கர்ப்ப காலத்தில் நல்ல உணவு (Foods To Take During Pregnancy in Tamil) மற்றும் போதுமான ஊட்டச்சத்து அவசியம். கர்ப்பத்துக்கு முந்தைய காலத்தை காட்டிலும் கர்ப்ப காலத்தில் கூடுதலாக 300 கலோரிகள் உட்கொள்ள வேண்டும்.
போதுமான மற்றும் சத்தான உணவு கிடைக்காத போது தாய் மற்றும் வயிற்றீல் இருக்கும் குழந்தை இருவருக்குமே அது பாதிப்பை உண்டாக்கும். இதனோடு கர்ப்பகால ஆரம்ப அறிகுறிகள் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
குழந்தையின் ஆரோக்கியம் மட்டும் அல்லாமல் குழந்தையின் அறிவாற்றல் மற்றும் உணர்ச்சி சிக்கல்களுக்கு இது வழிவகுக்கும். தாய்க்கு தைராய்டு பிரச்சனைகள், நீரிழிவு, ரத்த சோகை போன்ற நீண்ட கால வியாதிகள் தாய்க்கு உருவாக கூடும்.
கருவுற்ற போது உண்டாகும் வாந்தி, குமட்டல் உணர்வு கடினமாக இருந்தாலும் சீரான உணவு எடுத்துகொண்டால் அது ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்யும்.
கர்ப்ப கால உணவு முறை – Foods To Take During Pregnancy in Tamil
நார்ச்சத்து நிறைந்த உணவுகள்
கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் வாயு மற்றும் தசைப்பிடிப்பு இரண்டுமே பெரிய பிரச்சனைகள். இந்த சிக்கல்களை சமளிக்க நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்வதும் அதிகமாக சேர்ப்பதும் மிகவும் முக்கியம்.
தானியங்கள், முழு தானிய ரொட்டி, அரிசி, காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகள் எடுத்துகொள்வதை உறுதி படுத்துங்கள்.
அதே நேரம் காய்கறிகள் நல்லது என்று வாயுவை உண்டாக்கும் முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளை தவிர்க்க வேண்டும்.
கர்ப்பகாலத்தில் எடுத்துகொள்ள வேண்டிய உணவு (Foods To Take During Pregnancy in Tamil) மருத்துவரின் ஆலோசனையோடு சரியாக உட்கொள்ள வேண்டும்.
இதையும் தெரிந்து கொள்ள: கர்ப்ப கால உடல் சோர்வு நீக்க என்ன செய்யலாம்?
தினமும் மூன்று விதமான இரும்புச்சத்து உணவுகள்
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளுக்கு சராசரியாக இருப்பவர்களை காட்டிலும் அதிக இரும்பு தேவை. தினமும் குறைந்தது 27 மில்லி கிராம் அளவு இரும்பு இருக்க வேண்டும். இரும்புச்சத்து நிறைந்த மூன்று உணவுகளை உணவில் சேர்க்க வெண்டும்.
மெலிந்த இறைச்சிகள், காலை உணவு தானியங்கள், கீரை வகைகள் மற்றும் பீன்ஸ் போன்றவற்றை சேர்க்கலாம்.
இரும்புச்சத்து குறையும் போது ஹீமோகுளோபின் அளவு குறையக்கூடும். இரும்புச்சத்து கொண்ட உணவுகளை உறிஞ்சுவதற்கு, கர்ப்ப காலதிற்கு தேவையான வைட்டமின் சி தேவை. தினமும் 80 முதல் 85 மில்லிகிராம் வரை வைட்டமின் சி தேவை. பழங்களை சேர்க்கும் போது சிட்ரஸ் பழங்கள் எடுத்துகொள்வதை உறுதி செய்யுங்கள்.
தினமும் 4 விதமான கால்சியம் உணவுகள்
கர்ப்பிணிக்கு பிரசவக்காலத்தில் எலும்புகள் விரிவடைந்து குழந்தை சிக்கலில்லாமல் வெளியேற வேண்டும். பிரசவ நேரத்தில் மூட்டுகள் ஒத்துழைக்க வேண்டும்.
மூட்டுகளுக்கு அதிக வலிமை தேவைப்படும். குழந்தையின் எலும்புகளை வலுவாக்கவும் கால்சியம் தேவை என்பதை மறக்க வேண்டாம். பால், வெண்ணெய், பாலாடைக்கட்டி என தினமும் 4 பால் பொருள்களையாவது சேர்க்க வேண்டும்.
தினமும் 1000 முதல் 1300 மில்லிகிராம் கால்சியம் வரை உட்கொள்வதை உறுதி செய்யுங்கள்.
அயோடின் கொண்ட உணவுகள் அளவாக எடுக்க வேண்டும்
குழந்தையின் அறிவாற்றல் வளர்ச்சிக்கு அயோடின் முக்கியமானது. குழந்தையின் நரம்பு மண்டலத்தை சரியாக உருவாக்க இது உதவுகிறது. கர்ப்பகாலத்தில் தினமும் 220 மிகிராம் அயோடின் எடுத்துகொள்ள வேண்டும்.
பாலாடைக்கட்டி, வேகவைத்த உருளைக்கிழங்கு, தயிர், இறால், சால்மன் என குறைந்த அளவு கடல் உணவுகளை எடுத்துகொள்ளலாம். அளவாக எடுத்துகொள்ள வேண்டும் என்பதை மறக்காதீர்கள்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
துத்தநாகம்
துத்தநாகம் ஒரு முக்கிய ஊட்டச்சத்து. இது சாதாரண வளர்ச்சிக்கு தேவையான சத்து. இது உடலில் உயிரியல் செயல்பாடுகளில் முக்கியபங்கு வகிக்கிறது. கருவின் வளர்ச்சிக்கு துத்தநாகம் முக்கியமானது.
துத்தநாகத்தின் சிறந்த ஆதாரங்கள் கோழி, வான்கோழி, இறால், நண்டு, சிப்பி, இறைச்சி, மீன், பால் பொருள்கள், பீன்ஸ், வேர்கடலை வெண்ணெய், கொட்டைகள் சூரிய காந்தி விதைகள், இஞ்சி, வெங்காயம், தவிடு, கோதுமை, அரிசி, பாஸ்தா, தானியங்கள், முட்டை, டோஃபு போன்றவற்றை எடுத்துகொள்ள வேண்டும்.
இதையும் தெரிந்து கொள்ள: கர்ப்பத்தின் போது ஃபோலிக் அமிலம்!
புரதங்கள்
ஆரோக்கியமான விலங்கு மூலங்களிலிருந்து புரதம் பெறலாம். மெலிந்த கோழி இறைச்சி மற்றும் கோழி, முட்டைகளும் அடங்கும். சைவ உணவு எடுத்துகொள்பவர்கள் புரதங்கள் நிறைந்த டோஃபு மற்றும் சோயா பொருள்கள், பீன்ஸ் வகைகள், பயறு வகைகள், பருப்பு வகைகள், கொட்டைகள், விதைகள் மற்றும் வெண்ணெய் புரதம் மற்றும் இரும்புச்சத்து மூலமாகும்.
கடல் உணவு சாப்பிட்டவர்கள் சைவ உணவு எடுத்துகொண்டவர்களை காட்டிலும் அதிகளவு புரதத்தை கொண்டிருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்தது.