ஃபோலிக் அமிலம் வைட்டமின் பி9 என்று அழைக்கப்படுகிறது. இது ஆரோக்கியமான உயிரணுப் பிரிவை ஆதரிக்கிறது மற்றும் பிறப்பு குறைபாடுகளின் அபாயத்தைக் குறைக்க சரியான கரு வளர்ச்சி மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
இது உடலில் பல முக்கிய செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. ஃபோலிக் அமிலம் உணவுகளின் மூலம் பெறலாம். (folic acid rich foods in tamil)
எந்தெந்த உணவுகளில் ஃபோலிக் அமிலம் உள்ளது என்பதை இப்போது பார்க்கலாம். (folic acid rich foods in tamil)
முட்டைகள்
நீங்கள் அசைவ உணவை சேர்ப்பதாக இருந்தால் முட்டைகளை சேர்ப்பது ஃபோலேட் சத்துக்களை உங்களுக்கு அளிக்கும். முட்டைகளில் புரதம், செலினியம், ரிபோஃப்ளேவின் மற்றும் வைட்டமின் பி12 போன்றவையும் உள்ளன.
இது லுடீன் மற்றும் ஜியாக்சாந்தின் போன்றவையும் கொண்டுள்ளன. இவை எளிதாக கிடைக்கின்றன தினமும் ஒரு முட்டை உங்கள் உணவில் சேர்த்து வரலாம்.
கல்லீரல்
அசைவ உணவு உண்பவராக இருந்தால் நீங்கள் கல்லீரல் மூலம் சிறந்த சத்தை பெறலாம்.
இது செலினியத்தின் சிறந்த ஆதாரங்கள். கல்லீரலில் ட்ரான்ஸ் ஃபேட் மற்றும் கொழுப்பு உள்ளதால் மிதமான அளவில் சாப்பிடுவது நல்லது.
அவகேடோ
அவகேடோ பழம் எல்லோரும் விரும்பி சாப்பிடக்கூடியது. மேலும் இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதில் சக்திவாய்ந்த பைட்டோ கெமிக்கல் உள்ளது.
பருப்பு வகைகள்
பீன்ஸ், பட்டாணி, பருப்பு வகைகளில் ஃபோலேட்டின் மிகச்சிறந்த மூலமாகும்.
பருப்பு வகைகள் புரதம், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தின் சிறந்த மூலமாகும். பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற நுண்ணூட்டச்சத்துக்கள் ஆகும்.
ப்ரக்கோலி
இது உணவில் சேர்க்ககூடிய சிறந்த ஃபோலேட் உள்ள உணவுகள் இது.
தினமும் வேண்டிய ஃபோலேட் அளவில் 14% உள்ளது. இந்த ப்ரக்கோலியில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே உள்ளது.
விதைகள் மற்றும் கொட்டைகள்
ஆளிவிதைகள் ஒரு கப் அளவில் 168 கிராமுக்கு 146 mcg , சூரியகாந்தி விதைகள் 1 கப் 46 கிராமுக்கு 104 mcg, பாதாம் அளவு 1 கப்-95 கிராமுக்கு 48 mcg அளவுகளில் ஃபோலேட் நிறைந்துள்ளது. ஃபோலேட் சத்து சேர சாலட்டில் இதை சேர்க்கலாம்.
அஸ்பாரகஸ்
அஸ்பாரகஸில் ஃபோலிக் அமிலம் 1 கப் அளவில் 134 கிராம்.
ஒரு அஸ்பாரகஸின் சுமார் 70 mcg ஃபோலேட் உள்ளது. 27 கலோரிகள் மட்டுமே உள்ளன. வளர்சிதை மாற்றத்தில் ஃபோலேட் ரிஃபோஃப்ளேவின் முக்கிய பங்கு வகிக்கிறது.
வாழைப்பழங்கள்
வாழைப்பழத்தில் 1 கப் அளவில் மசித்ததில் 225 கிராம் அளவில் 45 mcg ஃபோலேட் உள்ளது.
தினசரி வைட்டமினில் 11% உள்ளது. வைட்டமின் பி6 வளமான ஆதாரங்களாக உள்ளது. ஃபொலேட் உடன் உடலுக்கு ஆன் டி பாடிகளை தயாரிக்கவும் செய்கிறது.
தக்காளி
1 கப் தக்காளியில் 22 mcg ஃபோலேட் உள்ளது. தக்காளியில் நிறைவுற்ற கொழுப்பு, சோடியம் , கொழுப்பு குறைவாக உள்ளது. மேலும் பீட்டா கரோட்டின் மற்றும் லைகோபீன் கரோட்டினாய்டு சிறந்த ஆதாரங்களாக இருக்கின்றன.
சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்சு பழங்களில் 1 கப் அளவில் 180 கிராம் அளவுக்கு 54 mcg ஃபோலேட் சத்தும், ஸ்ட்ராபெர்ரி 1 கப் (152 கிராம்) 36.5 mcg அளவுக்கு திராட்சைப்பழம் 1 கப் சாறு 230 கிராம் அளவுக்கு 29.9 mcg போன்ற சிட்ரஸ் பழங்களில் நல்ல அளவு ஃபோலேட் உள்ளது.
அடர் பச்சை இலை காய்கறிகள்
அடர் பச்சை இலை காய்கறிகள், பச்சை காய்கறிகள் ஃபோலிக் அமிலம் கொண்ட சிறந்த உணவுகளில் ஒன்றாக சொலப்படுகிறது. அடர் கீரைகள், முட்டைக்கோஸ் நல்ல அளவு ஃபோலிக் அமிலத்தை கொண்டுள்ளது.
கீரையில் கரோட்டினாய்டுகள் மற்றும் பல்வேறு சேர்மங்கள் நிறைந்துள்ளன. ஒரு கப் 30 கிராம் அளவுடைய கீரையில் 58.2 கீரையில் 58.2 எம்.சி.ஜி ஃபோலேட் உள்ளது.
பீட்ரூட்
பீட்ரூட் காய்கறிக்கு சிறந்த வண்ணம் வழங்குகிறது என்பதோடு பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது ஃபோலேட்டின் சிறந்த ஆதாரம். ஒரு கப் பீட்ரூட் 136 கிராம் அளவில் 148 mcg ஃபோலேட் உள்ளது.
மேலும் இதில் நைட்ரேட்டுகளும் உள்ளன. இது பல ஆரோக்கிய நன்மைகளுடன் தொடர்புடைய ஒரு வகை தாவர கலவை.
வலுவூட்டப்பட்ட தானியங்கள்
1 பாக்கெட் வலுவூட்டப்பட்ட தானியங்கள் 28 கிராம் கொண்டவற்றில் 80.1 mcg ஃப்லேட் உள்ளது. ஊட்டச்சத்து குறைபாட்டை குறைப்பதில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன.
ரொட்டி மற்றும் பாஸ்தா போன்ற பல வகையான தானியங்கள் ஃபோலிக் அமில உள்ளடக்கத்தை பலப்படுத்தப்பட்டுள்ளன. இதன் தயாரிப்பை பொறுத்து ஃபோலிக் அமில அளவு மாறுபடலாம்.
வலுவூட்டப்பட்ட உணவுகளில் உள்ள ஃபோலிக் அமிலம் இயற்கையாக உணவில் இருக்கும் ஃபோலேட்டை காட்டிலும் எளிதில் உறிஞ்சப்படலாம் என்கிறது.
வெண்டைக்காய்
வெண்டைக்காய் 1 கப் அளவில் 100 கிராம் இருக்கும் போது 88 mcg ஃபோலேட் உள்ளது. மேலும் இது நார்ச்சத்து வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் கால்சியம் நல்ல மூலமாகும். இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்தும்.
பப்பாளி
பப்பாளி ருசியாகவும் சுவையுடன் இருப்பது போன்று ஃபோலேட் நிறைந்தது.
ஒரு கப் 140 அளவு பப்பாளியில் 53 mcg ஃபோலேட் உள்ளது. பப்பாளியில் வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் கரோட்டினாய்டுகள் போன்றவையும் உள்ளது.
பிரஸ்ஸல்ஸ் முளைகள்
பிரஸ்ஸல்ஸ் முளைகளில் ஃபோலேட் அதிகம் உள்ளது. ஒரு பிரஸ்ஸல்ஸ் முளைகளில் 53.7 mcg வைட்டமின் உள்ளது. பிரஸ்ஸல்ஸ் முளைகள் வேறு வழியில் பயனளிக்கின்றன. கீரைக்கு பிறகு பிரஸ்ஸல்ஸ் முளைகளில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன.
வேர்க்கடலை
வேர்க்கடலை ஆரோக்கியமான கொட்டைகள். 146 கிராம் வேர்க்கடலையில் 359.16 யூஜி உள்ளது. வேர்க்கடலையில் உள்ள ஃபோலிக் அமிலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
ஸ்வீட் கார்ன்
ஸ்வீட் கார்ன் அடர்த்தியான ஊட்டச்சத்து விவரத்தை கொண்டுள்ளது. இதில் வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம் மற்றும் பிற அமினோ அமிலங்களும் உள்ளன. 100 கிராம் ஸ்வீட் கார்னில் 42μg ஃபோலிக் அமிலம் உள்ளது.
காலிஃப்ளவர்
ஒரு கப் காலிஃப்ளவர் 100 கிராம் அளவில் 57 mcg ஃபோலேட் உள்ளது. தினசரி அளவில் 14% ஆகும். காலிஃப்ளவர்களில் ஊட்டச்சத்துக்கள் அதிகம்.
கேரட்
கேரட்டில் ஃபோலிக் அமிலம் நிறைவாக உள்ளது. 1 கப் கேரட்டில் 128 கிராம் அளவில் 24.3 mcg ஃபோலேட் உள்ளது. இதில் உள்ள பீட்டா கரோட்டின், நார்ச்சத்து மற்றும் பல நுண்ணூட்டச்சத்துக்களின் வளமான மூலம்.
மாம்பழம்
ஃபோலேட் அதிகம் உள்ள உணவுகளில் மாம்பழமும் ஒன்று. அனைவருக்கும் பிடித்தமான பழமும் கூட.
100 கிராம் மாம்பழத்தில் ஃபோலிக் ஆசிட் 43μg உள்ளது. மாம்பழத்தில் உள்ள ஃபோலேட் உடலின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.
ஃபோலிக் அமில உணவுகள் (folic acid rich foods in tamil) எல்லாமே நமக்கு எளிதாக கிடைக்கும். இதை திட்டமிட்டு எடுத்துகொள்வதன் மூலம் உடலுக்கு வேண்டிய ஃபோலிக் ஆசிட் போதுமான அளவு கிடைக்கும்.