அதிக இரத்தபோக்கு (Heavy periods in Tamil) என்றால் என்ன? எதனால் உருவாகிறது?

3281
heavy menstrual bleeding

மாதவிடாய் கால அதிக இரத்தப்போக்கு (Heavy periods in Tamil)

ஒவ்வொரு பெண்ணின் பூப்படைந்த காலத்துக்கு பிறகு வரும் மாதவிடாய் சுழற்சி கவனிக்க வேண்டியவை. ஒவ்வொரு பெண்ணின் உடல் நிலைக்கேற்ப பல மாற்றங்களை இக்காலத்தில் சந்திப்பார்கள். வலி மிகுந்த மாதவிடாய், வலியற்ற மாதவிடாய் என இருந்தாலும் அதிக ரத்தபோக்கு குறித்த விழிப்புணர்வையும் அவசியம் கொண்டிருக்க வேண்டும்.

ஒவ்வொரு பெண்ணும் தங்கள் மாதவிடாய்க்காலம் இயல்பானதாகத்தான் இருக்கிறதா அல்லது அதிக உதிரபோக்கை வெளியேற்றுகிறதா என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் மாதவிடாய் காலத்தில் ஒரு பெண் சராசரியாக 30 முதல் 40 மில்லி லிட்டர் வரை ரத்தத்தை இழக்கிறார்கள். அதிக ரத்தபோக்கு உள்ள பெண்களாக இருந்தால் அவர்கள் ஏறத்தாழ 80 மில்லி லிட்டர் வரை உதிரபோக்கை கொண்டிருக்கிறார்கள்.

இந்த அதிகப்படியான உதிரபோக்கை சந்திக்கும் பெண்களுக்கு மெனரோஜியா என்னும் நிலை காரணமாக இருக்கலாம். இந்த நிலை பெண்ணுக்கு அதிக கனமான ரத்த போக்கை உண்டாக்குகிறது. இந்த அதிக உதிரபோக்கு இருக்கும் பெண்கள் இதை சமாளிக்க ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கூட நாப்கின், டேம்பன் மாற்றுகிறார்கள். சிலர் நாள் ஒன்றுக்கு 6 முதல் 7 நாப்கின்கள் வரை மாற்றுகிறார்கள். அது டேம்பனாக இருந்தாலும் கூட.

மாதவிடாய் சுழற்சி காலங்களில் இந்த அதிக ரத்தபோக்கு தொடரும் போது கடுமையான இரத்த சோகைக்கு ஆளாகிறார்கள் . இது கடுமையான தசை பிடிப்பு உண்டாக்கும். மேலும் இக்காலத்தில் உதிரபோக்கானது ரத்தக்கட்டிகளாகவும் வெளியேறக்கூடும்.

ஆனால் வெளியேறூம் உதிரபோக்கு அளவு அதிகமாகத்தான் இருக்கிறது என்பதை கணக்கிடுவது ஒவ்வொரு பெண்ணுக்கும் சவாலான விஷயம் தான். அதே நேரம் வழக்கமான காலத்தை காட்டிலும் மாதவிடாய் உதிரபோக்கு அதிகமாக இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது.

மாதவிடாய் கால அதிக இரத்தப்போக்கு (Heavy periods in Tamil) அறிகுறிகள்

  • ஒரு பெண் வழக்கத்தை காட்டிலும் அதிகமான நாப்கின் உபயோகிப்பது.
  • நாப்கினை மீறி வெளியேறும் உதிரபோக்கை சமாளிக்க ஒன்றுக்கு மேற்பட்ட நாப்கினை ஒரே நேரத்தில் பயன்படுத்துவது.
  • மாதவிடாய் நாட்கள் வழக்கத்தை காட்டிலும் நீண்டு இருப்பது.
  • வெளியேறும் உதிரபோக்கு ரத்தகட்டிகளாக இருப்பது
  • வழக்கத்தை காட்டிலும் அதிக சோர்வை உணர்வது
  • அன்றாட பணிகளையும் செய்ய முடியாத அளவுக்கு உடல் சோர்வு,
  • மூச்சுத்திணறல் உபாதை போன்றவை கடுமையான உதிரபோக்கை ரத்த சோகையை வெளிப்படுத்தும் அறிகுறிகள்.

அதிக இரத்தபோக்கு (Heavy periods in Tamil) காரணங்கள்

காரணங்கள் குறிப்பிட்டு ஒன்றை மட்டும் சொல்ல முடியாது. பல காரணங்கள் இருக்கலாம். இந்த அதிகப்படியான உதிரபோக்கு பெண்களுக்கு விட்டு விட்டும் வரலாம். அதிக இடைவெளியில் வரலாம். அல்லது தொடர்ந்தும் வரலாம். இளம் வயதில் இருப்பவர்களுக்கு என்ன காரணங்களால் அதிக ரத்தபோக்கு உண்டாகிறது என்பதை துல்லியமாக கண்டறிவது சிரமமானது ஆனால் பொதுவான காரணங்களாக சொல்லப்படுவது இதுதான்.

இளம்வயதில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு ஈஸ்ட்ரோஜனுக்கும், ப்ரொஜெஸ்டிரோனுக்கும் இடையில் உண்டாகும் இந்த ஹார்மோன் ஏற்றத்தாழ்வு அதிக மாதவிடாய் ரத்தபோக்கு உண்டாக்கும். இளம் பருவத்தில் பொதுவான மூன்று காரணங்களாக சொல்லப்படுவது கருப்பையின் செயலிழப்பு, மாதவிடாய் சுழற்சியின் போது இளம் பருவத்தினரின் உடல் அண்டவிடுப்பதில்லை இது ஒரு ஹார்மோன் பிரச்சனையை உண்டு செய்கிறது. இது அதிக உதிரபோக்கை உண்டாக்குகிறது.

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் என்னும் கருப்பை நோய்க்குறி இருந்தாலும் , இளம்பெண்கள் அதிக உடல்பருமனை கொண்டிருந்தாலும் அதிக உதிரபோக்கு உண்டாகலாம். மேலும் ஹைப்போதைராய்டிசம் தைராய்டு பிரச்சனைகள் இருந்தாலும் இந்த உதிரபோக்கு அதிகரிக்க வாய்ப்புண்டு.

வெகு அரிதாக பிளேட்லெட் கோளாறுகள் இருந்தாலும் இந்த நிலை உண்டாகலாம். பாலியல் உறுப்புகளில் சிக்கல்கள் இருந்தாலும் அது மாதவிடாய் போது அதிக சிக்கலை உண்டாக்கும். இது கர்ப்பப்பை புறணி பகுதியில் சிறிய தீங்கற்ற பாலிப்ஸ் என்னும் கட்டிகளை உண்டாக்கும். இது புற்றுநோய் கட்டிகள் அல்ல எனினும் இது அதிக உதிரபோக்கை உண்டாக்க கூடும். மாதவிடாய் நாட்களை நீடிக்க செய்யும்.

நார்த்திசுக்கட்டிகளை கர்ப்பபையில் உருவாக்கும் தீங்கற்ற கட்டிகளும் அதிக மாதவிடாய் ரத்தபோக்கை உண்டாக்கும். இளம் பருவத்தில் புற்றூநோய் அரிதானது. எனினும் மாதவிடாய் உதிரபோக்கு தொடர்ந்து அதிகரித்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது தான் சிறந்தது. பாதுகாப்பானது.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!

மருத்துவரை சந்திக்கும் போது இளம்பெண்ணின் பருவமடைந்த காலம் , அதற்கு பிந்தைய மாதவிடாய் சுழற்சி, சீரான சுழற்சி, உதிரபோக்கு வரலாறு, அதன் தன்மை, நீடித்த நாள் என அனைத்து வரலாறுகளும் கேட்கப்படும். மாதவிடாய் நாட்கள் சுழற்சியில் அதிக ரத்தபோக்கு இருக்கும் நாட்கள் இல்லாத நாட்களை கணிக்கும் படியும் கேட்கலாம்.

மேலும் மாதவிடாய் சுழற்சியின் பொது நாள் ஒன்றுக்கு எத்தனை நாப்கின்கள் வரை பயன்படுத்தப்பட்டது போன்ற விவரங்களும் கேட்கப்படும். பிறகு தேவையான உடல் பரிசோதனை இடுப்பு பரிசோதனை போன்றவையும் செய்யப்படும். மேலும் ரத்த பரிசோதனை, அல்ட்ராசவுண்ட் போன்ற சில கூடுதல் சோதனைகளும் தேவைப்படலாம்.

என்ன காரணத்தில் அதிக உதிரபோக்கு உண்டாகிறது என்பது கண்டறியப்பட்டால் இளம்பருவத்தினர் வயது . உடல்நலம், மாதவிடாய் வரலாறு போன்றவை கவனத்தில் கொள்ளப்பட்டு அதற்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது எதிர்காலத்தில் திருமணத்துக்கு பிந்தைய கர்ப்பம், மெனோபாஸ் போன்ற காலங்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க செய்கிறது.

5/5 - (22 votes)
டாக்டர். தீப்தி ஜம்மி (இயக்குனர், ஜம்மி ஸ்கேன்கள்) எம்.பி.பி.எஸ்., எம்.எஸ் (மகப்பேறு மற்றும் பெண்ணோயியல்) கரு மருத்துவத்தில் பிந்தைய முனைவர் பெல்லோஷிப் டாக்டர்.தீப்தி சர்வதேச மற்றும் தேசிய மாநாடுகளில் கரு மருத்துவத்தில் தங்கப் பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார், மேலும் பல மதிப்புமிக்க பிராந்திய இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி நேர்காணல்களில் தோன்றியுள்ளார்.