கர்ப்ப காலத்தில் எல்லா ஊட்டச்சத்துக்களும் கர்ப்பிணிக்கு தேவை என்றாலும் கால்சியம் மிக மிக முக்கியமானது. கர்ப்ப காலத்தில் கால்சியம் (Calcium During Pregnancy in Tamil) வயிற்றில் வளரும் சிசுவுக்கு வலுவான எலும்புகள், பற்கள், இதயம், நரம்புகள் மற்றும் தசைகளை உருவாக்க தேவைப்படும் ஊட்டச்சத்துக்களில் மிக மிக முக்கியமானது.
குறிப்பாக கர்ப்பத்தின் கடைசி மூன்று மாதங்களான மூன்றாம் ட்ரைமெஸ்டரில் உங்கள் உணவில் கால்சியம் போதுமான அளவு பெறுவது மிகவும் முக்கியமானது. இந்த மாதங்களில் குழந்தையின் வளர்ச்சி மிக வேகமாக வளரும். அதோடு இந்த மாதத்தில் கால்சியம் தேவையும் அதிகமாக இருக்கும்.
கால்சியம் சத்து குறைபாடு ஆபத்துகள் என்ன?
கர்ப்பிணிகள் போதுமான கால்சியம் பெறுவதன் மூலம் உயர் இரத்த அழுத்தம் மற்றும் ப்ரீக்ளாம்ப்சியாவின் அபாயத்தை குறைக்கலாம். கர்ப்பமாக இருக்கும் போது கால்சியம் கிடைக்கவில்லை என்றால் குழந்தைக்கு வேண்டிய கால்சியம் கிடைக்காத போது வேண்டிய கால்சியத்தை தாயின் எலும்புகளில் இருந்து எடுத்துகொள்ள செய்யும்.
இதனால் தாயின் ஆரோக்கியம் பாதிக்கபடலாம். கால்சியம் தாய்ப்பால் சுரப்புக்கும் அவசியம். இவற்றிலும் பாதிப்பை எதிர்கொள்ளலாம். அதோடு குழந்தை பிறப்புக்கு பிறகு தாய் எதிர்காலத்தில் எலும்பு இழப்பு ஆஸ்டியோபொராசிஸ் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளும் அபாயம் உண்டு.
கர்ப்ப காலத்தில் கால்சியம் (Calcium During Pregnancy in Tamil) ஏன் அவசியம்?
கர்ப்பமாக இருக்கும் போது வளரும் குழந்தைக்கு வலுவான எலும்புகள் மற்றும் பற்களை உருவாக்க கால்சியம் அவசியம் தேவைப்படுகிறது. கால்சியம் குழந்தைக்கு ஆரோக்கியமான இதயம், நரம்புகள் மற்றும் தசைகள் வளர உதவுகிறது. அத்துடன் சாதாரண இதய துடிப்பு மற்றும் இரத்தம் உறைதல் திறனை வளர்க்கவும் உதவுகிறது.
கால்சியம் இயல்பாகவே உடலுக்கு முக்கியமான தேவையான சத்து. கர்ப்ப காலத்தில் தாயின் ஆரோக்கியத்துக்கும் குழந்தையின் ஆரோக்கியத்துக்கும் கரு வளர்ச்சிக்கும் அதிக கால்சியம் தேவைப்படுகிறது.
குழந்தையின் வளர்ச்சியில் முழுமையான எலும்புக்கூட்டை உருவாக்க கால்சியம் பிரதானமாக தேவை. கருவின் இதயம், தசைகள், நரம்புகள் மற்றும் ஹார்மோன்களின் ஆரோக்கியத்துக்கு கால்சியம் முக்கியமான ஊட்டச்சத்து ஆகும்.
குழந்தையின் வளர்ச்சிக்காக கர்ப்பகாலம் முழுமையும் குழந்தைக்கு வேண்டிய கால்சியத்தை கொடுப்பது அவசியம். தினசரி உங்களுக்கு வேண்டிய கால்சியம் அளவு குறித்து நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளார்கள்.
இதை எடுக்கும் போது நீங்களும் வயிற்றில் வளரும் கருவும் ஆரோக்கியமாக இருப்பீர்கள். கர்ப்பகாலத்தில் தினசரி வேண்டிய கால்சியம் அளவு எவ்வளவு என்பதை பார்க்கலாம்.
கர்ப்ப காலத்தில் கால்சியம் (Calcium During Pregnancy in Tamil)எவ்வளவு தேவை?
உங்கள் உடல் கால்சியத்தை உருவாக்காது. நீங்கள் உணவுகளிலிருந்து மற்றுமே அதை பெற முடியும். கர்ப்ப காலத்தில் கால்சியம் (Calcium During Pregnancy in Tamil) அளவு என்பது கர்ப்பிணி பெண்ணின் வயதுக்கு ஏற்ப மாறுபடும். 19 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஒவ்வொரு நாளும் 1000 மிகி கால்சியத்தை எடுத்துகொள்ள வேண்டும் என்று அமெரிக்கன் மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவக்கல்லூரி பரிந்துரைக்கிறது.
கால்சியம் குழந்தையின் வளர்ச்சியை ஆதரிக்கும் நேரம் அவர்களின் எலும்புகள் மற்றும் உடலில் கால்சியம் சேமித்து வைக்க போதுமானதாக இருக்கும். 18 வயது மற்றும் அதற்கு குறைவான கர்ப்பிணி பெண்கள் ஒவ்வொரு நாளும் குறைந்தது 1300 மிகி கால்சியம் பெற வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.
அதோடு கர்ப்ப காலத்தில் போதுமான அளவு கால்சியம் எடுப்பது உங்களுக்கும் பிறந்த குழந்தைக்கும் எதிர்காலத்தில் எலும்புகளை வலுப்படுத்தவும், வாழ்க்கையின் பிற்பகுதியில் எலும்பு இழப்பை தடுக்கவும் உதவும்.
கால்சியம் மாத்திரைகளாக கிடைக்கும் என்றாலும் உணவில் அதிகம் கால்சியம் சேர்ப்பதை உறுதி செய்யுங்கள். தினம் 3 கப் பால் பொருள்கள் உடன் மற்ற கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்.
அதே நேரம் கால்சியம் உணவுகள் எடுத்துகொண்டாலும் உடல் கால்சியத்தை உறிஞ்சுகொள்ள வைட்டமின் டி சத்தும் தேவை. அதனால் கர்ப்பகால உணவில் போதுமான அளவு வைட்டமின் டி கிடைப்பதையும் உறுதி செய்யுங்கள்.
உணவு முறையில் உங்களால் போதுமான கால்சியம் பெற முடியவில்லை எனில் மருத்துவரை அனுகி கால்சியம் மாத்திரைகள் குறித்து பேசலாம். கால்சியம் நிறைந்த உணவுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
கால்சியம் நிறைந்த உணவு ஆதாரங்கள்
செறிவூட்டப்பட்ட பால் பொருள்கள் 1200 மிகி அளவில் உடலுக்கு தோராயமாக 300 மிகி கொடுக்கிறது. இது தினசரி கால்சியம் தேவையை பூர்த்தி செய்யும்.
ஒரு டம்ளர் செறிவூட்டப்பட்ட ஆரஞ்சு சாறில் ஒரு சேவைக்கு 300 மிகி அளவு உள்ளது.
இவை தவிர கீரைகள், கொட்டைகள் மற்றும் பீன்ஸ் போன்ற பிற உணவுகள் கொஞ்சம் குறைவாக உள்ளன. நீங்கள் கால்சியம் சத்தை பெறுவதற்கு பால் பொருள்களை விரும்பினால் நீங்கள் பேஸ்டுரைஸ் செய்யப்பட்ட உணவை உறுதிபடுத்துங்கள்.
குறைந்த கொழுப்பு மற்றும் கொழுப்பு இல்லாத பாலில் கூடுதல் கொழுப்பு மற்றும் கலோரிகள் இல்லாமல் முழு பாலில் உள்ள அனைத்திலும் கால்சியம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதை எடுப்பதற்கு முன்பு உங்கள் கர்ப்பகால எடை அளவு அதிக அளவில் உள்ளீர்களா என்பதன் அடிப்படையில் மருத்துவரிடம் ஆலோசியுங்கள்.
கால்சியத்தின் சிறந்த உணவு
- பால் – 1 கப் அளவில் 276 மிகி கால்சியம் உள்ளது
- சீஸ் – 2 துண்டுகள் 1.5 அவுன்ஸ் 307 கிராம் கால்சியம் உள்ளது)
- தயிர் 8- அவுன்ஸ் அளவில் குறைந்த கொழுப்பு மற்றும் 415 மிகி கால்சியம் உள்ளது.
- கேஃபிர் ( 1 கப் குறைந்த கொழுப்பு 316 மிகி கால்சியம் உள்ளது)
கீரைகள், ப்ரக்கோலி, சோயா பீன்ஸ், வேகவைத்த பீன்ஸ், பாதாம், கொண்டைக்கடலை, ஓட்மீல், தானியங்கள். உலர் அத்திப்பழம் போன்றவை எடுக்கலாம்.
இவை தவிர அப்பளம், ஆரஞ்சு சாறு, பாதாம் பால், தானியங்கள் போன்றவையும் கால்சியம் நிறைந்தவை.
நீங்கள் சைவ உணவை உண்பவர்களாக இருந்தால் அனைத்து வைட்டமின்களையும் நீங்கள் முழுமையாக பெறுகிறீர்களா என்பதை உறுதி செய்யுங்கள். ஏனெனில் கர்ப்பமாக இருக்கும் போது சரியான ஊட்டச்சத்து பெறுவது அவசியம்.
சைவ உணவுகளில் பல்வேறு வகைகள் உண்டு. எனினும் நீங்கள் எவ்வளவு கால்சியம் பெறுகிறீர்கள் மற்றும் எவ்வளவு உறிஞ்சுகிறீர்கள் என்பதை பொறுத்தது. கடுமையான சைவ உணவு பின்பற்றுபவர்களுக்கு கால்சியத்துக்கான தினசரி தேவையை பூர்த்தி செய்வது சவாலானதாக இருக்கலாம். எனினும் திட்டமிட்டு கர்ப்ப கால உணவு எடுக்கும் போது வேண்டிய கால்சியம் பெறலாம்.
லாக்டோஸ் சகிப்புத்தன்மை கொண்டிருக்கும் கர்ப்பிணிகள் பால் எடுத்துகொள்ள முடியாது. எனினும் உங்களுக்கு தேவையான கால்சியத்தை மற்ற உணவுகளில் எடுக்கலாம்.
கால்சியத்துடன் வைட்டமின் டி எடுத்துகொள்வதும் அவசியம். இது உடலில் கால்சியம் சத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. கர்ப்ப காலத்தில் வைட்டமின் டி என்பது 600 யூஐ அளவு பெற வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இயற்கையாகவே வைட்டமின் டி தயாரிக்க உடல் சூரிய ஒளியை பயன்படுத்துகிறது. இதை சில உணவுகள் மற்றும் மாத்திரைகள் வழியாகவும் உடல் பெற முடியும்.
வைட்டமின் டி பெறுவதற்கு தினமும் சூரிய ஒளியில் நில்லுங்கள். சருமத்தில் உள்ள வேதிப்பொருளை வைட்டமின் டி ஆக மாற்ற இது உதவும். பல கால்சியம் நிறைந்த உணவுகள் பால், ஆரஞ்சு சாறு, தானியங்கள், தயிர் மற்றும் முட்டை போன்ற வைட்டமின் டி உடன் பலப்படுத்தப்படுகின்றன.
வைட்டமின் டி சப்ளிமெண்ட் எடுப்பதாக இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று எடுப்பது பாதுகாப்பானது.
கால்சியம் பற்றாக்குறையை உண்டு செய்யும் காஃபன் பானங்கள் தவிர்க்க வேண்டும். இது சிறந்த டையூரிடி ஆக செயல்பட்டு அதிகமாக சிறுநீர் கழிக்க செய்யும் . சிறுநீர் அதிகரிப்பு உடலில் இருந்து கால்சியத்தை வெளியேற்றும். காஃபி பானங்கள் தவிர்க்காமல் அளவுடன் எடுத்துகொள்ளுங்கள்.
கால்சியம் மாத்திரை எடுக்கும் போது பக்கவிளைவுகள் உண்டாக வாய்ப்புண்டு. மருத்துவர் பரிந்துரைக்கும் அளவு மட்டும் கால்சியம் எடுப்பது பாதுகாப்பானது இல்லையெனில் வீக்கம், வாயு, அல்லது மலச்சிக்கல் போன்ற உணர்வை உண்டு செய்யலாம். அதனால் உணவுடன் மாத்திரைகள் சேர்த்து வந்து பிறகு மாத்திரை அளவை மருத்துவரின் ஆலோசனையுடன் குறைப்பது பாதுகாப்பானது.
அதிக அளவு கால்சியம் உடலில் சிறுநீரக கற்களை உண்டு செய்யலாம். மற்றும் உடல் துத்தநாகம் மற்றும் இரும்புச்சத்து உறிஞ்சுவதை தடுக்கலாம். அதனால் ஆரோக்கியமான கருவின் வளர்ச்சி, தாயின் ஆரோக்கியம் பிரசவ ஆரோக்கியம் உறுதி செய்ய கால்சியம் குறைபாடு இல்லாமல் பார்த்துகொள்வது நல்லது. கர்ப்பகாலத்தில் கால்சியம் குறித்து மருத்துவர் சொல்வது என்ன என்பதையும் நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள்.
கர்ப்பிணி பெண்ணுக்கு 500 மிகி முதல் 1000 மிகிராம் வரை கால்சியம் தேவை. இது கர்ப்பிணிக்கும் வளரும் கருவுக்கும் எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும்.
கால்சியம் மாத்திரைகள் பெரிதாக உள்ளது இதை சாப்பிட்டால் மலச்சிக்கல் வருகிறது, வாய்வு பிரச்சனை வருகிறது என்று தவிர்ப்பார்கள். ஆனால் கால்சியம் மாத்திரைகளுக்கு மாற்றாக பால் எடுத்துகொள்ளுங்கள்.
பால் அதிகமாக கால்சியம் கொண்டவை, இதை தாண்டி சீஸ், சால்மன் மீன், முட்டை மற்றும் நட்ஸ் வகைகளை தினமும் இரவு ஊறவைத்து மறுநாள் சாப்பிட வேண்டும்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
கர்ப்ப காலத்தில் கால்சியம் (Calcium During Pregnancy in Tamil) எடுத்துகொள்வது கருவின் வளர்ச்சியோடு தாய்ப்பால் சுரப்புக்கும் அதன் பிறகு ஆஸ்டியோபொராசிஸ் வரை தடுக்கவும் செய்யும். தாய்ப்பால் கொடுத்த பிறகும் 3 மாதங்களுக்கு டாக்டர் பரிந்துரையின் பெயரில் எடுத்துகொள்வது எலும்பு இழப்பை தவிர்க்க செய்யும்.
உங்கள் டாக்டர் இரும்புச்சத்து மாத்திரை மற்றும் கால்சியம் மாத்திரை இரண்டையும் கொடுத்திருந்தால் ஒன்று காலையிலும் மற்றொன்றை மாலையிலும் எடுத்துகொள்ள வேண்டும். அல்லது ஒரே நேரத்தில் எடுக்காமல் இடைவெளி விட்டு எடுங்கள். எக்காரணம் கொண்டும் மாத்திரைகளை தவிர்க்க வேண்டாம்.