முதல் மூன்று மாத கர்ப்பம் உணவுகள் (First Trimester Pregnancy Foods in Tamil) என்ன என்பதனை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
ஒரு பெண் கர்ப்பமான நாள் முதல் ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிட்டு வாழ வேண்டும். முக்கியமாக கருத்தரித்த 2 மாதங்களுக்குள் உங்கள் கர்ப்பத்தை உறுதி செய்து கரு சரியான இடத்தில் தான் உருவாகியிருக்கிறதா என்பதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
ஏனெனில் கரு பலவீனமான திசையில் நகர்ந்தால், கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் தான் முதல் மூன்று மாதங்கள் கர்ப்பிணிப் பெண்களை அதிகம் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்கின்றனர்.
ஃபோலிக் அமிலம் உணவுகள்
மூன்று மாத கர்ப்பம் உணவுகள் என்றாலே ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் தான். பொதுவாக மகப்பேறுக்கு முந்திய ஊட்டச்சத்து என்று வரும்போது ஃபோலிக் அமில உணவுகள் மிக முக்கியமான நுண்ணூட்டச்சத்து ஆகும். ஒரு நாளைக்கு பரிந்துரைக்கப்பட்ட 600 மைக்ரோகிராம்களைப் பெற, உங்கள் மகப்பேறுக்கு முந்தைய வைட்டமின்களை தினமும் எடுத்துக் கொள்ளுங்கள்
ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ள உணவுகளை நாம் அன்றாட வாழ்வில் எடுத்துகொள்ள கூடியவை தான். ஃபோலிக் அமிலத்தில் வைட்டமின் பி 9 வெவ்வேறு வடிவங்கள் உள்ளது. ஃபோலிக் அமிலம் வைட்டமின் பி 9ன் செயற்கை வடிவமாகும். இது சப்ளிமெண்ட்ஸ் ஆக பயன்படுத்தப்படுகிறது. ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ள உணவுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
- ஆரஞ்சு
- ஸ்ட்ராபெர்ரி
- பச்சை இலைக் காய்கறிகள்
- வலுவூட்டப்பட்ட காலை உணவு தானியங்கள்
- சிறுநீரக பீன்ஸ் மற்றும் கொட்டைகள்
- காலிஃபிளவர்
- பீட்ரூட்
கால்சியம் உள்ள உணவுகள்
கருவில் இருக்கும் குழந்தைக்கு இதயம் மற்றும் நரம்பு செயல்பாடுகளுக்கு அவசியம் கால்சியம் தேவை. அதுமட்டுமில்லாமல் எலும்பு வளர்ச்சி, பற்கள் மற்றும் தசைகளின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
குழந்தை தனக்கு தேவையான கால்சியத்தை தாயிடமிருந்து உரிஞ்சப்படுவதால் கண்டிப்பாக தினமும் பால் குடிப்பதும், பால் சம்மந்தபட்ட உணவுகளை எடுத்துக்கொள்வதும் அவசியமாகிறது.
உணவில் போதுமான அளவு கால்சியம் கிடைக்காமல் போனால் அது குழைந்தைக்கு உடையக்கூடிய எலும்புகளை (ஆஸ்டியோபோரோசிஸ்) உருவாக்க வழிவகுக்கும்.
அதனால் கர்ப்பிணிகள் ஒரு நாளைக்கு பரிந்துரைக்கப்பட்ட 1,000 மில்லிகிராம்களைப் எடுத்துகொள்ளலாம்.
- கீரை வகைகள்
- பால்
- சோயா பால்
- பாதாம்
- பூசணி விதைகள்
- பாலாடைக்கட்டி
- தயிர் ஆகியவற்றில் சரிவிகித உணவில் இருந்து தேவையான அளவு கால்சியத்தை பெறலாம்.
வைட்டமின் பி 6 நிறைந்த உணவுகள்
கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் எடுத்துக்கொள்ளும் உணவு (First Trimester Pregnancy Foods) குமட்டல், வாந்தியைத் தவிர்க்கும் வகையில் இருக்க வேண்டும். எனவே உங்கள் தினசரி உணவில் வைட்டமின் B6 உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.
அசைவம் சாப்பிடுபவர்கள் சால்மன் மீன்களை தேர்வு செய்யலாம். கடலை எண்ணெய், வாழைப்பழங்களில் வைட்டமின் பி6 நிறைந்துள்ளது. சாப்பிடக்கூடிய சில விதைகளில் ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் புரதங்கள் இருக்கிறது.
கொட்டைகள் தாதுக்கள், நார்ச்சத்துக்கான சிறந்த மூலமாகும். எனவே கர்ப்ப காலத்தில் நட்ஸ் சாப்பிட வேண்டும்.
- முழு தானியங்கள்
- பச்சை பீன்ஸ்
- அக்ரூட் பருப்புகள்
- முட்டை, மீன், இறைச்சி, கல்லீரல் போன்றவற்றிலும் உண்டு
குறிப்பாக கர்ப்பத்தின் முதல் மூன்று மாதத்தில் இந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளுங்கள்.
புரதம் உள்ள உணவுகள்
முதல் மூன்று மாத கர்ப்பம் உணவுகள் (First Trimester Pregnancy Foods in Tamil) முக்கியமான ஒன்று புரத சத்துள்ள உணவுகள். இது உங்களுக்கும் உங்கள் குழந்தையின் தசை வளர்ச்சிக்கும் முக்கியமான ஒன்றாகும். மேலும் கருப்பை திசுக்களின் வளர்ச்சியை ஆதரிக்கிறது. ஒரு நாளைக்கு சுமார் 75 கிராம் ஆளவு புரதம் எடுத்துகொள்வது நல்லது.
- தயிர்
- சீஸ்
- பீன்ஸ்
- பருப்பு
- வேர்கடலை
- இறைச்சி
- மீன்
- கோழி
- முட்டை
- பால்
இரும்பு சத்து உணவுகள்
வளரும் குழந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இரத்த சப்ளைகளை அதிகரிப்பதால் இரும்பு சத்து அதிக முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு நாளைக்கு 27 மில்லிகிராம் என்ற இலக்கை உணவின் மூலம் மட்டுமே அடைவது கடினம்.
எனவே கர்ப்ப காலத்தில் இரத்த சோகை ஏற்படும் அபாயத்தைக் குறைக்க, போதுமான அளவு இரும்புச்சத்துள்ள உணவுகளை நீங்கள் எடுத்துக்கொள்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், உங்கள் உணவில்
- கீரை
- பிரக்கோலி
- உருளைக்கிழங்கு
- பயறு
- பீன்ஸ்
- சுண்டல்
- முட்டைபோன்ற நல்ல உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.
வைட்டமின் சி நிறைந்த உணவுகள்
வைட்டமின் சி கர்ப்பத்தின் முதல் மாதத்தில் எடுக்கப்பட வேண்டும், ஏனெனில் இது நோய் எதிர்ப்பு சக்தி, பல் வளர்ச்சி மற்றும் எலும்புகளின் வலிமைக்கு முக்கியமானது.
- ஆரஞ்சு
- கொய்யபழம்
- கிவி பழம்
- லிச்சி
- எலும்பிச்சை
- சாத்துக்குடி
- நெல்லிக்காய்
- ஸ்ட்ராபெர்ரி
போன்ற சி நிறைந்த உணவுகள் உங்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு எலும்பு மற்றும் திசு வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. நீங்கள் ஒரு நாளைக்கு 85 மில்லிகிராம் இலக்கு வைத்து வைட்டமின் சி நிறைந்த உணவுகளை எடுத்துகொள்ளவேண்டும்.
பழங்கள்
பழங்கள் மற்றும் காய்கறிகள் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களாகும். கர்ப்ப காலத்தில் பழங்கள் உங்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. பழங்களில் நார்ச்சத்து நிறைந்துள்ளது என்பதால் ஒரு நாளைக்கு மூன்று பழங்களாவது சாப்பிட வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
- மாம்பழம்
- அவகேடோ
- அத்திப்பழம்
- வாழைப்பழம்
- திராட்சை
- பெர்ரி
- ஆரஞ்சு
- ஆப்பிள்
- பேரிக்காய்
- பீச் பழம்
மேற்கண்ட உணவுகள் தான் மூன்று மாத கர்ப்பம் உணவுகள் (First Trimester Pregnancy Foods). கர்ப்பகாலத்தில் மூன்று மாதங்களுக்கு மேல் உங்களுக்கு பசி உணர்வு அதிகமாகவே இருக்கும். அதனால் நீங்கள் அதிகம் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துகொள்ளவேண்டியது அவசியமாகிறது.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
அப்போது தான் கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும், அறிவுத்திறனுக்கும் , ஆரோக்கியத்திற்கும் எந்த ஒரு பிரச்சனையும் வராது. மேலும் எதிர்ப்புசக்தியும் மேம்படும். மேற்கொண்டு எழும் சந்தேகங்களுக்கு உங்கள் மருத்துவரின் ஆலோசனையினை பெற்றுகொள்ளுங்கள்.