கர்ப்பகாலத்தில் இயல்பாகவே பெண்களுக்கு எடை அதிகரிப்பு உண்டாகும் (pregnancy weight gain in tamil). ஆனால் இவை ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். குழந்தையின் வளர்ச்சியை ஊக்குவிக்க எடை அதிகரிப்பு அவசியம்
ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் கர்ப்ப எடை அதிகரிப்பை நிர்வகிக்கவும் குழந்தையின் ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் உதவும்.
ஆனால் கர்ப்பகாலத்தில் சரியான உணவை தேர்ந்தெடுப்பது குழந்தை பிறந்த பிறகும் எடை குறைப்பில் உதவுகிறது
கர்ப்பகாலத்தில் எடை அதிகரிப்பு (pregnancy weight gain in tamil) ஆரோக்கியமாக இருக்க வேண்டும் எனில் கர்ப்பத்துக்கு முன்பு இருந்த உடல் எடை மற்றும் உடல் நிறை குறியீட்டெண் உட்பட பல்வேறு காரணிகளை பொறுத்து இது முடிவுசெய்யப்படும்.
மேலும் இது உங்கள் ஆரோக்கியம் மற்றும் உங்கள் குழந்தையின் ஆரோக்கியமும் அடங்கியுள்ளது. அதனால் உங்களுக்கு ஏற்ற எடை எது என்பதை தீர்மானிக்க மருத்துவ சுகாதார வல்லுநர்கள் தேவை.
கர்ப்பகாலத்தில் எடை எவ்வளவு வரை அதிகரிக்கலாம்
குறைந்த எடை (பிஎம்ஐ 18.5 க்கு கீழ் இருந்தால் ) – 13 முதல் 18 கிலோ வரை எடை அதிகரிக்கலாம்.
ஆரோக்கியமான எடை உள்ளவர்கள் (பிஎம்ஐ) 18.5 முதல் 24 வரை இருந்தால் – 11 முதல் 16 கிலோ வரை எடை அதிகரிக்கலாம்.
அதிக எடை இருந்தால் (பிஎம்ஐ) 25 முதல் 29 – 7 முதல் 11 கிலோ வரை எடை அதிகரிக்கலாம்.
அதிக உடல் பருமன் (பிஎம்ஐ) 30 க்கு மேல் இருந்தால் – கர்ப்பிணி 5 முதல் 7 கிலோ வரை மட்டுமே எடை அதிகரிக்க வேண்டும்.
இது கர்ப்பகால எடையின் பொதுவான விதிமுறை என்றாலும் கர்ப்பிணி இரண்டு குழந்தைகளை சுமப்பதாக இருந்தால் இந்த எடையின் விகிதம் மாறுப்படும்.
குறைந்த எடை (பிஎம்ஐ 18.5 க்கு கீழ் இருந்தால் ) – 23 முதல் 28 கிலோ வரை எடை அதிகரிக்கலாம்.
ஆரோக்கியமான எடை உள்ளவர்கள் (பிஎம்ஐ) 18.5 முதல் 24 வரை இருந்தால் – 17 முதல் 25 கிலோ வரை எடை அதிகரிக்கலாம்.
அதிக எடை இருந்தால் (பிஎம்ஐ) 25 முதல் 29 – 14 முதல் 23 கிலோ வரை எடை அதிகரிக்கலாம்.
அதிக உடல் பருமன் (பிஎம்ஐ) 30 க்கு மேல் இருந்தால் – கர்ப்பிணி 11 முதல் 19 கிலோ வரை மட்டுமே எடை அதிகரிக்க வேண்டும் என்று இன்ஸ்டிட்டியூட் ஆஃப் மெடிசன் மற்றும் தேசிய ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
கர்ப்பிணி முதல் மூன்று மாதங்களில் அதிக எடையுடன் (pregnancy weight gain in tamil) இருந்தால் கர்ப்பகால நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கலாம்.
அதனால் உங்கள் மகப்பேறு மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் எடை அதிகரிப்பை கவனியுங்கள்.
கர்ப்பிணி சரியான எடையை பெற என்ன செய்ய வேண்டும்?
ஒவ்வொரு நாளும் நீங்கள் உண்ணும் உணவை பிரித்து சிறிது சிறிதாக ஆறு வேளை உண்ணலாம்.ஆரோக்கியமான சிற்றூண்டிகளை எடுத்துகொள்ளுங்கள்
ஆப்பிள், வாழைப்பழங்கள், செலரி, பீனட் போன்றவற்றை பயன்படுத்தலாம். ஒரு டீஸ்பூன் பீநட் உங்களுக்கு 100 கலோரிகள் மற்றும் 7 கிராம் புரதம் அளிக்கிறது.
பிசைந்த உருளைக்கிழங்கு, முட்டை மற்றும் சூடான தானியத்துடன் கொழுப்பு இல்லாத பால் சேர்க்கவும்.
கர்ப்பிணிக்கு எடை அதிகரிக்க என்ன காரணம்? (Pregnancy weight gain in Tamil – causes)
கர்ப்பகாலத்தில் (pregnancy weight gain in tamil) எடை அதிகரிக்க முக்கிய காரணம் இரண்டு உண்டு. முதலாவது அதிகமான அளவில் உணவு எடுத்துக் கொள்வது இரண்டாவது போதிய உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது.
மன அழுத்தம், ஹைப்போ தைராய்டு, பி.சி.ஓ.எஸ், anticonvulsants போன்றவற்றிற்கு எடுக்கும் மாத்திரைகளும் எடை அதிகரிப்புக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.
எடை அதிகரிப்பதால் உண்டாகும் பக்கவிளைவுகள் என்ன?
எடை அதிகரிப்பதால் நெஞ்செரிச்சல், வியர்வை அதிகமாக வெளியேறுதல், சோர்வு, மூட்டு மட்டும் முதுகு வலி், தூக்கத்தில் மூச்சுதிணறல் போன்ற அன்றாட உடல்நல பிரச்சனைகள் உண்டு செய்யும்.
உடல் எடை அதிகரித்தால் உயர் இரத்த அழுத்தம், உயர் இரத்த சர்க்கரை மற்றும் அதிக கொழுப்புகள் உங்கள் கர்ப்பக்காலத்தை பாதிக்கவும் செய்கிறது.
மருத்துவர் குறிப்பிட்ட அளவை விட அதிகமாக எடை அதிகரித்தால் என்ன செய்வது?
மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே நிபுனரின் வழிகாட்டுதலில் தொடர் ஆலோசனையில் உடல் எடையை குறைக்க வேண்டும்.
பெரும்பாலும் பெண்கள் எடை குறைய உணவை முயற்சிக்க கூடாது. பெண் கருத்தரித்த உடனேயே தனது உடல் எடை குறித்து கவனம் செலுத்த வேண்டும்.
கலோரிகளை அறியுங்கள்
கர்ப்பிணிக்கு முதல் ட்ரைமெஸ்டர் காலங்களில், முதல் மூன்று மாதங்களில் கூடுதல் கலோரிகள் தேவையில்லை. கர்ப்பிணிக்கு இரண்டாம் ட்ரைமெஸ்டர் கால கட்டங்களில் நாள் ஒன்றுக்கு 340 கலோரிகள் கூடுதலாக தேவைப்படும்.
மூன்றாவது ட்ரைமெஸ்டர் காலங்களில் மூன்றாவது மூன்று மாதங்களில் ஒரு நாளைக்கு 450 கலோரிகள் கூடுதலாக தேவைப்படும். ஆனால் இதில் ஆரோக்கியமாக என்ன சேர்க்கலாம் என்பதை திட்டமிட்டாலே போதுமானது
எடை அதிகரிப்பு ஆரோக்கியமாக சரியாக இருக்க முழு தானியங்கள்,காய்கறிகள், பழங்கள், குறைந்த கொழுப்புள்ள பால் பொருள்கள் மற்றும் மெலிந்த புரதம் நிறைந்த சமச்சீரான உணவை எடுத்துகொள்ளுங்கள்.
கர்ப்பகால உணவுகள் பல சாப்பிட பாதுகாப்பானவை. சில உணவுகளை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். அல்லது தவிர்க்க வேண்டும். கர்ப்பகாலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன என்பதையும் கவனித்து தவிர்க்க வேண்டும்.
கர்ப்பிணி எடையை அதிகரிக்கும் குளிர்பானங்கள், வறுத்த உணவுகள், இனிப்புகள், முழு பால் மற்றூம் கொழுப்பு நிறைந்த இறைச்சிகள் போன்ற உணவுகளில் சேர்க்கப்படும் திடக்கொழுப்புகளை கட்டுப்படுத்த வேண்டும்.
வாரத்துக்கு 150 நிமிடங்கள் மிதமான தீவிரம் கொண்ட ஏரோபிக் செயல்பாடு செய்யலாம். தினமும் 10 நிமிடங்களாகபிரித்து செய்வதன் மூலம் இந்த 150 நிமிட குறிக்கோளை அடையலாம். கர்ப்பிணிகளுக்கு உடல் செயல்பாடு ஆரோக்கியமானது. பாதுகாப்பானது.
கர்ப்பிணி எடை அதிகரிப்பது அவசியமானதா?
கர்ப்பத்தில் பரிந்துரைக்கப்படும் எடையை விட குறைவாக எடை அதிகரிப்பது வயிற்றில் வளரும் குழந்தையின் எடையை குறைக்க செய்யும்.
மிகவும் சிறியதாக பிறந்த சில குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது சிரமமாக இருக்கும். நோய்க்கான ஆபத்தில் குழந்தை இருக்கலாம். குழந்தையின் வளர்ச்சியும் தாமதமாக இருக்கலாம்.
கர்ப்பிணி பரிந்துரைக்கப்பட்ட எடையை விட அதிகமாக பெறுவது
குழந்தை பிறப்பிலேயே பெரியதாக பிறந்த குழந்தையுடன் தொடர்புடையது. இதுவும் பிரசவ காலத்தில் பிரசவ சிக்கல்கள், சிசேரியன் பிரசவம் மற்றும் உடல் பருமன் போன்றவற்றை உண்டு செய்யலாம்.
அதனால் பரிந்துரைக்கப்பட்ட எடையை விட அதிகமாக அதிகரிப்பது கர்ப்பத்துக்கு பிறகு எடையின் அளவை அதிகரிக்கலாம். இது உடல் பருமனையும் உண்டு செய்யலாம்.
உடல் எடை குறித்து கர்ப்பிணி மருத்துவரை எப்போது சந்திப்பது?
கருவுற்ற முதல் உடல் எடை குறித்து மருத்துவரே பரிந்துரைப்பார் எனினும் உங்கள் உடல் எடை சரியான அளவு உள்ளதா அதிகமாக உள்ளதா என்பதை அறிய நீங்கள் மருத்துவரை அணுகுங்கள்.
இரண்டாவது அல்லது மூன்றாவது மூன்று மாதங்களில் எடை குறைகிறது என்றாலும் மருத்துவரை அணுக வேண்டும். ஆரொக்கியமான அளவு உணவு எடுப்பதை தவிர்க்கும் போது நல்ல உணவு திட்டம் அமைக்க மருத்துவரை அணுகுங்கள்.
முடிவுரை
கர்ப்பிணிக்கு உடல் எடை அதிகரித்தாலும் (pregnancy weight gain in tamil) பிரசவத்துக்கு பிறகு உடல் எடை கட்டுக்குள் கொண்டு வர எடை இழப்பு முயற்சிக்கலாம். ஆனால் அதையும் ஆரோக்கியமான உணவு முறை மூலம் மட்டுமே முயற்சிக்க வேண்டும்.
ஏனெனில் கர்ப்பத்துக்கு பிறகு தாய்ப்பால் வழியாக குழந்தைக்கு ஊட்டச்சத்து செல்வதால் உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். பிரசவத்துக்கு பின் எடை இழப்பு அவசியம் என்றாலும் அது குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்காமல் இருக்க வேண்டும்.
To Read in English : Tips to Maintain Weight Gain During Pregnancy