உடலில் வைட்டமின் டி குறைந்தால் என்ன ஆகும்?

52
Importance Of Vitamin D

உடலுக்கு வேண்டிய வைட்டமின்களில் வைட்டமின் டி என்பது மிக முக்கியமானது. சிலர் மருத்துவ பரிசோதனை முடிவுகளில் வைட்டமின் டி குறைபாடு கண்டறியப்பட்டால் தான் மருத்தவரிடம் சிகிச்சைக்கே வருவார்கள். இந்த வைட்டமின் டி (Vitamin D) குறித்து பெரும்பான்மையானவர்களுக்கு தெரிவதில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

வைட்டமின் டியின் மருத்துவப் பெயர் கால்சிபெரால் – Calciferol ஆகும். இதன் சிறப்பே fat soluble vitamin என்று சொல்லலாம். உடலில் கொழுப்பு எங்கெல்லாம் உருகினாலும் அதை எடுத்து வைக்க முடியும். இந்த வைட்டமின் டி உடலில் இரண்டு விதமாக நடைமுறைப்படுத்தப்படும்.

Calciferol

முதலாவது சூரிய ஒளியின் புற ஊதாக்கதிர்கள் சருமத்தில் பட்டு வைட்டமின் டி (Vitamin D) உற்பத்தியாகின்றது. இது சூரிய ஒளியில் மட்டும் அல்லாமல் வெகு சில உணவுப்பொருட்களிலும் வைட்டமின் டி உள்ளது. ஆனால் அது உணவாக உட்கொள்ளப்பட்டு உயிரியல் செயல்பாடுகள் மூலம் மட்டுமே உடலில் வைட்டமின் டி யாக உற்பத்தியாகும்.

சூரியனின் புற ஊதாக்கதிர்கள் சருமத்தில் பட்டு வைட்டமின் டி யாக உற்பத்தியாக உடலில் முதலில் ஹைட்ராக்ஸிலேஷன் நடைபெற வேண்டும். முதலாவது ஹைட்ராக்சிலேஷன் கல்லீரலில் நடைபெறும். அதில் உற்பத்தியாகும் 25 ஹைட்ராக்ஸி வைட்டமின் டி உருவாகும். இது கால்சிடையால் Calcidiol என்று அழைக்கப்படுகிறது. கல்லீரலுக்கு பிறகு இவை இரண்டாவது செயல்பாடாக சிறுநீரகத்தில் நடக்கும்.

இரண்டாவதாக சிறுநீரகத்தில் நடைபெறும் ஹைட்ராக்ஸிலேஷனின் மூலம் உற்பத்தியாகும் 125 ஹைட்ராக்ஸி வைட்டமின் டி3 ஆக மாற்றப்படும். இது கால்சிட்ரையால் Calcitriol எனப்படுகின்றது. மேற்கூறப்பட்ட இரண்டு முறைகளின் மூலமே புற ஊதாக்கதிர்களிலிருந்து பெறப்படும் வைட்டமின் டி உடலில் செயல்படத் தொடங்குகிறது. இந்த வைட்டமின் டி ஏன் முக்கியம் என்பதை தெரிந்துகொள்வோம்.

வைட்டமின் டி எலும்புகளின் கட்டமைப்பிற்கு உதவுகின்றது. வைட்டமின் டி குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ரிக்கெட்ஸ் எனும் நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இளம் வயதினருக்கு இக்குறைபாடு ஏற்படும்போது ஆஸ்டியோபோரஸிஸ் osteoporosis அல்லது ஆஸ்டியோமலேசியா osteoporosis malacia எனும் நோய் ஏற்படலாம்.

எலும்புகளின் வலுவான கட்டமைப்புக்கு உதவும் செல்கள் இரண்டு உண்டு. இது osteoplast ஆஸ்டியோப்ளாஸ்ட் மற்றும் osteoblast ஆஸ்டியோப்ளாஸ்ட் ஆகும். வைட்டமின் டி இருந்தால் தான் எலும்புகள் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். உடலில் ஏற்படும் வைட்டமின் டி குறைபாடு எலும்புகளை வலுவிழக்கச் செய்கின்றது. வயதானவர்களுக்கு எலும்பு முறிவு எளிதாக ஏற்படவும் காரணமாகின்றது.

மேலும் இந்த வைட்டமின் டி குறைபாடானது, வைட்டமின் டி புற்றுநோய் செல் வளர்ச்சியை குறைக்கவும் உதவுகின்றது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றது. இவ்வளவு நன்மைகளை அளிக்கும் வைட்டமின் டி எதிலெல்லாம் உள்ளது தெரிந்துகொள்வோம்.

வைட்டமின் டி (Vitamin D) உணவுகள்

வைட்டமின் டி , டுனா, சார்டைன்ஸ், கார்ட்லிவர் ஆயில், காளான், இறால் போன்ற உணவுப்பொருட்களில் கிடைக்கிறது. பால் பொருட்களான செறிவூட்டப்பட்ட பால், தானியங்கள், ஓட்ஸ் , தயிர் மற்றும் செறிவூட்டப்பட்ட ஆரஞ்சு பழச்சாற்றில் காணப்படுகின்றது.

vitamin d foods

ஒரு கப் ஆரஞ்சுப் பழச்சாற்றில் உள்ள 100 யூனிட் வைட்டமின் டி தினசரி மதிப்பில் தேவையான அளவில் 12% க்கு சமமாக அளிக்கிறது.

வைட்டமின் டியில் இரண்டு வகைகள்

வைட்டமின் டி 2 எர்கோகால்சிபெரால் ergocal -ciferol என்றும் வைட்டமின் டி 3 கோலிகால்சிஃபெரால் Colecal – ciferol என்றும் சொல்லப்படுகிறது. இப்படி கல்லீரலிலும் சிறுநீரகத்திலும் செயல்பாட்டுக்கு பிறகு தான் வைட்டமின் டி உடலில் செயல்பட தொடங்குகிறது.

vitamin d types

வைட்டமின் டி தேவையெனில் உடலில் கால்சியமும் தேவைப்படுகிறது. இதுதான் உடல் வைட்டமின் டி உறிஞ்சுவதற்கு உதவுகிறது.

வைட்டமின் டி குறைபாடு ஏன் உண்டாகிறது?

சூரிய ஒளி குறைவான இடங்களில் அதிக நேரம் வேலை செய்வது, அளவுக்கதிகமான சன் ஸ்க்ரீன் பயன்பாடு மற்றும் அதிகளவு மெலனின் உற்பத்தியுள்ளவர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு ஏற்படுகின்றது.

உயரமான கட்டடங்களில் சூரிய ஒளி கிடைக்காத இடங்களில் அதிக நேரம் இருப்பதும் வைட்டமின் டி குறைபாட்டிற்கு வழிவகுக்கும். சிலர் உணவில் வைட்டமின் டி இல்லாமல் இருக்கலாம். அப்படியெனில் நாள் ஒன்றுக்கு வைட்டமின் டி அளவு எவ்வளவு தேவை.

யாருக்கு எவ்வளவு வைட்டமின் டி தேவை?

vitamin d recommendations

  1. 10 – 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு 400 சர்வதேச அலகுகளும்,
  2. 16 – 18 வயதுக்குட்பட்டவர்கள் 400-600 சர்வதேச அலகுகளும்,
  3. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 600- 800 சர்வதேச அலகுகளும் எடுத்துக்கொள்ளவேண்டும்.

குறிப்பாக மெனோபாஸ் பருவத்திலுள்ள பெண்களுக்கு எலும்புகள் பலவீனமடையாமலிருக்க வைட்டமின் டி அதிகம் தேவை.

வைட்டமின் டி (Vitamin D) குறைபாடுள்ளவர்களுக்கு மருத்துவர்கள் கூடுதல் மருந்துகளை பரிந்துரைப்பர். கால்சியம், வைட்டமின் டி 2 மற்றும் டி 3 பவுடராகவும் மாத்திரைகளாகவும் கிடைக்கின்றன. கால்சியம் மருந்துகளை தினமும் ஒரு முறை எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால் வைட்டமின் டி மருந்துகளை வாரத்திற்கு ஒரு முறையென 6-8 வாரங்களுக்கு மட்டுமே மருத்துவர்கள் பரிந்துரைப்பர். பிறகு வைட்டமின் டி அளவு கட்டுக்குள் வரத்தொடங்கும். ஆனால் அளவுக்கதிகமான வைட்டமின்கள் எடுத்துக்கொள்ளவது ஹைப்பர்விட்டமினோஸிஸ்கு வழிவகுக்கும்.

மருத்தவர்களின் பரிந்துரையின்றி வைட்டமின் டி அதிகளவு எடுத்துக்கொண்டால் சிறுநீரகம், இதயம், மற்றும் எலும்புகளில் பாதிப்பு ஏற்படலாம்.

vitamin d supplement

வைட்டமின் டி குறைபாடு அறிகுறிகள்!

அதிகப்படியான உடல் சோர்வு , வேலையில் கவனமின்மை, சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியாது. சாதாரணமாக கீழே விழுந்தாலும் எலும்பு முறிவு உண்டாவது. மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு எலும்புத்தேய்மானம் போன்றவை வைட்டமின் டி குறைப்பாட்டின் அறிகுறிகளாகும். மருத்துவர் பரிந்துரையின் கீழ் எடுக்கப்படும் இரத்தப்பரிசோதனை முடிவுகளின் மூலம் வைட்டமின் டி மற்றும் கால்சியம் அளவுகளை அறிந்து கொள்ள முடியும்.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!

எலும்புத்தேய்மானம் குறித்து அறிந்துகொள்ள எக்ஸ்-ரே எடுக்கலாம். ஆஸ்டியோபோரஸிஸ் போன்றவற்றையும் அறிய எக்ஸ்-ரே உதவுகிறது. இதன் மூலம் எலும்பு நன்றாக உள்ளதா, எலும்பு தேய்மானம் உள்ளதா என்பதை கண்டறியலாம். மருத்துவர் பரிந்துரையின் பேரில் மருந்து எடுத்துக்கொள்வதும் அளவுக்கதிகமான வைட்டமின் டி சுயமாக தொடர்ந்து எடுப்பதும் தவிர்ப்பது நல்லது.

Rate this post