குழந்தைகள் தாய்ப்பால் குடிக்கும் வரை அம்மாக்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. அதற்கு இணை குழந்தைக்கு உணவு கொடுக்கும் போது சவாலாக இருக்கும். குழந்தைக்கு கொடுக்கும் உணவு பிடித்தமானதாக இருக்கவேண்டும். குழந்தை அடம்பிடிக்காமல் சாப்பிட வேண்டும்.
கொடுக்கும் உணவு சத்தானதாக இருக்க வேண்டும். போதுமான உணவை தவிர்க்காமல் எடுக்க வேண்டும். இதையெல்லாம் தாண்டி உணவை சீக்கிரமாக சாப்பிட வேண்டும். இந்த எல்லா விஷயங்களும் குழந்தைகள் இடத்தில் அப்படியே நடக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அம்மாக்கள் குழந்தைகள் சாப்பிடவில்லை என்று கொட்டி தீர்த்துவிடுவார்கள். அன்பாக பணிய வைப்பார்கள், அதட்டி சாப்பிட வைப்பார்கள், இன்னும் சிலர் ஒரு கவளம் உணவு, ஒரு மிடறு தண்ணீர் என்று விழுங்க வைப்பார்கள்.
அம்மாக்களின் தூண்டுதலால் சில குழந்தைகள் உணவை கண்டாலே மிரண்டு ஓட தொடங்குவார்கள். சில குழந்தைகளை வற்புறுத்தி சாப்பிட வைத்தாலும் வாந்தி எடுத்துவிடுவார்கள். வெறித்தனமாக உணவை கொடுக்க செய்வார்கள். இப்படி குழந்தைக்கு உணவளிப்பதில் எல்லா அம்மாக்களும் செய்யும் பொதுவான தவறுகள் என்னென்ன? இதை தெரிந்துகொண்டால் உங்கள் குழந்தைகள் உணவை மறுக்காமல் சாப்பிட தொடங்குவார்கள்.
குழந்தைகள் சாப்பிடாமல் அடம்பிடித்தால் அதற்கு அம்மாக்கள் செய்யும் தவறுகள் தான் காரணம்!
குடும்பத்தோடு குழந்தையை சாப்பிட வையுங்கள்
குழந்தை சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்கள் முதலில் குழந்தையை குடும்பத்தோடு உட்காரவைத்து உணவு சாப்பிட பழக்க வேண்டும். நீங்கள் சாப்பிடுவதையே குழந்தையின் தட்டிலும் வையுங்கள்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்: குழந்தைகளுக்கு டான்சில் ஏன் உண்டாகிறது!
குழந்தை கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் பிடித்து சாப்பிட தொடங்கும் போது அவர்களுக்கு தட்டில் உணவை பிட்டு வையுங்கள். இட்லி, தோசை, சப்பாத்தி, காய்கறி, பழங்கள், சுண்டல் என சிறிது சிறிதாக எடுத்து சாப்பிட பழக்க வேண்டும், இதை பற்றி புதிய அம்மாக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
பெற்றோர்கள் குழந்தைகளோடு உட்கார்ந்து சாப்பிடும் போது குழந்தைகளும் உணவை விரும்பி சாப்பிட தொடங்குவார்கள். அதனால் ஆரோக்கியமான உணவு என்பது குழந்தைகளுக்கு மட்டும் அல்ல. பெரியவர்களுக்கும் பொருந்தும்.
குழந்தையை ஊக்கப்படுத்துங்கள்
குழந்தை சாப்பிடும் போது குழந்தையை அதட்டாமல் ஊக்குவிக்கும் வகையில் பேச வேண்டும். இன்னொரு வாய் சாப்பிடு, நீ பீம் போல் பலசாலி ஆகலாம். நீ தனியாகவே ஓடலாம். இப்படி ஊக்கம் கொடுக்க வேண்டும். அதே நேரம் குழந்தை அதிகப்படியாக சாப்பிடும் அளவுக்கு ஊக்கம் கொடுக்க கூடாது. ஏனெனில் நாங்கள் சிறந்த பெற்றோர்களாக இருக்க விரும்புகிறோம் என்று நினைத்து குழந்தையை ஊக்கப்படுத்தும் போது அவர்கள் பசியை தாண்டி அதிகமாக சாப்பிடுகிறார்கள்.
இது குறித்து ஆய்வு ஒன்று 2007 ஆம் ஆண்டு நடந்தது. அதில் 85% பெற்றோர்கள் தங்கள் மழலை குழந்தைகளை பாராட்டி ஊக்கப்படுத்தி சாப்பிட வைத்ததில் இந்த குழந்தைகளில் 83% பேர் அதிக எடையை கொண்டிருந்தார்கள் என்பது கண்டறியப்பட்டது.
குழந்தைக்கு உணவு சாப்பிட என்ன கொடுக்கிறோம். அதை எப்படி கொடுக்கிறோம் என்பதற்கு பெற்றவர்கள் தான் பொறுப்பு.
அதிக அழுத்தம்
குழந்தைக்கு வற்புறுத்தல் என்பது ஒரே விஷயத்தில் திரும்ப திரும்ப செய்யும் போது மோசமான விளைவுகளை உண்டாக்கும். பெற்றோர்கள் செய்யும் இந்த விஷயம் குழந்தையை மனச்சோர்வடைய செய்கிறது. இது குறித்து உணவியல் நிபுணர் மற்றும் குடும்ப சிகிச்சையாளர் குழந்தை உணவு சாப்பிடுவதை சமயம் கிடைக்கும் போது தவிர்க்கவும் செய்யலாம். அப்போது பெற்றோர்கள் அழுத்தம் கொடுக்கும் போது குழந்தை சலிப்படைகிறது.
குறிப்பாக அரிசி உணவில் தொடங்கும் பொது குழந்தை விரும்பவில்லை எனில் குழந்தைக்கு விதவிதமான முறையில் சுவையில் சமைத்து கொடுங்கள். ஆரம்பத்தில் 1 , 2, 3 என்று படிப்படியாக அளவை அதிகரித்தால் குழந்தை நாளடைவில் உணவை எடுத்துகொள்வார்கள். ஏனெனில் குழந்தைக்கு உணவு சாப்பிட என்ன கொடுக்கிறோம். அதை எப்படி கொடுக்கிறோம் என்பதற்கு பெற்றவர்கள் தான் பொறுப்பு.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்: பிறந்த குழந்தைக்கு ஒரு வயதாகும் வரை தவிர்க்க வேண்டிய விஷயங்கள்!
பதிலுக்கு பதில் உணவு
உணவு சாப்பிட்டால் குழந்தைக்கு இதை தருகிறேன் என்று சொல்லி லஞ்சம் பழகுவது மோசமான பழக்கம். அதிலும் குழந்தைக்கு கேக் , சாக்லேட், ஐஸ்க்ரீம், துரித உணவு என்னும் பழக்கத்தில் குழந்தை ப்ரக்கோலி சாப்பிட்டால் இதை தருகிறேன் என்று உண்ணவைப்பது மோசமான பழக்கம். ஏனெனில் ப்ரக்கோலியின் சத்தை இவை உடலுக்கு கிடைக்காமல் செய்து விடலாம்.
அதோடு இதை சாப்பிட்டால் இனிப்பாக பிடித்தது கிடைக்கிறது என்று வேண்டா வெறுப்பாக அதை சாப்பிடுவார்கள். அவர்களை பொறுத்தவரை காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை காட்டிலும் இனிப்புகள் மிகவும் மதிப்பானவை. அதனால் இனிப்பை காட்டி குழந்தையை மயக்குவதை விட குழந்தைக்கு பிடித்த ஒரு பழத்தை காட்டலாம். இனிப்புகளுக்கு பலியாக்க கூடாது.
புதிய உணவுகளில் கவனம் கொள்ளுங்கள்
உணவுகளை புதிது புதிதாக சீரான இடைவெளியில் அறிமுகப்படுத்துவது நல்லது. அப்போதுதான் அந்த உணவு அவர்களுக்கு எவ்வித ஒவ்வாமை வழங்கவில்லை அல்லது உண்டாக்குகிறது என்பதை அறிந்துகொள்ள முடியும். அதே நேரம் குழந்தைகளுக்கு வறுக்கப்பட்ட, நொறுக்கப்பட்ட உணவுகள் தான் பிடிக்கிறது என்று அதன் மீது மட்டும் ஒட்டிகொள்ள கூடாது.
குழந்தைக்கு அனைத்துவிதமான உணவுகளையும் சாப்பிட பழக்க வேண்டும். குழந்தை ஒவ்வொரு முறை புதிய உணவையும் ஏற்றுக்கொள்ள் 10 முதல் 15 வெளிப்பாடுகள் தேவைப்படலாம். பெற்றோர்கள் குழந்தை உணவை சாப்பிடுவார்கள் என்னும் எதிர்பார்ப்புடன் உணவை கொடுக்க வேண்டும்.
முதலில் குழந்தைக்கு புதிய உணவை அறிமுகப்படுத்தும் போது அவர்கள் இதை தான் செய்வார்கள். நீங்கள் சாப்பிடுவதை பார்த்து அதை அவர்கள் தட்டில் வைத்துகொண்டு வெளியே துப்பிவிடுவார்கள். குழந்தைகள் சாப்பிடும் போது விரக்தியடையாமல் இருக்க வேண்டும் அதே போன்று அவர்கள் உணவை சாப்பிடும் போது மகிழ்ச்சியடையவும் கூடாது.
மெனு திட்டமிடும் போது குழந்தைக்கும் சேர்த்தே திட்டமிடுங்கள். சாப்பாட்டு மேசையில் குழந்தைக்கு பிடித்த ஒரு உணவாவது அவசியம் இருக்கட்டும்.
குழந்தைக்கு தனியாக சமைக்க வேண்டாம்
குடும்பத்தில் அனைவருக்கும் ஆரோக்கியமான உணவு அவசியம். அதே நேரம் குழந்தைக்கு மட்டும் தனியாக சமைப்பது தவிர்க்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக சமைப்பது பிடித்தமானதாக இருக்கலாம். ஆனால் சத்து என்பது எல்லோருக்கும் சேர வேண்டும். தனித்தனி சமையல் உணவுப்பழக்கத்தை மேம்படுத்தாது. அது நேரத்தையும் சக்தியையும் இழக்கவே செய்யும்.
பெரியவர்களுக்கு சுண்டல் சமைத்தால் குழந்தைக்கு சற்று வேகவைத்து கொடுக்கலாம். மெனு திட்டமிடும் போது குழந்தைக்கும் சேர்த்தே திட்டமிடுங்கள். சாப்பாட்டு மேசையில் குழந்தைக்கு பிடித்த ஒரு உணவாவது அவசியம் இருக்கட்டும். அப்படி செய்தால் அவர்கள் உணவை தவிர்க்க மாட்டார்கள்.
பட்டினியாக வயிற்றை காய விடுவார்களே என்று அம்மாக்கள் கவலை கொள்ள வேண்டியதில்லை. அதோடு குழந்தை பசி எடுத்தால் சாப்பிட வேண்டும் என்னும் உந்துதலுக்கு உட்படலாம். எக்காரணம் கொண்டும் தனி சமையலை குழந்தைக்கு ஊக்குவிக்க வேண்டாம்.
தட்டு நிறைய உணவு வைக்க வேண்டாம்
சிகாகோவில் இருக்கும் அமெரிக்க டயட்டெடிக் அசோசியேஷன் குழந்தைக்கு உணவு பரிமாறுதல் குறித்து பகிர்ந்துள்ளவற்றில் சில நேரங்களில் குழந்தைகள் என்பதை மறந்து பெரியவர்களை போன்று தட்டு நிறைய உணவை கொட்டி விடுவதுண்டு. அதிகப்படியான உணவு குழந்தையை பயமுறுத்த செய்யலாம். குழந்தை எல்லாருடைய தட்டையும் சுற்றி சுற்றி பார்க்கும். தட்டு நிறைய உணவு பார்க்கும் போதே குழந்தையின் வயிற்றை நிரம்ப செய்து விடும். உணவு ஒவ்வொரு கவளமாக வைத்தாலே குழந்தைகள் அழகாய் சாப்பிட தொடங்குவார்கள்.
அதிகப்படியான சாறு மற்றும் சிற்றுண்டி
குழந்தைக்கு நாள் முழுவதும் குக்கீகள், ஸ்நாக், மொரமொரப்பான உணவு மற்றும் பிற தின்பண்டங்களை முடிவில்லாமல் தந்து கொண்டே இருப்பதுண்டு. இது குழந்தைக்கு எந்த விதத்திலும் ஆரோக்கியத்தை அளிக்காது. உணவு உண்ணும் போது கொடுக்கும் சாறு வகைகளும் அப்படிதான். குழந்தை உணவை விட்டு சாறை மட்டுமே எடுப்பார்கள். உண்மையான உணவை உண்ணும் போது ஆரோக்கியம் நிறைவாக இருக்கும். அவர்களுக்கு பசி இருக்காது.
அதற்காக குழந்தைக்கு எப்போதும் நொறுக்குத்தீனிகள் கொடுக்க கூடாது என்னும் அவசியம் இல்லை. அதற்கு மாற்றாக சுவையான சிற்றுண்டிகளை ஊட்டச்சத்து அல்லது புதிய சுவையோடு தயாரித்து கொடுக்க வேண்டும். சிற்றுண்டியை ஒரு வழக்கமாகவே பழக வேண்டும். ஒரு நாளின் குறிப்பிட்ட நேரங்களில் ஆரோக்கியமான விருப்பங்களை மட்டும் குழந்தைக்கு கொடுங்கள். அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் கூற்றுப்படி தினமும் ஆறு அவுன்ஸ்க்கு குறைவாக சாறாக கொடுக்க வேண்டும்.
உணவை சரியாக உண்ண வேண்டும் என்று எதிர்பார்ப்பது
சிறு குழந்தைகள் வளரும் போது சேட்டையோடு குறும்போடு வளர்வார்கள். அவர்கள் எல்லாவற்றையும் விளையாட்டாகவே பார்ப்பார்கள். அதிலும் உணவு நிறைந்த தட்டு கலராக இருந்தால் அவர்கள் வேடிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். அம்மாக்களுக்கு குழந்தை எந்த உணவை கொடுத்தாலும் சிந்தாமல் சிதறாமல் சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள்.
இதனால் குழந்தையை அதட்டுவது கூட உண்டு. இது குழந்தைக்கு உணவின் மீது வெறுப்பை உண்டு செய்யும். இதை தடுக்க குழந்தை உணவை விளையாட்டாய் ரசித்து அனுபவித்து சாப்பிட தடை சொல்ல கூடாது. அவர்கள் ஸ்பூனால் சாப்பிடமால் கைகளால் சிந்தி சிதறி சாப்பிட்டாலும் எதுவும் சொல்லகூடாது. குறிப்பாக நீண்ட நேரம் சாப்பிட்டாலும் அதட்டி மிரட்ட கூடாது.
எல்லா உணவையும் சாப்பிட வேண்டும்
அம்மாக்கள் செய்யும் தவறில் இது முக்கியமானது. குழந்தை நாம் கொடுக்கும் அனைத்தையும் சாப்பிட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். சில குழந்தைகளுக்கு சில சுவைகள் பிடிக்காமல் போகலாம். குறிப்பாக இலேசான கசப்பு, துவர்ப்பு உணவுகளை கூட விரும்பமாட்டார்கள்.
வளரும் பருவம் வரை இவை தொடரும். புதிய இந்த சுவைகளை வலுவாக வெறுக்கும் இது நியோபோபியா என்னும் இயற்கையான அச்சத்தை குறிக்கிறது. இது சாதாரணமானது. சில குழந்தைகளுக்கு இவை தீவிரமாக இருக்கலாம். பெரும்பாலும் மனநிலை வேறுபாடுகள் காரணமாக இவை அதிகரிக்க செய்யலாம்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
குழந்தை புதிய உணவை மறுக்கும் போது அதை சில நாட்கள் கழித்து மீண்டும் முயற்சி செய்யுங்கள். ஒவ்வொரு முறையும் அந்த குழந்தைக்கு அந்த புதிய உணவு பிடிக்கவில்லை எனில் அவர் அதை விரும்பவில்லை எனில் நீங்கள் திணிக்க வேண்டாம். அது ஊட்டச்சத்து உணவு எப்படி கொடுப்பது என்னும் கவலை இருந்தால் வேறு முறையில் கொடுத்து பழகுங்கள்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்: குழந்தைக்கு மலச்சிக்கல் அறிகுறிகள் மற்றும் தீர்வுகள்!
உணவு வழியாக தான் ஊட்டச்சத்து
குழந்தை சாப்பிடும் ஒவ்வொரு கவளமும் அவள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கிறது என்பதை ஒப்புகொள்ளுங்கள். மல்டி வைட்டமின் சப்ளிமெண்ட்களை விட உணவில் இருந்து ஊட்டச்சத்து பெறுவதுதான் நல்லது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
குழந்தைக்கு வேண்டிய சரிவிகித ஊட்டச்சத்தை நீங்களாக சுயமாக முடிவெடுக்காமல் மருத்துவரை ஆலோசித்து உரியதை சரியான முறையில் தேர்வு செய்து கொடுங்கள். குழந்தையின் தேவையை அம்மாக்களால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியாது. மருத்துவர்கள் ஆலோசனையின் படி குழந்தையின் உடல் அமைப்புக்கு ஏற்றபடி அவர்களால் தான் ஆலோசனை சொல்ல முடியும்.