நம் வாழ்க்கையில் ஒரு முறையாவது Acid Reflux பிரச்சினையை எதிர்கொண்டிருப்போம். வளரும் சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவருமே ஏதாவது ஒரு நேரத்தில் நெஞ்சு எரிச்சல் உணர்ந்திருப்போம்.
குறிப்பாக கர்ப்ப காலத்தில் நெஞ்செரிச்சல் பிரச்சனை (Heartburn in Pregnancy in Tamil) கண்டிப்பாக இதை எதிர்கொள்வார்கள்.
எளிய முறையில் சொல்ல வேண்டுமென்றால் வயிறு எரிச்சல், நெஞ்சு எரிச்சல் போன்றவை தான் Acid Reflux வெளிப்பாடு ஏன் இது ஏற்படுகிறது? இது ஏற்படாமல் எளிய வழிகளில் தடுப்பது எப்படி? இதற்கு என்ன தீர்வு என்பது குறித்துதான் இந்த கட்டுரையில் பார்க்க போகிறோம்.
பொதுவாக செரிமான செயல்பாடு எப்படி நடக்கிறது?
செரிமான மண்டலத்தில் செரிமானப்பையில் துணை வகிக்ககூடிய உறுப்புகள் என்னென்ன என்பதை பார்க்க வேண்டும்.
அப்போதுதான் இந்த அமில எதிர்வினை என்று சொல்ல கூடிய Acid Reflux பிரச்சனை ஏன் ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

நாம் ஒரு உணவை எடுத்து கொள்ளும்போது வாய் வழியாக உள்ளே சென்று உணவுக்குழாய் வழியாக செல்கிறது. இதற்கு மருத்துவத்துறையில் ஈஸோபேகஸ் ( Esophagus) என்று அழைக்கப்படுகிறது.
இப்படி வாயிலிருந்து உணவு உணவுக்குழாய் வழியாக, வயிற்று பகுதியை அடைகிறது. அங்கிருந்து சிறுகுடல், பெருங்குடல் வழியாக சென்று செரிமானமாகி ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்பட்டு பெருங்குடல் வழியாக வெளியேறி மலக்குழாய் வழியாக மலமாக வெளியேறி விடுகிறது.
இந்த செரிமான செயல்பாட்டில் கல்லீரல் மற்றும் பித்தப்பைக்கும் முக்கிய பங்கு உண்டு. ஆனால், இதற்கு முன்பே உணவுக்குழாய் வழியாக வயிற்றை அடையும் உணவு உணவுகுழாய்க்கும் வயிற்றுக்கும் இடையில் உள்ள குறுகிய வளைவான Lower Esophageal Sphincter என்ற பகுதியை கடக்க நேரிடும்.
இந்த இடம் உணவுக்குழாயின் வால் போன்ற இறுதி பகுதியிலும் வயிற்றுபகுதி தொடங்கும் இடத்திலும் இருக்கும். இந்த இடம் இருக்கும் வளைவு எப்போதும் மூடி இருக்கும்.
சாப்பாடு வரும்போது மட்டும் சிறிது திறந்து உணவை வயிற்றுக்குள் செல்ல அனுமதிக்கும். சாப்பாடு முழுமையும் சென்றதும் அந்த பகுதி மூடிவிடும். இதுவே இயல்பான செரிமான செயல்பாட்டில் நடக்கும் பணி.
வயிற்று பகுதியில் உள்ள அமிலங்கள் என்ன செய்யும்?
வயிற்று பகுதியில் ஹைட்ரோ குளோரைடு அமிலம், என்சைம்கள், ஜீரணத்துக்கு உதவும் அமிலம், HCL அமிலம் ஆகியவை இருக்கும். இவைதான் சாப்பாட்டை செரிக்க உதவி செய்கின்றன.
இங்கு சத்துக்கள் எல்லாம் பிரித்தெடுக்கப்பட்டு செரிமானமாகி சிறுகுடல், பெருங்குடல் வழியாக வெளியேறி இறுதியில் தேவையற்ற சக்கைகள் மட்டும் கழிவாக வெளியேறி விடும்.
இப்படி தான் வயிற்றுப்பகுதி அதாவது Peristalsis விரிவடைந்து ரிலாக்ஸாக இருக்கும். இப்படிதான் செரிமான மண்டலம் உள்ளே நடக்கிறது.
நெஞ்செரிச்சல் (Acid Reflux) என்றால் என்ன?
செரிமான செயல்பாட்டின் இயல்பான வேலை என்ன என்பதை மேலே பார்த்தோம். உணவு உணவுக்குழாய் வழியாக பயணிக்கும் பாதையில் இருக்கும் Lower Esophageal Sphincter ஆனது எப்போதும் மூடி தான் இருக்க வேண்டும். உணவு நேரத்தில் மட்டும் திறந்திருக்க வேண்டும்.
இப்போது நீங்கள் நிறைய காரம் சாப்பிடுபவர்கள் என்றாலோ, அல்லது நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்து விட்டு திடீரென்று அதிகமாக சாப்பிடுபவராகவோ இருந்தால் அந்த நேரத்தில் உங்கள் வயிற்று பகுதிகளில் அதிக அமிலத்தை உருவாக்க வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தும்.
அப்படி நீண்ட காலமாக நீங்கள் செய்து வந்தால் அமிலங்கள் அதிகமாகி உங்கள் உணவுகுழாயை அரிக்க துவங்கி விடும்.
இதை வருடக்கணக்கில் செய்து வரும் போது இந்த அமிலமானது சிறிது சிறிதாக அந்த பகுதியில் சேர்ந்துவரும்.
அப்போது Esophagitis உருவாகலாம். அமிலம் அதிகரிக்க அதிகரிக்க Lower Esophageal Sphincter பகுதியை நிரந்தரமாக திறந்து வைத்து விடும்.
இதனால், இந்த அமில எதிர்வினை மேல்நோக்கி உங்கள் உணவுக்குழாய் வழியாக வரும். அப்போதுதான் நீங்கள் புளிப்பு ஏப்பம்,வயிறு வீக்கம், வயிறு உப்புசம், ஜீரணமின்மை, ஏப்பம் விடுதலில் சிரமம் அல்லது எரிச்சல் உள்ளிட்டவற்றை உணருவீர்கள்.
இதைத்தான் நாம் Acid Reflux அல்லது GERD (Gastro Esophageal Reflux Disease) என்று அழைக்கிறோம். இந்த அறிகுறிகள் தான் உண்டாகலாம்.
GERD (Gastro Esophageal Reflux Disease)
இதை பலரும் சீரியஸாக எடுத்து கொள்ளாமல் சாதாரண வயிற்று புண் என்று நினைத்து பல வருடங்களாக இதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதால் Barrett’s Esophagus என்ற புற்றுநோய் முன்னோடி நோயாக உருவாக்கி விடுகின்றன.
எனவே நமது வயிற்று பகுதியையும், செரிமான செயல்பாட்டையும் ஆரோக்கியமாக வைத்து கொள்வது அவசியம்.
கர்ப்பிணி பெண்களுக்கு ஏன் நெஞ்செரிச்சல் (Heartburn in Pregnancy in Tamil) பிரச்சனை வருகிறது?
கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு இந்த நெஞ்சு எரிச்சல் (Heartburn in Pregnancy in Tamil) இயல்பானதாகவே இருக்க கூடும்.
ஏற்கனவே, கர்ப்ப காலத்தில் புரொஜெஸ்ட்ரோன் அதிகமாக இருப்பதால் இயல்பான செரிமான செயல்பாடு மெதுவாகவே நடைப்பெறும்.
இந்நிலையில், அதிகமாக உணவை ஒரே நேரத்தில் எடுக்கும் போது அல்லது நீண்ட நேரம் கழித்து மொத்தமாக சாப்பிடும் போது இந்த பிரச்சனை இன்னும் அதிகமாக பாதிக்கும்.
நெஞ்சு எரிச்சலுக்கும் அதாவது அமில எதிர்வினைக்கும் மாரடைப்புக்கும் உள்ள வித்தியாசம்!

நீண்ட நேரம் கழித்து சாப்பிடுவதால் அல்லது அதிகமாக சாப்பிடுவதால் அமிலம் மேலெழும்பி நெஞ்செரிச்சலை உண்டு செய்துவிடலாம் அது போன்றே நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்தாலும் நெஞ்செரிச்சல் வரலாம்.
அப்போது வயிறு உப்புசம் , வயிறு வலி போன்றவை உணரலாம். ஆனால் பலரும் இதை மாரடைப்புடன் தொடர்பு படுத்தி கொள்கிறார்கள்.
பலரும் அமில எதிர்வினையால் ஏற்படும் நெஞ்செரிச்சல், வாந்தி போன்ற அறிகுறிகளை மாரடைப்பு என்று குழப்பி கொள்கின்றனர். மாரடைப்பு வரும்போது உங்கள் மார்பு பகுதியில் எரிச்சல் ஏற்படாது.
அந்த இடத்தை அழுத்துவது போல் இருக்கும். அந்த அழுத்தம் மற்றும் வலி இடது தோள்பட்டை உள்ளிட்ட இடங்களுக்கு பரவலாம்.
தலைசுற்றல், வியர்வை போன்ற அறிகுறிகள் தென்படலாம். இதுவே வெறும் நெஞ்செரிச்சலாக மட்டும் இருந்தால் அது சிரப் அல்லது மாத்திரை போன்றவற்றை எடுத்து கொண்டவுடன் கொஞ்சம் சரியாகி விடும்.
அதை வைத்து வேற்றுமையை கண்டுபிடித்து விடலாம். அதனால் முதலில் பயப்படாமல் அறிகுறியை உன்னிப்பாக கவனிப்பது அவசியம். இனி நெஞ்சு எரிச்சலை எப்படி தடுக்கலாம் (பு) என்பதை பார்க்கலாம்.
கர்ப்ப காலத்தில் நெஞ்சு எரிச்சலை (Heartburn in Pregnancy in Tamil) எப்படி தடுப்பது?
சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக் கொள்ளுங்கள். வயிறு நிறைந்துவிட்டால் அதிகமாக சாப்பிடுவதை நிறுத்தி விடுங்கள். உணவை பிரித்து முன்று மணி நேரத்திற்கு ஒரு முறை என்ற வகையில் சிறு சிறு உணவுகளாக எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் முந்தைய உணவு செரிமானம் அடைய தேவையான நேரத்தை தரும்.
இரவு தூங்க செல்வதற்கு மூன்று மணிநேரம் முன்பே இரவு உணவை எடுத்துக் கொள்ளுங்கள். சாப்பிட்டவுடன் தூங்கும் போது உணவு செரிமானம் ஆக தாமதம் ஆகலாம். இது அமில உற்பத்தியை அதிகரிக்கலாம். 10 மணிக்கு தூங்குபவர்கள் 7 மணிக்கு சாப்பிடுவது நல்லது.
தூக்கத்தில் இந்த பிரச்சினை உள்ளவர்கள் தலையை கொஞ்சம் மேலே உயர்த்தியபடி வைத்து தூங்குங்கள்.
தூங்க செல்வதற்கு முன் அதிகமாக காஃபி, சாக்லேட், திண்பண்டங்கள், சிட்ரஸ் உணவுகள், கார உணவுகளை எடுத்துக் கொள்ளாதீர்கள்.
காரம் என்று சொல்லும்போது வெறும் மிளகாய் மட்டுமின்றி வெங்காயம் உள்ளிட்ட கார தன்மை கொண்ட பொருட்களை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டாம். அதே போல் சீஸ் போன்ற கொழுப்பு அதிகம் கொண்ட பொருட்களையும் அளவாக பயன்படுத்துங்கள்.
இறுக்கமான உடை அணிவதை தவிர்த்து விடுங்கள். அது உங்கள் செரிமான செயல்பாட்டை சிரமமாக்கிவிடும். அதே போல் குறைந்தபட்சம் ஒருநாளைக்கு 30 முதல் 45 நிமிடங்களாவது உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். இது உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
கர்ப்ப காலத்தில் நெஞ்சு எரிச்சலுக்கு (Heartburn in Pregnancy in Tamil)எப்போது மாத்திரைகள் எடுக்கலாம்?
கண்டிப்பாக இதற்கு மருத்துவ சிகிச்சைகளும் உண்டு. மருத்துவர்கள் இதற்கு மூன்று வகையான மருந்துகளை பரிந்துரைப்பார்கள். ஒன்று Antacids , anta என்பது அமிலம் குறைக்க கட்டுப்படுத்த உதவும்.
இரண்டு PROTON PUMP INHIBITORS, H2 RECEPTOR BLOCKERS ஆகிய மருந்துகளை பரிந்துரைப்பார்கள். இது அமிலம் அதிகம் உற்பத்தியாவதை தடுக்க உதவும். இதை வெறும் வயிற்றில் எடுத்துகொள்ள வேண்டும்.
ஆனால், கண்டிப்பாக மருத்துவர் ஆலோசனைப்படி மட்டுமே இந்த மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதே சமயம் மருந்துகள் வரை போகாமல் மேலே சொன்ன வழிமுறைகளை பின்பற்றி இந்த பிரச்சினை வருவதற்கு முன்பே தடுக்கலாம்.