மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் வலி என்பது இயற்கையானது ஆனால் இன்றளவும் அதை வெளியில் கூட சொல்ல முடியாத அளவிற்கு ஏதோ தவறான விஷயத்தைப் போல மாற்றி வைத்திருக்கிறோம்.
இதனால் பெண்களும் தங்களுக்கு வலி இருப்பதை வெளிப்படையாக யாரிடமும் சொல்வதில்லை.
பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் போதே பருவமடைய தொடங்கிவிடுகிறார்கள். அப்போதே மாதவிடாய் வயிறு வலியும் தொடங்கிவிடுகிறது.
இப்படி பதின்ம வயது பெண் குழந்தைகளில் ஆரம்பித்து வேலைக்கு செல்லும் பெண்கள் வரை எல்லோருக்குமே மோசமான அனுபவத்தை தரக்கூடியது இந்த மாதவிடாய் வயிறு வலி.
இந்த வலி இயல்பானது என்று நினைத்து மகப்பேறு நல மருத்துவர்கள் இடம் செல்வதற்கு கூட பெண்கள் தயங்கி தயங்கி நின்றுவிடுகிறார்கள்.
பிறகு மோசமான நிலையில் வலி தீவிரமாகும் போது தான் சிகிச்சைக்கு செல்கிறார்கள்.
ஏன் மாதவிடாய் காலங்களில் வலி ஏற்படுகிறது ?
மாதவிடாய் காலங்களில் ஏன் வயிறு வலி வருகிறது. வயிறு வலி மட்டும் அல்லாமல் இன்னும் சில அசெளகரியங்களும் ஏன் உண்டாகிறது. இதற்கு என்ன காரணங்கள் என்பதை முதலில் சுருக்கமாக தெரிந்துகொள்வோம்.
இதுக்கு காரணம் ஒவ்வொரு மாதமும் தமது கருப்பையில் குழந்தை நிற்க வேண்டும் என்பதற்காக யூட்ரஸ் அந்த பகுதியை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுவதற்கான செயல்பாடுகளை செய்து கொண்டே இருக்கும் அதற்காக லேயர் லேயராக லைனிங்கை உருவாக்கி வைத்திருக்கும் இந்த லேயரில் தான் உள்ளே வரும் கரு(கருமுட்டை மற்றும் விந்தணு சேர்ந்து)சென்று சேர்ந்து ஊட்டச்சத்தோடு வளர ஆரம்பிக்கும்.
இதுவே அந்த கரு வரவில்லை என்றால் இரண்டு வாரங்கள் வரை இந்த லேயர் காத்திருக்கும். பின்னர் அதுவாகவே மாதவிடாயாக (ரத்தம்) அது வெளியேறிவிடும்.
உதிரபோக்கு போது ஏன் வலி வருகிறது?
பலரும் கேட்கலாம் ரத்தம் தானே வெளியேறுகிறது பிறகு ஏன் வலி ஏற்படுகிறது என்று கர்ப்பப்பைக்குள் இருக்கும் இந்த உள்கட்டமைப்பு தான் லேயர். (endometrium)
அதை சுற்றி இருக்கக்கூடிய தசைப்பகுதி ஆகிய வெளி கட்டமைப்பு ஒன்று உள்ளது.இந்த ரத்தம் வெளியேறும் போது அதை சுருக்கி விரித்து வெளியே தள்ளும் வேலையை இந்த தசைப்பகுதி செய்கிறது அப்போது PROSTAGLANDIN என்ற ஹார்மோன் வெளியாகிறது. இதனால்தான் நமக்கு வலி ஏற்படுகிறது.
இதே ஹார்மோன் தான் நமக்கு காய்ச்சல் வரும் போதும் பிற வலி ஏற்படுத்தும் உடல் நலக் கோளாறுகள் ஏற்படும் போதும் வெளியேறுகிறது இதை எதிர்க்க தான் நாம் மாத்திரைகளைக் கொள்கிறோம்
ஆனால் நமது கை, கால்களில் இருக்கும் தசைகளுக்கும் நமது கருப்பை தசைகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. அதனால் மாதவிடாய் வலிக்கு கொடுக்கப்படும் மாத்திரைகள் பிற உடல் வலி மாத்திரைகளை விட வெவ்வேறானது.
பாரசிட்டமால் மாதவிடாய் வலியை பெரிதாக தடுக்காது. இதுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை அறிவியல்.
மாதவிடாய் வயிறு வலியை போக்கும்சில வீட்டு வைத்தியத்தை( Remedies for periods pain) இங்கு காணலாம்
மாதவிடாய் வலியைக் குறைக்கும் வீட்டு வைத்தியம் – Remedies for Periods Pain
ஒவ்வொரு மாதமும் மருந்துகளை எடுத்துக்கொள்ள விரும்பினால் மருத்துவரை அணுகிதான் பெறவேண்டும்.
மருந்துகடைகளில் கிடைக்கும் Hot bag ஐ அடி வயிற்றில் வைத்துக்கொள்வது, நல்லெண்ணையை சூடாக்கி தேய்த்துக்கொள்வது போன்றவை நல்ல பலன் தரும். நல்லெண்ணையில் LINOLEIC ACID உள்ளது. அதில் உள்ள ANTIOXIDANT PROPERTY அடி வயிற்று வலியைக் குறைக்கும்.
Mild to Moderate அளவில் உடற்பயிற்சி செய்வதும் பலன் தரும். யோகா, Zumba நடனம் போன்றவையும் செய்யலாம். Endorphin hormone அதற்கு உதவும். இந்த ஹார்மோன் புரோஸ்டோகிளாண்ட் ஹார்மோன் தீவிரமாகாமல் தடுக்கும்.
தினமும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். 3-4 லிட்டர் தண்ணீர் அருந்தலாம். பொதுவாகவே அது உடலுக்கு நன்மை தரும்.
பச்சைக் காய்கறிகளான பீன்ஸ், கீரை போன்றவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
எள்ளு, பட்டை, முழு தானியங்கள், வாழைப்பழம், தேன் கலந்த தேனீர் , கோதுமை, பாதாம் பிஸ்தா, வால்நட்கள் உண்ணலாம்.
சூரியகாந்தி விதை, எள்ளு போன்றவை வலியைக் குறைக்கும். சீரகத்தண்ணீரை சூடாக்கி அருந்துவது மிகுந்த பலன் தரும். இது வலியை குறைக்கும்.
மாதவிடாய் நாட்கள் வலி குறைய உணவு பழக்கம்
மாதவிடாய் நாட்களில் குறைந்த அளவு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். இயல்பாகவே அப்போது இனிப்பு சாப்பிட தோன்றும் அதிகமாக பசி எடுக்க கூடும். இது இயல்பானது. ஆனால் இனிப்பு, காரம், உப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.
அவை வலியை அதிகரிக்கும். மேலும் சோடா, காபி, ஆல்கஹாலை தவிர்க்க வேண்டும். அவை நீர்சத்தை குறைக்கும். அதிகளவு தண்ணீர் அருந்தி காஃபியும் எடுத்துக்கொண்டால் உடல் நீர்ச்சத்தை இழக்கும்.
மேலே சொல்லப்பட்ட உணவுப்பொருட்களாலும் மருத்துவ முறைகளாலும் வலியைக் குறைக்க முடியும். இவை எல்லாம் செய்த பிறகும் வலி குறையவில்லையெனில் நீங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.
அவ்வாறு முடியாத போது மகப்பேறு மருத்துவரை சந்திப்பது அவசியம். வலியைக் கடந்து இரத்தப்போக்கு அதிகளவில் இருக்கும்போதும் மருத்துவரை சந்திப்பது அவசியமாகிறது. அவர்கள் ஸ்கேன் பரிசோதனை மூலம் கருப்பை ஆரோக்கியத்தை உறுதி செய்வார்கள்.