முன்னுரை
முதல் மூன்று மாதங்களில் அதாவது முதல் ட்ரைமிஸ்டரில் என்.டி ஸ்கேன் என்பது மிக முக்கியமான ஸ்கிரீனிங் செயல்முறைகளில் ஒன்றாகும், ஏனெனில் இது குழந்தைக்கு ஏதேனும் குரோமோசோம் அசாதாரணங்கள் உள்ளதா என்பதைக் கண்டறிய செய்யப்படுகிறது.
என்.டி ஸ்கேன் உடன், டபுள் மார்க்கர் அல்லது டூயல் மார்க்கர் சோதனை எனப்படும் இரத்தப் பரிசோதனை செய்ய பரிந்துரைக்கப்படும்.
இந்த இரண்டு சோதனைகளும் சேர்ந்து செய்த பிறகு முடிவுகளின் மிக துல்லியமாக இருப்பதை தெரிந்து கொள்ளலாம்.
சில நேரங்களில், என்.டி ஸ்கேன் செய்து முடிவுகள் சாதாரணமாக இருக்கும், ஆனால் இரத்தப் பரிசோதனை அசாதாரணமாக முடிவுகள் (NT scan normal blood test abnormal in tamil) என்று தெரியவரும், ஏன் இப்படிப்பட்ட முடிவுகள் வருகிறது என்று இந்த வலைப்பதிவில் சுருக்கமாக விவாதிப்போம்.
என்.டி ஸ்கேன் என்றால் என்ன?
என்.டி ஸ்கேன் குழந்தையின் கழுத்தின் பின்புறத்தில் இருக்கும் திரவத்தின் அளவை அளவிடுகிறது.
இது அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செயல் முறை ஆகும், இது குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம் மற்றும் இதய குறைபாடுகள் போன்ற பிறவி குறைபாடுகள் ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்டறிய முடியும்.
12 முதல் 13 வாரங்களுக்கு இடையில் அல்லது கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் (First Trimester) என்.டி பரிசோதனையை மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். என்.டி என்பது நியூக்கல் டிரான்ஸ்லூசன்ஸி (Nuchal translucency) என்பதைக் குறிக்கிறது.
இரட்டை மார்க்கர் சோதனை என்றால் என்ன?
டபுள் மார்க்கர் சோதனை என்பது அல்ட்ராசவுண்டுடன் சேர்ந்து தாயின் இரத்தத்தில் உள்ள HCG மற்றும் PAPP-A (கர்ப்பத்துடன் தொடர்புடைய பிளாஸ்மா புரதம்) ஆகிய இரண்டு அளவுகளையும் கண்டறியும் இரத்தப் பரிசோதனையாகும்.
ஹ.சி.ஜி (HCG) என்பது கர்ப்ப காலத்தில் நஞ்சுக்கொடியால் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன் ஆகும், மேலும் இது கர்ப்பத்தை உறுதிப்படுத்தவும், குழந்தையின் வளர்ச்சியைக் கண்காணிக்கவும் பயன்படுகிறது. PAPP-A என்பது கர்ப்ப காலத்தில் நஞ்சுக்கொடி மற்றும் கருவில் உற்பத்தி செய்யப்படும் புரதமாகும்.
கருவில் உள்ள குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம், (Down Syndrome) எட்வர்ட் சிண்ட்ரோம் (Edward Syndrome) மற்றும் படாவ் சிண்ட்ரோம் (Patau Syndrome) போன்ற பிற மரபணு குறைபாடு மற்றும் குரோமோசோம் பாதிப்பு இருப்பதை மதிப்பிடுவதற்கு கர்ப்ப காலத்தில் இரட்டை மார்க்கர் சோதனை (Double Marker Test) செய்யப்படுகிறது.
சோதனை முடிவுகள் தாயின் வயது மற்றும் பிற காரணங்களுடன் இணைந்து குரோமோசோம் அசாதாரணங்களின் அபாயத்தை மதிப்பிடுகின்றன. மேலும் கருவில் உள்ள உங்கள் குழந்தை நலமுடன் இருப்பதை தெரிந்து கொள்ள முடியும்.
என்.டி ஸ்கேன் உடன் இரத்தப் பரிசோதனை எப்போது செய்ய வேண்டும்?
முதல் மூன்று மாதங்களில் (முதல் ட்ரைமிஸ்டரில்) அதாவது உங்கள் கர்ப்பகாலத்தின் 12 முதல் 13 வாரங்களுக்கு இடையில் என்.டி ஸ்கேன் எடுக்குமாறு மருத்துவர் பரிந்துரைக்கிறார்.
துல்லியமான முடிவுகளுக்கு இந்த என்.டி ஸ்கேன் மற்றும் இரட்டை மார்க்கர் சோதனை இரண்டையும் ஒரே நாளில் எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.
என்.டி ஸ்கேன் அல்லது இரட்டை மார்க்கர் சோதனை எது மிகவும் துல்லியமானது?
என்.டி ஸ்கேன் அறிக்கையில் என்ன உள்ளது என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்:
- தாயின் சில அடிப்படை விவரங்கள் ஆன அவரது வயது, கர்ப்பத்தின் எத்தனையாவது வாரத்தில் உள்ளார் போன்றவை.
- பொதுவாக குழந்தையின் அளவீடுகள் (CRL, BPD, HC, முதலியன), இந்த எல்லா அளவுகளும் மில்லி மீட்டரில் (mm) இல் அளவிடப்படுகிறது.
- நியூக்கல் ட்ரான்ஸ் லூசென்சியின் (Nuchal Translucency) திரவதின் அளவீடு, இது ஒளி ஊடுருவக்கூடிய திரவம்
என்.டி அளவீடு 3 மிமீக்குக் கீழே இருந்தால், குழந்தைக்கு குரோமோசோம் அசாதாரணங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.
HCG மற்றும் PAPP-A க்கான இரத்த பரிசோதனைகள் மற்றும் அதன் விளைவாக குறைந்த ஆபத்து, மிதமான ஆபத்து அல்லது ஏதேனும் அசாதாரணங்களுடன் குழந்தை பிறக்கும் அதிக ஆபத்து உள்ளதை கண்டறிய முடியும்.
என்.டி அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் சோதனையானது குழந்தைக்கு ஏதேனும் குரோமோசோம் அசாதாரணங்கள் உள்ளதா இல்லையா என்பதை தீர்மானிப்பதில் 70% துல்லியமான முடிவுகளை வழங்க முடியும், ஆனால் இரட்டை மார்க்கர் சோதனையுடன் இந்த ஸ்கேன் இணைந்தால், முடிவுகளின் துல்லியம் சுமார் 80% இருக்கும். குழந்தைக்கு வேறு ஏதும் ஆபத்து இல்ல என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
இரட்டை மார்க்கர் சோதனையுடன் என்.டி ஸ்கேன் இணைந்தால், முடிவுகளின் துல்லியம் சுமார் 80% இருக்கும்.
எனவே ஒரு சோதனையை மட்டும் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக இரண்டு சோதனைகளையும் ஒன்றாகச் செய்வது நல்லது.
என்.டி ஸ்கேன் சாதாரணம் ஆனால் இரத்த பரிசோதனையில் அசாதாரணமான முடிவைப் பெற முடியுமா? – (NT scan normal blood test abnormal in tamil)
ஆம், சில கர்ப்பிணிப் பெண்களுக்கு சாதாரணமான என்.டி ஸ்கேன் முடிவுகள் வரும் மற்றும் அசாதாரண டபுள் மார்க்கர் இரத்தப் பரிசோதனை அறிக்கைகளைப் பெறுவதற்கு சாத்தியம் அதிகமாக இருக்கும்.
என்.டி ஸ்கேன் சாதாரணமாக இருந்து இரத்தப் பரிசோதனை அசாதாரணமாக இருந்தால் என்ன செய்வது? – (NT scan normal blood test abnormal in tamil)
ஆம், உங்கள் அறிக்கை இப்படி மாறுவது சாத்தியம். சில நேரங்களில், உங்கள் NT ஸ்கேன் சாதாரணமாக இருக்கலாம் மற்றும் உங்கள் இரத்த பரிசோதனைகள் அசாதாரணமாக இருக்கலாம்.
ஆனால் அசாதாரண இரட்டை குறிப்பான் சோதனை (டபுள் மார்க்கர் சோதனை) 100% குழந்தைக்கு குரோமோசோம் அசாதாரணமானது என்று அர்த்தம் இல்லை.
குழந்தை குரோமோசோம் அசாதாரணங்களைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகளைத் தீர்மானிக்க, என்.ஐ.பி.டி சோதனை (Non-Invasive Prenatal Testing (NIPT)), கோரியானிக் வில்லஸ் மாதிரி (CVS) அல்லது அம்னோசென்டெசிஸ் (Amniocentesis) போன்ற சில சோதனைகளை செய்து கொள்ள மருத்துவர் பரிந்துரைப்பார்கள்.
முடிவுரை
மிக துல்லியமான என்.டி ஸ்கேன் முடிவுகள் மற்றும் பிற கர்ப்ப கால ஸ்கேன் அறிக்கைகளுக்கு ஜம்மி ஸ்கேன்ஸ் (Jammi Scans) உடன் சந்திப்பை இன்றெ பதிவு செய்து உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்.