கர்ப்பிணிகள் பிரசவத்தின் இறுதி காலத்தில் குழந்தைக்காக காத்திருக்கும் போது குழந்தைக்கும் தாய்க்கும் பாதுகாப்புக்காக செய்ய வேண்டிய விஷயங்கள், மருத்துவமனைக்கு என்ன எடுத்து செல்ல வேண்டும் என்பதை பார்க்கலாம் ? (Delivery Bag Checklist for Mom in Tamil)
கர்ப்பிணி பிரசவத்துக்கு மருத்துவமனை செல்ல எப்போது தயார் படுத்துவது?
மருத்துவமனை செல்வதற்கு வேண்டிய பொருள்களை எடுத்து வைப்பதில் சில நெகிழ்வுத்தன்மைகள் உங்களுக்கு உதவலாம். எல்லா பெண்களுக்கும் ஒரே மாதிரியான தேவைகள் இருக்காது.
ஒவ்வொருவருக்கும் இது மாறுபடும். ஒரு பெண்ணுக்கு அதிக ஆபத்துள்ள கர்ப்பம் இருந்தால் அவர்களுக்கு முன்கூட்டியே பிரசவம் என்று நினைத்தால் முன்கூட்டியே பிரசவத்துக்குரிய பொருளை எடுத்து வைக்க வேண்டும்.
மேலும் கர்ப்பிணி இரட்டை கர்ப்பமாக இருந்தால் தாய் 35 வார கர்ப்பக்காலத்திலேயே மருத்துவமனைக்கு வேண்டிய பொருள்களை எடுத்துவைக்க வேண்டும். மற்ற கர்ப்பிணிகள் 37 மற்றும் 38 வாரங்களுக்கு இடையில் எடுத்து வைக்கலாம்.
அதே நேரம் கர்ப்பத்தின் இறுதி ட்ரைமெஸ்டரில் பிரசவம் முன்கூட்டியே உங்களுக்கு தேவைப்படலாம் என்று மருத்துவர் எச்சரித்தால் வேண்டிய மாற்றங்களை செய்துகொள்ளலாம்.
சிலருக்கு குறைப்பிரசவ அபாயங்கள் இருக்கலாம். இவர்களும் முன்கூட்டியே பிரசவத்துக்குரிய பொருள்களை எடுத்து வைக்க வேண்டும்.
பெரும்பாலும் கர்ப்பகாலத்தில் பிரசவம் கணிக்கக்கூடிய தேதியில் 5% குழந்தைகள் மட்டுமே பிறக்கிறார்கள் என்பதால் 37 வாரங்களுக்கு பிறகும் நீங்கள் காலதாமதம் ஆக்க கூடாது.
பிரசவத்திற்கு கர்ப்பிணி எடுத்து வைக்க வேண்டிய பொருள்கள் என்ன என்பதை பார்க்கலாம். (Delivery Bag Checklist for Mom in Tamil)
அத்தியாவசிய ஆவணங்கள்
கர்ப்பிணி காப்பீட்டு அட்டை வைத்திருந்தால் எடுத்து வைக்க வேண்டும். இது குறித்து மருத்துவமனை அல்லது பிறப்பு மையத்தை முன்கூட்டியே சரிபார்ப்பது நல்லது.
மருத்துவ பதிவுகளின் நகலை எடுத்து வைத்திருப்பது உதவியாக இருக்கும். பிரசவ இறுதி நேரத்தில் கர்ப்பிணி வரலாறு குறித்து மருத்துவர்கள் அறிந்துகொள்ளவும் சிகிச்சை அளிக்கவும் இவை உதவும்.
சுகாதார பொருட்கள்
சுகாதார விஷயங்களுக்கான பொருள்கள் கழிப்பறையில் பயன்படுத்த வேண்டியவை, பல் துலக்குதல், பேஸ்ட், டியோடரண்ட், சீப்பு, போன்றவற்றை பேக் செய்வது நல்லது. சோப்பு, ஷாம்பு மற்றும் லோஷன் போன்றவற்றையும் எடுத்துவைத்துகொள்ளலாம்.
சானிட்டரி நாப்கின்கள்
பிரசவத்துக்கு பிறகு உதிரபோக்கு அதிகமாக இருக்கும் அப்போது சானிட்டரி நாப்கின்கள் தேவைப்படும். அதிகப்படியான உதிரப்போக்கு ஏற்படும் என்பதால் போதுமான அளவு நாப்கின்கள் இருப்பு வைத்திருப்பது நல்லது.
மருத்துவமனையில் சானிட்டரி நாப்கின்கள் கிடைக்கும் என்றாலும் உங்கள் வசதிக்கேற்ப சரியானதை தேர்வு செய்யுங்கள். சானிட்டரி நாப்கின்கள் கனமாகவும் வசதியாகவும் இருக்கட்டும்.
தளர்வான ஆடைகள்
ஆடைகள் தளர்வானதாக இருக்க வேண்டும். உங்கள் வசதிக்கேற்ப பைஜாமா, சல்வார், நைட்டி என்று எடுத்துகொள்ளலாம். காலணிகளும் க்ரிப் கால்களுடன் இருக்கட்டும்.
எனினும் குழந்தைக்கும் தாய்க்கும் தோல் தொடர்பு இருக்கும் வகையில் உடைகள் இருப்பது நல்லது. இதன் மூலம் தாய்ப்பால் கொடுப்பதும் எளிதாக இருக்கும்.
பிரசவ நேரத்தில் மருத்துவமனையில் அளிக்கும் பச்சை நிற ஆடை இதற்கு பயனளிக்கும். எனினும் பிரசவத்துக்கு பிறகு தாய் சொந்தமாக ஆடை அணியவே விரும்புகிறார்கள். வயிறு இன்னும் பெரிதாக இருக்கும் என்பதால் தளர்வான ஆடைகளே தேவையானவையாக இருக்கும். அதற்கேற்ப திட்டமிடுங்கள்.
உள்ளாடை
பிரசவத்துக்கு பிறகு உள்ளாடையும் வசதியானவையாக இருக்கட்டும். பருத்தியாலான ஒன்றை பயன்படுத்தலாம். வியர்வை அதிகம் இருக்கும் போது உள்ளாடைகளை மாற்ற வேண்டும் என்பதால் அதற்கேற்ப அதிக எண்ணிக்கையில் எடுத்துவையுங்கள். அதே போன்று நர்சிங் ப்ரா பால் கசிவை உறிஞ்ச உதவும். அதனால் இதையும் மறக்காமல் அதிகமாக எடுத்துவையுங்கள்.
கால்களுக்கு சாக்ஸ் கைகளுக்கு உறைகள்
பிரசவத்துக்கு பிறகு குளிரும் என்பதால் ஸ்வெட்டர், கனமான ஆடைகள், போர்வைகள் போன்றவற்றை தவிர்க்க கூடாது. காதில் குளிர்காற்று வீசுவதால் பலர் குளிரை எதிர்கொள்ளலாம். இவர்கள் காதுக்குள் பஞ்சு வைத்துகொள்ளலாம்.
குழந்தைக்கான ஆடை
குழந்தைக்கான மருத்துவமனை பையில் குழந்தை அணிய ஆடை, குழந்தை தொப்பிகள் போன்றவை இருக்கட்டும். காலுறை, கையுறையும் மெத்தென்று இருக்கட்டும். கருப்பையில் இருக்கும் குழந்தை வெளி உலகு வந்ததும் இந்த வெப்பநிலைக்கு பழக சில நாட்கள் அல்லது சில வாரங்கள் வரை ஆகலாம்.
மருத்துவமனையே குழந்தைக்கு வேண்டியவற்றை வழங்கினாலும் நீங்கள் குழந்தைக்கு பிரியமாக வைத்திருக்கும் ஆடைகளையும் எடுத்து வையுங்கள். குழந்தைக்கு எளிதாக அணிவிக்கும் வகையில் ஆடைகள் இருக்க வேண்டும் என்பதை மட்டும் கவனியுங்கள்.
குழந்தையை கைகளில் வாங்கும் போது குழந்தையை கிடத்த படுக்கைகள் கிடைக்கிறது. எனினும் பருத்தி புடவைகள் 4 அல்லது 5 எடுத்து வைப்பது குழந்தைக்கு கருப்பையில் அரவணைப்பாக இருந்தது போன்ற உணர்வை அளிக்கும்.
குழந்தைக்கு டயபர்
குழந்தைக்கு டயபர் போன்றவற்றை எடுத்து வைப்பதை விட வீட்டில் பருத்தி துணிகளை வெந்நீரில் துவைத்து வெயிலில் காயவைத்து சிறிய லங்கோட்டா போன்று தயார் செய்து வைத்து அதை எடுத்து வைக்கலாம். இது குழந்தையின் சருமத்துக்கு நல்லது எந்த பாதிப்பும் உண்டு செய்யாது.
குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுப்போம் என்றாலும் தாய்ப்பால் வருவதில், அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டால் அதை சமாளிக்க ப்ரஸ்ட் பம்ப் தேவைப்படலாம். அது தேவையில்லாத நிலையிலும் கையில் வைத்திருப்பது பாதுகாப்பானது.
பால் பாட்டில்
ஃபார்முலா பால் அளிப்பதற்கு வேண்டிய பாட்டில்களும் கையில் வைத்திருப்பது நல்லது. பிரசவம் முடிந்த பிறகு ஒவ்வொன்றையும் தேடி வாங்கியிராமல் இவை எல்லாம் முன்கூட்டியே வாங்கி வைத்திருப்பது தக்க நேரத்தில் உதவும்.
ப்ளாஸ்க்
கெட்டில், ப்ளாஸ்க் போன்றவை கண்டிப்பாக இருக்க வேண்டும். இன்று மருத்துவமனையில் தனியறை கேட்கும் போது இவையெல்லாம் அவசியமாக இருக்கலாம்.
மற்றும்
கர்ப்பிணிகள் அவசர காலத்துக்கு ஃபோன் பயன்படுத்துவார்கள். உடன் சார்ஜர்கள் இருப்பது நல்லது.
கண் கண்ணாடி – கர்ப்பிணி சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு செல்லும் போது காண்டாக்ட் லென்ஸ் பயன்பாடு கொண்டிருந்தால் அதை அகற்ற கேட்கப்படலாம்.
பிரசவ வலி வரும் போது கண்களுக்கான தலையணை, சிறிய மின்விசிறி மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் உதவும். முதல் பிரசவ வலி நீண்ட நேரம் இருக்கும் என்பதால் இவர்களுக்கு மசாஜ் செய்ய உதவும்.
பிரசவத்துக்கு முன்கூட்டியே மருத்துவமனை செல்வதாக இருந்தால் பிடித்த பாடல்கள் அடங்கிய ப்ளே லிஸ்ட்கள், ஹெட் ஃபோன் போன்றவற்றை கையோடு கொண்டு செல்லலாம்.
புத்தகம், மடிக்கணினி போன்றவை கூட மருத்துவமனை அனுமதித்தால் எடுத்து செல்லலாம். நர்சிங் தலையணைகள் தனியாக கிடைக்கிறது. அதையும் எடுத்து செல்லலாம்.
முடிவுரை
பிரசவ நேரத்தில் தாய்க்கும் சிசுவுக்கும் என்ன தேவைப்படும் என்பதை உணர்ந்து அந்த மருத்துவ பையை தயாராக வைத்திருக்க வேண்டும்.
கர்ப்பிணிகள் மூன்றாவது மூன்று மாதங்களின் தொடக்கத்தில் சில பொருள்களை ஒதுக்கி வைப்பது இறுதி நேரத்தில் கவலைப்படவோ பதட்டப்படவோ வேண்டியிருக்காது.
பெரும்பாலும் முன்கூட்டியே பொருள்களை பேக் செய்வது வலி நேரத்தில் பதட்டமில்லாமல் வைத்திருக்க செய்யும்.