கருத்தரிக்க முயற்சிக்கும் ஆண்களுக்கு டிப்ஸ் (Health Tips For Male Fertility in tamil)
கருத்தரித்தலை எதிர்நோக்கும் தம்பதியரில் பெண்கள் மட்டுமே அதற்கான குறிப்புகளை பின்பற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் பெண்களுக்கு இணையாக ஆண்களும் கருத்தரிப்பை (Health Tips For Male Fertility in tamil) எதிர்கொள்ளும் போது சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
அப்படி செய்தால் ஆரோக்கியமான கருத்தரிப்பு எளிதாகும். கருத்தரிக்க முயற்சிக்கும் ஆண்கள் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

பொதுவாக ஆணின் விந்தணு கர்ப்பத்தை மட்டும் அல்லாமல் கர்ப்ப ஆரோக்கியத்தையும் தீர்மானிக்க செய்யும். அதனால் கருவுறுதலை எதிர்நோக்கும் ஆண்கள் ஆரோக்கியமான கருவுறுதலை உறுதி செய்ய சில மாற்றங்களை செய்ய வேண்டும்.
ஆண்கள் தங்கள் உடல் எடையில் கவனம்
ஆண்கள் எடை குறைவாக இருப்பது அல்லது அதிக எடையுடன் இருப்பது விந்தணுவில் எதிர்மறையான விளைவுகளை உண்டு செய்யும். சமயங்களில் இது பாலியல் வாழ்க்கையிலும் குறைபாட்டை உண்டு செய்யலாம். ஏனெனில் உடல் பருமனானது ஆணின் லிபிடோ மற்றும் செயல்திறனை பாதிக்க செய்யலாம்.

உடல் எடையை கட்டுக்குள் வைக்க பழங்கள், காய்கறிகள், மெலிந்த புரதங்கள், தானியங்கள் மற்றும் பால் பொருள்கள் ஆகிய சமச்சீர் ஊட்டச்சத்து உணவுகளை எடுப்பது நன்மை அளிக்கும் மேலும் உடல் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் பயிற்சிகளும் உடல் வலிமையை உறுதி செய்யும். ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவும். இது சிக்கலில்லாமல் ஆரோக்கியமான கருவுறுதலுக்கும் உதவும்.
ஃபோலேட் உணவுகள்
கர்ப்ப காலத்துக்கு முன்பு பெண்களுக்கு ஃபோலிக் அமிலம் தேவை என்பது போன்று இது ஆண்களுக்கும் அவசியம் ஆகும். ஏனெனில் ஆண்களில் விந்தணுக்களில் அசாதாரண குரோமோசோம்கள் அதிகமாக இருப்பதாக பெர்க்லி கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அசாதாரண குரோமோசோம்களை கொண்ட விந்தணுக்கள் முட்டையை கருவுறச் செய்யும் போது அது கருச்சிதைவு அல்லது பிறப்பு குறைபாடுகளை உண்டு செய்யலாம்.
இதனால் மூன்று மாத கர்ப்பத்தில் பெண் கருச்சிதைவு வருவதை எதிர்கொள்ள வாய்ப்புண்டு. ஏனெனில் கருச்சிதைவில் பாதிக்கும் மேற்பட்டவை கருவில் உள்ள குரோமோசோம் அசாதாரணங்களால் ஏற்படுகின்றன. அதனால் ஆண்கள் ஃபோலிக் அமில மாத்திரைகளை எடுக்க வேண்டும் என்று யோசிக்க வேண்டாம்.
உணவு முறையில் பீன்ஸ், பச்சை காய்கறிகள், முழு தானியங்கள், சிட்ரஸ் பழங்கள் மற்றும் ஃபோலேட் செறிவூட்டப்பட்ட தானியங்கள் ரொட்டிகள் மற்றும் பாஸ்தா போன்ற ஃபோலேட் அதிகம் உள்ள உணவுகளை எடுக்கலாம். ஆண்கள் தினமும் 400 மில்லிகிராம் ஃபோலிக் அமிலம் எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.
தூக்கமும் அவசியம்
ஆண்கள் ஆழ்ந்து தூக்குவது அவசியம் என்று டென்மார்க்கில் உள்ள ஆர்எஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இவர்கள் படுக்கை நேரங்களை மேம்பட்ட விந்தணு தரத்துடன் தொடர்புபடுத்தியுள்ளனர்.
ஆண்கள் ஓர் இரவில் ஏழரை முதல் எட்டு மணி நேரம் வரை போதுமான தூக்கத்தை பெறுவதற்கும் அது கருவுறுதலை மேம்படுத்துவதற்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதனால் தினசரி தூக்கம் அவசியம். சரியான நேரத்தில் சரியான அளவு தூங்குதல் மிக அவசியமானது.
ஆண்கள் கருவுறுதலை (Health Tips For Male Fertility in tamil) மேம்படுத்த மாத்திரை
ஆண்கள் ஆரோக்கியமாக இருந்தாலும் பெற்றோர்களுக்கு வேண்டிய வைட்டமின் மாத்திரைகளை பெண்களோடு இவர்களும் எடுத்துகொள்ளலாம். ஆண்களின் விந்தணுக்கள் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க மருத்துவரை அணுகி பெற்றோர் வைட்டமின் மாத்திரைகளை எடுத்துகொள்ளலாம்.

இந்த வைட்டமின்களில் பி12, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, துத்தநாகம் மற்றும் செலினியம் ஆகியவை இருக்க வேண்டும். சாதாரண டெஸ்டோஸ்ட்ரான் அளவை பராமரிக்க துத்தநாகம் உதவுகிறது.
மேலும் செலினியம் பிறப்பு குறைபாடுகள் மற்றும் குறைந்த விந்தணுக்களின் எண்ணிக்கையை மேம்படுத்தும் அபாயத்தை குறைப்பதாக சொல்லப்பட்டுள்ளது. துணையுடன் கருத்தரிக்க முயற்சிக்கும் போது ஆரோக்கியத்தில் பாதிப்பு இல்லாமல் இருக்க வைட்டமின் மாத்திரைகள் எடுக்கலாம். மருத்துவரை அணுகி அவரது பரிந்துரையின் பெயரில் மருந்து எடுப்பது நல்லது.
புகைப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும்
புகைப்பழக்கம் கொண்டிருப்பது குறைந்த விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் அதன் இயக்கத்தை பொறுமையாக்கும். அதனால் கருத்தரிக்க முயற்சிக்கும் முன் குறைந்தது மூன்று மாதங்களுக்கு புகைப்பழக்கத்தை நிறுத்துங்கள் அல்லது புகைப்பழத்தை கட்டுப்படுத்துங்கள்.
விந்தணு உற்பத்தி சுமார் மூன்று மாதங்கள் வரை ஆகும் என்பதால் ஆரோக்கியமான விந்தணு உற்பத்திக்கு குறைந்தது முன்று மாதங்களுக்கு முன்பு புகைப்பழக்கத்தை கட்டுப்படுத்துவது விந்துவில் பாதிப்பை உண்டு செய்யாது.
ஆல்கஹால் பழக்கத்தை கட்டுப்படுத்துங்கள்
விந்தணு அசாதரணங்களை தவிர்க்க மதுவை கட்டுப்படுத்துங்கள். இதை முழுவதுமாக தவிர்க்க வேண்டியதில்லை. ஆனால் ஆரோக்கியமான கருத்தரிப்புக்கு மதுவை கட்டுப்படுத்துவது நல்லது. இந்த மதுப்பழக்கம் விந்தணு உற்பத்தியை குறைப்பதாகவும் விந்தணுக்களில் அசாதாரணத்தை ஏற்படுத்துவதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான மதுவை எடுக்கும் போது பாலுறவில் சிறப்பாக ஈடுபட முடியாது.
கருத்தரிப்பதற்கு முன் பரிசோதனை திட்டமிடுங்கள்
கருத்தரிக்க முயற்சிக்கும் முன்பு ஒரு முழுமையான பரிசோதனை செய்து கொல்வது நல்லது. ஒரு முழுமையான உடல் பரிசோதனை வழியாக கருத்தரிப்பு குறைபாடு இருந்தாலும் அதை சரி செய்து கொள்ள முடியும்.

மேலும் உடல் பருமன் குறியீட்டெண் பரிசோதனை செய்து தேவையெனில் மருந்துகள் , வாழ்க்கை முறை காரணிகள், எதிர்காலத்தில் குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய மரபணு கோளாறுகள் அல்லது வரலாறு குறித்து மருத்துவரிடம் ஆலோசிக்கலாம்.
ஆரோக்கியமான கர்ப்பத்தை உறுதிப்படுத்த மருத்துவர் தேவையெனில் சிக்கன் பாக்ஸ் மற்றும் பருவகால காய்ச்சல் போன்ற நோய்கள் வராமல் தடுக்க தடுப்பூசிகளை பரிந்துரைப்பார்.
காஃபின் குடிப்பதை குறையுங்கள்
விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க காஃபினை குறைக்கவும். ஆண்களிடம் இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது சோடா அல்லது காஃபின் உட்கொள்ளும் ஆண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் காஃபின் உட்கொள்ளும் ஆண்களில் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் விந்தணுக்களின் செறிவு சற்று குறைந்துள்ளது.
ஆண்கள் தங்கல் காஃபின் நுகர்வு ஒரு நாளைக்கு 300 மில்லிகிராம்கள் வரை கட்டுப்படுத்த வேண்டும் என்று சொல்லப்படுகிறது. காஃபைன் பானங்கள் கட்டுப்படுத்துவது பாதுகாப்பானதும் கூட.
மன அழுத்தத்தை குறைக்க உடற்பயிற்சி செய்யுங்கள்
மன அழுத்தம் அசாதாரண விந்தணுக்களை அதிகரித்து அதன் செறிவை குறைக்கும். நன்றாக தூங்குவதும், சத்தான உணவும் பதற்றம் மற்றும் மன அழுத்தத்தை போக்க உதவும். அதனுடன் உடற்பயிற்சி செய்வது, நண்பர்களுடன் பழகுவதற்கு நேரம் ஒதுக்குவது, சில நிமிடங்கள் மனதை அமைதிப்படுத்த ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது என இவை எல்லாமே மன அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்.
ஆண்கள் மன அழுத்தம் இல்லாமல் இருந்தால் விந்தணுக்கள் ஆரோக்கியமாக இருக்கும். யோகா போன்ற பயிற்சிகள் மன அழுத்தத்தை தடுக்க உதவும்.
மருந்துகள் எடுக்கும் போது கவனியுங்கள்
ஆண்கள் ஏதேனும் உடல் ஆரோக்கிய குறைபாட்டுக்கு மருந்துகள் எடுப்பதாக இருந்தால் அது கருவுறுதலுக்கு எதிரான மருந்துகளா என்பதை உறுதிபடுத்துங்கள்.
கருத்தரிக்க தொடங்குவதற்கு முன்பு நீங்கள் எடுக்கும் மருந்துகளின் விவரங்களை பட்டியலாக சேகரியுங்கள். மருந்து சீட்டுகள், மாத்திரைகள், வைட்டமின்கள் மற்றும் மூலிகை சப்ளிமெண்ட்கள் உட்பட அனைத்தையும் சரிபாருங்கள்.
ஏனெனில் சில மருந்துகள் ஆணின் விந்தணுவின் தரம் அல்லது அதன் அளவை பாதிக்கலாம். நீங்கள் குழந்தைக்கு தயாராகும் போது சில மருந்துகள் குழந்தை உருவாக்கும் இலக்குகளில் தலையிடலாம். அதனால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதன் மூலம் கருவுறுதலுக்கு நட்பு செய்யும் மருந்தை மாற்றி அமைக்க மருத்துவர் பரிந்துரைக்கலாம்.
ஆண்கள் தங்கள் விரைகளை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும்
ஆண்களின் உறுப்பில் அவர்களது விரைகள் உடலுக்கு வெளியே தொங்குவதற்கு ஒரு காரணம் உண்டு. விந்தணு உற்பத்தி ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் நடைபெற வேண்டும், உடலின் உஷ்ணமானது சூடாக இருக்கும்.
அதனால் விந்தணுக்கள் உடலில் வெளிப்புற பகுதியில் இருக்கும் விரைகளில் குளிர்ச்சியாக உள்ளன. அதனால் விந்தணுக்களை அதிக வெப்பமடைய செய்யும் ஏதாவது ஒன்றை செய்தால் அது விந்தணு உற்பத்தியில் தலையிடலாம்.
அதனால் சூடான நீர் தொட்டிகள், நீராவி அறைகளில் செலவிடும் நேரத்தை குறைக்க வேண்டும். அதனால் தான் ஆண்கள் 15 நிமிடங்களுக்கு மேல் விரையில் வெந்நீர் படும்படி குளிக்க கூடாது.
அதே போன்று மடியில் மடிக்கணினியில் வேலை செய்யும் பழக்கத்தையும் மாற்ற வேண்டும். மடிக்கணினியை அடிக்கடி பயன்படுத்துவதால் பிறப்புறுப்பு வெப்பமயமாதல் விந்தணுவை பாதிக்கக்கூடிய சாத்தியகூறுகள் இருக்கலாம். அதனால் குறைந்தபட்ச நேரமாய் வைத்திருங்கள். மடிக்கணினியை மடியில் வைக்காமல் மேசையில் வைத்து பயன்படுத்துங்கள்.
மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் நச்சுக்களை தவிர்க்கவும்
ஆண்கள் வேலை செய்யும் பணியிடங்களும் விந்தணுக்கள் குறைவுக்கு காரணமாகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். மலட்டுத்தன்மையை உண்டு செய்யும் நச்சுக்களை தவிர்க்கவும், இராசயனங்கள் நடமாடும் நச்சுப்பொருள்களை சுற்றியும் வேலை செய்தால் அது ஆண்மையை பாதிக்காமல் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
கனரக உலோகங்கள், ஈயம் மற்றும் இராசயன கரைப்பான்கள் போன்ற நச்சு இராசயனங்கள் சேதமடைந்த விந்தணுக்களின் சதவீதத்தை அதிகரிக்கும்.
அதனால் எதிர்காலத்தில் கருத்தரிக்க எதிர்பார்க்கும் ஆண்கள் அதை தவிர்க்க முயற்சிக்க வேண்டும். இராசயனங்கள் சுற்றி பணி செய்யும் நிலை இருந்தால் அவர் முகமூடி மற்றும் பாதுகாப்பான ஆடை அணிந்து சரியான காற்றோட்டத்துடன் இருக்க வேண்டும்.
கருவுறுதலில் உணவு பழக்கம்
சில ஆய்வுகள், சில உணவுகள் விந்தணு எண்ணிக்கை குறைவதற்கு பங்களிக்கின்றன. அதனால் விந்தணுக்களை மேம்படுத்தும் உணவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

நீங்கள் அசைவ உணவு உண்பவர்களாக இருந்தால் மீன் சேர்க்கலாம். மீனில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் அதிக உள்ளடக்கம் விந்தணுக்களின் எண்ணிக்கையை மேம்படுத்துகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.
பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிக அளவு வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இது உங்கள் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கும். இது விந்தணுக்களின் எண்ணிக்கையை மேம்படுத்தலாம். உங்கள் உணவில் பீன்ஸ், பருப்பு, முட்டை, இறைச்சி, பால் போன்றவையும் சேர்க்கலாம்.
அக்ரூட் பருப்புகள் – நாள் ஒன்றுக்கு 18 அக்ரூட் பருப்புகளை 12 வாரங்களுக்கு எடுத்துகொள்வது விந்தணுக்களின் எண்ணிக்கையை மேம்படுத்துவதாக ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
ஆண்கள் மனதில் கொள்ள வேண்டியவை
பெண்கள் போன்று ஆண்களும் குழந்தை பெற்றுகொள்ளும் வயதை மனதில் கொள்ள வேண்டும். ஆண்கள் எந்த நேரத்திலும் குழந்தைகள் பெற்றுகொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் இது உண்மை அல்ல.

குழந்தை பெற்றுகொள்ள பெண்களை போன்று ஆண்களின் வயதும் முக்கியம். வயது அதிகரிக்க அதிகரிக்க ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கையும் தரமும் குறைய தொடங்கும்.
அதனால் சரியான வயதில் குழந்தை பிறக்க திட்டமிடுங்கள். பெண் கருத்தரிக்க ஆணின் விந்தணுக்கள் ஆரோக்கியமானதாகவும் பெண்ணின் முட்டையை ஊடுருவி செல்லும் அளவு வலுவாகவும் இருக்க வேண்டும். அதற்கு உணவு முறையிலும் உங்கள் அன்றாட வாழ்க்கை முறையிலும் கவனம் செலுத்துங்கள்.
மேற்கண்ட குறிப்புகளில் கவனம் செலுத்தினாலே இயற்கையான முறையில் ஆரோக்கியமான கருத்தரிப்பு நிச்சய்ம்.