பல கர்ப்பிணிப் பெண்கள் பொதுவான கர்ப்ப அறிகுறிகளை அனுபவிக்கிறார்கள், ஆனால் எந்த அறிகுறிகள் இல்லாமலும் கர்ப்பமாக இருக்க முடியும் என்பதும் இயல்பானது தான்.
வழக்கமான கர்ப்ப அறிகுறிகளை அனுபவிப்பது ஆரோக்கியமான கர்ப்பத்தின் அறிகுறியா என்பதையும், அறிகுறி இல்லாத கர்ப்பம் (Pregnancy Without Symptoms in Tamil) ஆபத்தானதா என்பதை பற்றி நீங்கள் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அறிகுறி இல்லாத கர்ப்பம்(Pregnancy Without Symptoms in Tamil) எவ்வளவு பொதுவானது?
காலை சுகவீனம், நெஞ்செரிச்சல், பசியின்மை மற்றும் மார்பக மென்மை ஆகியவை கர்ப்பத்தின் மிகச் சிறந்த அறிகுறிகளாகும், ஆனால் அவை மட்டும் அல்ல.
கர்ப்ப அறிகுறிகள் ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும். இன்னும் சொல்லப்போனால் ஒரு பெண்ணின் ஒவ்வொரு கர்ப்பத்திற்கும் அறிகுறிகள் மாறுபடலாம்.
கர்ப்பத்தின் அறிகுறிகள் நபருக்கு நபர் வேறுபடுவது போலவே, அறிகுறிகளின் கால அளவும் மாறுபடும். நாட்கள் மற்றும் வாரங்கள் செல்ல செல்ல, உங்கள் உடல் மாறும் போது அறிகுறிகளும் அடிக்கடி மாறும்.
சிலர் மலச்சிக்கல் அல்லது மனநிலை மாற்றங்களை அனுபவிக்கலாம். அதன் பிறகு வரும் நாட்களில் நீங்கள் கர்ப்பத்தின் எந்த அறிகுறிகளையும் உணராமலும் இருக்கலாம்.
சில கர்ப்பிணிப் பெண்கள் தங்களுக்கு சில அறிகுறிகள் இல்லை என்று நிம்மதியடைகிறார்கள், மற்றவர்கள் அறிகுறிகள் இல்லாத கர்ப்பம் ஆரோக்கியமற்றது என்றும் அது கருச்சிதைவு ஏற்பட வழிவகுக்கும் என்றும் கவலைப்படுகிறார்கள்.
உங்களுக்கு எந்த அறிகுறிகளும் இல்லை என்றால், கவலைப்பட வேண்டாம், இது அசாதாரணமானது அல்ல பொதுவானது தான்.
ஏதேனும் கர்ப்ப அறிகுறிகள் அல்லது உங்கள் உடல்நல குறைபாடு பற்றி நீங்கள் கவலைப்பட்டால், உங்கள் மருத்துவரிடம் பேச பரிந்துரைக்கிறோம்.
அறிகுறி இல்லாமல் கர்ப்பம் தரிக்குமா? (I Can be Pregnant With No Symptoms)
எந்த ஒரு அறிகுறிகளும் இல்லாமல் கர்ப்பம் (Pregnancy Without Symptoms in Tamil) தரிக்குமா என்று கேட்டால் ஆம் அறிகுறி இல்லாத கர்ப்பம் தரிக்கும்.
ஏனென்றால் சிலர் கர்ப்பமாக இருப்பார்கள் ஆனால் எந்த ஒரு அறிகுறியும் எனக்கு தெரியவில்லை என்று சொல்லுவார்கள். அது அவர்களின் உடல்நிலை மற்றும் உணவுமுறை பொறுத்ததே.
சிலருக்கு அறிகுறிகள் கூடுதலாகவும், சிலருக்கும் குறைவாகவும் இருக்கும்.
அதே போல் அறிகுறிகள் முதல் மூன்று மாதங்களுக்கு மட்டுமே இருக்கும். சிலருக்கு கர்ப்பகாலம் முழுதும் இருக்கலாம் என்று ஆய்வுகளில் கூறப்படுகிறது.
ஆனால் முதல் மூன்று மாதங்களுக்கு பிறகு அடுத்த மூன்று மாதங்களில் அறிகுறிகள் குறையும் என்றே நம்பப்படுகிறது.
அறிகுறி இல்லாத கர்ப்பத்தை (Pregnancy Without Symptoms in Tamil) எப்படி தெரிந்து கொள்வது?
அறிகுறிகள் தெரிந்தால் தான் ஆரோக்கியம் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் அறிகுறிகள் இல்லாத கர்ப்பமும் ஆரோக்கியமானது தான்.
கர்ப்ப காலத்தின் போது அறிகுறிகள் இல்லாத பெண்களுக்கு அதிகமாக பசி உணர்வு ஏற்படும்.
கருவுற்ற பெண்களுக்கு முதல் மூன்று மாதங்கள் எந்த ஒரு அறிகுறியும் தோன்றாது. அறிகுறிகள் இல்லை என்று சொல்லும் பெண்களுக்கு மூன்று மாதங்களுக்கு பிறகு அறிகுறிகள் தோன்றலாம்.
எனவே, அறிகுறிகள் இல்லையே என்று கவலைப்பட தேவையில்லை.
எப்பொழுதும் இயல்பாக இருப்பதாகவே உணர்வீர்கள். உங்களிடம் எந்தவொரு மாற்றமும் தெரியாது.
எந்தவொரு கர்ப்ப அறிகுறியும் இல்லாதவர்கள் உண்மையில் அதிர்ஷ்டமானவர்கள் தான். உணவின் மீது எந்தவொரு வெறுப்பும் இல்லாமல் பிடித்த உணவை சாப்பிட்டு அவர்களின் கருவை சுமப்பார்கள்.
எல்லா அறிகுறிகளும் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தினால் தான் உண்டாகிறது. நீங்கள் கருவுற்று இருந்தும் 3 மூன்று மாதங்களுக்கு மேல் எந்த ஒரு அறிகுறிகளும் தோன்றவில்லை என்றால் மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்வது நல்லது.
அறிகுறி இல்லாத கர்ப்பத்தில் ஏற்படும் ஆபத்துக்கள்?
பொதுவாக கவலையை ஏற்படுத்தக்கூடிய இரண்டு அறிகுறி இல்லாத கர்ப்ப சூழ்நிலைகள் உள்ளன. அவைகள் கர்ப்பப்பையில் இருக்கும் கருவின் இயக்கத்தில் மாற்றம் மற்றும் மறைந்து போகும் அறிகுறிகள்.
கருவின் இயக்கத்தில் மாற்றங்கள்
கர்ப்ப காலத்தின் போது சில அறிகுறிகள் குறையும். சில நேரங்களில் உங்கள் வயிற்றில் இருக்கும் குழந்தை அமைதியாக இருக்கும் அது இயல்பானது தான்.
ஆனால் திடீரென்று அசைவதை நிறுத்தினால் அல்லது மிகக் குறைவான செயல்பாட்டிலிருந்து மாறினால், அது ஒரு பிரச்சனைக்கான அறிகுறியாக இருக்கலாம்.
பெரும்பாலான கர்ப்பிணிகள் கர்ப்பத்தின் பதினாறு வாரங்களில் கருப்பைக்குள் தங்கள் குழந்தை அசைவதை உணர ஆரம்பிக்கிறார்கள்.
முதன் முதலாக கருவின் இயக்கத்தை உணரும் போது, நீங்கள் இதற்கு முன்பு கர்ப்பமாக இருந்தீர்களா என்ற சந்தேகங்களும் ஏற்படலாம்.
ஏனென்றால் இப்போது தான் நீங்கள் உண்மையாக உங்கள் குழந்தையின் அசைவுகளை அறிகுறிகளாக தொட்டு உணர்வீர்கள்.
கர்ப்பத்தின் மூன்றாவது மூன்று மாதங்களில் தோராயமாக 28 வாரங்கள் முதல், தினசரி கருவின் அசைவினை கவனிப்பது நல்லது.
உங்கள் குழந்தை அதிகமாக நகரவில்லை என்றாலோ அல்லது குறைவாக நகர்வது போல் தெரிந்தாலோ கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதை உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டியது அவசியம்.
சில நேரங்களில் சிறிதளவு இயக்கத்துடன் இடைப்பட்ட வலியினை உங்கள் வயிற்றில் ஏற்படுத்தும்.
அப்போது உங்கள் குழந்தை உறக்கத்தில் இருக்கலாம். மாற்றாக, நஞ்சுக்கொடி கருப்பையின் முன்புற சுவரில் இருந்தால், அது கருவின் இயக்கத்தின் உணர்வை மென்மையாக்கும்.
தொப்புள் கொடி கருவின் கழுத்தில் சுற்றியிருக்கும் போது கூட குழந்தையின் அசைவை குறைக்கலாம்.
மறைந்து போகும் அறிகுறிகள்
கர்ப்ப காலத்தில், குறிப்பாக கர்ப்பத்தின் ஆரம்பத்தில் அறிகுறிகள் திடீரென காணாமல் போவதும் கவலைக்குரியது. இந்த சூழ்நிலையில், சில பெண்கள் அவர்கள் கர்ப்பமாக இருப்பதாகவே உணர முடியாமல் இருப்பார்கள்.
அப்படி இருக்கும் போது உடனடியாக உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். இரத்தப்போக்கு அல்லது தசைப்பிடிப்பு போன்ற கருச்சிதைவுக்கான வழக்கமான ஆரம்ப அறிகுறிகள் இல்லாமல் கூட, திடீரென நிறுத்தப்படும் கர்ப்ப அறிகுறிகள் கருச்சிதைவைக் குறிக்கலாம்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
சிலருக்கு, கர்ப்பத்தின் பொதுவான அறிகுறிகளாக காலை நோய் மற்றும் சோர்வு போன்றவை கடினமாக இருக்கலாம்.
முடிவுரை
கர்ப்ப காலத்தில் உங்களுக்கு அறிகுறிகள் அதிகமாக இருந்தால் அல்லது அதிக அறிகுறி இல்லாத கர்ப்பமாக இருந்தால், உங்கள் மருத்துவரிடம் பேச தயங்காதீர்கள்.
அவர்கள் வழங்கக்கூடிய பாதுகாப்பு உங்கள் கர்ப்ப கால மன அழுத்தம் குறைத்து, உங்கள் கர்ப்பத்தை ஆரோக்கியமாகவும் வசதியாகவும் வைத்திருக்கும்.
மேலும் சந்தேகங்களுக்கு மற்றும் உங்கள் மகப்பேறு & பெண்ணோயியல் ஸ்கேன்களுக்கு ஜம்மி ஸ்கேன்ஸ் -ஐ தொடர்பு கொள்ளுங்கள்
+91 7338771733 என்ற என்னை அழைத்து உங்கள் வருகையை முன் பதிவு செய்யுங்கள்