முதல் பிரசவம் சி-பிரிவாக இருந்தால் இரண்டாவது குழந்தை சுக பிரசவம் ஆகுமா என்று நிறைய கர்ப்பிணி பெண்கள் தங்கள் இரண்டாவது கர்ப்பத்தில் மருத்துவரிடம் கேட்பார்கள்.
நீங்கள் ஏற்கனவே சிசேரியன் பிரசவம் செய்திருந்தால் உங்கள் அடுத்த குழந்தையை சுக பிரசவத்தில் பெறலாம். இது அறுவைசிகிச்சைக்குப் பிறகு நடக்கும் சுக பிரசவ பிறப்பு VBAC (Vaginal birth after cesarean) என்றும் அழைக்கப்படுகிறது.
சி-பிரிவுக்குப் பிறகு சுக பிரசவம் முயற்சிக்கும் 10 பெண்களில் 6 முதல் 8 பேர் அதாவது 60 முதல் 80 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் தங்கள் குழந்தையை சுக பிரசவத்தில் பெற்றெடுப்பதில் வெற்றி பெற்றுள்ளனர்.
உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் சி-பிரிவுக்குப் பிறகு சுக பிரசவம் ஒரு நல்ல தேர்வாக இருக்குமா என்பதைக் கண்டறிய உங்கள் கர்ப்பத்தின் ஆரம்பத்தில் மகப்பேறு மருத்துவரிடம் கலந்து பேசுங்கள்.
மேலும் சி-பிரிவுக்குப் பிறகு எப்படி சுக பிரசவம் சாத்தியம் மற்றும் இது எப்படி நடக்கும் மேலும் இதன் நன்மைகள் என்ன என்பதை இந்த வலைப்பதிவில் தெரிந்து கொள்ளுவோம்.
சி-பிரிவுக்குப் பிறகு சுக பிரசவம் உங்களுக்கு சரியானதா என்பதை எப்படி அறிவது?
நீங்கள் சி-பிரிவுக்குப் பிறகு சுக பிரசவம் நடக்க வேண்டும் என்று நினைத்தால் முதலில் உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள். அதில் உள்ள அபாயங்கள் மற்றும் நன்மைகளைப் பற்றி உங்களுக்கு சொல்ல மருத்துவர்கள் உதவ முடியும்.
மேலும் உங்களுக்கு ஏற்படும் அபாயங்கள் குறைவாகவும், வெற்றிகரமான சி-பிரிவுக்குப் பிறகு சுக பிரசவம் (VBAC) நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகவும் இருந்தால், VBAC உங்களுக்கு சரியானது என்று முடிவு செய்யலாம்.
VBAC நடக்க வாய்ப்புகள் எப்போது அதிகம்?
கடந்த காலத்தில் ஒரு சி-பிரிவை நடந்திருக்கிறது என்றால் சி-பிரிவுக்குப் பிறகு சுக பிரசவம் நடக்க வாய்ப்புக்கு உள்ளது.
குறைந்த அறுவை சிகிக்சை வெட்டு கீறலுடன் இருந்தால், அறுவை சிகிக்சை வெட்டுக்கள் கிடைமட்டமாக மற்றும் கருப்பையில் குறைவாக இருந்தால்.
கர்ப்ப காலத்தில் நீங்களும் உங்கள் குழந்தையும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறீர்கள் மற்றும் உங்களின் பிரசவ தேதிக்கு சற்று முன் உங்களுக்கான தேதியில் வலி ஏற்பட தொடங்குகிறது என்றால் வெற்றிகரமான சி-பிரிவுக்குப் பிறகு சுக பிரசவம் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கும்.
VBAC நடக்க வாய்ப்புகள் எப்போது குறையும்?
- கடந்த கர்ப்பத்தில் உங்களுக்கு சி-பிரிவை செய்ய அவசியமாக தேவைப்பட்ட அதே நிலை இந்த கர்ப்பத்திலும் இருந்தால் சுக பிரசவம் சத்தியம் இல்லை. உதாரணமாக குழந்தைக்கு இதயத் துடிப்பில் சிக்கல் உள்ளது அல்லது கருப்பையில் பக்கவாட்டில் இருந்தால்.
- கர்ப்ப காலத்தில் தாய்க்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால்
- தாயின் வயது பொதுவாக 35 வயதுக்கு மேல் இருந்தால்
- தாயின் முந்தைய சிசேரியன் கடந்த 19 மாதங்களில் தான் இருக்கிறது
- குழந்தை அளவில் மிகவும் பெரியதாக இருக்கும் போது
- தாயின் முந்தைய சி-பிரிவு வடு அதிகமாக இருந்தால்
- நீங்கள் பருமனாக இருக்கிறீர்கள் அல்லது கர்ப்ப காலத்தில் அதிக எடை அதிகரித்து இருந்தால், உங்களிடம் அதிகப்படியான உடல் கொழுப்பு உள்ளது மற்றும் உங்கள் உடல் பிஎம்ஐ 30 அல்லது அதற்கும் அதிகமாக இருந்தால் சுக பிரசவம் சத்தியம் இல்லை.
இதையும் தெரிந்து கொள்ள: கர்ப்பத்தில் குழந்தை இயக்கங்களின் முக்கியத்துவம்!
சி-பிரிவுக்குப் பிறகு சுக பிரசவம் செய்வதால் ஏற்படும் அபாயங்கள் என்ன?
முதல் பிரசவம் சிசேரியனுக்குப் பிறகு இரண்டவது குழந்தை பிரசவ சுக பிரசவம் செய்ய முயற்சிக்கும் 1% க்கும் குறைவான பெண்களில் அபாயங்கள் நிகழ்கிறது.
ஒவ்வொருவரின் உடல் நிலையும் வித்தியாசமாக இருப்பதால், ஒரு பெண் இரண்டாவது குழந்தையை திட்டமிடும் போது, சி-பிரிவுக்குப் பிறகு சுக பிரசவம் செய்வதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து உங்கள் மருத்துவரிடம் கலந்து ஆலோசிக்க வேண்டியது அவசியம்.
VBAC இன் சில அபாயங்கள் நோய்த் தொற்றுகள், அதிகமான இரத்த இழப்பு, கருப்பை சிதைவு மற்றும் இது ஒரு அரிதான நிகழ்வு என்றாலும் கருப்பை முறிவு என்பது பழைய சி-பிரிவு வடு திறப்பு.
கருப்பை முறிவு உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் உயிருக்கு ஆபத்தானது. கருப்பை முறிவின் போது, கருப்பையில் உள்ள சிசேரியன் வடு உடைந்து விடும். உயிருக்கு ஆபத்தான சிக்கல்களைத் தடுக்க அவசரமாக சி-பிரிவு செய்ய மருத்துவரால் முடிவு செய்யப்படும். இந்த நிலை அரிதாக நடக்கும், எல்லோருக்கும் பொதுவானது இல்லை.
இதற்கு சிகிச்சையானது கருப்பை அறுவை சிகிச்சை மூலம் கருப்பையை நீக்கம் செய்வதாகும். உங்கள் கருப்பை அகற்றப்பட்டால், நீங்கள் மீண்டும் கர்ப்பமாக இருக்க முடியாது.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
தாயும் அவரது மருத்துவரும் விவாதிக்க வேண்டிய ஒரு முக்கியமான விவரம், அவள் கருப்பையில் இருக்கும் சி-பிரிவு வடு வகை. இது அவளது அடிவயிற்றில் இருக்கும் அதே வகை வடுவாக இருக்கலாம், ஆனால் அது வேறு திசையில் செல்லக்கூடும்.
மருத்துவர்கள் பொதுவாக சி-பிரிவின் போது இரண்டு வெவ்வேறு திசைகளில் கீறல்கள், அடிவயிற்று மற்றும் கருப்பையில் வெட்டுக்களைச் செய்கிறார்கள்
முடிவுரை
நீங்கள் சி-பிரிவுக்குப் பிறகு சுக பிரசவம் நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால், கர்ப்பத்தின் ஆரம்பத்தில் மருத்துவரிடம் உங்கள் கவலைகள் மற்றும் எதிர்பார்ப்புகளைப் பற்றி தெளிவாக பேசவும்.
உங்கள் முந்தைய சி-பிரிவு மற்றும் பிற கருப்பை ஆரோக்கியம் உட்பட முழுமையான மருத்துவ வரலாறு பற்றி மருத்துவருக்கு தெரிந்து உள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளவும்.
இதனால் உங்களுக்கு அடுத்த பிரசவம் சுக பிரசவம் ஆக வாப்புக்கள் உள்ளதா என்பதை மருத்துவர் தெரிந்து கொள்ளுவார்கள்.
மேலும் உங்களுக்கு ஏற்படும் கர்ப்ப கால சந்தேகங்களுக்கு மற்றும் கர்ப்ப கால அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பற்றி தெரிந்து கொள்ள இப்போதே ஜம்மி ஸ்கேன் மையத்தை தொடர்பு கொள்ளுங்கள்.