பெண் கருவுறும் போது உடல் அளவிலும் மனதளவிலும் பல மாற்றங்களை எதிர்கொள்கிறார்கள். உடல் அசெளகரியங்களும் அதிகம் உண்டாக கூடிய காலம் கர்ப்ப காலம், அதில் ஒன்று கர்ப்ப கால தலைவலி (Headache During Pregnancy in Tamil).
கர்ப்பிணிக்கு பெரும்பாலும் கர்ப்ப கால மார்னிங் சிக்னெஸ் அதாவது வாந்தி, குமட்டல், மயக்கம் தலைச்சுற்றல் போன்றவை மட்டுமே இருக்கும் என்று சொல்பவர்கள் உண்டு.
ஆனால் கர்ப்பிணிகள் பலருக்கும் மசக்கையோடு தலைவலியும் வரக்கூடியதே என்பது ஆச்சர்யமாக இருக்கலாம். சிலருக்கு மிதமாக இருக்கலாம். சிலருக்கு தீவிரமாக இருக்கலாம்.
கர்ப்ப காலத்தில் தலைவலி (Headache During Pregnancy in Tamil) ஏற்பட என்ன காரணம்?
கர்ப்ப காலத்தில் ஏற்படும் பெரும்பாலான தலைவலிகள் தீங்கு விளைவிப்பதில்லை. கர்ப்பத்தின் முதல் ட்ரைமெஸ்டரில் வரும் தலைவலி, இரண்டாவது, மூன்றாவது ட்ரைமெஸ்டரில் மாதங்களில் வரும் தலைவலி என ஒவ்வொன்றும் வெவ்வேறு காரணங்களால் உண்டாகலாம்.
சில நேரங்களில் கர்ப்ப காலத்தில் உடல் நல பிரச்சனைகளின் அறிகுறியாக இவை இருக்கலாம்.
கர்ப்ப கால தலைவலி (Headache During Pregnancy in Tamil) வகைகள்
கர்ப்ப காலத்தில் ஏற்படும் பெரும்பாலான தலைவலிகள் முதன்மை தலைவலிகள். இது தானாகவே இருக்கலாம். மற்றொன்று கர்ப்பத்தின் சிக்கலான அறிகுறியாக இருக்கலாம்.
கர்ப்ப காலத்தில் வரக்கூடிய தலைவலியின் (Headache During Pregnancy in Tamil) வகைகள் என்ன, எதனால் வருகிறது என்பதை பார்க்கலாம்.

நீரிழப்பு தலைவலி
இது நீர் மற்றும் எலக்ட்ரோலைட் இழப்பு உட்கொள்ளலை விட அதிகமாக இருக்கும் போது நீரிழப்பு ஏற்படுகிறது.
கர்ப்பிணி போதுமான திரவங்களை குடிக்காத போது அல்லது உடல் செயல்பாடுகளில் நீரிழப்பு உண்டாகும் போது தலைவலி உண்டாகலாம்.
குறிப்பாக வெப்பமான கோடை நாட்கள் அல்லது குளிர்காலத்தில் உடற்பயிற்சி செய்வது அல்லது நடைபயிற்சி செய்வது போன்ற நிலையிலும் நீரிழப்பு உண்டாகும்.
இது இயல்பானது என்றாலும் கர்ப்பமாக இருக்கும் போது பெண்களுக்கு நீரிழப்பு ஏற்படும் அபாயம் அதிகம்.
அதோடு காலை சுகவீனம் திரவ இழப்பின் விகிதத்தை மேலும் அதிகரிக்க செய்யும். மசக்கை கால வாந்தியும், வயிற்றுப்போக்கும் திரவத்தை மேலும் குறைத்துவிடலாம்.
பெரும்பாலும் இதனால் தான் கர்ப்பிணிகள் தலைவலியை பெற்றுவிடுகிறார்கள்.
அதனால் கர்ப்பிணிகள் போதுமான திரவங்களை குடிக்க வேண்டும். இல்லையெனில் அதனாலும் நீரிழப்பு உண்டாகலாம். இந்த நீரிழப்பு பொதுவான பக்கவிளைவில் ஒன்று தலைவலி.
தீவிர தாகம், வறண்ட வாய் மற்றும் தசைப்பிடிப்பு போன்ற அறிகுறிகள் உங்கள் நீரிழப்பை உணர்த்தும் அறிகுறிகள் தான்.
ஒற்றைத் தலைவலி
ஒற்றைத்தலைவலி என்பது நெற்றியின் ஒரு பக்கத்தை மட்டும் பாதிக்கிறது. இது துடிக்கும் உணர்வை உண்டாக்குகிறது.
இதுவும் பொதுவான ஒரு வகை தலைவலி. ஒற்றைத்தலைவலி ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான பெண்களை பாதிக்கிறது.
இந்த தலைவலி வந்தால் கர்ப்பிணிகளுக்கு குமட்டல், மங்கலான பார்வை மற்றும் ஒளி மற்றும் ஒலிக்கு உணர்திறன் போன்றவற்றையும் உண்டு செய்யலாம்.
இந்த ஒற்றைத்தலைவலி பரம்பரையாக வரலாம். இது பருவகாலம், தூக்க முறைகள், ஒளி மற்றும் ஒலிகளில் ஏற்படும் மாற்றங்களாலும் தூண்டப்படலாம்.
குழந்தை பிறக்கும் பெண்களுக்கு ஒற்றைத்தலைவலி மிகவும் பொதுவானது. குறிப்பாக கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் இவை அடிக்கடி நிகழலாம் என்று ஆய்வுகள் காட்டுகிறது.
டென்ஷன் தலைவலி
கர்ப்பமாக இருக்கும் போது மன அழுத்தம் அதிகமாக இருக்கு போது டென்ஷன் தலைவலி பொதுவானது. கர்ப்பிணி பெண்ணுக்கு மன அழுத்தம் அதிகரிக்கும் போதும், மோசமான தோரணையின் காரணமாகவும் இவை உண்டாகலம்.
இந்த தலைவலி மந்தமானதாக இருக்கும். இலேசான வலியை உண்டாக்கும். இந்த வலி தலையின் அடிப்பகுதியில் அமைந்துள்ளது. கர்ப்பகாலத்தில் உண்டாகும் தலைவலிகளில் 26% டென்ஷன் தலைவலி என்று ஆராய்ச்சி கூறுகிறது.
சைனஸ் தலைவலி
சைனஸ் தலைவலி என்பது டென்ஷன் தலைவலி போல் உண்டாககூடியது. இது அழுத்தத்தால் உண்டாகின்றன.
இந்த நிலையில் கன்னங்கள், கண்கள், மூக்கை சுற்றி அழுத்தம் உணரப்படுகிறது.
இந்த தலைவலி பெரும்பாலும் சைனஸ் தொற்று அல்லது பாக்டீரியா தொற்று காரணமாக ஏற்படுகிறது.
இந்த சைனஸ் தலைவலி மூக்கு மற்றும் கண்களுக்கு அருகில் கடுமையான வலி அல்லது உங்கள் நெற்றியில் மந்தமான துடிப்பை உண்டு செய்யலாம்.
சைனஸ் தலைவலி நோய்த்தொற்றின் விளைவாக இருந்தால் சிக்கலை தீர்க்க நுண்ணுயிர் எதிர்ப்பிகள் அல்லது பிற மருந்துகள் தேவைப்படலாம்.
கிளஸ்டர் தலைவலி
கிளஸ்டர் தலைவலி என்பது வேதனையான ஒன்று. இந்த கடுமையான தலைவலிகள் நாள்பட்டதாக இருக்கலாம். இது வாரங்கள் அல்லது மாதங்கள் என்று நீடிக்கலாம். இந்த தலைவலி ஒன்று முதல் மூன்று மணி நேரம் வரை நீடிக்கும். இது குழுக்களாக நிகழலாம்.
வாரத்தில் அல்லது மாதத்தில் ஒரு நேரத்தில் ஒவ்வொரு நாளும் பல தலைவலிகளை பெறலாம். இந்த வலி கடுமையானது. கண்களில் சிவப்பு நிறத்தை உண்டாக்க கூடியது.
கர்ப்பகாலத்தில் 1 இலட்சம் பெண்களில் 7.5 பேருக்கு ஏற்படுகிறது. மற்ற தலைவலிகளுடன் ஒப்பிடும் போது அரிதாக இருந்தாலும் இது கடினமானது. வேதனையை அதிகரிக்க கூடியது.
இவை தவிர முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் ட்ரைமெஸ்டரில் வரக்கூடிய தலைவலிக்கு பொதுவான கர்ப்ப காரணங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

- ஹார்மோன் மாற்றங்கள்
- அதிக இரத்த அளவு
- எடை மாற்றங்கள்
- நீரிழப்பு
- குமட்டல் மற்றும் வாந்தி
- மன அழுத்தம்
- தூக்கம் இல்லாமை
- மோசமான ஊட்டச்சத்து
- குறைந்த இரத்த சர்க்கரை அளவு
- குறைந்த உடல் செயல்பாடு
- ஒளி உணர்திறன் பார்வை மாற்றங்கள் போன்ற உணவுகளும் தலைவலியை ஏற்படுத்தலாம். இதனோடு சில உணவுகளும் கூட தலைவலியை தூண்டலாம்.
கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு ட்ரைமெஸ்டருக்கும் ஏற்றாற் போன்று தலைவலிக்கு சிகிச்சை அளிப்பது பலன் அளிக்கும். ஆனால் கர்ப்பிணிகள் சுயமாக மாத்திரைகள் எடுத்துகொள்வது தவிர்க்க வேண்டும். மருந்துகள் எடுப்பதற்கு முன்பு மருத்துவரை அணுகி எடுத்துகொள்வது பாதுகாப்பானது. ஏனெனில் வலி நிவாரண மருந்துகள் குறிப்பாக முதல் மூன்று மாதங்களில் எடுத்துகொண்டால் வளரும் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்று எச்சரிக்கிறது.
கர்ப்ப காலத்தில் தலைவலிக்கு (Headache During Pregnancy) சிகிச்சையளிப்பதற்கு வேண்டிய மருந்துகளை உங்கள் மருத்துவர்களே பரிந்துரைக்கலாம். அதே நேரம் தலைவலி வராமல் தவிர்க்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

- அதிக தண்ணீர் குடிப்பது
- ஓய்வு எடுப்பது
- வெந்நீர் ஒத்தடம்
- உடற்பயிற்சி மற்றும் நீட்சி செய்வது
- புதினா, ரோஸ்மேரி மற்றும் கெமோமில் அத்தியாவசிய எண்ணெய்கள் பயன்படுத்தலாம்.
தீவிரமாக தலைவலிக்கான காரணத்தை கண்டறிய மருத்துவர் சோதனைகள் மற்றும் ஸ்கேன்களை பரிந்துரைக்கலாம்.
- இரத்த அழுத்தத்தை சரிபார்க்கிறது
- இரத்த சர்க்கரை அளவு
- பார்வை சோதனை
- தலை மற்றும் கழுத்தின் அல்ட்ராசவுண்ட் பரிசோதனை
- இதயம் அல்லது தலை ஸ்கேன்
- கண் ஆரோக்கியத்தை சரிபார்க்கிறது
- முதுகெலும்பு தன்மை போன்ற பரிசோதனைகளும் செய்யப்படுகிறது.
அதற்காக பயப்பட வேண்டாம். கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் உங்களுக்கு டென்ஷன் தலைவலி வரலாம்.
எனினும் கர்ப்பத்தின் இரண்டாவது ட்ரைமெஸ்டர் காலங்களில் தலைவலி தீவிரமாக இருக்கலாம். இந்த நேரத்தில் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.
கர்ப்ப காலத்துக்கு பிறகு தலைவலி வருமா?
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் தலைவலியை கொண்டிருந்தால் பிரசவத்துக்கும் பிறகு 39% தலைவலி கொண்டிருப்பதாக மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது. கர்ப்ப காலத்தில் வழக்கமாக இருப்பதை விட வித்தியாசமான தலைவலி உங்களுக்கு இருக்கலாம்.
கர்ப்பத்துக்கு முன் மற்றும் கர்ப்பத்துக்கு பிறகு தலைவலி (Headache) இருந்தால் மருத்துவரை அணுகி உங்கள் தலைவலி தீவிரம் குறித்து பரிசோதியுங்கள்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
எப்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?
கர்ப்பத்தின் மூன்றாம் ட்ரைமெஸ்டர் காலங்களில் வரக்கூடிய தலைவலி முக்கியமானது. அதிலும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் பெண்களுக்கு சமயங்களில் எந்த அறிகுறியும் தென்படாமல் இருக்கலாம்.
இவர்கள் அவ்வபோது வீட்டில் மானிட்டரில் உயர் இரத்த அழுத்தம் சரி பார்க்க வேண்டும். அதோடு குடும்ப வரலாறில் ஒற்றைத்தலைவலி, உயர் இரத்த அழுத்தம், வலிப்புத்தாக்கங்கள் அல்லது நீரிழிவு நோயின் தனிப்பட்ட அல்லது குடும்ப வரலாறு இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
கர்ப்ப காலத்தில் தலைவலிக்கு பல காரணங்கள் இருக்கலாம். வழக்கமான சோதனைகளுடன் சரியான காரணம் கண்டறிந்து சிகிச்சையளிப்பது தலைவலி உபாதையை குறைக்க செய்யும்.