மலட்டுத்தன்மை (Infertility in Tamil) என்பது கணவன் மனைவி இருவரும் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொண்டாலும் தொடர்ந்து ஒரு வருடங்கள் வரை கருத்தரிப்பு நிகழவில்லை எனில் அது கருவுறாமை அல்லது மலட்டுத்தன்மை (Infertility in Tamil) என்று சொல்லப்படுகிறது.
இந்த கருவுறாமை என்பது பெண்ணின் பிரச்சனை மட்டுமல்ல. ஆண்களும் மலட்டுத்தன்மையை (Infertility in Tamil) கொண்டிருக்கலாம். ஆண்களுக்கும் பெண்களுக்கும் என இருவருக்குமே கருவுறுதல் அல்லது மலட்டுத்தன்மை பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
கருவுறாமைக்கு அல்லது மலட்டுத்தன்மை (Infertility in Tamil) காரணம்
பெண் மலட்டுத்தன்மைக்கான (Female Infertility in Tamil) காரணங்கள்
- ஒழுங்கற்ற மாதவிடாய்
- மாதவிடாய் இல்லாமல் போவது
- ஹார்மோன் பிரச்சனைகள்
- ஃப்லோபியன் குழாய் அடைப்பு
- செலியாக் நோய்
- சிறுநீரக நோய்
- எக்டோபிக் கர்ப்ப்பம்
- இடுப்பு அழற்சி நோய்
- பிட்யூட்டரி சுரப்பி கோளாறுகள்
- பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்
- சிக்கிள் செல் இரத்த சோகை
- எண்டோமெட்ரியோசிஸ் (கருப்பை நார்த்திசுக்கட்டிகள் மற்றும் பாலிப்கள்)
- தைராய்டு நோய்
- அதிக வயதை கொண்டிருத்தல்
- உடல் பருமன் அல்லது மிக குறைவான எடை கொண்டிருப்பது
- இனப்பெருக்க அமைப்பை சேதப்படுத்தும் சில பாலியல் பரவும் நோய்த்தொற்றுகள் இருப்பது.
இது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்
அண்டவிடுப்பின் கோளாறு
இது கருப்பை முட்டைகளை வெளியிடுவதை பாதிக்கிறது, இதில் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் போன்ற ஹார்மோன் கோளாறுகள் அடங்கும். ஹைப்பர்ரோலாக்டின் அதிகப்படியாக இருந்தால் இது மார்பகத்தில் பால் உற்பத்தியைத் தூண்டும் ஹார்மோன் அண்டவிடுப்பிலும் தலையிடக்கூடும். தைராய்டு ஹார்மோன் அதிகமாக அல்லது மிக குறைவாக சுரந்து அது மாதவிடாய் காலத்தை பாதிக்கலாம் அல்லது மலட்டுத்தன்மையை (Infertility in Tamil) உண்டாக்கலாம்.
கருப்பை வாயில் உள்ள அசாதாரணங்கள்
அசாதாரணங்கள் கருப்பையில் உள்ள பாலிப்கள் அல்லது கருப்பையின் வடிவம் உள்ளிட்ட கருப்பை அல்லது கர்ப்பப்பையின் அசாதாரணங்கள். கருப்பை சுவரில் கருப்பை நார்த்திசுகக்கட்டிகள், புற்றுநோயற்ற கட்டிகள் ஃபெலோபியன் குழாய்களை தடுப்பதன் மூலமாகவோ அல்லது கருவுற்றிருக்கும் முட்டையை கருப்பையில் பொருத்துவதை நிறுத்துவதன் மூலமோ மலட்டுத்தன்மையை (Infertility in Tamil) உண்டாக்கலாம்.
ஃபெலொபியன் குழாய் சேதம் அல்லது அடைப்பு
பெரும்பாலும் ஃபெலோபியன் குழாய் சேதமானது அழற்சியால் உண்டாகிறது. இது இடுப்பு அழற்சி நோயால் ஏற்படலாம். பாலியல் மூலம் பரவும் தொற்றால் உண்டாகிறது. எண்டோமெட்ரியோசிஸ் திசு வளரும் போது கருப்பைக்கு வெளியே கருப்பை மற்றும் ஃபெலோபியன் குழாய்களின் செயல்பாட்டை பாதிக்கலாம்.
முதன்மை கருப்பை பற்றாக்குறை அதாவது ஆரம்ப மாதவிடாய்
கருப்பை வேலை செய்வதை நிறுத்தி மாதவிடாய் 40 வயதுக்கு முன்பே முடிவடையும். இதற்கு சரியான காரணம் கண்டறியப்படவில்லை என்றாலும் சில காரணங்கள் ஆரம்ப கால மாதவிடாய் நிறுத்தத்துடன் தொடர்பு கொண்டவை. நோயெதிர்ப்பு அமைப்பு நோய்கள், டர்னர் நோய்க்குறி போன்ற சில மரபணு நிலைமைகள் பலவீனமான எக்ஸ் நோய்க்குறி, கதிர்வீச்சு அல்லது கீமோதெரபி.
இடுப்பு நோய்த்தொற்று
இடுப்பு நோய்த்தொற்று, குடல் அழற்சி, எண்டோமெட்ரியோசிஸ் அல்லது அடிவயிற்று அல்லது இடுப்பு அறுவை சிகிச்சைக்கு பிறகு உருவாக கூடிய உறுப்புகளை பிணைக்கும் வடு திசுக்கள்.
புற்றுநோய் மற்றும் அதன் சிகிச்சை
இது அரிதானது என்றாலும் சில பெண்கள் இனப்ப்பெருக்க புற்றுநோய்களை கொண்டிருந்தால் கருவுறுதலை குறைக்கின்றன. கதிர்வீச்சு மற்றும் கீமோதெரபி இரண்டுமே கருவுறுதலை பாதிக்கலாம்.
ஆண் மலட்டுத்தன்மைக்கான காரணங்கள்
- வெரிகோஸ் வெயின் பிரச்சனை (விரிவாக்கபட்ட நரம்புகள்)
- விந்தணுக்கள் வைத்திருக்கும் சாக்
- மரபணு கோளாறுகள் (சிஸ்டிக், ஃபைப்ரோசிஸ்)
- இறுக்கமான ஆடைகள் அணிவதால் விந்தணுக்கள் அதிக வெப்பத்தை சந்திதல்
- விந்தணுக்கள் குறைவாக இருப்பது (டெஸ்டோஸ்ட்ரான் அளவு குறைவது)
- முன் கூட்டிய விந்து வெளிபாடு
- விந்தணுக்களின் வடிவம், இயக்கம், அது உள் செல்லும் நேரம் போன்ற குறைபாடு
- மருத்துவ நிலைமகள் மற்றும் மருந்துகள் எடுத்துகொள்வது.
இது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.
அசாதாரண விந்தணுக்கள், மரபணு குறைபாடுகள், நீரிழிவு போன்ற உடல்நல பிரச்சனைகள் அல்லது கிளமிடியா, கோனோரியா, அம்மை மற்றும் ஹெச்.ஐ.வி நோய்த்தொற்றுகள் காரணமாக அசாதாரண விந்து உற்பத்தி அல்லது செயல்பாடு சோதனைகளில் (வெரிகோசெல்) விரிவாக்கப்பட்ட நரம்புகள் விந்தணுக்களின் தரத்தையும் பாதிக்கும்.
விந்து வெளியேறுதல்
முன்கூட்டிய விந்து வெளியேறுதல் போன்ற பாலியல் பிரச்சனைகள் காரணமாக விந்தணுக்கள் வழங்குவதில் சிக்கல் இருக்கலாம். சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் போன்ற சில மரபணு நோய்கள் விந்தணுக்களில் அடைப்பு போன்ற சிக்கல்கள் அல்லது இனப்பெருக்க உறுப்புகளுக்கு சேதம் அல்லது காயம் ஏற்படுவது.
இதர காரணங்கள்
பூச்சிக்கொல்லிகள், பிற இராசயனங்கள், கதிர்வீச்சு படும் இடங்களில் வேலை செய்பவர்கள், அதிகமாக புகைப்பிடிப்பவர்கள், ஆல்கஹால், பாக்டீரிய தொற்றுக்கு சிகிச்சையளிக்க மருந்துகள் எடுத்துகொள்பவரக்ள், உயர் இரத்த அழுத்தம், மனச்சோர்வு போன்றவையும் கருவுறுதலை பாதிக்கும். உடல் வெப்பநிலையை அதிகரிக்கும் இடத்தில் இருப்பதும் விந்து உற்பத்தியை பாதிக்க செய்யலாம்.
ஆண் மற்றும் பெண் மலட்டுத்தன்மை (Infertility in Tamil) பொதுவான காரணங்கள்
வயதும் காரணமாக இருக்கலாம்
பெண்களில் கருவுறுதல் வயது 30 வயதுக்கு பிறகு படிப்படியாக குறைகிறது. 37 வயதில் பெருமளவு குறைந்துவிடுகிறது. பெண்களின் கருவுறாமை என்பது முட்டைகளின் குறைந்த எண்ணிக்கையும் தரமும் காரணமாக இருக்கலாம். ஆண்களில் 40 வயதை கடந்தவர்கள் இளமையானவர்களை காட்டிலும் வளமானவர்களாகவே இருக்கிறார்கள்.
புகைப்பழக்கம்
ஆண்களுக்கு (பெண்களும்) புகைப்பழக்கம், புகையிலை போன்றவை கருவுறுதலை பாதிக்க செய்யும். இவர்கள் கருவுறுதலில் சிக்கலை எதிர்கொள்ளலாம். இது விறைப்புத்தன்மை மற்றும் ஆண்களில் குறைந்த விந்தணுக்களின் அபாயத்தை அதிகரிக்கும்.
ஆல்கஹால் பயன்பாடு
பெண்களை பொறுத்தவரை கருத்தரித்தல் அல்லது கர்ப்பகாலத்தில் பாதுகாப்பான அளவு ஆல்கஹால் (தவிர்க்க முடியாத பழக்கம் கொண்டவர்கள்) என்னும் நிலை இல்லை. ஆல்கஹால் கருவுறாமைக்கு காரணமாக இருக்கலாம்.
ஆண்களை பொறுத்தவரை அதிகப்படியான ஆல்கஹால் பயன்பாடு விந்தணுக்களின் இயக்கத்தை குறைக்கும்.
உடல் பருமன்
பருமனாக இருக்கும் பெண்களுக்கு கருவுறாமை அபாயத்தை அதிகரிக்கலாம். ஆண்கள் அதிக எடை கொண்டிருந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை பாதிக்கப்படலாம். எடை குறைவாக இருப்பதும் கருவுறுதலில் சிக்கலை உண்டாக்க கூடும். பெண்கள் அனோரெக்ஸியா அல்லது புலிமியா உணவுக்கோளாறு உள்ளவர்கள், மிக குறைந்த அளவு கலோரி அல்லது கட்டுப்படுத்தப்பட்ட உணவை எடுத்துகொள்பவர்கள் இந்த பாதிப்பை எதிர்கொள்ளலாம்.
உடற்பயிற்சி சிக்கல்கள்
உடற்பயிற்சி பற்றாக்குறை உடல் பருமனை உண்டாக்குகிறது. இது மலட்டுத்தன்மை (Infertility in Tamil) அபாயத்தையும் அதிகரிக்கிறது. அதிக எடை இல்லாத பெண்கள் தீவிரமான உடற்பயிற்சி மேற்கொள்வது அண்டவிடுப்பு பிரச்சனையுடன் தொடர்பு கொண்டிருக்கலாம்.
குழந்தையின்மைக்கு எப்போது மருத்துவரை சந்திக்க வேண்டும்?
குழந்தையின்மை இருக்கும்போது பொதுவாக ஒரு வருடங்கள் வரை காத்திருந்தும் கருவுறுதல் தடைபடுகிறது என்றால் நீங்கள் மருத்துவரை சந்திக்க வேண்டும். 35 வயது அல்லது அதை கடந்தவர்கள் ஆறு மாதங்கள் காத்திருந்து மருத்துவரை சந்திக்க வேண்டும். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் காலம் அல்லது மாதவிடாய் காலமே இல்லை என்னும் நிலையில் மருத்துவரை சந்திக்க வேண்டும். இவர்களுக்கு எண்டோமெட்ரியோசிஸ் அல்லது இடுப்பு அழற்சி போன்ற பிரச்சனைகள் இருக்கலாம்..
ஆண்கள் டெஸ்டிகுலர் புராஸ்டேட் புற்றுநோய்க்கு சிகிச்சை மேற்கொண்டிருந்தால் அவர்களும் முன்கூட்டியே மருத்துவரை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ளலாம்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
மலட்டுத்தன்மை (Infertility in Tamil) நீங்க என்ன செய்ய வேண்டும்
சில வகையான கருவுறாமை தடுக்க முடியாது. ஆனால் பல விஷயங்களை கடைப்பிடிப்பதன் மூலம் கர்ப்ப வாய்ப்பு அதிகரிக்கலாம்.
தம்பதியர் அண்டவிடுப்பு நாட்களில் பல முறை உறவு கொள்ளலாம். குறைந்தது ஐந்து நாட்களுக்கு முன்பிலிருந்து அண்டவிடுப்பு ஒரு நாள் வரை உடலுறவு கொள்வதன் மூலம் கருத்தரிக்க வாய்ப்பு மேம்படுத்துகிறது.
அண்டவிடுப்பின் வழக்கமான சுழற்சி மாதவிடாய் சுழற்சி நடுவில் நடக்கிறது. இது சீரான மாதவிடாயை எதிர்கொள்ளும் பெண்களுக்கு எளிதில் கண்டறிய முடியும். அதோடு அண்டவிடுப்பு முறை காலத்தில் உண்டாகும் அறிகுறிகளும் இதற்கு உதவும்.
ஆண்கள் கருவுறுதலை மேம்படுத்த செய்ய வேண்டியவை
- போதைப்பொருள் மற்றும் புகையிலை பயன்பாடு தவிர்க்க வேண்டும்.
- ஆல்கஹால் தவிர்ப்பது அல்லது கட்டுப்படுத்துவது அவசியம்
- அதிக வெப்பநிலை இருக்கும் இடத்தை தவிர்க்க வேண்டும்.
- சுயமாக மருந்துகள் எடுத்துகொள்ள கூடாது.
- உடற்பயிற்சி மிதமான அளவில் இருக்க வேண்டும்.
பெண்கள் கருவுறுதலை மேம்படுத்த செய்ய வேண்டியவை
- புகைப்பழக்கம், ஆல்கஹால் தவிர்க்க வேண்டும்.
- காஃபின் அளவாக எடுத்துகொள்ளுங்கள்.
- உடற்பயிற்சி மிதமாக இருக்கட்டும்.
- எடையை கட்டுக்குள் வையுங்கள்.
- மிதமான உடற்பயிற்சி செய்யுங்கள்.