என்.டி ஸ்கேன் மற்றும் டபுள் மார்க்கர் (NT scan and Double Marker test in Tamil) சோதனை ஏன் முக்கியம்?
ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணுக்குக்கும் என்.டி ஸ்கேன் மற்றும் டபுள் மார்க்கர் சோதனை எடுக்குமாறு கரு மருத்துவர் அறிவுறுத்துகிறார், கர்ப்பத்தின் 11 முதல் 14 வது வாரத்தில் குழந்தைக்கு ஏதேனும் குரோமோசோம் அசாதாரணங்கள் அல்லது டவுன் சிண்ட்ரோம் போன்ற குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்பதை தீர்மானிக்க இந்த பரிசோதனை செய்ய வேண்டும்.
என்.டி ஸ்கேன் பொதுவாக செய்யப்படும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், டபுள் மார்க்கர் சோதனையானது தாய்வழி இரத்த பரிசோதனை.
டபுள் மார்க்கர் சோதனையானது பொதுவாக என்.டி ஸ்கேன் செய்யும் அதே நேரத்தில் எடுக்கப்படும், ஏனெனில் இந்த சோதனை முடிவுகளில் மிகவும் துல்லியமாக இருப்பதை தெரிந்து கொள்ளலாம்.
என்.டி ஸ்கேன் மற்றும் டபுள் மார்க்கர் சோதனைக்கு (NT scan and Double Marker test in Tamil) இடையே உள்ள வேறுபாடுகள் என்ன?
என்.டி ஸ்கேன் மற்றும் இரட்டை மார்க்கர் சோதனைகள் குழந்தையின் குரோமோசோம் அசாதாரணங்களை சரிபார்க்க செய்யப்பட்டாலும், இவற்றில் சில குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன.
என்.டி ஸ்கேன் என்பது ஒரு அல்ட்ராசவுண்ட் செயல்முறையாகும், இது குழந்தையின் கழுத்தின் பின்புறத்தில் உள்ள நியூக்கல் திரவத்தின் (கழுத்துக்குப் பின்னால் தோலின் கீழ் இருக்கும் திரவம்) அளவைக் கணக்கிடுகிறது, இது மில்லி மீட்டரில் அளவிடப்படுகிறது.
என்.டி ஸ்கேன் முடிவுகள் பொதுவாக எண்களில் இருக்கும். 3 மிமீக்கு குறைவான இருக்கும் எந்த எண்ணும் சாதாரணமாக இருப்பதாக கருதப்படுகிறது, மேலும் இவ்வாறு இருப்பதால் குழந்தைக்கு ஏதேனும் குரோமோசோம் அசாதாரணம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்பதை தெரிந்து கொள்ளலாம்.
என்.டி ஸ்கேன் சோதனை முடிந்த உடனேயே உங்கள் பரிசோதனை முடிவுகள் கையில் கிடைக்கும்.
என்.டி ஸ்கேன் சோதனையானது உங்கள் குழந்தையின் மூக்கின் எலும்புகள் மற்றும் இதய குறைபாடுகள் ஏதேனும் இருந்தால் தெரிந்து கொள்ளலாம்.
அதேசமயம் டபுள் மார்க்கர் சோதனை அல்லது டூயல் மார்க்கர் என்பது இந்த இரண்டு ஹார்மோன்களான hCG மற்றும் கர்ப்பத்துடன் தொடர்புடைய பிளாஸ்மா புரதம்-A (PAPP-A) ஆகியவற்றைச் சரிபார்க்கும் இரத்தப் பரிசோதனையாகும். இவை பொதுவாக முறையே ng/ml மற்றும் mIU/ml இல் அளவிடப்படுகின்றன.
கருவில் இருக்கும் குழந்தைக்கு குரோமோசோம் அசாதாரணங்களைக் கொண்டிருப்பதற்கான குறைந்த / மிதமான மற்றும் அதிக வாய்ப்புகள் என முடிவுகள் கூறப்படுகிறது. நீங்கள் பரிசோதனை முடிவுகளை தெரிந்து கொள்ளுவதற்கு ஒரு வாரம் வரை ஆகும்.
எப்போது என்.டி ஸ்கேன் மற்றும் டபுள் மார்க்கர் சோதனை (NT scan and Double Marker test in Tamil) செய்யப்படுகிறது?
என்.டி ஸ்கேன் மற்றும் டபுள் மார்க்கர் சோதனை கர்ப்பத்தின் 11 அல்லது 14 வது வாரத்தில் செய்யப்படுகிறது, மேலும் முடிவுகளில் சிறந்த துல்லியத்திற்காக இந்த இரண்டு சோதனைகளும் ஒரே நாளில் மேற்கொள்ளப்படுகின்றன.
சில இடங்களில் இந்த டபுள் மார்க்கர் சோதனையை செய்துகொள்ள பரிந்துரைப்பதில்லை, உங்கள் கரு மருத்துவர் பரிந்துரைக்கும் போது, பயப்பட வேண்டாம். இந்த பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் குரோமோசோம் அசாதாரணம் என்று அர்த்தமல்ல. குழந்தைக்கு குரோமோசோம் அசாதாரணங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை புரிந்துகொள்ள உதவுகிறது.
என்.டி ஸ்கேன் மற்றும் டபுள் மார்க்கர் சோதனை (NT scan and Double Marker test in Tamil) ஒரே நாளில் செய்ய வேண்டுமா?
என்.டி ஸ்கேன் மற்றும் டபுள் மார்க்கர் சோதனை ஒன்றாக எடுத்துக்கொள்ள மருத்துவரால் பரிந்துரைக்கப்படுகிறது. நீங்கள் என்.டி ஸ்கேன் எடுத்தவுடன் இரட்டை மார்க்கர் சோதனையை எடுப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், ஏனெனில் அப்போது தான் முடிவுகள் மிகவும் துல்லியமாக இருக்கும்.
யாருக்கு இந்த பரிசோதனை அவசியம்?
35 அல்லது 40 வயதிற்கு மேற்பட்டவராக இருப்பவர்கள் அல்லது குறிப்பிட்ட பிறப்பு குறைபாடு கோளாறுகளின் குடும்ப வரலாறு இருந்தால் குரோமோசோம் அசாதாரணங்களின் அபாயம் வருவதற்கு சாத்தியம் இருக்கலாம்.
இந்த டவுன் சிண்ட்ரோம் குறைபாடு 700 குழந்தைகளில் ஒருவரை பாதிக்கிறது, எனவே, உங்கள் கருவில் உள்ள குழந்தைக்கு இந்த குரோமோசோம் அசாதாரணம் இருக்கிறதா இல்லையா என்பதை சரிபார்க்க வேண்டியது அவசியம்.
டபுள் மார்க்கர் சோதனை நேர்மறையாக இருந்தால் என்ன செய்வது?
டபுள் மார்க்கர் பரிசோதனை முடிவுகளில் நமக்கு சாதகமா வராமல் குழந்தைக்கு குறைபாடு இருப்பதாக தெரிந்தால், பிரச்சனையை தொடர்ந்து கண்டறிய அம்னோசென்டெசிஸ் (Amniocentesis) அல்லது கோரியோனிக் வில்லஸ் மாதிரி (சி.வி.எஸ்) போன்ற கூடுதல் நோயறிதல் சோதனை செய்ய மருத்துவர் பரிந்துரைக்கலாம்.
என்.டி ஸ்கேன் மற்றும் டபுள் மார்க்கர் சோதனை (NT scan and Double Marker test in Tamil) எவ்வளவு துல்லியமானது?
என்.டி ஸ்கேன் மட்டும் முடிவுகளில் 70-75% துல்லியமாக உள்ளது, அதேசமயம் என்.டி ஸ்கேன் இரட்டை மார்க்கர் சோதனைகள் ஒன்றாக செய்யும் போது , துல்லிய விகிதம் 80-85% வரை உயர்கிறது.
முடிவுரை:
எனவே இந்த இரண்டு பரிசோதனைகளும் செய்து உங்கள் கருவில் உள்ள குழந்தைக்கு எந்தவிதமான குரோமோசோம் அசாதாரணம் மற்றும் எவ்விதமான பிறப்பு குறைபாடுகள் இல்லை என்பதை உறுதி படுத்தி கொள்ளுங்கள்.
மேலும் எழும் உங்கள் சந்தேகங்களுக்கு இப்போதே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.