கர்ப்ப கால உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure in Pregnancy in tamil) என்பது கர்ப்ப காலத்தில் அதாவது 20 வாரங்களுக்கு பிறகு தொடங்கும்.
இரத்த அழுத்தம் 140/90 ஐ விட அதிகமாகவோ அல்லது சமமாகவோ இருக்கலாம். உயர் இரத்த அழுத்தத்தை அளவிடும் மேல் இருக்கும் அளவானது சிஸ்டோலிக் என்றும் கீழிருக்கும் அளவானது டயஸ்டோலிக் என்றும் அழைக்கப்படுகிறது.
சிஸ்டோல் என்பது 100 க்கு மேல் இருக்கும். டயஸ்டோல் 90க்கு மேல் போக கூடாது. அப்படி மாறுபடும் போது அது உயர் இரத்த அழுத்தத்தை உண்டு செய்யலாம்.
கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure in Pregnancy in tamil) உங்கள் உடலை சாதாரணமாகவோ அல்லது வெவ்வேறு வழிகளிலோ பாதிக்கலாம். உயர் இரத்த அழுத்தம் நிர்வகிக்கப்படாவிட்டால், கருவுக்கு சிக்கல் ஏற்படும் அபாயம் உண்டு என்பதால் கர்ப்பிணிகள் உயர் இரத்த அழுத்தம் குறித்து எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்தம் என்பது இரத்த நாளங்களின் சுவர்களுக்கு எதிராக இரத்த ஓட்டத்தை அழுத்தும் நிலை. இது அளவீடு முறையில் கணிக்கப்படுகிறது. இரத்த நாளங்களின் சுவர்களுக்கு எதிரான இந்த அழுத்தம் சாதாரண வரம்பிற்கு மேல் உள்ளது என்று வரையறுக்கப்படுகிறது.

கர்ப்பம் தொடர்பான உயர் இரத்த அழுத்தம் என்பது 5 முதல் 6 மாதங்களில் தொடங்கும். குழந்தை பிறந்த பிறகு சிறிது நேரத்தில் இவை குணமாக கூடும். உயர் இரத்த அழுத்தமானது 6 முதல் 8% கர்ப்பங்களில் நிகழ்கிறது.
கர்ப்பகாலத்தில் உயர் இரத்த அழுத்தம் ஆனது தூண்டப்பட்ட உயர் இரத்த அழுத்தம் என்று அழைக்கப்படுகிறது.
எனினும் இது பொதுவான உயர் இரத்த அழுத்தம் கிடையாது. இது மற்ற வகை உயர் இரத்த அழுத்தத்தை விட வேறுபட்டது. ஏனெனில் இது கர்ப்பத்தின் இரண்டாம் பாதியில் தொடங்கி பிரசவத்துக்கு பிறகு மறைந்து விடும்.
இந்த இரத்த அழுத்தமானது எந்த குறிப்பிடத்தக்க அறிகுறிகளையும் உண்டு செய்யாது. அதனால் ஒவ்வொரு முறை மருத்துவ சந்திப்பின் போதும் உங்கள் இரத்த அழுத்தம் குறித்த பரிசோதனை அவசியமானது.
ஏனெனில் இந்த உயர் ரத்த அழுத்தம் அதிக சிக்கல்களை உண்டு செய்யும். அதனால் மருத்துவர் கருவையும் நெருக்கமாக கண்காணிப்பார்கள். கர்ப்பத்தின் எஞ்சிய காலத்துக்கு இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த சிகிச்சை செய்வார்.
உயர் இரத்த அழுத்தமும் கர்ப்பகால இரத்த அழுத்தமும் (High Blood Pressure in Pregnancy in tamil)எப்படி வேறுபடுகிறது?
கர்ப்ப காலத்தில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure in Pregnancy in tamil)மற்றவர்களை விட வித்தியாசமாக பாதிக்கிறது.
கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகளின் இதயம் அதிகமாக கருவுக்கும் போதுமான இரத்த ஓட்டம் நிவர்த்தி செய்கிறது. இதனால் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
இந்த கர்ப்பகால உயர் இரத்த அழுத்தம் நஞ்சுக்கொடி உண்டாவது மற்றும் அதன் செயல்பாடு இரண்டையும் பாதிக்கலாம். இதனால் கரு சாதாரண விகிதத்தில் வளர தேவையான ஊட்டச்சத்துக்களை பெறமுடியாமல் போகலாம்.
உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் பிரசவத்துக்கு முன் பிரசவத்தின் போது மற்றும் பிரசவத்துக்கு பிறகு உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால் அது சிக்கல்களை அபாயத்தை உண்டு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்த (High Blood Pressure in Pregnancy in tamil) நிலைகள்
கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தத்தில் (High Blood Pressure in Pregnancy in tamil) பல்வேறு வகைகள் உள்ளன. அது எப்போது தொடங்குகிறதோ அதை பொறுத்து அதன் அறிகுறிகள் மாறுபடலாம்.
நாள்பட்ட உயர் இரத்த அழுத்தம்: இது கர்ப்பத்துக்கு முன் அல்லது கர்ப்பத்தின் ஆரம்பத்தில் உயர் இரத்த அழுத்தம் உண்டாகலாம். இந்த வகை உயர் இரத்த அழுத்தம் குழந்தை பிறந்த பிறகும் தொடரும்.
நாள்பட்ட உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் ப்ரீக்ளாம்ப்சியாவையும் எதிர்கொள்ளலாம். இது மிகைப்படுத்தப்பட்ட ப்ரீக்ளாம்ப்சியாவுடன் நாள்பட்ட உயர் இரத்த அழுத்தம் என்று அழைக்கப்படுகிறது.
கர்ப்ப கால உயர் இரத்த அழுத்தம் : இது கர்ப்பத்தின் பிற்பகுதியில் உண்டாகும் உயர் இரத்த அழுத்தம். கர்ப்பகால உயர் இரத்த அழுத்தம் உள்ள சிலருக்கு ப்ரீக்ளாம்ப்சியா உருவாகும். கர்ப்பகால உயர் இரத்த அழுத்தத்தை உருவாக்கினால் நீங்க அடிக்கடி உங்கள் இரத்த அழுத்தத்தை பரிசோதிக்க வேண்டும்.
ப்ரிக்ளாம்ப்சியா: கர்ப்பத்தின் இரண்டாம் பாதியில் மட்டுமே இருக்கும் நிலை இது. இது கர்ப்பத்தின் 27 வாரங்களுக்கு பிறகு உண்டாகும்.
சிறுநீர் கழிக்கும் போது இரத்த அழுத்த அளவீடுகள் மற்றும் புரதம் அதிகரித்திருந்தால் மருத்துவர் கூடுதல் கவனம் எடுத்து உங்களை கண்டறிவார்.
ஏனெனில் இந்த ப்ரீக்ளாம்ப்சியா கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல் அல்லது மூளை மற்றும் நஞ்சுக்கொடியை பாதிக்க செய்யலாம்.
இது அதிகரித்து மூளையை பாதிக்கும் போது வலிப்புத்தாக்கங்கள் அதாவது எக்ளாம்ப்சியா ஏற்படும் அபாயம் உள்ளது.
கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure in Pregnancy in tamil) அபாயம் யாருக்கு?
கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தத்தை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் யாருக்கு அதிகம் என்பதும் அறிய வேண்டும்.
20 வயதுக்கு உட்பட்டவர்கள் அல்லது 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உயர் இரத்த அழுத்த அபாயம் உண்டாகலாம்.
கடந்த கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தம் அல்லது ப்ரீக்ளாம்ப்சியா இருந்திருக்கலாம். கர்ப்பகால உயர் இரத்த அழுத்த வரலாறு கொண்ட குடும்பத்திலிருந்து கொண்டிருக்கலாம்.
நீரிழிவு அல்லது கர்ப்பகால நீரிழிவு உள்ளவர்களுக்கு கர்ப்பகால உயர் இரத்த அழுத்தம் வரலாம்.
லூபஸ் போன்ற நோய் எதிர்ப்பு அமைப்பு கோளாறு உள்ளவர்கள் , சிறுநீரக நோய் கொண்டிருப்பவர்கள், பல குழந்தைகளை சுமப்பவர்கள் அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் சுமப்பவர்கள் இந்த உயர் இரத்த அழுத்த அபாயத்தை உருவாக்கும் வாய்ப்பை கொண்டிருப்பார்கள்.
கர்ப்பகால உயர் இரத்த அழுத்தமும் ப்ரீக்ளாம்ப்சியாவும் ஒன்றா?
கர்ப்பகால உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure During Pregnancy in tamil) என்பது கர்ப்பத்தின் பிற்பகுதியில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தமாகும். இது சிறுநீரகத்தை பாதிக்காது.
அல்லது சிறுநீரில் புரதத்தை ஏற்படுத்தாது. இந்த நிலை ப்ரீக்ளாம்ப்சியாவுக்கு முன்னேறலாம். அதனால் உங்கள் மருத்துவர் கர்ப்பத்தை அடிக்கடி கண்காணிக்க செய்யலாம்.
ப்ரீக்ளாம்ப்சியா என்பது உயர் இரத்த அழுத்தத்தின் தீவிர வடிவமாகும். இது கர்ப்பத்தின் பிற்பகுதியில் உண்டாகிறது.
சிகிச்சையளிக்கப்படாத நிலையில் ப்ரீக்ளாம்ப்சியா சிறுநீரகம், கல்லீரல் மற்றும் மூளை பாதிப்பு போன்ற கடுமையான உடல்நல பிரச்சனைகளை உண்டு செய்யும். இந்த ப்ரீக்ளாம்ப்சியாவானது கருவின் வளர்ச்சியில் சிக்கல்களை உண்டு செய்யலாம்.
இது பிரசவத்தின் அபாயத்தை அதிகரிக்க செய்யும்.
கர்ப்ப கால உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure in Pregnancy in tamil)எதனால் ஏற்படுகிறது?
கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure in Pregnancy in tamil) ஏற்படுவதற்கான காரணங்கள் துல்லியமாக கண்டறியப்படவில்லை. சில நிபந்தனைகள் அல்லது காரணிகள் உங்கள் ஆபத்தை அதிகரிக்கலாம்.
உயர் இரத்த அழுத்தம் அமைதியாக இருந்து கொல்லும் கொலையாளி என்று அழைக்கப்படுகிறது. அதனால் தான் பெரும்பாலான கர்ப்பிணிகள் உயர் இரத்த அழுத்தம் இருப்பதை கவனிப்பதில்லை. கர்ப்பிணிகளுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால் அறிகுறிகள் இப்படியாக வெளிப்படலாம்.
- வீக்கம் (எடிமா)
- தலைவலி
- திடீர் எடை அதிகரிப்பு
- குமட்டல் உணர்வு அல்லது அதிக வாந்தி
- சிறுநீர் வெளியேற்றம் குறைவாக இருப்பது
- பார்வையில் மாற்றங்கள்
- வயிற்றில் வலி (வயிறு)
கர்ப்ப கால உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure in Pregnancy in tamil) ஆபத்துகள் என்னென்ன?
கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தத்தில் அனைவருக்கும் சிக்கல்கள் உண்டாகாது. எனினும் உயர் இரத்த அழுத்தத்தால் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

- வலிப்பு தாக்கங்கள்
- பக்கவாதம்
- தற்காலிக சிறுநீரக செயலிழப்பு
- கல்லீரல் பிரச்சனைகள்
- இரத்தம் உறைதல் பிரச்சனைகள் உண்டாகலாம். உயர் இரத்த அழுத்தம் தீவிரமாக இருந்தால் பிரசவம் சுகமாக இருப்பதை காட்டிலும் சி- பிரிவு ஏற்பட வாய்ப்புண்டு.
குழந்தையை பொறுத்தவரை கர்ப்பகாலத்தில் உயர் இரத்த அழுத்தம் நஞ்சுக்கொடி வழியாக கருவுக்கு உணவு மற்றும் ஆக்ஸிஜன் செல்வதை எடுத்து செல்லும் இரத்த வழங்கலை தடுக்க செய்யலாம். இதனால் வயிற்றில் வளரும் கருவுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படலாம்.
குறைந்த பிறப்பு எடை அல்லது கருப்பையக வளர்ச்சி கட்டுப்பாடு, குறைந்த எடை கொண்ட குழந்தை, முன்கூட்டிய பிறப்பு அபாயம், குழந்தை இறந்து பிறப்பது, குழந்தை வளர்ச்சிக்குள் பிரசவத்தை தூண்டுவது போன்றவை உண்டாகலாம். இந்த நிலை மிகவும் கடுமையானது. சில நேரங்களில் தீவிர சிக்கல்களை உருவாக்கும் ஆபத்தையும் உண்டு செய்யும்.
கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure in Pregnancy in tamil)எப்படி கண்டறியப்படுகிறது?
கர்ப்பிணிகள் மருத்துவரை சந்திக்கும் போது இரத்த அழுத்த பரிசோதனை செய்வது வழக்கம். அப்போது வழக்கமான இரத்த அழுத்த அளவீடுகளில் ஏதேனும் மாற்றங்களை கண்டால் அல்லது இயல்பை விட அதிகமான அளவீடுகளை பெற்றால் உயர் இரத்த அழுத்தம் இருப்பதாக சந்தேகிக்கலாம்.
இரத்த அழுத்தம் சீராகவில்லை என்றால் உங்கள் வழங்குநர் கூடுதல் சோதனைகள் செய்ய அறிவுறுத்துவார்.
மேலும் புரதம் உள்ளதா என கண்டறிய சிறுநீர் பரிசோதனை, கல்லீரல் வீக்கம் உண்டா என்பதற்கான பரிசோதனை மற்றும் இரத்தம் உறைதல் காரணிகளை கண்டறிய இந்த பரிசோதனைகள் செய்யவும்.
கர்ப்ப கால உயர் இரத்த அழுத்தத்துக்கான சிகிச்சை?
கர்ப்ப கால உயர் இரத்த அழுத்துக்கு (High Blood Pressure in Pregnancy in tamil) பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகிண்றன சிகிச்சை நிலையின் தீவிரம், ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் கர்ப்பகாலத்தில் எந்த மாதத்தில் இருக்கிறீர்கள் என்பதை பொறுத்து சிகிச்சை வேறுபடும்.
இரத்த அழுத்தத்தை குறைக்க மருந்துகள் சரியாக எடுக்க வேண்டும். இரத்த அழுத்தத்தை குறைப்பது அது மோசமாகி சிக்கலை உண்டு செய்யாமல் தடுக்கும். மேலும் கருவின் வளர்ச்சி குறித்து அறிய சீரான இடைவெளியில் அல்ட்ராசவுண்ட், அழுத்தமற்ற சோதனை, டாப்ளர் அல்ட்ராசவுண்ட், போன்றவை செய்யப்படும்.
மேலும் கரு விரைவில் பிறக்கும் என்றால் நுரையீரல் முதிர்ச்சியடைய உதவும் ஸ்டீராய்டுகளை வழங்கலாம். இது குழந்தை பிறந்ததும் சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும் வாய்ப்பை குறைக்கிறது.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தம் தடுக்க முடியுமா?
கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தம் என்பது தடுப்பது கடினம். எனினும் அதை தடுக்க ஆரோக்கியமான எடையை பராமர்க்கவும், ஆரோக்கியமான உணவையும் எடுத்துகொள்ளுங்கள். உடைபயிற்சி செய்யுங்கள், யோகா அல்லது வேறு சில உடற்பயிற்சிகளை செய்யவும்.
மது, புகை பழக்கங்களை தவிர்க்கவும். உடல் ஓய்வு எடுக்க விரும்பினால் தவிர்க்காமல் ஓய்வு எடுங்கள். இது குறித்து மருத்துவரின் ஆலோசனை தேவையெனில் பெறுவதும் நல்லதே.