றும் திறன் குறைக்கிறது.
அதிகபடியான அம்னோடிக் திரவம் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தை சுமக்கும் பெண்கள் கடுமையான வீக்கத்தை கொண்டிருக்கலாம். இது நாள் முடிவில் இரவில் மற்றும் கோடை காலத்தில் மோசமாக இருக்கும். எப்படி இருந்தாலும் பிரசவத்துக்கு பிறகு உடல் திரவத்தை வெளியேற்றும் போது வீக்கம் விரைவாக மறைந்துவிடும். பிரசவம் முடிந்த பிறகு முதல் சில நாட்களில் சிறுநீர் கழிக்க அடிக்கடி குளியலறைக்கு செல்வீர்கள். அடிக்கடி வீக்கத்தையும் காண்பீர்கள்.
கால் வீக்கம் அபாயகரமானதா?
எடிமாவால் கால்களில் உண்டாகும் வீக்கங்கள் இலேசானதாக இருந்தால் அது சாதாரனமானது மற்றும் பாதிப்பில்லாதது. சில சந்தர்ப்பங்களில் கர்ப்பிணி பெண்கள் குறிப்பிடத்தக்க வீக்கத்தை கூட அனுபவிப்பதில்லை. எனினும் உங்கள் கைகள் மற்றும் முகம் வீங்கி ஒரு நாளுக்கு மேல் வீக்கம் தொடர்ந்தால் உங்கள் மருத்துவரை அணுக வேண்டும். கர்ப்ப காலத்தில் அதிகப்படியான எடிமா ஃப்ரீக்ளாம்ப்சியாவின் அறிகுறிகளில் ஒன்றாக இருக்கலாம்.
உயர் இரத்த அழுத்தம், விரைவான எடை அதிகரிப்பு மற்றும் சிறுநீரில் புரதம் போன்ற அறிகுறிகளுடன் இது இருக்கலாம். அதே நேரம் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகளின் முடிவுகள் சாதாரணமாக இருந்தால் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
கர்ப்ப காலத்தில் வீக்கம் பற்றி நீங்கள் எப்போது கவலைப்பட வேண்டும்
பாதங்கள், கணுக்கால் அல்லது கால்களில் இலேசான வீக்கம் இருப்பது வழக்கத்துக்கு மாறானது அல்ல. உண்மையில் சிலர் தங்கள் கைகளிலும் இலேசான வீக்கத்தை அனுபவிக்கலாம். எனினும் ப்ரீக்ளாம்பிசியாவின் பின்வரும் அறிகுறீகள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.
- கண்களை சுற்றி வீக்கம்
- முகத்தில் வீக்கம்
- கால்கள் அல்லது கணுக்கால் தன்னிச்சையான வீக்கம்
- கைகளில் அதிகப்படியான வீக்கம்
- தலைச்சுற்றல்
- மங்கலான பார்வை
- இரண்டு கால்கள் மற்றொன்றை விட வீங்கியிருத்தல்
- தொடையில் வீக்கம் வலி மென்மை இருந்தால் மருத்துவரை அணுகவும். ஏனெனில் இது இரத்த உறைவு அறிகுறியாக இருக்கலாம்.
கர்ப்ப காலத்தில் கால் வீக்கம் இருக்கும் போது என்ன செய்ய வேண்டும்?
மருத்துவ சிகிச்சைகள் மூலம் இதை ஓரளவு கட்டுக்குள் வைக்க முடியும். என்றாலும் 4 அல்லது 5 ஆம் மாதத்திலேயே பாதங்கள் வீங்கினால் ரத்த அழுத்தம் உள்ளதா என்று பரிசோதிக்க வேண்டும். ரத்த அழுத்தம் நார்மலாக இருந்தால் அது கர்ப்பகால கால் வீக்கம் (Swelling During Pregnancy) இல்லையெனில் சிகிச்சை மூலம் கட்டுக்குள் வைக்கலாம்.
அரோமோதெரபி:
சைப்ரஸ் எண்ணெய் சுற்றோட்டத்துக்கு நன்மை பயக்கும். அதே சமயம் கெமோமில் எண்ணெயுடன் கூடிய லாவெண்டர் எண்ணெய் உதவும்.
ஆஸ்டியோபதி:
இது எலும்புக்கூட்டில் உள்ள தவறான அமைப்புகளுக்கு சிகிச்சையளிக்கிறது. உடலின் குறிப்பிட்ட பகுதிகளில் அழுத்தம் கொடுக்கலாம்.
மசாஜ் செய்யுங்கள்:
பாதங்களின் விளிம்புகளில் மசாஜ் செய்வது உங்கள் கால்களில் குவிந்திருக்கும் திரவங்களை வெளியேற்ற உதவும், இது வீக்கத்தை குறைக்கும். மசாஜ் செய்வதற்கு லாவெண்டர் எண்ணெய் பயன்படுத்தலாம்.
கால் வீக்கதை குறைக்க உதவும் டிப்ஸ்
உங்கள் கால்களில் உண்டாகும் வீக்கத்தை குறைக்க நீங்கள் வீட்டில் முயற்சி செய்யகூடிய சில குறிப்புகள் அல்லது தீர்வுகள் இங்கு உள்ளன.
நீண்ட நேரம் உட்காரக்கூடாது. அரை மணி நேரம் ஒருமுறை எழுந்து நடக்க வேண்டும். உட்கார்திருக்கும் போது உங்கள் கால்கள் அல்லது கணுக்கால்களை மடக்கி வைத்திருப்பதை விட அவ்வபோது நீட்டி மடக்கவும். கால்களை முடிந்தவரை உயர்த்தி வைக்கவும். குதிகாலால் உங்கள் கால்களை நீட்டி விடவும். பிறகு உங்கள் கால் தசைகளை தளர்த்த கால்களை மெதுவாக வளைக்கவும். கணுக்கால்களை மெதுவாக சுழற்றவும். கால் விரல்களை நன்றாக அசைக்கவும்.
திரவ ஆகாரங்கள் மற்றும் பிற திரவங்களை குடிப்பதன் மூலம் உங்களை நீரேற்றமாக வைத்திருங்கள். ஒரே நிலையில் அதிக நேரம் உட்காருவதை தவிர்க்க வேண்டும். உடலின் கீழ் பகுதிகளில் இரத்தம் குவிவதை தடுக்க குறுகிய நடைப்பயிற்சி செய்ய வேண்டும். கால்களில் வீக்கத்துக்கு இடமளிக்கும் வகையில் தளர்வான காலணிகளை அணியுங்கள்.
தூங்கி எழுந்தவுடன் உயர் இடுப்பு மகப்பேறு ஆதரவு காலுறைகள் அணியுங்கள். இதனால் கணுக்காலை சுற்றி இரத்தம் தேங்காமல் பார்த்துகொள்ள முடியும். அதே நேரம் சிலர் கணுக்கால் அல்லது கன்றுகளை சுற்றி இறுக்கமான பட்டைகள் கொண்ட காலுறைகள் அணிவார்கள். அதை தவிர்க்க வேண்டும்.
உடற்பயிற்சி செய்தாலும் தினமும் அரை மணி நேரம் மட்டுமே செய்ய வேண்டும். யோகா பயிற்சியில் ஈடுபடலாம். அல்லது நீந்தலாம். நீர் ஏரோபிக்ஸ் நல்ல வழி. தண்ணீரில் இருப்பது வீக்கத்தை தற்காலிகமாக குறைக்க உதவும்.
ஆரோக்கியமான உணவுகள், திரவ ஆகாரங்கள் போன்றவை நல்லது குப்பை உணவை தவிர்ப்பதும் கால் வீக்கத்தை தீவிரமாக்காமல் தடுக்கும்.
கர்ப்ப காலத்தில் கால் வீக்கம் தடுக்க என்ன செய்யலாம்?
கர்ப்பகாலத்தில் கால் வீக்கம் என்பது இயல்பானது. இதை தவிர்க்க முடியாது என்றாலும் தீவிரமாகாமல் தடுக்க முடியும். மருத்துவ காரணங்களால் அதிகரிக்கும் வீக்கத்தை தாண்டி பொதுவாக உண்டாகும் கடுமையான வீக்கத்தை வாழ்க்கை முறை மூலம் தடுக்கலாம். கட்டுக்குள் கொண்டு வரலாம்.
கர்ப்ப காலத்தின் மூன்று ட்ரைமெஸ்டர் காலங்களிலும் ஆரோக்கியமான உணவுகளை திட்டமிட்டு எடுக்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனையுடன் கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்து உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கலாம். இரவு தூங்கும் போது காலை உயரமாக வைத்து தூங்க வேண்டும். கால்களை தொங்கபோட்டு உட்கார கூடாது. அதிக நேரம் நடக்க கூடாது.
உணவில் இறைச்சி, முட்டை, மீன், பருப்பு வகைகள், பீன்ஸ் வகைகள் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகள் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வையுங்கள்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
தினமும் இரண்டு விதமான காய்கறிகள், இரண்டு விதமான பழங்கள் என்று திட்டமிட்டு எடுத்துகொள்ளுங்கள். கர்ப்பகால சர்க்கரை நோய் இருந்தால் உரிய பழங்களை எடுத்துகொள்ளுங்கள்.
உப்பு, சர்க்கரை அல்லது கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் சேர்க்க கூடாது. சிட்ரஸ் பழங்கள், சிவப்பு குடைமிளகாய், முலாம்பழம், உருளைக்கிழங்கு, சூரியாகாந்தி விதைகள், ஸ்வீட் கார்ன் போன்ற வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ நிறைந்த உணவுகள் கர்ப்பகாலத்தில் நல்லது. அவ்வபோது பசி எடுக்கிறதே என்று எண்ணாமல் நொறுக்குத்தீனி சாப்பிடுவதை தவிர்க்கவும். கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் சரியான முறையில் எடுத்து கொள்ள வேண்டும்.
வீங்கிய பாதங்கள் அல்லது கணுக்கால் கர்ப்ப காலத்தில் எரிச்சலூட்டும். இந்த எடிமா பிரசவத்துக்கு பிறகு வேகமாக குறையும். உங்கள் கால்கள் மற்றும் கணுக்கால்களில் இலேசான வீக்கம் இருந்தால் வீட்டு வைத்தியம் முயற்சி செய்யுங்கள். அதே நேரம் ஃப்ரிக்ளாம்சியாவின் அறிகுறிகள் கண்டால் விரைவில் மருத்துவரை அணுகுவது பாதுகாப்பானது.
கர்ப்பகால கால் வீக்கம் எப்போது அவசரம்
கால் வீக்கம் இருந்து சில நாட்களில் வீக்கம் வடிந்துவிடும். பிறகு மீண்டும் வரும். இது போல் கர்ப்பகாலம் முழுவதும் வீக்கம் வருவதும் வடிவதும் பிரச்சனையல்ல. ஆனால் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மேல் வீக்கம் சிறிதும் வடியாமல் அதிகமாகி கொண்டே இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். அதே போன்று வீக்கம் படிப்படியாக கணுக்கால், தொடை, வயிறு, முகம் என்று பரவினால் அது நார்மல் கிடையாது . இந்த அறிகுறி ரத்த அழுத்தம் உயர்வாக இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.