ஒரு பெண் கருத்தரிக்கும் போது உடலில் பலவிதமான மாற்றங்கள் உண்டாகும். கருப்பையில் வளரும் குழந்தை பாதுகாப்பாக இருக்க குழந்தை பனிக்குட நீரில் (அம்னோடிக் திரவத்தால்) மிதக்கிறது.
இந்த திரவமானது பெண் கருத்தரித்த 12 நாட்களுக்கு பிறகு தாயிடமிருந்து எடுக்கப்படும் நீர் மற்றும் கர்ப்பத்தின் 5 மாதங்களுக்கு பிறகு சிசு சிறுநீர் போன்றவையே ஆகும்.
குழந்தையை மிதக்க செய்யும் பனிக்குட நீர் திரவமானது குழந்தையை பாதுகாப்பாக வைத்திருக்க செய்கிறது. இதனால் குழந்தை கருப்பை உள்ளே மிதக்கிறது. இந்த திரவத்தில் தான் குழந்தை நீந்தவும், சுவாசிக்கவும் கற்றுகொள்கிறது.
சமயங்களில் குழந்தை இந்த அம்னோடிக் திரவத்தை குடித்து விடுவதால் அம்னோடிக் திரவம் குறைந்து விடக்கூடும். இது மருத்துவ மொழியில் ஒலிகோஹைட்ராம்னியோஸ் என்று அழைக்கப்படுகிறது.
குறிப்பிட்ட காலத்தில் கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் எடுக்கும் போது இதை மருத்துவர் கண்டறியலாம். இந்த அம்னோடிக் திரவம் அதிகரிக்கவும் (Food to Increase Amniotic Fluid In Tamil) குறையாமல் இருக்கவும் என்ன மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று பார்க்கலாம்.
பனிக்குட நீர் அதிகரிக்க திரவ ஆகாரங்கள் – Food to Increase Amniotic Fluid In Tamil (Liquid Foods)
தினசரி அளவில் 3 லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். கர்ப்பிணிகள் கர்ப்பகாலத்தில் வயிற்றில் இருக்கும் சிசுவை மனதில் கொண்டு அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும்.
உணவு வகைகளில் கடினமான உணவுகளை தவிர்த்து மென்மையான உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும். திரவ ஆகாரங்கள் அதிகம் சேர்க்க வேண்டும்.
தண்ணீர் மட்டுமே எடுக்கமல் தவிர்த்து நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள் என அன்றாடம் சேர்த்துகொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு வகைகளை சரியான முறையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
திரவ ஆகாரங்கள் அதிகமாக நிறைவாக சேர்க்கும் போது அம்னோடிக் திரவம் குறையாமல் தடுக்கலாம். அதற்கு உதவும் உணவுகள் என்னென்ன என்பதை ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணும் அறிந்திருப்பது அவசியம். என்னென்னெ உணவுகள் அவசியம் சேர்க்க வேண்டும் என்பதை விரிவாக அறிந்துகொள்வோம்.
அம்னோடிக் அதிகரிக்க எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் தெரியுமா?
நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் தண்ணீர் குடிப்பதால் வாந்தி வரும் என்றோ சிறுநீர் கழிப்பதற்கு அவ்வபோது எழ வேண்டுமோ என்று பலரும் தண்ணீர் போதுமான அளவு குடிப்பதில்லை. ஆனால் கர்ப்பகாலத்தில் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
உடலில் நீரின் அளவு அதிகரித்தால் அம்னோடிக் திரவத்தின் அளவும் அதிகரிக்கும். தண்ணீர் போன்று பழச்சாறுகளும், காய்கறி சாறுகளும் குடிக்கலாம். நாள் முழுக்க 3 லிட்டருக்கும் மேலான திரவ ஆகாரங்கள் எடுக்கிறீர்களா என்பதை உறுதி செய்யவும்.
மேலும் தெரிந்து கொள்ள: கருவில் இருக்கும் குழந்தைக்கு பிடிக்காத விஷயங்கள்!
பனிக்குட நீர் அதிகரிக்க தேவையான காய்கறிகள் – Food to Increase Amniotic Fluid In Tamil (Vegetables)
தினசரி மூன்று அல்லது இரண்டு விதமான காய்கறிகளை எடுத்துகொள்ளுங்கள். பொரியல், அவியலாக எடுக்க வேண்டும். அதிக வறுவலுடன் எடுக்க கூடாது. எல்லா காய்கறிகளையும் கலந்து சாலட் ஆக்கியும் சாப்பிடலாம். காய்கறிகளில் வெள்ளரிக்காய், கீரைகள், முள்ளங்கி, பரக்கோலி, காலிஃப்ளவர் போன்ற காய்கறிகள் அதிகமாக இருக்கட்டும்.
வெள்ளரிக்காய் 96.7% நீர்ச்சத்து கொண்டவை, கீரைகள் 95.6% நீர்ச்சத்து கொண்டவை, முள்ளங்கி 95.3 % நீர்ச்சத்து கொண்டவை, காலிஃப்ளவர் 92.1% நீர்ச்சத்து கொண்டவை கீரைகள் 91.4 ப்ரக்கோலி 90.7% நீர்ச்சத்து கொண்டவை கேரட் – 90. 4% நீர்ச்சத்து கொண்டவை.
பனிக்குட நீர் அதிகரிக்க தேவையான பழங்கள் – Food to Increase Amniotic Fluid In Tamil (Fruits)
நீர் உள்ளடக்கங்கள் கொண்ட பழங்கள் அம்னோடிக் திரவத்தின் அளவை அதிகரிக்க கூடும். இவை ஊட்டச்சத்துக்களையும் அளிக்க கூடும். உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க சிறந்த வழி பழங்கள் எடுத்துகொள்வது. நீர்ச்சத்து மிகுந்த மூன்று அல்லது இரண்டு விதமான பழங்களை எடுத்துகொள்ள வேண்டும்.
அதே நேரம் பழங்களை சாலட் ஆக்கி சாப்பிடுகிறேன் என்று கலந்து எடுக்க வேண்டாம். அவ்வபோது ஒரே வகையான பழத்தை மட்டும் சாப்பிடுங்கள். பழத்தை நறுக்கி சாப்பிடலாம். பழங்கள் உடலில் நீரேற்றத்தின் அளவை அதிகரிக்க செய்யும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
பழங்களில் தர்பூசணி 91.5 % நீர்ச்சத்து கொண்டவை, தக்காளி 94.5% நீர்ச்சத்து கொண்டவை, ஸ்டார் ஃப்ரூட் 91. 4% ஸ்ட்ராபெர்ரி பழம் 91.0 % க்ரேப் ஃப்ரூட் 90.5% நீர்ச்சத்து உள்ளது.
கர்ப்பிணி மதுப்பழக்கம் கொண்டிருந்தால் கர்ப்பகாலத்தில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது வயிற்றில் வளரும் சிசுவின் ஆரோக்கியத்தை பாதிப்பதோடு கருப்பையில் இருக்கும் அம்னொடிக் திரவத்தின் அளவையும் குறைக்க செய்கிறது.
அடிக்கடி சிறுநீர் கழிக்கும் மருந்துகள் அல்லது அது தொடர்பான இயற்கை மருந்துகள் இருந்தால் அதையும் தவிர்க்க வேண்டும் ஏனெனில் அடிக்கடி சிறுநீர் கழித்தால் அது உடலில் நீர்ச்சத்து குறைபாட்டை உண்டாக்கி அம்னோடிக் திரவத்தின் அளவை குறைக்க செய்யும்.
கர்ப்பிணி இயன்றளவு மெல்லிய மிதமான உடற்பயிற்சியை மருத்துவர் மற்றும் உடற்பயிற்சி நிபுணரின் ஆலோசனையோடு மேற்கொள்ள வேண்டும். மெல்லிய மிதமான உடற்பயிற்சிகளை செய்வதால் உடல் சோர்வு இல்லாமல் இருக்கும். கால்களில் வீக்கங்கள் உண்டாகாது. மென்மையான நடைபயிற்சி இரவு நேரத்தில் ஆழ்ந்த தூக்கத்தை உண்டாக்க செய்யும்.
இந்த உடற்பயிற்சி கர்ப்பிணியின் வயிற்றில் அம்னோடிக் திரவத்தை அதிகரிக்க செய்ய உதவும். கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்யும் போது அது நஞ்சுக்கொடி மற்றும் கர்ப்பப்பையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. அதனால் உடலில் இயற்கையாகவே உடலில் அம்னோடிக் திரவம் அதிகரிக்கும். அல்லது குறையாமல் தடுக்கப்படும்.
மேலும் தெரிந்து கொள்ள: எக்டோபிக் கர்ப்பம் (Ectopic Pregnancy) என்றால் என்ன?
கர்ப்பிணி கர்ப்பகாலத்தில் சிசுவின் ஆரோக்கியம் குறித்து கவனம் மேற்கொள்ளும் போது இந்த அம்னோடிக் திரவம் குறித்தும் தகுந்த விழிப்புணர்வு கொண்டிருக்க வேண்டும்.
ஏனெனில் இந்த திரவ அளவு குறைந்தால் அது குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்க செய்யும், சமயங்களில் மிகப்பெரிய ஆபத்தை உண்டாக்கிவிடும்.
அதனால் மருத்துவரிடம் தொடர்ந்து பரிசோதனை, டயட்டீஷியன்களின் அறிவுறுத்தலின் படி சரியான உணவு, உடற்பயிற்சி போன்றவற்றை தினசரி தவிர்க்காமல் கடைப்பிடித்தால் அம்னோடிக் திரவம் சீராக இருப்பதோடு ஆரோக்கியமான கர்ப்பகாலமும் பெறலாம்.