இயற்கையாக கருவுறுதலை அதிகரிக்க வழிகள்

Deepthi Jammi
7 Min Read

ஆரோக்கியமான ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கை முறைகள் போன்றவை கருவுறுதலை மேம்படுத்த உதவும். கருவுறுதலை ஊக்குவிக்கும் உணவுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம். 

Contents
கருவுறுதலை இயற்கையாக அதிகரிக்க வழிகள் (Natural Ways to Increase Fertility in Tamil)ஆன்டி ஆக்சிடண்ட் நிறைந்த உணவுகள் சாப்பிடுங்கள்2. காலை உணவு அதிகமாக இருக்க வேண்டும்3. ட்ரான்ஸ் கொழுப்புகளை தவிர்க்க வேண்டும்:4. கார்போஹைட்ரேட்டுகள் உணவுகள் தவிர்க்க வேண்டியவர்கள்5. சுத்தகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் நன்மை அளிக்குமா?6. நார்சத்து உணவுகள் அதிகமாக எடுக்க வேண்டும்7. புரதங்கள் கண்டிப்பாக சேர்க்க வேண்டும்அதிக கொழுப்புள்ள பாலை தேர்வு செய்யுங்கள்கருத்தரிக்க நினைக்கும் தம்பதியர் மல்டி வைட்டமின்கள் எடுக்க வேண்டும் கருவுறுதல் எதிர்பார்க்கும் போது காஃபினை வெட்டுங்கள்கர்ப்பமாக எடை கட்டுக்குள் இருக்க வேண்டும்உடலில் இரும்புச்சத்து அளவு பரிசோதியுங்கள்ஆல்கஹால் பழக்கம்  தவிர்க்க வேண்டும்முடிவுரை

இன்றைய காலகட்டத்தில் கர்ப்பத்தில் பிரச்சனைகள் என்று பல தம்பதியரை பார்க்க முடிகிறது. 

தம்பதிகளில் 15 சதவீத பேருக்கு கருத்தரிப்பு பிரச்னைகள் வருகிறது.

சிலருக்கு மருத்துவர்களின் சிகிச்சை முறை தேவை என்றாலும் சிலருக்கு  இயற்கையாகவே கருத்தரிப்பை  அதிகரிக்க உணவுகளிலும் வாழ்க்கை முறைகளிலும் (Natural Ways to Increase Fertility in Tamil) கவனம் செலுத்தினால் போதும். முக்கியமாக  உணவு முறைகளில்.

கருவுறுதலை விரும்பும் தம்பதியர் இந்த உணவுகளை எடுத்துகொண்டு வாழ்க்கை முறையையும் மேம்படுத்துவதன் மூலம் கருவுறுதல் சாத்தியமாகலாம்.

கருவுறுதலை இயற்கையாக அதிகரிக்க வழிகள் (Natural Ways to Increase Fertility in Tamil)

ஆன்டி ஆக்சிடண்ட் நிறைந்த உணவுகள் சாப்பிடுங்கள்

Natural Ways to Increase Fertility in Tamil - Anti oxidant foods

ஃபோலேட் மற்றும் துத்தநாகம் போன்ற ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் கருத்தரிக்கும் வாய்ப்பை ஆண் பெண் இருவருக்கும் அதிகரிக்கும். இவை உங்கள் கருமுட்டை மற்றும் விந்தணுக்களை பாதிக்கும்  ஃப்ரீ ரேடிக்கல்களை உடலிலிருந்து  அகற்றுகிறது.

Research about anti oxidant foods

அதே போல் 232 பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.  அதிக ஃபோலேட் எடுத்துக்கொள்வதால் அவர்களுக்கு உள்வைப்பு, மருத்துவ கர்ப்பம் மற்றும் நேரடி பிறப்பு ஆகியவற்றுடன் நேர்மறையான  தொடர்பு  இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் கருவுறுதலை பாதிக்குமா அல்லது பாதிக்காதா என்பதை ஆராய்ச்சி குழு வெளிப்படுத்தவில்லை என்றாலும் சில சான்றுகள் இதன் முடிவுகளை கணிக்கின்றன. 

பழங்கள், காய்கறிகள், நட்ஸ், தானியங்கள் போன்ற உணவுகளில் வைட்டமின் சி, ஃபோலேட், பீட்டா கரோட்டின், லுடின் போன்ற ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் அடங்கியிருப்பதால் மிகவும் நன்மை கொடுக்கிறது. 

2. காலை உணவு அதிகமாக இருக்க வேண்டும்

Breakfast

கருத்தரிப்பதில் பிரச்னைகளை சந்திக்கும் பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காலை உணவு  அவசியம் ஆகும்.  கருத்தரிப்பிற்கு பெரிய தடையாக இருப்பது பி.சி.ஓஸ் பிரச்னை.

காலையில் ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவை அதிகமாக சாப்பிடுவதால் இதி பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் ஹார்மோன் மேம்படுத்துகிறது என்று ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

பிசிஓஎஸ் உள்ள மிதமான எடை உள்ள பெண்கள் அவர்கள் தினமும் எடுத்துக்கொள்ளும் கலோரிகளை அதிகமான அளவில் காலை உணவாக எடுத்துக்கொண்டால் இன்சுலின் அளவு 8 சதவீதமும் டெஸ்டோஸ்டெரோன் அளவை 50 சதவீதம் குறைக்கிறது.

இந்த இரண்டில் ஏதாவது ஒன்று அதிகமாக இருந்தாலும் அவை கருத்தரிக்கும் வாய்ப்பை குறைக்கும். 

Fact natural ways to increase fertility

காலையில் அதிகமாக சாப்பிடுபவர்கள் இரவு உணவை குறைவாக சாப்பிட வேண்டும் இல்லையெனில் உடல் எடை அதிகரிக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

3. ட்ரான்ஸ் கொழுப்புகளை தவிர்க்க வேண்டும்:

Avoid transfats

ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் கருத்தரிப்பதை மேம்படுத்தவும் ஆரோக்கியமான நல்ல கொழுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் ட்ரான்ஸ் கொழுப்புகள் இன்சுலின் உணர்திறனில் எதிர்மறையாக  இருப்பதால் கருத்தரிக்கும் வாய்ப்பை குறைக்கிறது. 

Research about transfat 1

நிறைவுறாத கொழுப்புகள் குறைவாகவும் ட்ரான்ஸ் கொழுப்பை அதிகமாகவும் எடுத்துக் கொண்டால் ஆண் பெண் இருவருக்குமே மலட்டுத்தன்மையுடன் தொடர்புடையான காரணியாக இருக்கலாம் என்று நம்பகமான ஆதாரம் கண்டறிந்துள்ளது.  

4. கார்போஹைட்ரேட்டுகள் உணவுகள் தவிர்க்க வேண்டியவர்கள்

Avoid carbs if you have PCOS

பி.சி.ஓ.எஸ் இருக்கும் பெண்கள் கார்போஹைட்ரேட் குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும்

அதாவது நீங்கள் எடுத்துக்கொள்ளும் கலோரிகளில் 45 சதவீதத்திற்கும் குறைவாக கார்போஹைட்ரேட் இருக்க வேண்டும்.

Research about PCOS

அதேபோல் குறைவான அளவில் கார்போஹைட்ரேட் எடுப்பதால் உடல் எடை பராமரிக்க, இன்சுலின் எதிர்ப்பு அளவு குறைக்கவும் மற்றும் எடை இழப்புக்கு உதவும் கொழுப்பை இழக்கவும் செய்கிறது.

5. சுத்தகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் நன்மை அளிக்குமா?

refined carbs

நாம் எடுத்துக்கொள்ளும் கார்போஹைட்ரேட் அளவு எப்படி முக்கியமோ அதே போல் எவ்வகை கார்போஹைட்ரேட் எடுத்துக் கொள்கிறோம் என்பதும் முக்கியம்.

சுத்தகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்கள் பல பிரச்னைகளை உண்டு பண்ணலாம். இதில் சக்கரை உணவுகள், குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட தானியங்கள், பாஸ்தா, ப்ரெட், அரிசி உள்ளடங்கும்.

கிளைசெமிக் இண்டக்ஸ் என்பது சர்க்கரை நோயாளிகளுக்காக உணவு முறைக்கு அளிக்கப்பட்ட குறியீடு. அதிக கிளைசெமிக் உணவு என்பது இரத்தத்தில் உடனடியாக சர்க்கரை அளவை உயர்த்தும்.

குறைந்த கிளைசெமிக் உணவு என்பது இரத்த சர்க்கரை அளவு பொறுமையாக அதிகரிக்கும் நிலை.

உடலில் இன்சுலின் என்பது வேதியியல் ரீதியாக கருப்பை ஹார்மோன்களை போன்றது. இந்த ஹார்மோன்கள் முட்டைகளை முதிர்ச்சியடைய செய்கின்றன.

உயர்த்தப்பட்ட இன்சுலின் உடலுக்கு குறைவான இனப்பெருக்க ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது.

இதனால் கருமுட்டை முதிர்ச்சி அடைவதிலும்  அண்டவிடுப்பின் பற்றாக்குறைக்கும் பங்களிக்கும்.  

பிசிஓஎஸ்  அதிக இன்சுலின்  அளவுகளுடன் தொடர்புடையது என்பதால் இந்த பிரச்சனைகள் தவிர்க்க கார்போஹைட்ரேட்டுகள்  தவிர்க்க வேண்டும். 

6. நார்சத்து உணவுகள் அதிகமாக எடுக்க வேண்டும்

fibre rich foods 1

நார்சத்து அதிகமாக எடுத்துக் கொள்வதால் ஹார்மோன்கள் அதிகமாக இருந்தால் அவற்றை அகற்றி இரத்த சர்க்கரை அளவை சமமாக வைக்க உதவும்.

இன்னும் சில நார்ச்சத்து வகைகள் குடலில் பிணைப்பதன் மூலம் உடலில் அதிகமான அளவில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் இருந்தால் அவற்றையும் கழிவு பொருள் போல அகற்றுகிறது. 

கரையும் நார்ச்சத்துகளான அவகேடோ, சர்க்கரை வள்ளி கிழங்கு, ஓட்ஸ், பழங்கள் எடுத்துக்கொண்டால் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களை குறைவாக வைக்க உதவுகிறது என 2009 நடத்தப்பட்ட பழமையான ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக கரையும் நார்சத்து நிறைந்த பழங்கள் இவற்றில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. 

முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பீன்ஸ் போன்றவற்றில் அதிகமான நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. தினமும் பெண்களுக்கு  25 கிராம் நார்சத்தும் ஆண்களுக்கு  31 கிராம் நார்ச்சத்து ஆண்களும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று  பரிந்துரைக்கப்படுகிறது.  

Research about fibre

உங்கள் மருத்துவரின் ஆலோசனைகேற்ப நார்ச்சத்துகளை எடுத்துக்கொள்வது நல்லது. 

7. புரதங்கள் கண்டிப்பாக சேர்க்க வேண்டும்

Protein rich foods

விலங்கு புரதங்களை  இறைச்சி, மீன் மற்றும் முட்டை போன்றவற்றை எடுக்கலாம். காய்கறிகறி மூலங்களில்  பீன்ஸ், கொட்டைகள் மற்றும் விதைகள்  போன்றவற்றில் எடுக்கலாம் என்றாலும் காய்கறி புரதங்கள் முழுமையான பலன் அளிக்காது.

மொத்த கலோரிகளி ல் 5 சதவீதம் விலங்கு புரதத்துக்கு பதிலாக காய்கறி புரதத்திலிருந்து வந்தபோது அண்டவிடுப்பின் மலட்டுத்தன்மை ஆபத்து 50%மேலாக குறைந்துள்ளது. 

Fact about eating more fish

அதிக கொழுப்புள்ள பாலை தேர்வு செய்யுங்கள்

குறைந்த அல்லது கொழுப்பு நீக்கிய பால் குடிப்பது கருவுறாமை அபாயத்தை அதிகரிக்கலாம்.  அதே சமயம் அதிக கொழுப்புள்ள பால் உணவுகள் இந்த அபாயத்தை குறைக்கலாம்.

Research about full fat milk

கருத்தரிப்புக்காக காத்திருக்கும் தம்பதியர் நாள் ஒன்றுக்கு ஒரு முழு டம்ளர் பால் அல்லது முழு கொழுப்பு தயிர் போன்ற அதிக கொழுப்புள்ளவற்றை சேர்க்கவும். 

கருத்தரிக்க நினைக்கும் தம்பதியர் மல்டி வைட்டமின்கள் எடுக்க வேண்டும்

மல்டிவைட்டமின்கள் எடுத்துகொண்டால் அண்டவிடுப்பின் மலட்டுத்தன்மையை அனுபவிக்கும்  வாய்ப்பு குறைவாக இருக்கலாம். 

Research about multivitamins

வைட்டமின்களில் காணப்படும் நுண்ணூட்டச்சத்துக்கள் கருவுறுதலில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்கிறது ஆய்வுகள், மல்டி வைட்டமினில் பெண்களுக்கு ஃபொலேட் கொண்ட மல்டிவைட்டமின் அதிக நன்மை பயக்கும். 

உங்கள் மருத்துவரை அணுகி கருத்தரிக்க உதவும் வைட்டமின்கள் பற்றி கேட்டு எடுத்துகொள்ள வேண்டும். 

 கருவுறுதல் எதிர்பார்க்கும் போது காஃபினை வெட்டுங்கள்

 காஃபின் மற்றும் கருவுறுதல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மிகவும் உறுதியானது என்று சொல்லவில்லை.

மற்ற ஆய்வுகள்  காஃபின் உட்கொள்ளல் மற்றும் மலட்டுத்தன்மையின் அதிக ஆபத்து ஆகியவற்றுக்கு இடையே வலுவான தொடர்பை கண்டறியவில்லை.

Fact about coffee

கர்ப்பமாக எடை கட்டுக்குள் இருக்க வேண்டும்

ஆரோக்கியமான எடை இருப்பது ஆண் பெண் இருவருக்கும் முக்கியமானது.  கருவுறுதலுக்கு வரும் போது எடை மிகவும் அதிகமாக இருந்தால் அவை பாதிப்பை உண்டு செய்யலாம்.

அதிக எடை, குறைந்த எடை இரண்டுமே மலட்டுத்தன்மையுடன் தொடர்புடையது.,

உடலில் உள்ள கொழுப்பின் அளவு மாதவிடாய் செயல்பாட்டை பாதிக்கிறது.

உடல் பருமன் அண்டவிடுப்பின் பற்றாக்குறை  மற்றும் மாதவிடாய் ஒழுங்கற்ற தன்மை ஆகியவற்றுடன் தொடர்புடையது.  பலவீனமான முட்டை வளர்ச்சியுடனும் இவை தொடர்புடையது. 

கர்ப்பம் வாய்ப்புகள் அதிகரிக்க உங்கள் உடல் பிஎம்ஐ அளவை பரிசோதியுங்கள்.

தேவையெனில் எடையை குறைக்க அல்லது அதிகரிக்க உடல்நல பராமரிப்பாளருடன்  இணைந்து  செயல்படுங்கள். இதன் மூலம் ஆரோக்கியமான மற்றும் நிலையான வழியில் எடையை கட்டுப்படுத்துங்கள்.

உடலில் இரும்புச்சத்து அளவு பரிசோதியுங்கள்

கருவுறாமை அபாயத்தை குறைக்க  தாவர அடிப்படையிலான உணவுகளில் இருந்து வரும் இரும்புச்சத்துக்கள் மற்றும் ஹீம் அல்லாத இரும்புசத்துக்களை உட்கொள்வது கருவுறாமையின் அபாயத்தை குறைக்கும். 

ஏற்கனவே இரும்புச்சத்து குறைபாடு உள்ள பெண்களுக்கு மட்டுமே ஹீம் அல்லாத சில நன்மைகள் உள்ளன என்று முடிவு செய்துள்ளது. 

இரும்புச்சத்து எல்லோருக்கும் அவசியமா என்பதை அறிய இன்னும் ஆய்வுகள் தேவை. எனினும்  இரும்பின் அளவு உறுதி செய்ய உங்கள் மருத்துவரை அணுகுங்கள். 

இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் உடல் உறிஞ்சுவதற்கு வைட்டமின் சி அவசியம். அதனால் வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகள் சேர்த்து எடுப்பது உடலுக்கு இரும்பு கிடைக்க உதவும். 

ஆல்கஹால் பழக்கம்  தவிர்க்க வேண்டும்

மது அருந்துவது கருவுறுதலை எதிர்மறையாக பாதிக்க செய்யும்.

Research about alcohol

 2004 ஆம் ஆண்டின் பழைய  ஆய்வு ஒன்று 7393 பெண்களை உள்ளடக்கியது.  அதில் மது அருந்துவது அதிக கருவுறாமை பரிசோதனைகளுடன் தொடர்புடையது என்று கண்டறிந்துள்ளது.

மிதமான கருவுறுதல் கருவுறைமைக்கு இடையே தொடர்பு இல்லை என்கிறது மற்றொரு ஆய்வு.  இன்னும் சில ஆய்வுகள் மிதமான உட்கொள்ளல் கருவுறுதலை பாதிக்கும் என்று தெரிவிக்கின்றன. அதனால் மது அருந்துதலை தடுப்பதே நல்லது.

முடிவுரை

ஆரோக்கியமான உடல் மற்றும் இனப்பெருக்க அமைப்புக்கு நல்ல ஊட்டச்சத்து  முக்கியமானது.  இவை இயற்கையாக கரு உருவாதலை ஊக்குவிக்கிறது. 

சத்தான உணவை எடுத்துகொள்வது , தினசரி வாழ்க்கை முறை  மாற்றங்களை செய்வது கருவுறுதலை அதிகரிக்க செய்யும். உடல் கர்ப்பத்துக்கு தயாராவதை ஊக்குவிக்கும். 

எல்லா ஆரோக்கிய நிலையிலும் இவை உதவும். நீங்கள் கருத்தரிக்க விரும்பினால்  ஆரோக்கியமான ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கை முறை தேர்வுகளை இன்றே தொடங்குவதன் மூலம்  கர்ப்பத்தை பெறுவது சாத்தியமாகலாம்.

5/5 - (22 votes)

பொதுத்துறப்பு

பொதுத்துறப்பு ஜம்மி ஸ்கேன்ஸ் (Jammi Scans) வழங்கும் கட்டுரைகள், தகவல்கள், வீடியோக்கள் போன்றவை தகவல் தொடர்பு நோக்கங்களுக்காக மட்டுமே. இவை எல்லாமே மகப்பேறு மருத்துவர்கள், ஸ்கேன் பரிசோதனை நிபுணர்கள், அதற்கான நடைமுறைகள் போன்றவை நிபுணர்களால் வழங்கப்படும் பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எங்கள் இணையதளத்தில் இருக்கும் கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் பொதுவான விஷயங்கள் குறித்து மட்டுமே வழங்கப்படுகின்றன. வீடியோக்களில் இருக்கும் தகவல்களும் , கட்டுரைகளும் தனிப்பட்ட நபர்களுக்கான நோயறிதல் குறித்தவை என்று கருதக்கூடாது. அதனால் இதன் வாயிலாக வெளியிடப்படும் சிகிச்சை முறைகளை சுயமாக செய்து கொள்ள கூடாது. ஜம்மி ஸ்கேன்ஸ் தளத்தில் வெளியான கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் மூலம் நோயறிதலையும், சிகிச்சையையும் சுயமாக செய்து கொள்ள கூடாது. மாறாக உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனை செய்த பிறகு உரிய சிகிச்சை பெறுவது நல்லது. ஜம்மி ஸ்கேன்ஸ் உருவாக்கும் (இணையதளம் மற்றும் அச்சு) தகவல்கள் மருத்துவ ரீதியிலான பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எந்தவொரு தனி நபருக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் கட்டுரைகள் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி கூறுகிறோம். அதனால் தனிப்பட்ட முறையில் சுயமாக ஒருவர் சிகிச்சை கொள்வதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது என்பதையும் இத்தருணத்தில் உறுதி அளிக்கிறோம். ******** உங்களின் பாதுகாப்பை எங்களின் முன்னுரிமையாகக் கருதி, குறைந்தபட்ச நபர்களுடன் செல்லுமாறு ஜம்மி ஸ்கேன்ஸ் கேட்டுக்கொள்கிறது. PC-PNDT சட்டத்தின்படி, உங்களுடன் வரும் நபர்கள் ஸ்கேன் அறைக்குள் உங்களுடன் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பானதாக்க இந்த கடினமான காலங்களில் நீங்கள் எங்களுடன் ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறோம்.
Share This Article
Follow:
டாக்டர். தீப்தி ஜம்மி (இயக்குனர், ஜம்மி ஸ்கேன்கள்) எம்.பி.பி.எஸ்., எம்.எஸ் (மகப்பேறு மற்றும் பெண்ணோயியல்) கரு மருத்துவத்தில் பிந்தைய முனைவர் பெல்லோஷிப் டாக்டர்.தீப்தி சர்வதேச மற்றும் தேசிய மாநாடுகளில் கரு மருத்துவத்தில் தங்கப் பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார், மேலும் பல மதிப்புமிக்க பிராந்திய இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி நேர்காணல்களில் தோன்றியுள்ளார்.
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »