அண்டவிடுப்பின் (Ovulation in Tamil) என்பது உங்கள் மாதவிடாய் சுழற்சியின் ஒரு பகுதியாகும். கருப்பையில் இருக்கும் முட்டை முதிர்ந்து வெளியேறுவது தான் அண்டவிடுப்பின் ஆகும்.
அவ்வாறு வெளியேறும் முட்டை பாலோப்பியன் குழாயில் கருத்தரிக்க காத்திருக்கும். கருத்தரித்தல் நிகழ்ந்த பிறகு கருவானது கர்ப்பப்பை சுவரில் பதிந்து வளர ஆரம்பிக்கும்.
கருத்தரிக்காத முட்டை கரைந்து விடும். கர்ப்பப்பை சுவரில் இருக்கும் திசுக்கள் மாதவிடாய் உதிரப்போக்காய் வெளியேறும்.
அண்டவிடுப்பின் (Ovulation in tamil) எப்போது நிகழ்கிறது
அண்டவிடுப்பின் (Ovulation in tamil) பொதுவாக மாதவிடாய் சுழற்சியின் 14 வது நாளில் நிகழ்கிறது. அதே நேரம் மாதவிடாய் சுழற்சி சீராக இருந்தால் மட்டுமே இந்த அண்டவிடுப்பின் நிகழ்வும் சீரான இடைவெளி இருக்கும்.
ஆனால் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை கொண்டிருப்பவர்களுக்கு அண்டவிடுப்பின் நிலை எப்போது வரும் என்பதை துல்லியமாக கணக்கிட முடியாது.
பொதுவாக மாதவிடாய் சுழற்சியின் (30 நாட்களில் ஒரு பெண் மாதவிடாய் சுழற்சி கொண்டிருந்தால் அவருக்கு 15 நாட்கள் நடுப்பகுதியில்) நடுப்பகுதியில் நான்கு நாட்களுக்கு முன்பு அல்லது நான்கு நாட்களுக்கு பின்பு அண்டவிடுப்பு உண்டாகிறது.
அண்டவிடுப்பின் (Ovulation in tamil) காலம் எத்தனை நாட்கள் வரை இருக்கும்?
மாதவிடாய் முடிந்த பின்னர் உங்கள் உடல் FSH ஹார்மோனை வெளியிடும். இந்த ஹார்மோன் உங்கள் நுண்ணறையில் உள்ள முட்டை முதிர்ச்சியடைய உதவுகிறது. மேலும் கருப்பையிலிருந்து வெளியீட்டிற்குத் தயராக்குகிறது.
முட்டை முதிர்ச்சியடைந்த பின்னர் LH ஹோர்மோனை உடல் வெளியிடும். இது முதிர்ச்சியடைந்த முட்டையின் வெளியீட்டைத் தூண்டுகிறது.
LH ஹார்மோன் வெளியிட்ட 28 -36 மணி நேரத்துக்குள் அண்டவிடுப்பு (Ovulation in tamil) நிகழும்
அண்டவிடுப்பின் (Ovulation in tamil) பிறகு கருவுறுதல் எப்போது நடக்கும்.
அண்டவிடுப்பின் (Ovulation in tamil) நிகழ்ந்த 12 முதல் 24 மணி நேரத்தில் கருவுற முடியும். விந்தணுக்கள் இனப்பெருக்க குழாயில் 5 நாட்கள் வரை சிறந்த சூழ்நிலையில் உயிர்ப்போடு இருக்கும்.
அண்டவிடுப்பின் வரை அல்லது அண்டவிடுப்பின் நாளில் உடலுறவு கொள்ளும் போது கருத்தரிக்கலாம்.
இது கருத்தரிக்க சரியான நாள் மற்றும் வளமான சாளரம் என்று அழைக்கப்படுகிறது. அண்டவிடுப்பின் காலத்தில் உடலுறவு கொள்ளும் போது ஃபலோபியன் குழாய்களில் விந்தணுக்கள் காத்திருக்கலாம்.
முட்டை வெளியாகும் போது இவை விந்தணுக்களுடன் இணைந்து கருவுற தயாராக இருக்கிறது.
அண்டவிடுப்பின், மாதவிடாய் சுழற்சிக்கு இடையில் எத்தனை முறை நடக்கும்
ஒருமுறை அண்டவிடுப்பின் (Ovulation in tamil) நிகழும். அதேநேரம் சிலர் ஒரு மாதவிடாய் சுழற்சியில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை அண்டவிடுப்பின் செய்வார்கள்.
இது குறித்து ஆய்வு ஒன்றில் சில பெண்கள் இரண்டு அல்லது மூன்று முட்டைகளை வெளியிட்டதாக ஆய்வு சொல்கிறது. ஒரே அண்டவிடுப்பின் போது பல முட்டைகளை வெளியிடலாம்.
இரண்டு முட்டைகளும் விந்தணுக்களுடன் இணையும் போது இரட்டை கருவை பெறக்கூடும்.
அண்டவிடுப்பின் (Ovulation in tamil) அறிகுறிகள்
அண்டவிடுப்பின் (Ovulation in tamil) அறிகுறிகள் பெண்கள் அதிகமாக கவனித்தால் மட்டுமே கண்டறிய முடியும். அண்டவிடுப்பின் அறிகுறிகள் என்னென்ன?
- யோனி வெளியேற்றத்தில் அரிப்பு
- யோனியில் இருந்து வெளிப்படும் திரவம் தெளிவாக நீரோட்டமாக இருப்பது.
- முட்டையின் வெள்ளை நிறத்தை ஒத்திருக்கலாம்.
- அண்டவிடுப்பின் பின்னர் வெளியேற்றம் அளவு குறைந்து தடினமானகா இருக்கலாம்.
- இலேசான இரத்தபோக்கு அல்லது புள்ளிகள்
- மார்பகம் மென்மையாக இருக்கும்
- கருப்பை வலி அடிவயிற்றின் ஒரு பக்கத்தில் அசெளகரியம்,
இந்த அறிகுறிகள் முதல் நிலை அல்லது இரண்டாம் நிலை அறிகுறிகள் என்று கருதப்படுகின்றன.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
அண்டவிடுப்பை கண்காணிக்க என்ன செய்யலாம்.
கருத்தரிக்க விரும்பும் பெண்களுக்கு மருத்துவர்களால் அண்டவிடுப்பின் நிகழ்வு கண்காணிக்கப்படுகிறது. வீட்டில் நீங்கள் அண்டவிடுப்பின் நிகழ்வை கண்டறிய என்ன செய்யலாம்
- உடல் வெப்பநிலையை கவனியுங்கள் (தினசரி காலையில் உடலின் வெப்பநிலையை கணக்கில் எடுத்துகொள்ளுங்கள். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு உயர்த்தப்பட்ட வெப்பநிலை, அண்டவிடுப்பின் உறுதி செய்கிறது.
- அண்டவிடுப்பின் முன்கணிப்பு கருவிகள் ( சிறுநீரில் எல்.ஹெச் இருப்பதை கண்டறிவதன் மூலம் இது கண்டறியப்படுகிறது)
- கருவுறுதல் கண்காணிப்புகள். அண்டவிடுப்பின் ஈஸ்ட்ரோஜன் மற்றும் எல்.ஹெச் ஹார்மோன்களை கண்டறிய உதவும் கருவிகள்.
முடிவுரை
கருவுற விரும்பினால் மருத்துவரை சந்தித்து அண்டவிடிப்பின் காலங்களில் எத்தனை முறை உடலுறவு கொண்டால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம், கருவுறாமல் இருக்க அண்டவிடுப்பின் நாட்களில் உறவு கொள்ளலாமா.
தவிர்க்க முடியாத நிலையில் எப்படி கருவுறாமல் தடுப்பது போன்றவற்றை கேட்டு அறிந்து கொள்ளலாம்
அண்டவிடுப்பின் நிலை ஒழுங்கற்று உள்ளதா அல்லது அசாதாரண அறிகுறிகளை கொண்டுள்ளதா என்பதையும் மருத்துவரிடம் ஆலோசிக்கலாம்.