பிறந்த குழந்தைக்கு எவ்வளவு நேரம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்

Deepthi Jammi
5 Min Read

பிரசவித்த பெண்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது பல விஷயங்களையும்  கவனத்தில் கொள்ள வேண்டும். , எவ்வளவு நேரம் தாய்ப்பால் கொடுப்பது (breastfeeding time),  இரண்டு மார்பகங்களிலும் கொடுக்க வேண்டுமா, ஒரு மார்பகங்களில்  மட்டும் கொடுத்தால் போதுமா.

இப்படி பல்வேறு சந்தேகங்களும் குழப்பங்களும் இருக்கும். இதில் முக்கியமானது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் நேரம் (breastfeeding time) ஆகும். 

23 1

குழந்தைக்கு எவ்வளவு நேரம் தாய்ப்பால் கொடுப்பது (breastfeeding time) என்பது குழந்தை எவ்வளவு நேரம் நேரத்துக்கு ஒருமுறை பால் குடிக்கிறார்கள் என்பதை பொறுத்தது.  மேலும் குழந்தை பிறந்த போது அதன் வயிறு மிகச்சிறிய அளவு என்பதால் அவர்கள் வளர வளர வாரங்கள் அதிகரிக்க அதிகரிக்க  தாய்ப்பால் கொடுக்கும் நேரம் அதிகரிக்கலாம். 

ஒவ்வொரு முறையும் எவ்வளவு நேரம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பது  உங்கள் குழந்தையின் வயது மற்றும் மார்பத்தில் பால் சுரக்கும் வேகம் உட்பட பல காரணங்களை உள்ளடக்கியது. 

25 1

பொதுவாக குழந்தைக்கு சராசரியாக நீங்கள் தாய்ப்பால் கொடுக்கும் நேரம் 10 முதல் 20 நிமிடங்கள் வரை நீடிக்கலாம்.  இது பொதுவானது ஏனெனில் குழந்தை ஒவ்வொரு முறை தாய்ப்பால் குடிக்கும் போது 5 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை தாய் கொடுக்கலாம்.

ஆனால் குழந்தையும்  தொடர்ந்து குடிக்க வேண்டும். ஏனெனில் சில குழந்தைகள் சில நிமிடங்களில் தாய்ப்பால் குடிக்கும் போதே தூங்கிவிடுவார்கள்.  இது சாதாரணமானது.  எனினும் இது குறித்த உங்கள் சந்தேகங்களுக்கு இங்கு விடைகாணலாம்.

புதிதாக பிறந்த குழந்தைக்கு  எவ்வளவு நேரம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்? (breastfeeding time)

26 1

புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு  தாய்ப்பால் குடிக்கும் வழக்கத்தை கற்றுக்கொள்ள நேரம் பிடிக்கலாம். அவர்களது வயிறு சிறியது என்பதால் பிறந்த குழந்தைக்கு ஒவ்வொரு 2 அல்லது 3 மணி நேரத்துக்கு ஒரு முறை  பால் கொடுக்க வேண்டும். 

3 28

ஒவ்வொரு  பக்கத்திலும் கொடுக்க வேண்டும். 10 முதல் 15 நிமிடங்கள் வரை பால் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு போதுமான பால் சுரந்து குழந்தை  பசியாறிவிட்டார்கள் என்பதை உறுதி செய்துகொண்டாலே போதுமானது. 

உங்களுக்கு அப்படியும் சந்தேகம் இருந்தால்  குழந்தை சிறுநீர், மலம் போன்றவற்றை சரியாக கழித்தால் குழந்தை போதுமான தாய்ப்பால் குடிக்கிறார்கள் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். குழந்தை தாய்ப்பால் குடிப்பதை அவர்கள் உறிஞ்சுவதன் மற்றும் விழுங்குவதன் மூலமும் உணரலாம்.

உங்களுக்கு தாய்ப்பாலூட்டுதலில் பிரச்சனை இருந்தால் தாமதிக்காமல் தாய்ப்பாலூட்டும் நிபுணரை அணுகி  ஆலோசனை பெறுங்கள்.

முதல் வாரங்கள் மற்றும் மாதங்களில் 

குழந்தை வளர வளர வயிறு பெரிதாகும். ஒவ்வொரு முறை  உணவு அளிக்கும் போதும்  குழந்தை அதிக தாய்ப்பால் குடிக்க முடியும்.  முதல் சில வாரங்கள் மற்றும் மாதங்களில் ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் ஒருமுறை குழந்தை தூங்கி கொண்டு இருந்தாலும் உணவு  அளிக்க வேண்டும்.

24 2

சில குழந்தைகள் அடிக்கடி எழுந்து விடுவார்கள் விடுவார்கள்.  அவர்களுக்கு அடிக்கடி தாய்ப்பால் கொடுக்க நேரிடலாம். சில குழந்தைகள் நீண்ட நேரம் தூங்கி கொண்டே இருப்பார்கள். 

சில முறை நீண்ட நேரம்  பசியாறுவார்கள். சில நேரங்களில் உடனே தூங்கிவிடுவார்கள். அவர்களுக்கு போதுமான தாய்ப்பால் கிடைத்த பிறகு திருப்தியுடன், தூக்கத்துடன்  இருப்பார்கள். பொதுவாக நாள் ஒன்றுக்கு 8 முதல் 12 முறை தாய்ப்பால் கொடுக்கலாம். 

குழந்தைக்கு 3 லிருந்து 4 மாதங்கள் வரை 

குழந்தை 3 மாதங்களில் அடிக்கடி உணவளிக்க  தேவையிருக்காது. ஆனால் அவர்கள் தாய்ப்பால் குடிக்கும் நேரம் அதிகரிக்கலாம். குழந்தைக்கு 3 முதல் 4 மாதங்கள் ஆகும் போது தாய்ப்பால்  போதுமான அளவு குடித்திருந்தால் அவர்கள் எடையும் கணிசமாக அதிகரித்திருக்கும்.  குழந்தை வேகமாக பால் உறிஞ்சுவதால் ஒரு மார்பகத்தில் 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே ஆகலாம். 

4 22

குழந்தைக்கு 6 முதல்  9 மாதங்கள் வரை 

குழந்தை 6 மாதங்கள் ஆகும் போது  திட உணவுகளையும்  உண்ண ஆரம்பிக்கலாம்.  அப்போது தாய்ப்பாலுடன்  துணை உணவுகளையும்  கொடுக்க செய்யலாம்.  குழந்தை இப்போது தாய்ப்பாலை விரைவாக குடிப்பார்கள். குறிப்பாக மாலையிலும், இரவிலும் தாய்ப்பால் குடிப்பதில் அதிக நேரம் செலவிடலாம். 

எனினும் குழந்தைக்கு  அவ்வபோது தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதே நேரம் குழந்தைக்கு தாய்ப்பாலை விட  துணை உணவுகள்  மிகவும் பிடித்திருந்தால்  அதை குறைத்து தாய்ப்பால் கொடுங்கள். ஏனெனில் மற்ற உணவுகளில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை விட தாய்ப்பாலில் உள்ள உணவுகள் மிக முக்கியமானவை. 

குழந்தைக்கு ஒரு வயதாகும் வரை  அவர்களுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதே நேரம் குழந்தைக்கு ஒரு வயதுக்கு மேல் தாய்ப்பால் கொடுக்க திட்டமிட்டால் அவர்களது உணவின் முக்கிய பகுதியாக இருக்க கூடாது. 

28 1

அதை சரியான முறையில் திட்டமிட்டு கொடுப்பது நல்லது. அதே நேரம் குழந்தைக்கு ஒரு வயதுக்கு மேல் தாய்ப்பால் கொடுக்க திட்டமிட்டால் அவர்களது உணவின் முக்கிய பகுதியாக இருக்க கூடாது. எப்போதாவது தாய்ப்பால் கொடுக்கலாம். 

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது நீங்கள் மறக்க கூடாதவை.

குழந்தைக்கு பால் கொடுக்கும் போது மார்பகத்தில் பால் சுரப்பு வேகமாக உள்ளதா என்பதை கவனியுங்கள். சமயங்களில் பால்  குறைவாக இருந்தால்  குழந்தை பால் உறிஞ்சுவதில் அதிக சோர்வை அடையலாம். 

குழந்தை வேகமாக பால் குடித்துவிட்டு  உறங்கினால் அதற்கு போதுமான பால் கிடைக்காது. கொழுப்புகள் மற்றும் கலோரிகள் அதிகம்  குழந்தைக்கு பெற ஒவ்வொரு மார்பகத்திலும் நீண்ட நேரம் பாலூட்ட வேண்டும். குழந்தை தூங்கினாலும் தட்டி எழுப்பி இயன்றவரை விழித்திருக்க செய்து  பால் உறிஞ்ச செய்யவும். 

5 16

பால் வேகமாக பாயும் போது மெதுவாக உறிஞ்சுவார்கள். பால் ஓட்டம் குறையும் போது உறிஞ்சும் வேகம் அதிகமாக இருக்கும். தாய்ப்பால் கொடுக்கும் நேரம், அளவு மற்றும் பால் சுரக்கும் வேகம் பொறுத்து குழந்தையின் உறிஞ்சும் திறன் இருக்கும். 

குழந்தை நீண்ட நேரம் பால் குடித்தால் அவர்களுக்கு போதுமான பால் கிடைக்கவில்லை என்று அர்த்தம்.  இந்நிலையில்  மருத்துவரை அணுகி பாலூட்டும் நிபுணரை சந்தித்து தீர்வு காண்பது அவசியம்.

இந்நிலையில் நீங்கள் தாய்ப்பால் கொடுக்க இயலாமல் பாட்டில் பால் கொடுக்க நேர்ந்தால்  குழந்தைகள் பாட்டில் பாலை வித்தியாசமாக உறிஞ்சும். சில குழந்தைகளுக்கு பாட்டில் பால் எடுப்பது சிரமமாக இருக்கும். 

மேலும் பாட்டில் பால் கொடுப்பதில் அதிக நேரம் ஆகலாம். பாட்டில் முலைக்காம்பில் இருந்து குழந்தை ஃபார்முலா அல்லது தாய்ப்பாலின் ஓட்டம் சீராக இருப்பதால் குழந்தை பாட்டில் பாலை 10 நிமிடங்களில் குடித்துவிடுவார்கள்.  

குழந்தை தாய்ப்பாலை சரியாக குடிக்கவில்லை என்பதை எப்படி அறிவது?

குழந்தை சிறுநீர் அளவு, மலம் கழிக்கும் எண்ணிக்கை குறையும்.  தினமும் ஆறுக்கும் குறைவான ஈரமான டயபர்கள்

குழந்தை எரிச்சல், அழுகை மற்றும் பெரும்பாலான உணவுகளுக்கு பிறகும் திருப்தி இல்லாமல் அழுதுகொண்டே இருப்பது.

தாய்ப்பால் குடிக்காமல்  பெரும்பாலும் தூங்கி கொண்டே இருப்பது. 

பால் உற்பத்தியாவதில் சிரமம் மற்றும் தாமதம் ஏற்படுவது. உணவு எடுக்கும் நேரம்  போன்ற பல விஷயங்களை கவனிக்கவும். 

முடிவுரை

குழந்தை தாய்ப்பால் குடிப்பதில் அதிக நேரம் அல்லது குறைந்த நேரம் இருந்தால் தாய்ப்பால் சுரப்பு மெதுவாக இருந்தால், பாலூட்டும் நிலை எப்படி என்பதை அறியமால் இருந்தால்  மருத்துவரிடம் கேட்டு ஆலோசனை பெறுங்கள்.

To Read in English – Newborn Breastfeeding Time

Rate this post

பொதுத்துறப்பு

பொதுத்துறப்பு ஜம்மி ஸ்கேன்ஸ் (Jammi Scans) வழங்கும் கட்டுரைகள், தகவல்கள், வீடியோக்கள் போன்றவை தகவல் தொடர்பு நோக்கங்களுக்காக மட்டுமே. இவை எல்லாமே மகப்பேறு மருத்துவர்கள், ஸ்கேன் பரிசோதனை நிபுணர்கள், அதற்கான நடைமுறைகள் போன்றவை நிபுணர்களால் வழங்கப்படும் பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எங்கள் இணையதளத்தில் இருக்கும் கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் பொதுவான விஷயங்கள் குறித்து மட்டுமே வழங்கப்படுகின்றன. வீடியோக்களில் இருக்கும் தகவல்களும் , கட்டுரைகளும் தனிப்பட்ட நபர்களுக்கான நோயறிதல் குறித்தவை என்று கருதக்கூடாது. அதனால் இதன் வாயிலாக வெளியிடப்படும் சிகிச்சை முறைகளை சுயமாக செய்து கொள்ள கூடாது. ஜம்மி ஸ்கேன்ஸ் தளத்தில் வெளியான கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் மூலம் நோயறிதலையும், சிகிச்சையையும் சுயமாக செய்து கொள்ள கூடாது. மாறாக உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனை செய்த பிறகு உரிய சிகிச்சை பெறுவது நல்லது. ஜம்மி ஸ்கேன்ஸ் உருவாக்கும் (இணையதளம் மற்றும் அச்சு) தகவல்கள் மருத்துவ ரீதியிலான பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எந்தவொரு தனி நபருக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் கட்டுரைகள் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி கூறுகிறோம். அதனால் தனிப்பட்ட முறையில் சுயமாக ஒருவர் சிகிச்சை கொள்வதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது என்பதையும் இத்தருணத்தில் உறுதி அளிக்கிறோம். ******** உங்களின் பாதுகாப்பை எங்களின் முன்னுரிமையாகக் கருதி, குறைந்தபட்ச நபர்களுடன் செல்லுமாறு ஜம்மி ஸ்கேன்ஸ் கேட்டுக்கொள்கிறது. PC-PNDT சட்டத்தின்படி, உங்களுடன் வரும் நபர்கள் ஸ்கேன் அறைக்குள் உங்களுடன் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பானதாக்க இந்த கடினமான காலங்களில் நீங்கள் எங்களுடன் ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறோம்.
Share This Article
Follow:
டாக்டர். தீப்தி ஜம்மி (இயக்குனர், ஜம்மி ஸ்கேன்கள்) எம்.பி.பி.எஸ்., எம்.எஸ் (மகப்பேறு மற்றும் பெண்ணோயியல்) கரு மருத்துவத்தில் பிந்தைய முனைவர் பெல்லோஷிப் டாக்டர்.தீப்தி சர்வதேச மற்றும் தேசிய மாநாடுகளில் கரு மருத்துவத்தில் தங்கப் பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார், மேலும் பல மதிப்புமிக்க பிராந்திய இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி நேர்காணல்களில் தோன்றியுள்ளார்.
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »