முளைகட்டிய உணவுகளை நாம் தினசரி உணவில்சேர்க்கும்போது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைய கிடைக்கிறத
ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களுக்கும் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களுக்கும் முளைகட்டிய தானியத்தில் உள்ளது. முளைகட்டிய பயிர் கர்ப்ப காலத்தில் சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன.
ஆனால் கர்ப்பகாலத்தில் சமைக்காத முளைகட்டிய உணவுகளை (raw sprouts during pregnancy in tamil) எடுத்துக்கொள்ளலாமா என சந்தேகம் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் உண்டு.
கண்டிப்பாக சமைக்காத முளைகட்டிய உணவுகளை கர்ப்பகாலத்தில் சாப்பிட கூடாது. ஏன் என்றும், பச்சையான முளைகட்டிய உணவை உட்கொண்டால் என்ன நடக்கும் என்பதைப் பார்ப்போம்.
கர்ப்ப காலத்தில் முளைகட்டிய உணவை (sprouts during pregnancy in tamil) சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
புரதச்சத்து :
எலும்பு வளர்ச்சிக்கும் கருவின் வளர்ச்சிக்கும் புரதச்சத்து அவசியம், மேலும் புரதச்சத்து அதிகமாக இருப்பது இந்த முளைகட்டிய உணவுகளில், நீங்கள் சைவ உணவு சாப்பிடுபவர்களாக இருந்தால் இது உங்களுக்கு ஏற்ற உணவு.
இரத்த சோகையை தடுக்க உதவும்:
கர்ப்ப காலத்தில் ஏற்படும் இரத்த சோகையை தடுக்க உதவும். மேலும் இரத்த சிவப்பணுக்கள் ளின் குறைந்த அளவு இருந்தால் உங்களை சோர்வாக இருக்க செய்யும். முளைகட்டிய உணவுகளில் போதுமான அளவு இரும்பு மற்றும் ஃபோலேட் உள்ளது, இது கர்ப்பத்தால் ஏற்படும் இரத்த சோகைக்கு போக்க சிகிச்சையளிக்க உதவுகிறது.
கர்ப்பிணிகளின் உடலில் போதுமான அளவு இருக்கும் இரும்புச்சத்து குறைந்தால் வயிற்று கோளாறுகள் மற்றும் குமட்டல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும். இதனை குறைப்பதற்கு முளைகட்டிய உணவு உதவுகிறது.
உடல் சோர்வு நீக்கும் :
கர்ப்பிணிகளுக்கு உடல் சோர்வு அதிகமாக இருக்கும் அதனால் உடலில் ஆற்றல் குறைந்து இருப்பார்கள் அப்படி இருக்கும் போது இந்த முளைகட்டிய உணவை சாப்பிடும்போது உடனடி ஆற்றல் கிடைக்கும்.
முளைகட்டிய உணவில் தாதுக்கள், வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் என்சைம்கள் நிறைந்துள்ளன, இவை உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, கர்ப்ப காலத்தில் உங்களை உற்சாகமாக வைத்திருக்கும்.
கர்ப்பிணிகளுக்கு எடையை கட்டுக்குள் வைக்க முளைகட்டிய உணவுகள் முக்கியனானது.
இந்த உணவை சாப்பிடும்போது நீண்ட நேரம் உங்கள் பசியை கட்டுக்குள் வைக்கும் மற்றும் வயிறு நிரம்பியதாக உங்களை உணரவைக்கும். இதனால் கர்ப்பகால உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:
முளைகட்டிய உணவில் வைட்டமின் பி, சி, ஈ மற்றும் பிற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது , இது உங்களுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. முளைகட்டிய உணவுகளில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் உங்கள் உடம்பில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகப்படுத்திக்கிறது.
கர்ப்ப கால மலச்சிக்கலை தவிர்க்கிறது:
செரிமானத்தை அதிகப்படுத்தி கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலை தவிர்க்கிறது. முளைகட்டிய உணவில் நார்ச்சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளன, அவை வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கின்றன, குடல் இயக்கத்தை எளிதாக்குகின்றன மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கின்றன.
குழந்தையின் மூளை மற்றும் வளர்ச்சிக்கு உதவுகிறது:
முளைகட்டிய உணவில் ஒமேகா -3 மற்றும் கொழுப்பு அமிலங்கள் உள்ளது, இது உங்கள் கருவில் உள்ள குழந்தையின் மூளை மற்றும் விழித்திரை வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஒமேகா -3 இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.
பொதுவாக கர்ப்ப காலத்தில் அனைத்து கர்ப்பிணிகளும் 165°F/75°C வெப்பநிலையில் முழுமையாக சமைத்த முளைகட்டிய உணவை மட்டும் சாப்பிடவேண்டும்.
நன்றாக சமைக்காத உணவை எடுக்கும் போது பல்வேரு பிரச்சனைகள் கர்ப்பத்தில் ஏற்படலாம், எனவே கர்ப்ப காலத்தில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் முளைகட்டிய உணவை பச்சையான (raw sprouts during pregnancy in tamil) சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள்:
பச்சையான முளைகட்டிய உணவில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் இனப்பெருக்கம் மற்றும் உணவு மூலம் பரவும் நோய்களை ஏற்படுத்தும்.
வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, காய்ச்சல் அல்லது வாந்தி போன்ற உணவு மூலம் பரவும் நோய்கள் ஏற்படும்.
இருப்பினும், கர்ப்ப காலத்தில் முளைகட்டிய உணவை பச்சையாக சாப்பிடுவதை நீங்கள் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அவை ஈ.கோலை (Escherichia coli) மற்றும் சால்மோனெல்லா (Salmonella) போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உணவில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும்.
எனவே இது வயிற்றில் உள்ள கருவிற்கு தீங்கு விளைவிக்கும்.
கர்ப்பிணிப் பெண்கள் இந்த சமைக்காத முளைக்கட்டிய உணவை உட்கொண்டால், பாக்டீரியாக்கள் இரத்த ஓட்டத்தில் கலந்துவிடும்.
இது லிஸ்டீரியோசிஸ் போன்ற தொற்றுநோய்களை ஏற்படுத்தும், லிஸ்டீரியோசிஸ் என்பது பிறந்த குழந்தைகளுக்கு இரத்தம் அல்லது மூளையில் ஏற்படும் கடுமையான தொற்று.
கர்ப்ப காலத்தில் லிஸ்டீரியோசிஸ் போன்ற நோய் உயிருக்கு ஆபத்தானது, ஏனெனில் இது குறை பிரசவம், கருச்சிதைவு மற்றும் முன்கூட்டிய குழந்தை பிறப்பு ஆகியவற்றின் அபாயத்தை அதிகமாக ஏற்படுத்தும்.
கர்ப்ப காலத்தில், நீங்கள் வேகவைக்காத பச்சையான முளைகட்டிய உணவுகளை தவிர்க்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் முளைக்கட்டிய உணவை (sprouts during pregnancy in tamil) எவ்வளவு அளவு சாப்பிட வேண்டும்?
தினமும் ஒரு சிறிய கப் முளைகட்டிய உணவை சாப்பிடுங்கள், இதனை அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்கவும் ஏன் என்றால் அவற்றை ஜீரணிக்க கடினமாக இருக்கும்.
நீங்கள் ஒவ்வொரு நாளும் முளைகட்டிய உணவை சாப்பிட வேண்டியதில்லை. அதற்கு பதிலாக, ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை எடுத்துக்கொண்டால் போதும், அதுவே பாதுகாப்பாகவும் இருக்கும் .
எந்த முளைக்கைட்டிய உணவில் அதிக புரதம் உள்ளது?
கொண்டைக் கடலை, பச்சைப்பயறு, தட்டைப்பயிறு உள்ளிட்ட முளைக்கைட்டிய தானியங்களில் அதிக அளவு புரதச்சத்து இருக்கிறது.
மற்றவற்றைக் காட்டிலும் கொண்டைக் கடலையில் அதிக புரதச் சத்து இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது, இருப்பினும், கர்ப்பமாக இருக்கும் போது நன்றாக சமைத்த முளைக்கட்டிய உணவை சாப்பிட வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் .
கர்ப்பகால உணவில் முளைக்கட்டிய பயிர்களை (sprouts during pregnancy in tamil) எவ்வாறு சாப்பிடுவது?
- நன்றாக வேகவைத்த முளைக்கட்டிய உணவை சாலட்கள் போன்று தயார் செய்து சாப்பிடலாம்
- சாண்ட்விச் போன்று தயார் செய்து சாப்பிடலாம்
- உங்களுக்கு பிடித்த காய்கறிகள் உடன் சேர்த்து பொறியலாகவும் சாப்பிடலாம்.
கர்ப்ப காலத்தில் முளைகட்டிய உணவை (sprouts during pregnancy in tamil) உட்கொள்ளும் போது கவனிக்கவேண்டியவை:
நன்கு சமைத்த முளைகட்டிய உணவை எப்போதும் சாப்பிடுங்கள். முளைகட்டிய உணவு நன்கு சமைப்பது என்பது சூடாக வேகும் வரை காத்திருப்பது, மேலும் இவ்வாறு சமைப்பது பாக்டீரியாவைக் கொல்லும்.
எனவே ஆபத்து ஏற்படுவது குறையும். இதனால் கர்ப்ப காலத்தில் தாய் முளைகட்டிய உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை தொற்றுநோய்களின் பயமின்றி முழுவதும் பெற்றுக்கொள்ளலாம் .
கடைகளில் கிடைக்கும் ரெடிமேட் முளைக்கட்டிய பயிறுகளை வாங்குவதை விட, வீட்டிலேயே முளைக்கட்டிய பயிர்களை வளர்த்து, அவற்றை புதிதாகச் சாப்பிடுவது கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் ஆரோக்கியமான இருக்கும்.
இந்த முறையில் செய்தல் ஒரு சுகாதாரமான முறையில் தானியங்கள் முளைக்கட்டி இருப்பதை உறுதி செய்ய முடியும். மேலும், முளைக்கட்டிய பயிறுகளை அதிக நேரம் சமைக்காமல் வைக்க வேண்டாம்.
வேர்கள் வெடித்தவுடன், அவற்றை விரைவில் சமைத்து சாப்பிடுங்கள்.
முடிவுரை
கர்ப்ப காலத்தில் முளைகட்டிய உணவை (sprouts during pregnancy in tamil) பச்சையாக சாப்பிடுவது பாதுகாப்பானது அல்ல. மேலும் உங்களுக்கு ஏற்படும் சந்தேகத்திற்கு மருத்துவரின் ஆலோசனையை பெற்று கொள்ளுங்கள்.
மேலும் எல்லா கர்ப்பகால ஸ்கேன்களுக்கும், உங்கள் பெண்ணோயியல் மற்றும் கர்ப்பகால ஆலோசனைகளுக்கும் ஜம்மி ஸ்கேன்ஸ் -ஐ அணுகவும்.