வீட்டில் கர்ப்ப பரிசோதனை (Confirm Pregnancy at Home) செய்யலாமா?
ஆம் செய்யலாம், முன்னொரு காலத்தில் நம் முன்னோர்கள் கர்பத்தை கண்டறிய சில வீட்டு வைத்திய முறைகளையே கையாண்டு வந்தனர். அதன் வழிகளிலே இன்றும் பலர் தங்கள் வீடுகளிலே, வீட்டில் கர்ப்பத்தை உறுதி செய்வது (How To Confirm Pregnancy at Home Without Kit in Tamil) பழைய முறைகளை கையாளுகின்றனர்.
வாருங்கள் அவைகள் என்ன என்ன? எப்படி என்று பார்க்கலாம்!!!
கர்ப்பத்தை கண்டறிய வீட்டில் இருக்கும் சில பொருள்களைக் கொண்டே எளிமையாக கண்டுபிடிக்கலாம்.!
வீட்டில் கர்ப்பத்தை உறுதி செய்ய பரிசோதனை செய்யலாமா?
வீட்டில் தாராளமாக கர்ப்ப பரிசோதனை (Confirm Pregnancy at Home) செய்யலாம். நம் வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே கர்ப்ப பரிசோதனை செய்யலாம். பெண்கள் மாதவிடாய் எதிர்நோக்கும் நேரங்களில் மாதவிடாய் ஆகவில்லை என்றால் அந்த நாளில் துவங்கி குறிப்பிட்ட நாட்களுக்குள் நீங்கள் உங்கள் கர்ப்ப பரிசோதனையைச் செய்து கொள்ளலாம். அந்த பரிசோதனையில் நீங்கள் கர்பம் தரித்திருக்கிறீர்கள் என்றால் உடனடியாக மருத்துவரை அணுகி அதை ஊர்ஜிதப்படுத்திக்கொள்வது அவசியமாகிறது.
கரு பதியும் அறிகுறிகள் தெரிந்து கொள்ளுவது எப்படி?
கருத்தரித்தலின் போது விந்தணுவும் முட்டையும் இணைந்த பிறகு இணைந்த செல்கள் மிக விரைவாக பெருகி, உங்கள் ஃபலோபியன் குழாய்களில் ஒன்றின் வழியாக உங்கள் கருப்பைக்கு நகரும். வேகமாக வளரும் உயிரணுக்களின் இந்த கொத்து பிளாஸ்டோசிஸ்ட் என்று அழைக்கப்படுகிறது.

உங்கள் கருப்பையில் ஒருமுறை, இந்த சிறிய செல்களை கருப்பை சுவரில் பொருத்த வேண்டும். இதனை கருபதித்தல் என்று அழைக்கப்படுகிறது.
இதில் இணைந்த கர்ப்ப ஹார்மோன்கள் (ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் hCG, அல்லது மனித கோரியானிக் கோனாடோட்ரோபின்) உயரும் அளவைத் தூண்டுகிறது.
கருபதித்தல் ஏற்பட்டுள்ளதை உங்கள் உடல் சுட்டிக்காட்டலாம். உதாரணமாக, சிலருக்கு அடிவயிற்று வலியும் ஏற்படுகின்றது, மேலும் இந்த அறிகுறிகள் கருபதித்ததின் தொடர்புடையதாக இருக்கலாம் என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.
இம்ப்ளாண்டேஷனின் மிகவும் பொதுவான அறிகுறிகள் மற்றும் கருத்தரித்தல் பற்றி அவை உங்களுக்கு என்ன சொல்கிறது என்பதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்.
இரத்தப்போக்கு
கருத்தரித்த பின்பு 14 நாட்களுக்குள் இரத்தப்போக்கு வரலாம். இது கருபதித்ததினால் கூட வரலாம் எங்கின்றனர்.

அடிவயிற்று வலி
கருபதித்தலை உங்களால் உணர முடியுமா?
அதற்கான பதில் உங்களிடம் இல்லை என்றாலும், கருவுற்ற முட்டை கருப்பையில் தங்கும் போது சிலருக்கு சிறு வலிகள் ஏற்படலாம்.
வலிகள் பெரும்பாலும் எப்படி இருக்கும் என்றால் கருபதிவின் போது வரும் இரத்தப்போக்கு மாதவிடாய் வலிகள் போன்றே ஏற்படும். அந்த வலி உங்கள் அடிவயிற்றில் இறங்கி கீழ் முதுகில் வந்து செல்வது போல் இருக்கும்..
வீட்டில் கர்ப்ப பரிசோதனை (Confirm Pregnancy at Home) செய்யும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்
நீங்கள் உங்கள் வீட்டில் கர்ப்ப பரிசோதனை (Confirm Pregnancy at Home) செய்ய நினைப்பதற்கு முன்னதாவே நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்;
காலை எழுந்தவுடன் உங்களுக்கு வரும் முதல் சிறுநீரில் தான் பரிசோதனை செய்யபட வேண்டும். இது உங்களுக்குத் துல்லியமான தகவல்களையே தரும்.
நீங்கள் பயன்படுத்தும் கர்ப்ப பரிசோதனை கருவி பழுதடைந்து இருந்தாலோ அல்லது சேதம் அடைந்திருந்தாலோ கூட சரியான தகவல்களைத் தராது. அதனால் இரண்டு நாட்கள் கழித்தோ அல்லது மூன்று நாட்கள் கழித்து கூட நீங்கள் இந்த பரிசோதனையைச் செய்து உண்மையை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். சில நேரங்களில் அதில் மாற்றம் கூட ஏற்படலாம்.
அதனால் அவசரப்படாமல் நிதானமாக இருந்து எந்த ஒரு முடிவுக்கும் வராமல் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றுச் சரியான ஒரு வீட்டுப் பரிசோதனை முறையை நீங்கள் தேர்ந்தெடுத்து முயற்சி செய்து பார்க்கலாம்.
அப்படிச் செய்யும் போது உங்களுக்கு சரியான தகவல் கிடைப்பதற்கே அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் நீங்கள் பயன்படுத்தும் கருவியை எப்படிச் சரியாகப் பயன்படுத்துவது என்பதைப் பற்றி தகவல்களை அறிய அந்த ப்ரக்னன்சி கிட்டில் (Pregnancy Kit) இருக்கும் குறிப்பைப் படித்துத் தெரிந்து கொண்ட பின் பயன்படுத்துவது நல்லது .
நீங்கள் மேற்கொண்ட முதல் பரிசோதனையில் கர்பம் இல்லை என்று வந்துவிட்டால் உடனே சோர்வடையாமல் மீண்டும் ஒருமுறை ஒரு சில நாட்கள் கழித்து முயற்சி செய்து பார்க்கவும்.
சோதனைப் பட்டை (டெஸ்ட் ஸ்ட்ரிப்) என்பது அனைவரும் எளிதாக வீட்டில் கர்ப்ப பரிசோதனை செய்து கொள்ள மிகவும் உதவும் கருவியாகும். இது சதாரணமாக அருகில் இருக்கும் மருந்து கடைகளிலே கிடைக்கும்.
பொதுவாக பெண்கள் பலரும் கர்ப்பமாக இருப்பதை கண்டறிய மருந்தகத்தில் கிடைக்கும் ப்ரக்னன்சி கிட்டையே (Pregnancy Kit) நாடுவர். ஆனால், இயற்கை முறையில் கூட கர்ப்பமாக இருப்பதைக் கண்டறிய முடியும் ஆம், வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே கர்ப்பத்தைக் கண்டறிய முடியும். அதனைப் பற்றிய அடிப்படை வழிமுறைகளை தெரிந்து கொள்வோம்
வீட்டில் கர்ப்ப பரிசோதனைகள் – How To Confirm Pregnancy at Home Without Kit in Tamil
உப்பு – கர்ப்ப பரிசோதனை
கர்ப்ப பரிசோதனை உப்பைக் வைத்து வீட்டிலேயே செய்ய முடியும். காலையில் எழுந்தவுடன் வெளியேறும் சிறுநீர் மாதிரியை எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு எடுத்து வைத்த மாதிரி சிறுநீரில் ஒரு சிட்டிகை அல்லது இரண்டு சிட்டிகை உப்பு சேர்த்து மூன்று நிமிடங்கள் வரை காத்திருங்கள்.

நீங்கள் கர்ப்பம் தரித்திருந்தால் இருந்தால் நீங்கள் கலந்த உப்பு சிறுநீரில் சேர்ந்து வெள்ளை நிறத்தில் முத்துகள் போன்று உருவாகியிருக்கும். அப்படி எதுவும் மாறவில்லை என்றால் நீங்கள் கர்ப்பமாக இல்லை என்றே அர்த்தம்.
சர்க்கரை – கர்ப்ப பரிசோதனை
சர்க்கரை கர்ப்ப பரிசோதனையை செய்ய உங்களின் சிறுநீர் மாதிரியை எடுத்து சர்க்கரை மேல் ஊற்றவும். அதனைத் தொடர்ந்து சர்க்கரை கட்டிகள் உருவாக ஆரம்பித்தால் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். அதில் சர்க்கரை வேகமாக கரைந்தால் நீங்கள் கர்ப்பமாக இல்லை என்று அர்த்தம்.

ஏனெனில் நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது வெளிவரும் எச்சிஜி (HCG) ஹார்மோன் சர்க்கரையை எளிதாக கரைய விடாது. இதன் மூலம் நாம் நம் பரிசோதனையினை பூர்த்தி செய்யலாம்.
சிறுநீர் கர்ப்ப பரிசோதனை
சிறுநீரைக் கொண்டு மட்டுமே வீட்டில் கர்ப்ப பரிசோதனை செய்து கொள்ளலாம். கண்ணாடிக் பாட்டிலில் சிறுநீர் மாதிரியை சேமித்து சுமார் ஒரு நாள் முழுவதும் அதாவது 24 மணி நேரம் வரை அப்படியே வைத்து விடுங்கள்.

பின்னர் சேமிக்கப்பட்ட சிறுநீர் மாதிரியின் மேற்பரப்பில் ஒரு மெலிதான அடுக்கு உருவாகியிருந்தால் நீநள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இல்லையென்றால் நீங்கள் இன்னும் கர்ப்பமாகவில்லை என்று அர்த்தம்.
ஒயின் கர்ப்ப பரிசோதனை
ஒயினை வைத்துக் கூட வீட்டிலே எளிமையாக கர்ப்ப பரிசோதனைகளில் ஈடுபடலாம். ஒரு பாட்டிலில் சிறுநீரையும் ஒயினையும் சம அளவில் கலந்து கொள்ளுங்கள்.
அதைத் தொடர்ந்து ஒயினின் நிறம் மாறினால் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஒயினின் நிறம் மாறாது அதே நிலையில் இருந்தால் நீங்கள் இன்னும் கர்ப்பமாகவில்லை என்று அர்த்தம்.
உடல் வெப்பநிலை கர்ப்ப பரிசோதனை
நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது, உங்கள் உடலின் வெப்பநிலை சாதரணமாக இருக்கும்போது இருப்பதை விட சற்று அதிகமாகவே இருக்கும். உங்கள் கர்ப்ப நிலையை வீட்டிலேயே சரிபார்க்க இந்த சோதனையும் உதவியாக இருக்கும்.

உங்கள் நாக்கில் அடிப்பகுதியில் ஒரு தெர்மோமீட்டரை சில விநாடிகள் வைக்கவும். இதனை நீங்கள் காலையில் எழுந்தவுடன் செய்வது தான் நல்லது. அப்போது உங்கள் உடலின் வெப்பநிலை 37° செல்சியஸ்(98.6° பாரன்ஹீட்) ஆக இருந்தால் நீங்கள் கர்ப்பமாக உள்ளீர்கள் என்று அர்த்தம். ஆனால், அதை விட குறைவான வெப்பநிலை இருந்தால் நீங்கள் கர்ப்பமாகவில்லை என்பதாகும்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
என்னதான் வீட்டில் நாம் பல பரிசோதனைகள் செய்தாலும் பரிசோதனையின் முடிவில் நாம் மருத்துவரை அணுகி அது சரியானதா என்பதனை நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமே. சில நேரங்களில் நாம் வீட்டில் செய்யப்படும் பரிசோதனைகள் கூட சரிவர வெற்றியைத் தராது. அதனால், தொடர்ந்து மகப்பேறு மருத்துவர் பரிந்துரைக்கும் சோதனைகளை மேற்கொண்டு நல்ல முடிவுகளை எதிர்நோக்குங்கள்.