கர்ப்ப காலத்தில் அதிக உடல் வெப்பநிலை (High Body Temperature During Pregnancy in tamil) இருக்க என்ன காரணம்?
கர்ப்ப காலத்தில் உடல் வெப்பநிலை என்பது குறித்து கர்ப்பிணிகள் தெரிந்துகொள்வது அவசியம். கர்ப்பிணிகளின் வெப்பமான உடல் என்பது எதிர்மறையாக இருக்கும்.
கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதங்கள் இருப்பவர்களுக்கு உடல் வெப்பநிலை என்பது பெரிய பிரச்சனை என்றே சொல்லலாம். ஏனெனில் இவை கருச்சிதைவை உண்டாக்கிவிடவும் வாய்ப்புண்டு. கர்ப்ப காலத்தில் வெப்பநிலை என்பது அதிகரிக்கும் பட்சத்தில் அது முக்கிய புரதங்களின் வளர்ச்சியை சீர்குலைக்கும்.
கர்ப்ப கால உடல் சூடு கொண்டிருக்கும் போது அது மூளை மற்றும் முதுகெலும்பு நெடுவரிசை உருவாவதை சீர்குலைக்க செய்யும். குழந்தை பிறப்பு குறைபாடுகளை உண்டாக்கவும் வாய்ப்புண்டு.
பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் உடல் வெப்பநிலையை 102.2 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உயரகூடாது என்று எச்சரிக்கிறது அமெரிக்கா மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் கல்லூரி பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மருத்துவ ஆராய்ச்சி பொறுத்தவரை கர்ப்பிணியின் உடல் வெப்பநிலை 102 டிகிரிக்கு மேல் இருந்தால் அது குழந்தைக்கு ஆபத்தை உண்டாக்கும் என்று தெரிவிக்கிறது.
கர்ப்ப காலத்தில் வெப்பநிலை உயர்வது இயல்பானது. ஆனால் இந்த வெப்பநிலை அளவாகவே இருக்கும் என்பதும் கவனிக்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு மூன்று மாதகட்டத்திலும் வெப்பநிலை உயரக்கூடும். கர்ப்பிணிகள் தங்கள் சருமத்தை தொட்டாலே சருமத்தின் சூட்டை உணர முடியும். சில நேரங்களில் உடலில் அதிக வியர்வை உண்டாக கூடும். குறிப்பாக இரவு நேரங்களில் அதிக வியர்வையை உணரலாம்.
கருவுற்ற தொடக்கத்தில் ஹார்மோன்கள் சுரப்பு உடலை சீராக வைத்திருக்க உதவக்கூடியவை. இவை கர்ப்பிணியின் உடல் வெப்பநிலையை சிறிய அளவு உயர்த்தும். பிறகு உடல் படிப்படியாக கருவின் வளர்ச்சி அதிகரிக்கும் போது இன்னும் பல மாற்றங்களை சந்திக்கிறது. கருவின் வளர்ச்சிக்கு ஆக்ஸிஜனை எடுத்துசெல்லும் ரத்தம் தேவைப்படும்.
கருவுற்ற இரண்டாம் மாதத்தில் இதயம் 20 சதவீதம் இரத்தத்தை வேகமாக செலுத்துகிறது. இதய துடிப்பு வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. இதனால் கர்ப்பிணியின் வெப்பநிலை சற்று அதிகரிக்க கூடும். கர்ப்பத்தின் 34 வாரத்தில் கர்ப்பிணியின் இரத்த அளவு 50% வரை அதிகரிக்க கூடும். இதயம் வழக்கத்தை காட்டிலும் கடினமாக உழைக்க கூடும்.

இரத்தம் வேகமாக செல்ல உடல் முழுவதும் இரத்த நாளங்கள் விரிவடைகிறது. சருமத்துக்கு அருகில் இருக்கும் நாளங்களும் உண்டு. இவையும் வெப்பநிலையை உயர்த்தி காண்பிக்கிறது.
மூன்றாவது ட்ரைமெஸ்டர் மாதங்களில் வயிற்றில் குழந்தையின் வளர்ச்சி அதிகரித்திருக்கும். இந்த நிலையில் குழந்தையின் உடல் வெப்பநிலையும் இணைந்து தாயின் உடல் வெப்பநிலையை உயர்த்தும். மேலும் உங்கள் வயிற்றில் இரண்டு குழந்தைகள் இருந்தால் தாயின் உடல் வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க கூடும் (High Body Temperature During Pregnancy in tamil).
இந்நிலையில் கர்ப்பிணி அதிக வெப்பநிலை (High Body Temperature During Pregnancy in tamil) கொண்டிருந்தால் குளியலறையில் சூடான பாத்டப்பில் குளிக்காமல் இருப்பது நல்லது என்கிறார்கள் நிபுணர்கள்.

பல கர்ப்பிணிகள் உடலுக்கு நன்றாக இருக்கிறது என்று சற்று சூடான வெந்நீரில் மூழ்கி இருக்க விரும்புவார்கள். இது கர்ப்பிணியின் உடலுக்கு அந்த நேரத்தில் இதமாக இருக்கும்.
சில கர்ப்பிணிகள் தசைவலி இருக்கும் போது வெப்பமூட்டும் பொருள்களை வைத்து ஒத்தடம் கொடுக்கும் போது அது தசைவலியை குறைக்க கூடும்.
இதை எப்போதாவது பயன்படுத்தலாம். ஆனால் அடிக்கடி பயன்படுத்துவதன் மூலம் அல்லது வயிற்றுக்கு அருகில் பயன்படுத்தும் போது குழந்தைக்கு நேரடியாக வெப்பநிலை தாக்க கூடும். அதனால் வெப்பமூட்டும் பொருள்களை வயிற்றுக்கு அருகில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
கர்ப்பக் காலத்தில் தசைவலி அதிகமாக இருக்கும் போது சூடு ஒத்தடம் கொடுக்கும் போது நேரடியாக சருமத்தின் மீது வைக்காமல் நடுவில் ஒரு துண்டு வைத்து அதன் மேல் ஒரு துணியை பயன்படுத்தி வைக்கும் போது வெப்பநிலை அதிகரிக்காது. அதே போன்று தூங்கும் போது இதை பயன்படுத்தவே கூடாது.
அதே போன்று கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் கடுமையான உடற்பயிற்சி செய்தாலும் வெப்பநிலை அதிகரிக்கலாம் (High Body Temperature During Pregnancy in tamil). இந்த நாட்களில் உடலை குளிர்விக்க முயற்சிக்க வேண்டும்.
நல்ல காற்றோட்டமான இடத்தில் தூங்குவதை உறுதி செய்ய வேண்டும். ஒருவேளை அதிகமான வெப்பநிலை தொடர்ந்து இருந்தால் அது நோய்த்தொற்றின் அறிகுறியாக இருக்கலாம். இது குழந்தைக்கு தீங்கு விளைவிக்க கூடும். அதனால் இதை கவனிப்பது அவசியம்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
கர்ப்ப காலத்தில் வெப்பநிலை (High Body Temperature During Pregnancy in tamil) தடுக்க முடியுமா?
கர்ப்ப காலத்தில் வெப்பநிலை அதிகரிக்காமல் இருக்க சற்று முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம். தலையில் வெயில் படும்படி குறிப்பாக உச்சந்தலையில் வெயில் படக்கூடாது. அதனால் வெளியில் செல்லும் போது குடை பிடித்து செல்வது அல்லது தலைக்கு தொப்பி அணிந்து செல்வது அவசியம்.

உடலில் நீர்ச்சத்து குறைந்தால் வெப்பநிலை அதிகரிக்க கூடும் (High Body Temperature During Pregnancy in tamil). அதனால் எப்போதும் தண்ணீர் பாட்டிலை கையில் வைத்திருங்கள். சுத்தமான துணியை நனைத்து வைத்திருங்கள். அதை அவ்வபோது சருமத்தில் துடைக்க பயன்படுத்துங்கள்.
ஆடைகளிலும் கவனமாக இருக்க வேண்டும். தளர்வான ஆடைகளை அணிய கூடாது. பருத்தி போன்ற காற்றோட்டம் தரும் ஆடைகள் அணிவது அவசியம். சருமம் எப்போதும் நேரடியாக வெயிலில் பட கூடாது என்பதையும் கவனத்தில் வையுங்கள்.
கர்ப்ப காலத்தில் இயற்கையாக வெப்பநிலை அதிகரிக்க கூடும் என்றாலும் அதை அதிகப்படுத்தும் வேலைகளை தவிர்த்து விடுவதே பாதுகாப்பானது