கர்ப்ப காலத்தில் எள் சாப்பிடலாமா?

201
Can we eat sesame Seeds During Pregnancy in Tamil

நீங்கள் கர்ப்பமாக இருந்தால், உங்கள் உணவைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் நீங்கள் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தையும் உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.  எனவே ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்.

கர்ப்ப காலத்தில் உங்களின் உணவுத் தேர்வுகள் குறித்து மருத்துவரிடம் ஆலோசனையை பெருவது அவசியம். கர்ப்ப காலத்தில் எள் விதைகளை எடுத்து கொள்ளலாமா, கர்ப்ப கால உணவில் அவற்றை சேர்க்க முடியுமா மேலும் கர்ப்ப காலத்தில் எள் (Sesame Seeds During pregnancy in Tamil)சாப்பிடலாமா ? அவை தீங்கு விளைவிக்குமா அல்லது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் நல்லதா? என்பதை பற்றிய முழுமையாக தெரிந்துகொள்ள தொடர்ந்து இந்த வலைப்பதிவை படியுங்கள்!

கர்ப்ப காலத்தில் எள் (Sesame Seeds During pregnancy in Tamil) சாப்பிடுவது பாதுகாப்பானதா?

Is-it-safe-to-eat-sesame-seeds-during-pregnancy

கர்ப்ப காலத்தில் எள் (Sesame Seeds During pregnancy in Tamil) சாப்பிடுவது பாதுகாப்பானது இல்லை என்பது ஒரு கட்டுக்கதை, எள் உடலில் வெப்பத்தை உருவாக்கும் உணவு என்றும், உடல் சூட்டை அதிகரித்து, உடலின் இயற்கையான சமநிலையை சீர்குலைக்கும் என்றும் பலர் நம்புகிறார்கள்

 கர்ப்ப காலத்தில் எள் (Sesame Seeds During pregnancy in Tamil) போன்ற வெப்பத்தை உண்டாக்கும் உணவுகளை சாப்பிடுவது கருச்சிதைவு அல்லது முன்கூட்டிய பிரசவத்திற்கு வழிவகுக்கும் என்று சிலர் நம்புகிறார்கள்.

இருப்பினும், இதை நிரூபித்த எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. மாறாக, எள் விதைகளில் கர்ப்ப காலத்திக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது , அவை தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் நல்லது. 

Seismic Seeds During Pregnancy in Tamil

எள், மற்றும் நல்ல எண்ணெய்கள் போன்றவற்றை ஒவ்வாமை இல்லாமல் இருந்தால் கர்ப்ப காலத்தில் எள் (Sesame Seeds During pregnancy in Tamil)சாப்பிடுவது பொதுவாக பாதுகாப்பானது. எள் விதைகள் கர்ப்ப காலத்தில் உங்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பிய ஒரு சிறந்த உணவு

எள் விதைகளில் கால்சியம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்கள் ஏராளமாக உள்ளன, இவை அனைத்தும் தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஆனால் பெரும்பாலான  கர்ப்பிணிப் பெண்களின் முதல் மூன்று மாதங்களில் அவற்றை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று பரிந்துரைக்க படுகின்றனர், ஏனெனில் இது அவளுக்கு குமட்டலை ஏற்படுத்தும்.

கர்ப்பிணிகள் எள் (Sesame Seeds During pregnancy in Tamil) சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

Benefits of eating seismic seeds during pregnancy

கர்ப்ப காலத்தில் எள் (Sesame Seeds During pregnancy in Tamil)சாப்பிடுவதால் ஏற்படும் சில நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

எள் விதைகள் இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின்களை வழங்கும் ஊட்டச்சத்துக்களின் முழுமையான தொகுப்பாக செயல்படுகிறது, இவை அனைத்தும் கருவின் வளர்ச்சிக்கு அவசியம்.

எள் விதைகளில் ரிபோஃப்ளேவின், நியாசின், தியாமின் மற்றும் பைரிடாக்சின் போன்ற  வைட்டமின் பி நிறைந்துள்ளன, இவை அனைத்தும் கருவின் சரியான வளர்ச்சிக்கு உதவி செய்யும்.

எள் விதைகள் கருவின் சரியான வளர்ச்சிக்குத் தேவையான புரதம் மற்றும் அமினோ அமிலங்களின் சிறந்த மூலமாகும்.

எள் விதைகள், நார்ச்சத்து நிறைந்து இருப்பதால், கர்ப்ப காலத்தில் செரிமானத்திற்கு உதவும். கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் ஒரு பொதுவான பிரச்சனை. 

sesame Seeds During Pregnancy in Tamil

மலச்சிக்கல் மற்றும் பிற செரிமான அமைப்பு தொடர்பான பிரச்சினைகள் இருந்தால், அதைத் தவிர்க்க நீங்கள் எள் விதைகளை கர்ப்ப காலத்தில் சாப்பிடலாம்.

எள் விதைகளில் ஒலிக் அமிலம் உள்ளது, இது உங்கள் கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகள் அல்லது எல்டிஎல் அளவைக் குறைக்கும் மற்றும் உங்கள் நல்ல கொழுப்பு அல்லது HDL அளவை மேம்படுத்தும்.

எள் விதையில் வைட்டமின் சி உள்ளது, இது உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் நோய்கள் மற்றும் கிருமிகளைத் தடுக்கிறது.

கர்ப்ப காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும், எனவே நீங்கள் தொற்று நோய்கள் மற்றும் பிற நோய்களால் மிகவும் எளிதில் பாதிக்கப்படுவீர்கள். ஆனால் எள் சாப்பிடுவதன் மூலம் இந்த நோய்த் தொற்றுகளைத் தவிர்க்கலாம்.

கர்ப்ப காலத்தில் நல்ல வாய் ஆரோக்கியத்திற்கு கால்சியம் ஒரு முக்கியமான ஊட்டச்சத்து ஆகும்.  எள் விதைகள், கால்சியத்தின் சிறந்த ஆதாரமாக இருப்பதால், உங்கள் பற்களை கவனித்துக்கொள்ள முடியும்.

எள் சாப்பிடுவதன் மூலம், கர்ப்ப காலத்தில் உங்கள் பற்கள் மற்றும் எலும்புகளை கவனித்துக் கொள்ளலாம். அவை உங்கள் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் உதவும்.

எள்ளில் ஃபோலிக் அமிலம் இருப்பதால், கர்ப்ப காலத்தில் அவற்றை சாப்பிடுவது குழந்தைகளுக்கு நரம்பு குழாய்கள் தொடர்பான குறைபாடுகளைத் தடுக்க உதவும்.

எள் சாப்பிடுவது ஆற்றலை அதிகரிக்கும் மற்றும் மன அழுத்தத்தையும் பலவீனத்தையும் குறைக்கும்.

எள் விதைகள் இரும்புச்சத்து நிறைந்த ஆதாரமாக இருப்பதால், உங்கள் குழந்தைக்கு வயிற்றில் இருக்கும் போது போதுமான அளவு ஆக்ஸிஜன் கிடைப்பதை உறுதிசெய்யும்.

கர்ப்ப காலத்தில் எள் விதைகளை (Sesame Seeds During pregnancy in Tamil) சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்

எள் சாப்பிடுவது கர்ப்பிணிப் பெண்ணுக்கும் அவளுடைய குழந்தைக்கும் தீங்கு விளைவிப்பதில்லை. இருப்பினும், ஒவ்வொரு பெண்ணின் உடல் அமைப்பும் ஒரே மாதிரியாக இருப்பது இல்லை.

கர்ப்ப காலத்தில் எள் (Sesame Seeds During pregnancy in Tamil) விதைகளை சாப்பிடுவதால் விளைவுகள் மாறுபடலாம். நீங்கள் குமட்டல் உணர்ந்தால், கர்ப்ப காலத்தில் உங்களுக்கு குமட்டல் இருந்தால் அது குறையும் வரை காத்திருக்கவும்.

மேலும் எள் சாப்பிட்டு வயிற்றில் கோளாறு ஏற்பட்டால், அவற்றை சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். உங்கள் உணவில் எள்ளை சேர்க்கும் முன் மருத்துவரை அணுகுவது நல்லது.

முடிவுரை

கர்ப்பிணிப் பெண்ணின் உணவில் எள் (Sesame Seeds During pregnancy in Tamil) ஒரு சத்தான உணவு. கருவின் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் இருந்து எலும்பு ஆரோக்கியத்தை ஆதரிப்பது மற்றும் இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவது வரை, கர்ப்பத்தில் எள் ஒரு சரியான ஊட்டச்சத்துக்களை தர முடியும்.

இருப்பினும், அவற்றை மிதமாக உட்கொள்வது, சாத்தியமான பக்க விளைவுகள் குறித்து எச்சரிக்கையாக இருப்பது மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது முக்கியம்.

மேலும் உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு இப்போதே ஜம்மி ஸ்கேன் மையத்தை தொடர்பு கொள்ளுங்கள்!

Rate this post
டாக்டர். தீப்தி ஜம்மி (இயக்குனர், ஜம்மி ஸ்கேன்கள்) எம்.பி.பி.எஸ்., எம்.எஸ் (மகப்பேறு மற்றும் பெண்ணோயியல்) கரு மருத்துவத்தில் பிந்தைய முனைவர் பெல்லோஷிப் டாக்டர்.தீப்தி சர்வதேச மற்றும் தேசிய மாநாடுகளில் கரு மருத்துவத்தில் தங்கப் பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார், மேலும் பல மதிப்புமிக்க பிராந்திய இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி நேர்காணல்களில் தோன்றியுள்ளார்.