பிரசவத்தின் போது உண்டாகும் சிக்கல்கள்! (complications during pregnancy in tamil)

Deepthi Jammi
5 Min Read

கர்ப்பிணிகளின் மூன்றாம் ட்ரைமெஸ்டர் காலம் மிக மிக முக்கியமானவை. பிரசவக்காலத்தை எட்டும் இந்த மாதங்களில் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். பிரசவத்தை எட்டும் இந்த மாதங்களில் சில சிக்கல்களை சந்திக்க கூடும் (complications during pregnancy in tamil).

36 வாரங்களை கடந்து எப்போது வேண்டுமானாலும் பிரசவம் நடக்கலாம் என்னும் நிலையில் சில கர்ப்பிணிகள் 42 வாரஙகள் வரையும் கூட பிரசவ வலி உண்டாகாமல் இருக்கலாம். கர்ப்பிணிக்கு முந்தைய பிரசவத்தில் அறுவை சிகிச்சை நடந்திருந்தால், அதிக வயதை கொண்டிருந்தால், முன்கூட்டியே பிரசவித்திருந்த வரலாறை கொண்டிருந்தால் பிரசவக்காலத்தை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.

அதிக நேரம் வலி

கர்ப்பிணிக்கு முதல் குழந்தையாக இருக்கும் போது பிரசவ வலி அதிக நேரம் இருக்கலாம். எதிர்பார்த்ததை விட அதிக நேரம் வலியோடு போராடுவார்கள். ஆய்வுகள் 8% கர்ப்பிணிகள் இந்த அதிக நேர பிரசவ வலி சிக்கலை கொண்டிருப்பதாக சொல்கிறது.

முதல் கர்ப்பத்தின் போது ஒரு பெண் 20 மணி நேரம் வரை பிரசவ சிக்கலை கொண்டிருக்கலாம். இரண்டாவது கர்ப்பத்தின் போது இந்த வலி உணர்வு நேரம் 14 மணி நேரமாக குறைகிறது. எனினும் இதை பிரசவ சிக்கல் என்று சொல்ல முடியாது.

கர்பப்பை வாய் மெதுவான செயல்திறன் கொண்டிருப்பது, குழந்தை அதிக எடையுடன் இருப்பது, பிறப்பு பகுதி சிறியதாக இருப்பது, இடுப்பு எலும்பு ஒத்துழைக்காமை, மன அழூத்தம், பயம் போன்றவை கூட இதற்கு காரணங்களாகிறது. கருப்பை சுருக்கங்களை போக்க வழி செய்யப்படும் அப்படியும் இயலாத நிலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

இதையும் தெரிந்து கொள்ள: கர்ப்ப காலதில் உடல் சோர்வு நீக்க என்ன செய்யலாம்?

பனிக்குடம் உடைதல்

பனிக்குடம் கரு உடைந்து வெளியேறும் நிகழ்வை உணர்த்துவதற்காக முன்கூட்டியே இந்த நிகழ்வு நடைபெறுகிறது. இந்த நீர் பெண்களின் பெண் உறுப்பு வழியாக வெளியேறும். இந்த நீர் உடைந்த 24 மணி நேரத்துக்குள் பிரசவம் நிகழ தொடங்கும் பனிக்குடம் உடைந்த உடன் கர்ப்பிணீ பெண் தொடர்ந்து மருத்துவரின் தொடர் கண்காணீப்பில் பராமரிக்கப்படுவார். பெண்ணின் பனிக்குட நீர் உடைந்து பிரசவம் தொடங்கவில்லை எனில் கருப்பைக்கு தொற்று ஒரு முக்கிய கவலையாக மாறக்கூடும்.

மூச்சுத்திணறல்

ஆக்ஸிஜன் போதுமானதாக இல்லாததால் குழந்தை பிறப்பதற்கு முன்பு அல்லது பிறந்த உடன் உடனடியாக இந்த நிலை உண்டாகலாம். இது சிக்கல்கள் கொண்ட நிலையே ஹைபோக்ஸிமியா, குறைந்த ஆக்ஸீஜன் அளவு, அதிக கார்பன்டை- ஆக்ஸைடு,அமிலத்தன்மை, ரத்தத்தில் அதிக அமிலம், இதய பிரச்சனைகள், உறுப்பு செயலிழப்பு போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம்.

பிரசவத்துக்கு முன்கூட்டியே இதயத்துடிப்பு மற்றும் பிஹெச் அளவு குறைவாக இருக்கலாம். இது அதிக அமிலத்தன்மையை குறிக்கிறது. இந்நிலையில் தாய்க்கு ஆக்ஸ்ஜன் வழங்குவார்கள் அல்லது அறுவை சிகிச்சை செய்யப்படும்.

அசாதாரண இதயத்துடிப்பு

பிரசவ நேரத்தில் அசாதாரண இதய துடிப்பு சிக்கல் என்று சொல்ல முடியாது. குழந்தைக்கு அதிக ரத்த ஓட்டத்தை பெற மருத்துவர் சிகிச்சை அளிப்பார் வெகு அரிதாக அது சிக்கலாகவே இருக்கும் போது உடனடியாக பிரசவம் நடக்க வேண்டியிருக்கும். அப்போது பிரசவம் உடனடியாக நிகழ பெண் உறுப்பு திறப்பை விரிவுப்படுத்த மருத்துவர் முயல்வார்.

தோள்பட்டை டிஸ்டோசியா

குழந்தையின் தலை வந்த பிறகு தோள்பட்டை வெளியே வராது. அது உள்ளேயே இருக்கும். இதுவும் சிக்கலான நிலை தான். இது வெகு அரிதாகவே உண்டாகும். குறிப்பாக முதல் பிரசவத்தை சந்திக்கும் பெண்களுக்கு இந்த நிலை உண்டாகும். எனினும் மருத்துவர்கள் குழந்தையின் தோள்பட்டையை வெளியே எடுக்க தாயின் நிலையை மாற்றி முயற்சிப்பார்கள். பெண் உறுப்பு விரிவுப்படுத்தும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம்.

இது சிக்கல் இல்லாத நிலை என்றாலும் குழந்தையின் தோள்பட்டை காயம், கைகள் பாதிப்பு, நரம்பு காயம் போன்றவை உண்டாகலாம். எனினும் இது குணமாககூடியதே. வெகு அரிதான சந்தர்ப்பங்களில் உயிருக்கு ஆபத்தை உண்டாக்க கூடியது. மூளை பாதிப்பை உண்டாக்கும். தாய்க்கு மலக்குடல் கிழிவது, கர்பப்பை வாய் , பிரசவத்துக்கு பிறகு அதிக ரத்தபோக்கு போன்றவற்றை உண்டாக்கும்.

குழந்தையின் நிலை

குழந்தை நேராக இல்லாமல் குறுக்கே திரும்பிய நிலையில் இருந்தாலும் சுகப்பிரசவமாவதில் சிக்கல் உண்டாக கூடும். குழந்தைக்கு மூச்சுத்திணறல் உண்டாகி குழந்தையின் கழுத்தை தொப்புள் கொடிசுற்றியிருந்தால் அது சிக்கலான பிரசவ நிலைதான். கர்ப்பப்பை வாய்ப்பகுதி வழியாக தொப்புள் கொடி முதலில் வந்துவிட்டாலும் குழந்தைக்கு மூச்சுத்திணறல் உண்டாகலாம். கருப்பைக்கு நெடுக்கு வாட்டத்தில் குழந்தை மூச்சுத்திணறலோடு இருக்கும் போது அது ஆபத்தான நிலை என்பதால் இந்த நேரத்தில் அறுவை சிகிச்சை தேவைப்படும்.

சில நேரங்களில் பிரசவத்தின் போது குழந்தையின் தலை வெளியே வராமல் கால்கள் வரக்கூடும் பிரீச் பொசிஷன் என்று சொல்லகூடிய இந்த நிலையில் கால் மற்றும் புட்டம் வெளிவரும். இது அரிதானது. எனினும் இந்த வழியில் பிறக்கும் குழந்தைக்கு மூளை குறைபாடு உண்டாக வாய்ப்புண்டு.

இதையும் தெரிந்து கொள்ள: கர்ப்ப காலத்தில் உடல் எடை எவ்வளவு இருக்கலாம்!

நஞ்சுக்கொடி முன்னே வருவது

பிரசவ நேரத்தில் பெண் உறுப்பு வழியாக குழந்தையின் தலையே முதலில் வர வேண்டும். ஆனால் அதற்கு மாறாக குழந்தையின் நஞ்சுக்கொடி வெளியே வந்தால் கர்ப்பபை விட்டு துண்டிக்கப்படலாம். அப்போது தாய்க்கு அதிகளவு ரத்தபோக்கு இருக்கும். அப்போது பிரசவத்தின் சிக்கல் உண்டாகி அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

தாய்க்கு இடுப்பு எலும்பு விரிவடைவதில் சிக்கல்

குழந்தை கர்ப்பப்பை வாய் வழியாக பெண் உறுப்பில் வெளியேற தாயின் இடுப்பு எலும்பு ஒத்துழைக்க வேண்டும். உயரம் குறைவான பெண்களுக்கு இடுப்பு எலும்பு இயல்பாகவே சுற்றளவு சிறியதாக இருக்கும். இது செபலோ பெல்விக் டிஸ்புரோபோர்ஷன் என்று சொல்வார்கள்.

இந்த நிலையில் தாய் இருக்கும் போது குழந்தையின் எடையும் அதிகமாக இருந்தால் குழந்தையால் எளிதாக வெளியே வரமுடியாது. அதிக அழுத்தம் கொடுக்க முயற்சித்தாலும் குழந்தையின் மிருதுவான மண்டை ஓடு வெளியே வந்து தலை அளவு குறையவோ மூளை பாதிக்கவோ செய்யும்.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!

சிசேரியனுக்கு பிறகு

முதல் குழந்தை சிசேரியனாக பிறந்து இரண்டாவது குழந்தை சுகப்பிரசவத்துக்கு திட்டமிடும் போது சில ஆண்டுகள் இடைவெளி இருக்க வேண்டும். சி-பிரிவுக்குப் பிறகு சுக பிரசவம் சாத்தியமா? முதல் குழந்தை அறுவை சிகிச்சை செய்து இரண்டாவது குழந்தை சுகப்பிரசவமாக முயற்சிக்கும் போது முதல் பிரசவத்தின் வடு திறக்க வாய்ப்புள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் குழந்தைக்கு ஆக்ஸிஜன் கிடைப்பதில் பற்றாக்குறை உண்டாகலாம். அப்பொது அறுவை சிகிச்சை அவசியமாகிறது. இந்த நிலையில் தாய்க்கு அதிக ரத்தப்போக்கு உண்டாகலாம்.

நோய்கள்

கர்ப்பகால நோய்களை கொண்டிருந்தால் அதுவும் கட்டுகடங்காமல் இருந்தால் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு இதய நோய், ஆஸ்துமா போன்ற நோய்கள் பிரசவகாலத்தை சிக்கலாக்க செய்யும்.

5/5 - (195 votes)

பொதுத்துறப்பு

பொதுத்துறப்பு ஜம்மி ஸ்கேன்ஸ் (Jammi Scans) வழங்கும் கட்டுரைகள், தகவல்கள், வீடியோக்கள் போன்றவை தகவல் தொடர்பு நோக்கங்களுக்காக மட்டுமே. இவை எல்லாமே மகப்பேறு மருத்துவர்கள், ஸ்கேன் பரிசோதனை நிபுணர்கள், அதற்கான நடைமுறைகள் போன்றவை நிபுணர்களால் வழங்கப்படும் பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எங்கள் இணையதளத்தில் இருக்கும் கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் பொதுவான விஷயங்கள் குறித்து மட்டுமே வழங்கப்படுகின்றன. வீடியோக்களில் இருக்கும் தகவல்களும் , கட்டுரைகளும் தனிப்பட்ட நபர்களுக்கான நோயறிதல் குறித்தவை என்று கருதக்கூடாது. அதனால் இதன் வாயிலாக வெளியிடப்படும் சிகிச்சை முறைகளை சுயமாக செய்து கொள்ள கூடாது. ஜம்மி ஸ்கேன்ஸ் தளத்தில் வெளியான கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் மூலம் நோயறிதலையும், சிகிச்சையையும் சுயமாக செய்து கொள்ள கூடாது. மாறாக உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனை செய்த பிறகு உரிய சிகிச்சை பெறுவது நல்லது. ஜம்மி ஸ்கேன்ஸ் உருவாக்கும் (இணையதளம் மற்றும் அச்சு) தகவல்கள் மருத்துவ ரீதியிலான பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எந்தவொரு தனி நபருக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் கட்டுரைகள் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி கூறுகிறோம். அதனால் தனிப்பட்ட முறையில் சுயமாக ஒருவர் சிகிச்சை கொள்வதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது என்பதையும் இத்தருணத்தில் உறுதி அளிக்கிறோம். ******** உங்களின் பாதுகாப்பை எங்களின் முன்னுரிமையாகக் கருதி, குறைந்தபட்ச நபர்களுடன் செல்லுமாறு ஜம்மி ஸ்கேன்ஸ் கேட்டுக்கொள்கிறது. PC-PNDT சட்டத்தின்படி, உங்களுடன் வரும் நபர்கள் ஸ்கேன் அறைக்குள் உங்களுடன் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பானதாக்க இந்த கடினமான காலங்களில் நீங்கள் எங்களுடன் ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறோம்.
Share This Article
Follow:
டாக்டர். தீப்தி ஜம்மி (இயக்குனர், ஜம்மி ஸ்கேன்கள்) எம்.பி.பி.எஸ்., எம்.எஸ் (மகப்பேறு மற்றும் பெண்ணோயியல்) கரு மருத்துவத்தில் பிந்தைய முனைவர் பெல்லோஷிப் டாக்டர்.தீப்தி சர்வதேச மற்றும் தேசிய மாநாடுகளில் கரு மருத்துவத்தில் தங்கப் பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார், மேலும் பல மதிப்புமிக்க பிராந்திய இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி நேர்காணல்களில் தோன்றியுள்ளார்.
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »