சிசேரியன் வடுக்களை எப்படி அகற்றுவது?

Deepthi Jammi
8 Min Read

சிசேரியன் வடுக்கள், பெண் பிரசவிக்கும் போது சுகப்பிரசவத்துக்கு மாற்றாக சி-பிரிவு என்று அழைக்கப்படும் சிசேரியன் மூலம் குழந்தை பிறப்பு ஏற்படும் போது இந்த சிசேரியன் வடு (C-Section Scar in tamil) உண்டாகிறது. இது ஒரு பெரிய அறுவை சிகிச்சை ஆகும். இவை குறிப்பிடத்தக்க வடுவை ஏற்படுத்த செய்யும்.

சிசேரியன் சிகிச்சை கீறல்கள் (C-Section Scar)

இந்த வடு சிகிச்சையை பொறுத்து இரண்டு வகையாக இருக்கும். ஒன்று செங்குத்து நிலையில் மற்றொன்று கிடைமட்ட நிலையிலும் இருக்கும். வடு அதன் திசையை பொறுத்து வித்தியாசமாக இருக்கும். அவசர காலத்தில் செய்யப்படும் சி-பிரிவுகளில் செங்குத்து வெட்டுக்கள் பொதுவானவை, அவை வேகமாக இருக்கும்.

வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு உடல்நலக்குறைவு உண்டாகும் போது அறுவை சிகிச்சை நிபுணரை அணுகி உடனடியாக இந்த சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. இந்த வகை சி- பிரிவு வேதனையானது. செங்குத்து நிலையில் செய்யப்படும் சி- பிரிவு குணமடைய அதிக நேரம் எடுக்கும்.

Cesarean Section Types

முன் கூட்டியே திட்டமிடப்பட்ட கிடைமட்ட கீறல்கள் பொதுவானவை. இந்த கீறல்கள் உடற்பகுதியில் அந்தரங்க பகுதிக்கு சற்று மேல் இருக்கும். தொப்புளுக்கு இடையில் இருந்து அந்தரங்க கோடு வரை செங்குத்தாக வெட்டலாம்.

பலரும் கிடைமட்ட கீறல்களை விரும்புவார்கள். அவை மறைக்க எளிதாக இருக்கும். மேலும் விரைவாக குணமடையும். இந்த வகை சி – பிரிவு செங்குத்து வடிவ கீறல்களை காட்டிலும் குறைவான வலியை ஏற்படுத்துகின்றன.

சிகிச்சையின் போது 4 முதல் 6 அங்குலங்கள் குழந்தையின் தலை மற்றும் உடலை பொருத்துவதற்கு போதுமானதாக இருக்கும்.

சிசேரியன் சிகிச்சைக்கு பிறகு (C-Section Scar Recovery)

இந்த சி- பிரிவு பொதுவான பராமரிப்பு செயல்முறை என்றாலும் இது இன்னும் பெரிய அறுவை சிகிச்சை தான். இது காயம் மற்றும் தொற்றுநோயை தடுக்க கீறலை சரியாக பராமரிப்பது முக்கியம்.

தினமும் கீறலை சுத்தம் செய்ய வேண்டும். சிறிது வலி இருக்கும் என்றாலும் இன்னும் அந்த பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குளிக்கும் போது கீறலில் தண்ணீர் மற்றும் சோப்பு படலாம் (நீங்களே சில நாட்கள் கழித்து தான் குளிக்க அனுமதிக்கப்படுவீர்கள்) மென்மையான துணியால் கீறலை சுத்தம் செய்யவும். அந்த இடத்தில் ஸ்க்ரப் செய்ய வேண்டாம். பிறகு மென்மையான உலர்ந்த துணி கோண்டு உலர விடுங்கள்.

வயிற்று தொப்பையை குறைக்கிறேன் என்று இறுக்கமான ஆடைகள் அணிய வேண்டாம். தளர்வான ஆடைகளை அணியுங்கள். இறுக்கமாக அணியும் போது அது உங்கள் கீறலை எரிச்சலடைய செய்யலாம். தளர்வான ஆடைகள் கீறல் பகுதியை காற்றில் வெளிப்படுத்துகின்றன இதனால் விரைவில் குணமாக செய்ய முடியும்.

அதி தீவிரமான உடற்பயிற்சி வேண்டாம். சி-பிரிவுக்கு பிறகு உடற்பயிற்சி செய்வதாக இருந்தால் மருத்துவர் அனுமதியோடு செய்ய வேண்டும். இது மிக விரைவில் கீறல் திறக்க வழிவகுக்கும். குனியும் போதும் பொருள்களை தூக்கும் போதும் கவனமாக இருக்க வேண்டும். இந்த காயம் ஆறின பிறகு நீங்கள் சி- பிரிவு வடுவை அகற்றும் முயற்சியை மேற்கொள்ளலாம். இந்த கீறலை பாதுகாப்பாக குணப்படுத்துவதன் மூலம் வடுக்கள் தீவிரமாகாமல் தடுக்க முடியும்.

சி-பிரிவு சிகிச்சை கீறல் (C-section scar in tamil) பக்கவிளைவுகள் உண்டாக்குமா?

C-Section Scars Recovery

சி-பிரிவுக்கு பிறகு முதல் சில வாரங்களில் நீங்கள் வலி, இரத்தப்போக்கு, உணர்வின்மை மற்றும் தசைப்பிடிப்பு ஆகியவற்றை எதிர்கொள்வீர்கள். சி-பிரிவு கீறல் அரிப்பை ஏற்படுத்தலாம். ஆனால் விரைவில் குணமாக தூண்டுதலை எதிர்க்கவும்.

கீறல் இடத்திலிருந்து அதிக இரத்தப்போக்கு அல்லது கசிவு, சிவந்த விளிம்புகள், சி பிரிவு கீறல் வலி, 104 டிகிரிக்கு மேல் காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். இவை கடுமையான நோய்த்தொற்றின் அறிகுறியா இருக்கலாம்.

இந்த நேரத்தில் கீறல் குணமாக நோய்த்தொற்றை தடுக்க ஊட்டச்சத்து மிக்க உணவை எடுத்துகொள்ளுங்கள். முதல் ஆறுவாரங்கள் வரை எச்சரிக்கையாக இருந்தால் தொற்றில்லாமல் குணமாகும். இப்போது காயம் ஆறிவிட்டது. இப்போது வடுக்கள் எப்படி இருக்கும்.

சி-பிரிவு வடுக்கள் (C-section Scar in Tamil) எப்படி இருக்கும்?

கீறல் குணமாகி கோடுகள் முதிர்ச்சியடைகிறது. இதனால் கடுமையான நடவடிக்கைகள் தவிர்க்க வேண்டும். இப்போது அது சிவப்பு – ஊதா நிறமாக மாறியிருப்பதை நீங்கள் கவனிக்கலாம். இது இயல்பானது. இந்த நிறம் ஆறுமாதங்கள் வரை நீடிக்கும். அதற்கு முன் மங்கல் குறைந்த வெள்ளைக்கோடு இருக்கும்.

அந்தரங்க பகுதிக்கு சற்று மேலே இருப்பதால் உங்களால் பார்க்க முடியாமல் போகலாம். இது பல மாதங்களுக்கு சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறமாக இருக்கும். ஆனால் இறுதியில் வெளிர் தட்டையான மெல்லிய கோடாக மங்கிவிடும். சில வடுக்கள் பெரியதாகவோ அல்லது தடிமனாகவோ அல்லது மற்றவர்களை விட கனமானதாகவோ இருக்கும். எனினும் பயம் வேண்டாம். இது அரிதானதே. எனினும் இந்த கோடு வெளியில் நன்றாகவே தெரியும்.

சி- பிரிவு வடுவை எப்போது போக்க முயற்சிப்பது?

முதலில் சி- பிரிவு முடிந்து தாயும் சேயும் நலம் என்னும் போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஸ் செய்யப்படுவதற்கு முன்பு மருத்துவர் கீறலில் இருக்கும் ஸ்டேபிள்ஸை அகற்றுவார். தையல் இருந்தால் அவை தானாகவே கரைந்துவிடும்.

அதே நேரம் சி -பிரிவு வடு ஸ்டெரி ஸ்ட்ரிப்ஸ் எனப்படும் காகித நாடா தயாரிப்பில் மூடப்பட்டிருக்கும் நிலையில் இவை தானாகவே ஒரு வாரத்தில் உதிர்ந்துவிடும். அதனால் அது வரை வடுவை அகற்ற முயற்சிக்க வேட்னாம். ஏனெனில் அது வரை காயத்தில் தொற்று இல்லாமல் சுத்தமாக மூடி வைத்திருப்பார்கள்.

வடு புதியதாக இருக்கும் போது முதல் இரண்டு வாரங்களுக்கு வடுவை அகற்றும் எந்த செயலையும் செய்ய வேண்டாம். குழந்தையை விட கனமான எதையும் தூக்க வேண்டாம். குளிக்கும் போது நீர் படலாம். ஆனால் பாத் டப்பில் நீண்ட நேரம் சிசேரியன் பகுதி நீரில் மூழ்கியிருக்குமாறு வைத்திருப்பது மோசமானது.

ஏனெனில் உங்கள் வடு வீங்கியிருக்கும். அதை சுற்றீயுள்ள பகுதி இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்நிலையில் தொற்றை ஏற்படுத்தலாம். கீறலை மோசமான பாதிப்புக்கு உள்ளாக்கலாம்.

சி- பிரிவு வடுக்கள் குணமாக என்ன செய்யலாம்?

சி பிரிவு வடுக்கள் போக க்ரீம் பயன்படுத்தலாமா என்பது பலரது கேள்வி நீங்கள் வைட்டமின் ஈ அல்லது கோகோ பட்டர் போன்ற க்ரீம்களை பயன்படுத்த விரும்பலாம். ஆனால் சரியான காயத்தை பராமரிக்க சரியானது இது என்று நிரூபிக்கும் ஆய்வுகள் எதுவும் இல்லை. அதனால் விளம்பரங்களில் வரும் க்ரீம்களை நீங்களாக வாங்கி பயன்படுத்தகூடாது.

ரெடின் ஏ போன்ற வடுக்கள் நீக்கும் விஷயங்கள் உள்ளன. ஆனால் இவை கர்ப்பம் மற்றும் பாலூட்டலுக்கு பிறகு தான் பயன்படுத்த வேண்டும். சி- பிரிவு வடுவுக்கு சிலிக்கனன் தாள் பயன்படுத்தலாம். இப்படி நீரேற்றம் செய்வதன் மூலம் நீண்டகால சிவத்தல் அல்லது புடைப்பு ஏற்படுவதை தடுக்கலாம்.

சி- பிரிவு கீறல்கள் குணமடைந்த பிறகு அபூர்வமாக சிலருக்கு மெல்லிய கோடு மட்டுமே இருக்கும். ஆனால் துரதிஷ்டவசமாக அவை மறையாது. இதன் குணமும் வடு அளவும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். எனினும் இந்த சி-பிரிவு வடுவின் தோற்றத்தை மேம்படுத்த சில குறிப்புகள் இங்கு உள்ளன. எனினும் இந்த வடுக்கள் முழுமையாக குணப்படுத்த முடியாது. ஆனால் மேம்படுத்த முடியும்.

சிலிகான் தாள்கள் அல்லது ஜெல் . சிலிகான் தோளை மீட்டெடுக்கவும் இணைப்பு திசுக்களை வலுப்படுத்தவும் முடியும். நம்பகமான ஆராய்ச்சியின் படி இது வடுக்களை மென்மையாகும் மற்றும் தட்டையாக்கும் வடுவின் வலியை குறைக்கும். கீறலில் நேரடியாக சிலிகான் தாள் அல்லது காயத்தின் மீது ஜெல்லை பயன்படுத்துங்கள்.

வடுவுக்கு மசாஜ். கீறல் முற்றிலும் குணமானதும் வடுவை தவறாமல் மசாஜ் செய்யுங்கள். குணமான பிறகு அதன் தோற்றத்தை குறைக்கலாம். மசாஜ் செய்வதன் மூலம் அது சருமத்தை தூண்டி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதன் மூலம் செல்லுலார் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது. மேலும் படிப்படியாக வடுக்களை மறைக்கிறது.

நாள் ஒன்றுக்கு 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரலை பயன்படுத்தி வட்ட இயக்கத்தில் மென்மையாக மசாஜ் செயலாம். மருத்துவரின் அறிவுரையோடு க்ரீம் சேர்க்கலாம். ஈரப்பதமூட்டும் க்ரீம்களை பயன்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு நாளும் மசாஜ் செய்வதன் மூலம் வடுக்களின் நிறத்தை மங்க செய்யலாம்.

c-section scars recovery tips

லேசர் சிகிச்சை

இந்த சிகிச்சையின் போது சருமத்தின் சேதமடைந்த பகுதிகளை மேம்படுத்த ஒளிக்கற்றைகளை பயன்படுத்துகின்றனர். லேசர் சிகிச்சை தழும்புகளின் தோற்றத்தை மென்மையாக்கும் மற்றும் மேம்படுத்தும். அதோடு வடு திசுக்களை அகற்றும். எனினும் பல லேசர் சிகிச்சைகள் தேவைப்படலாம்.

ஸ்டிராய்டு ஊசி

ஸ்டீராய்டு ஊசிகள் உடல் முழுவதும் வீக்கம் மற்றும் வலியை குறைப்பது மட்டுமல்லாமல் பெரிய தழும்புகளின் தோற்றத்தை தட்டையாகவும் மேம்படுத்த செய்யும்.இதற்கு மாதாந்திரமாக ஊசி தேவைப்படலாம். இவை தாண்டி சிசேரியன் வடுவை பாதுகாப்பாக அகற்ற சூரிய ஒளியில் நீண்ட நேரம் நிற்பதையும் தவிருங்கள். சிலருக்கு இந்த வடு வெயில் படும் போது கருமையாகி எரிச்சலை உண்டு செய்யலாம்.

இந்த குறிப்புகள் சிசேரியன் சிகிச்சை கீறல்கள் குணமடைந்தவுடன் செய்ய வேண்டும். இதை தாமதப்படுத்தினால் வடுவை அகற்றுவதிலும் சிரமத்தை எதிர்கொள்ளலாம். இந்த சிசேரியன் வடு அகற்றுவது குறித்து மருத்துவர் சொல்வது என்ன என்பதை பார்க்கலாம்.

சிசேரியன் செய்த பெண்களுக்கு இருக்கும் சந்தேகம் சிசேரியன் செய்த இடத்தை எப்படி ஆரோக்கியமாக வைத்துகொள்வது, விரைவில் குணப்படுத்துவது எப்படி, வடுவை எவிரைவில் அகற்றுவது என்பது தான். ஆனால் இது மேஜிக் கிடையாது. இந்த வடுவை ஆரோக்கியமாகவும் விரைவில் குணப்படுத்தவும் சில குறிப்புகள் உண்டு.

சிசேரியன் முடிந்ததும் அந்த இடத்தில் இருக்கும் தையலை அகற்றுவார்கள். அல்லது நவீன முறையில் தையல் தானாக கரையகூடியதானதாகவும் இருக்கலாம். இதை மருத்துவரே உங்களுக்கு சொல்லிவிடுவார். அதன் பிறகு நீங்கள் அந்த இடத்தை தொடலாம். சிலர் இதை தொடவே பயப்படுவார்கள்.

சுத்தம் செய்யலாம்

குளிக்கும் போது சோப்பு போட்டு சுத்தம் செய்யலாம். குளித்து முடித்த பிறகு மென்மையான துணியில் அந்த இடத்தை சுத்தமாக நீர் தேங்காமல் துடைத்துவிடுங்கள்.

உடலை நீரேற்றமாக வைத்திருங்கள்

உணவு முறையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வைட்டமின் சி போன்ற சத்து நிறைந்த நெல்லி, ஆரஞ்சு, பெர்ரி போன்றவற்றை எடுத்துகொள்ளலாம். இவை விரைவில் குணப்படுத்தவும் செய்யும்.

உங்களுக்கு நீரிழிவு, தைராய்டு, இரத்த அழுத்தம், போன்ற நோய்கள் இருந்தால் அதை கட்டுக்குள் இருக்கிறதா என்பதை பரிசோதியுங்கள்.

நீங்கள் ஒரே இடத்தில் இருக்க வேண்டியதில்லை. தாய்ப்பால் கொடுக்கும் போது மட்டும் உட்காரலாம். மற்ற நேரங்களில் வீட்டுக்குள் நடக்கலாம். இவை எல்லாமே விரைவில் குணமடைய உதவும்.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!

சிசேரியன் செய்த இடத்தை தொடகூடாது என்று பலரும் பயப்படுவார்கள். ஆனால் உண்மையில் அந்த இடத்தை சுத்தமாக சோப்பு நீர் கொண்டு துடைத்து எடுப்பது தான் சிறந்ததாக இருக்கும். பிறகு சுத்தமாக துடைத்தெடுங்கள். இதன் மூலம் கிருமிதொற்று இல்லாமல் இருக்கும்.

இதை தாண்டி உங்களுக்கு சிசேரியன் வடு அகற்றவோ, விரைவில் குணமாகவோ கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.

5/5 - (14 votes)

பொதுத்துறப்பு

பொதுத்துறப்பு ஜம்மி ஸ்கேன்ஸ் (Jammi Scans) வழங்கும் கட்டுரைகள், தகவல்கள், வீடியோக்கள் போன்றவை தகவல் தொடர்பு நோக்கங்களுக்காக மட்டுமே. இவை எல்லாமே மகப்பேறு மருத்துவர்கள், ஸ்கேன் பரிசோதனை நிபுணர்கள், அதற்கான நடைமுறைகள் போன்றவை நிபுணர்களால் வழங்கப்படும் பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எங்கள் இணையதளத்தில் இருக்கும் கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் பொதுவான விஷயங்கள் குறித்து மட்டுமே வழங்கப்படுகின்றன. வீடியோக்களில் இருக்கும் தகவல்களும் , கட்டுரைகளும் தனிப்பட்ட நபர்களுக்கான நோயறிதல் குறித்தவை என்று கருதக்கூடாது. அதனால் இதன் வாயிலாக வெளியிடப்படும் சிகிச்சை முறைகளை சுயமாக செய்து கொள்ள கூடாது. ஜம்மி ஸ்கேன்ஸ் தளத்தில் வெளியான கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் மூலம் நோயறிதலையும், சிகிச்சையையும் சுயமாக செய்து கொள்ள கூடாது. மாறாக உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனை செய்த பிறகு உரிய சிகிச்சை பெறுவது நல்லது. ஜம்மி ஸ்கேன்ஸ் உருவாக்கும் (இணையதளம் மற்றும் அச்சு) தகவல்கள் மருத்துவ ரீதியிலான பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எந்தவொரு தனி நபருக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் கட்டுரைகள் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி கூறுகிறோம். அதனால் தனிப்பட்ட முறையில் சுயமாக ஒருவர் சிகிச்சை கொள்வதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது என்பதையும் இத்தருணத்தில் உறுதி அளிக்கிறோம். ******** உங்களின் பாதுகாப்பை எங்களின் முன்னுரிமையாகக் கருதி, குறைந்தபட்ச நபர்களுடன் செல்லுமாறு ஜம்மி ஸ்கேன்ஸ் கேட்டுக்கொள்கிறது. PC-PNDT சட்டத்தின்படி, உங்களுடன் வரும் நபர்கள் ஸ்கேன் அறைக்குள் உங்களுடன் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பானதாக்க இந்த கடினமான காலங்களில் நீங்கள் எங்களுடன் ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறோம்.
Share This Article
Follow:
டாக்டர். தீப்தி ஜம்மி (இயக்குனர், ஜம்மி ஸ்கேன்கள்) எம்.பி.பி.எஸ்., எம்.எஸ் (மகப்பேறு மற்றும் பெண்ணோயியல்) கரு மருத்துவத்தில் பிந்தைய முனைவர் பெல்லோஷிப் டாக்டர்.தீப்தி சர்வதேச மற்றும் தேசிய மாநாடுகளில் கரு மருத்துவத்தில் தங்கப் பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார், மேலும் பல மதிப்புமிக்க பிராந்திய இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி நேர்காணல்களில் தோன்றியுள்ளார்.
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »