கர்ப்ப காலத்தில் இரத்தப்போக்கு உண்டானால் அது கருவை பாதிக்குமா? என்ன காரணம், எப்படி தவிர்ப்பது?

16390
Bleeding During Pregnancy

Contents | உள்ளடக்கம்

ஒவ்வொரு பெண்ணும் கர்ப்ப காலத்தில் சந்திக்கும் அசெளகரியங்கள் பல இருந்தாலும் அதில் கவலைப்பட கூடிய முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்களில் இரத்தப்போக்கும் ஒன்று.

கர்ப்ப காலத்தில் இரத்தபோக்கு (Bleeding During Pregnancy in Tamil) உண்டாக காரணம் தெரியாத போது அது கவலைக்குரிய விஷயமாக நினைக்கிறார்கள். ஏனெனில் கருவுற்ற பிறகு இதை அனுபவிக்கும் போது அது கடுமையான கவலையாகவும் மாறலாம்.

கர்ப்ப காலத்தில் யோனி இரத்தப்போக்குக்கான காரணங்கள் விளைவுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணும் அறிந்துகொள்வது அவசியம் ஆகும்.

கர்ப்ப காலத்தில் இரத்தப்போக்கு (Bleeding During Pregnancy in Tamil)பொதுவானதா?

கர்ப்ப காலத்தில் இலேசான புள்ளிகள் அல்லது இரத்தப்போக்கு பொதுவானது. இது கர்ப்பத்தின் ஆரம்ப காலம் அதாவது முதல் ட்ரைமெஸ்டர் மாதங்களில் உண்டாகிறது.

சுமார் 20% பெண்களுக்கு இரத்தப்போக்கு உண்டாகிறது. யோனி இரத்தப்போக்கு இயல்பானது என்றாலும் நீங்கள் தொடர்ந்து இதை சந்தித்தால் மருத்துவரை அணுகுவது பிரச்சனை தீவிரமாகாமல் தடுக்க உதவும்.

யோனி இரத்தப்போக்கு உண்டாகும் போது வயிற்றில் வளரும் குழந்தை நன்றாக இருப்பதை உறுதி செய்ய மருத்துவர் சில சோதனைகள் மற்றும் அல்ட்ராசவுண்ட் பரிசோதனை செய்ய அறிவுறுத்துவார்கள்.

இரத்த புள்ளிகள் மற்றும் யோனி இரத்தபோக்கு

இரத்த புள்ளிகள் மற்றும் யோனி இரத்தபோக்கு இடையே உள்ள வேற்பாடு குறித்து முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். கர்ப்பகாலத்தில் இரத்தப்போக்கு அல்லது இரத்தப்புள்ளிகள் ஏற்படுவது என்பது இரத்தத்தின் நிறத்திலும் அளவிலும் உள்ளது.

இரத்தக்கறை மாதவிடாயின் இறுதியில் பார்ப்பது போன்று பழுப்பு நிறமாக இருந்தால் அது சிவப்பு நிற இரத்தப்போக்கு ஆக மாறி இருக்கும். இரத்தத்தின் அளவு வித்தியாசப்படும். இது ஸ்பாட்டிங் என்பதால் நாப்கின் நனைக்காது. ஆனால் இரத்தப்போக்கு இருக்கும்.

கர்ப்ப காலத்தில் யோனி இரத்தப்போக்கு எப்போது நடக்கும்?

கர்ப்பத்தின் முதல் ட்ரைமெஸ்டர் காலங்கள்

முதல் மூன்று மாதங்களில் கருவை உள்வைக்கும் நிகழ்வின் போது இரத்தப்போக்கு நிகழலாம். இது கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் நிகழ்கிறது.

கருப்பையின் சுவரில் கருவை பொருத்துவதால் இந்த இரத்த புள்ளிகள் தோன்றும். இது பொதுவாக மாதவிடாய்க்கு சில நாட்கள் முன்பு அல்லது கர்ப்பத்துக்கு பிறகு சுமார் 6 முதல் 12 நாட்களில் நிகழ்கிறது.

ஸ்பாட்டிங் என்பது மாதவிடாயை விட இலகுவானது. இது வெளிர் இளஞ்சிவப்பு முதல் பழுப்பு நிறத்தில் இருக்கும். சில நாட்கள் வரை நீடிக்கலாம்.

கர்ப்பத்தின் மூன்றாம் ட்ரைமெஸ்டர் காலங்கள்

கர்ப்பத்தின் மூன்றாவது மூன்று மாதங்களில் கருப்பை வாய் சளி வெளியேறும் போது இரத்தப்புள்ளிகள் தோன்றும்.

பாலியல் உடலுறவு அல்லது உள் இடுப்பு பரிசோதனை கர்ப்பம் கருப்பை வாய் மென்மையாக இருக்கும் போது இரத்த நாளங்கள் வீங்குவதால் உண்டாகிறது. பாலியல் அல்லது உள் பரிசோதனையின் போது அதிர்வு கருப்பை வாயில் இரத்தப்போக்கு உண்டாக்கும்.

இந்த வகை இரத்தப்போக்கு கர்ப்பகாலத்தில் எந்த நேரத்திலும் நிகழ்கிறது. இது பெரும்பாலும் பிரச்சனை இல்லை. யோனி தொற்று (பாக்டீரியா வஜினோசிஸ்) அல்லது கருப்பை வாய், பெண் உறுப்பு தொற்று இருந்தால் கருப்பை வாய் வீக்கமடைகிறது. இதனால் நீங்கள் சிறிய புள்ளிகளை எதிர்கொள்ளலாம்.

சப்கோரியோனிக் இரத்தப்போக்கு நஞ்சுகொடிக்கு அடுத்ததாக அல்லது கருப்பை மற்றும் நஞ்சுக்கொடிக்கு இடையில் வெளிப்புற சவ்வின் மடிப்புகளில் இரத்தம் குவிவது புள்ளியை உண்டாக்கும். இது தானாகவே சரியாக கூடும்.

யோனி இரத்தப்போக்குக்கான காரணங்கள்

யோனி இரத்தப்போக்குக்கான காரணங்கள் பல உண்டு. எனினும் கர்ப்பகாலத்தில் அதிக இரத்தபோக்கு நல்ல அறிகுறி அல்ல. இது வேறு சிக்கல்களுடன் இணையலாம். கர்ப்பகாலத்தில் இரத்தப்போக்குக்கான காரணங்கள் என்னவென்பதை பார்க்கலாம்.

முதல் ட்ரைமெஸ்டர் மாதங்களில் இரத்தப்போக்கு

முதல் ட்ரைமெஸ்டர் மாதங்களில் கருவுற்ற முட்டை கருப்பைக்கு வெளியே கருக்குழாயில் பொருத்தப்படுவது எக்டோபிக் கர்ப்பம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் உடனடி கவனிப்பு தேவை.

எக்டோபிக் கர்ப்பம் கடுமையான வயிற்று வலியுடன் சில சமயங்களில் மலக்குடல் அழுத்தம், இலேசான தலைச்சுற்றல், மயக்கம் ஆகியவற்றுடன் அதிக இரத்தப்போக்கு ஏற்படலாம்.

மோலார் கர்ப்பம் (Molar Pregnancy) என்பது அரிய நிலை. இதில் நஞ்சுக்கொடி சிதைந்த கருவுடன் சேர்ந்து நீர்க்கட்டிகளின் நிலை அதிகரிக்கிறது. இது இரத்தப்போக்கை ஏற்படுத்தும். (பிரகாசமான சிவப்பு முதல் அடர் பழுப்பு வரை ) மற்றும் கடுமையான குமட்டல், வாந்தி மற்றும் பிடிப்புகளை அனுபவிப்பீர்கள்.

கருச்சிதைவு ( 20 வாரத்துக்கு முன் கர்ப்ப இழப்பு) பெரும்பாலும் கருவின் குரோமோசோமல் அல்லது மரபணு கோளாறு காரணமாக ஏற்படுகிறது.

இது ஹார்மோன் கராணிகளாலும் ஏற்படலாம். இதில் மாதவிடாய் இருப்பதை போன்ற உறைதலுடன் அதிக யோனி இரத்தப்போக்கு உண்டாகலாம். இது வயிற்றுப்பகுதியில் கடுமையான தசைப்பிடிப்புடன் சேர்ந்து இருக்கலாம். அதனால் இரத்தபோக்குடன் தசைப்பிடிப்பும் சேர்ந்தால் மருத்துவரை அணுகுவது பாதுகாப்பானது.

கர்ப்ப காலத்தில் இரத்தப்போக்கு உண்டாக காரணங்கள் என்ன?

கருப்பை வாய் எரிச்சலடையலாம். உங்களுக்கு நார்த்திசுக்கட்டிகள் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அதற்கு காரணம் வில்லேப்ராண்ட் எனப்படும் பரம்பரை கோளாறு ஆகும். இது இரத்த உறைதலை கடினமாக்குகிறது.

உங்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டால் ஆரோக்கியமான குழந்தையை கர்ப்பகாலத்தில் எடுத்து செல்ல சிரமமாக இருக்கலாம். ஆய்வுகளின் படி இரத்தபோக்கு கொண்டிருக்கும் பெண்கள் 40% கர்ப்பம் கருச்சிதைவில் முடிவடைகிறது.

Bleeding during pregnancy Causes

தாமதமான கர்ப்பம்

கர்ப்பத்தின் பிற்பகுதியில் அதாவது ஆரம்ப கால கர்ப்பத்தின் இல்லாத இரத்தப்போக்கு பிற்காலத்தில் இரத்தபோக்கு அதிகமாக இருந்தால் அது நஞ்சுக்கொடி பிரச்சனை ஆகும். சில நேரங்களில் கருப்பை வாயில் சில அசாதாரணங்கள் காரணமாகவும் இருக்கலாம்.

நஞ்சுக்கொடி பிரிவீயா (Placenta Previa)

நஞ்சுக்கொடி குழந்தையை கருப்பை சுவருடன் இணைக்கிறது. இது கர்ப்பப்பை வாய் திறப்பை ஓரளவு அல்லது முழுமையாக மறைக்க முடியும். இதன் காரணமாக நஞ்சுக்கொடி பிரிவீயா என்று அழைக்கப்படுகிறது.

கர்ப்பத்தின் பிற்பகுதியில் கர்ப்பப்பை வாயின் சுவர்கள் விரிவடைந்து பிரசவத்துக்கு தயாராகிறது. நஞ்சுக்கொடி இரத்தகுழாய்களில் சில வெடிக்கும்.

மூன்றாம் ட்ரைமெஸ்டர் காலங்களில் 20% யோனி இரத்தபோக்குக்கு இதுதான் காரணம் ஆகும்.

  • பல கர்ப்பங்கள் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கரு காரணமாக இருக்கலாம்.
  • முந்தைய கர்ப்பம் அறுவை சிகிச்சை சிசேரியனாக
  • நஞ்சுக்கொடி முந்துதல் போன்றவை காரணமாக இருக்கலாம்.

நஞ்சுக்கொடி சீர்குலைவு

இந்த மருத்துவ நிலையானது நஞ்சுக்கொடி கருப்பையின் சுவரிலிருந்து பிரிக்கப்பட்டு நஞ்சுக்கொடி மற்றும் கருப்பைக்கு இடையில் இரத்தம் நிரம்புகிறது. இது 200 கர்ப்பிணிகளில் ஒருவருக்கு உண்டாகிறது இதற்கான காரணம் தெரியவில்லை எனினும் இந்த ஆபத்து உண்டாகும் போது கீழ்வரும் நிலைகள் உண்டாகலாம்.

  • இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும் போது ( 140/90 அல்லது அதற்கு அதிகமாக இருக்கும் போது)
  • கர்ப்பிணிக்கு அதிக அதிர்ச்சி ஏற்படும் போது
  • புகையிலை அல்லது கோகோயின் பயன்பாடு
  • முன்கூட்டிய கர்ப்பங்களில் முறிவு

கருப்பை உடைப்பு

இது மிக அரிய நிலை. ஆனால் மிகவும் ஆபத்தான நிலை கருப்பை பிளந்து குழந்தையை அடிவயிற்றில் இருந்து வெளியேற்றும். இது பெரும்பாலும் கருப்பை முறிவு அல்லது கருப்பையின் முன் அறுவை சிகிச்சை செய்த பெண்களுக்கு உண்டாகிறது. இது பிரசவத்துக்கு முன்னும் பின்னும் உண்டாகலாம்.

கருப்பை சிதைவுக்கான காரணங்கள்

  • நான்கு கர்ப்பங்களுக்கு மேலான கர்ப்பம்
  • அதிக அதிர்ச்சி
  • ஆக்ஸிடானின் அதிகப்படியாக பயன்படுத்துவது (பிடோசின்)
  • குழந்தை தலையை தவிர வேறு நிலையில் இருக்கும் போது பிரசவத்தின் போது குழந்தையின் தோள்பட்டை அந்தரங்க எலும்பில் சிக்கும் போது

கருக்குழாய் உடைதல்

தொப்புள் கொடியிலிருந்து இரத்த நாளங்கள் நஞ்சுக்கொடியின் இடத்தில் உள்ள சவ்வுகளுடன் இணைக்கப்படலாம். குழந்தையின் இரத்த நாளங்கள் பிறப்பு கால்வாயின் நுழைவாயிலுக்கு அனுப்பப்படுகிறது. இந்த நிலை வாச ப்ரிவியா (Vasa Previa) என்று அழைக்கப்படுகிறது.

கர்ப்பத்தின் பிற்பகுதியில் இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான குறைவான பொதுவான காரணங்கள் கர்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் சுருள் சிரை நாளங்களில் ஏற்படும் காயங்கள் ஆகும்.

கர்ப்பிணி பெண் யோனி பகுதியில் இரத்தப்போக்கு அல்லது புள்ளியை கவனிக்கும் போது என்ன செய்ய வேண்டும்?

கர்ப்பகாலத்தில் இரத்தப்போக்கு உள்ள பெண்களில் சுமார் 50% ஆரோக்கியமான கர்ப்பம் மற்றும் குழந்தையை ஆரோக்கியமாக பெற்றிருக்கிறார்கள். யோனி இரத்தப்போக்கு இருப்பதை நீங்கள் கவனிக்கும் போது அறிகுறிகளை பற்றி உங்கள் மருத்துவரிடம் ஆலொசிப்பது நல்லது.

கனமான உதிரபோக்கை கண்டால் அது மாதவிடாய் போன்ற இரத்தபோக்கை உண்டாக்கினால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி தாய்க்கு வேறு எந்த சிக்கலும் இல்லை குழந்தைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை கண்டறிந்து உறுதி செய்ய வேண்டும். அதே நேரம் கர்ப்பத்தின் பிற்பகுதியில் அதிக இரத்தப்போக்கு குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும்.

கர்ப்பகால இரத்தபோக்கு ஏன்? எப்படி கண்டறிவது?

கர்ப்ப காலத்தில் யோனி இரத்தப்போக்கு உள்ள கர்ப்பிணி பெண்ணை முழுமையாக உடனடியாக பரிசோதிக்க வேண்டும்.

எக்டோபிக் கர்ப்பம் போன்ற இரத்தப்போக்குக்கான சில காரணங்கள் ரத்தக்கசிவு அதிர்ச்சியை உண்டாக்கும். உடலில் இருந்து 20% அதிகமான இரத்தத்தை இழக்கும் போது ரத்தக்கசிவு அதிச்சி உண்டாகிறது. இரத்த இழப்பு இதயத்துக்கு உறுப்பை செயலிழக்க செய்யும். இரத்த ஓட்டத்தை உடலில் செலுத்துவதை கடினமாக்கும்.

  • காய்ச்சலுக்கான முக்கிய அறிகுறிகள் மற்றும் ஹைபோவோலீமியா அறிகுறிகளின் முழுமையான சோதனை .
  • இடுப்பு மற்றும் வயிற்றுப்பரிசோதனைகள்
  • கருவின் இதயத்துடிப்புகளை சரிபார்க்க டாப்ளர் அல்ட்ராசவுண்ட் ஆய்வு செய்யப்படுகிறது.
  • இடுப்பு பரிசோதனையில் வெளிப்புற பிறப்புறுப்புகள்
  • ஸ்பெகுலம் பரிசோதனை மற்றும் இருதரப்பு பரிசோதனை அடங்கும்.
  • யோனி வெளியேற்றம் விரிவாக்க புண்கள் உள்ளதா என்பதை பரிசோதிக்க கருப்பை வாய் பரிசோதனை செய்யப்படும்.

இரத்தப்போக்குக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது?

கர்ப்ப காலத்தின் அடிப்படையில் யோனி இரத்தப்பொக்கு மற்றும் புள்ளிகளுக்கான சிகிச்சை வேறுபடலாம். கருச்சிதைவு அச்சுறுத்தலை கொண்டிருந்தால் மருத்துவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அறிவுறுத்துவார். கர்ப்பகாலம் முழுமைக்கும் வழிமுறைகளை வழங்குவார்.

முழுமையடையாத கருக்கலைப்பு ஏற்பட்டிருந்தால் எஞ்சியிருக்கும் கரு திசுக்களை அகற்ற வேண்டும். இந்த செயல்முறை விரிவாக்கம் மற்றும் குணப்படுத்துதல் என்று அழைக்கபடுகிறது மற்றும் இரத்தபோக்கு அல்லது தொற்று போன்ற சிக்கல்களை தடுக்கிறது.

கருக்கலைப்பு ஏற்பட்டிருந்தால் டி& சி க்கு அனுமதிக்கபடலாம். இது கருவின் அளவு மற்றும் வயதை பொறுத்தது. முழுமையான கருக்கலைப்பு ஏற்பட்டிருந்தால் கருவின் திசு முழுமையாக வெளியேறிய பிறகு வீட்டிற்கு அனுப்பலாம்.

மோலார் கர்ப்பத்தின் போது ஒரு வகை புற்றுநோய் நாள்பட்ட புற்றுநோயை சரிபார்க்க B- hCG நிலையை பெறுவதற்கு டி & சி அவசியம்.

கர்ப்பகால இரத்தப்போக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது ட்ரைமெஸ்டர் மாதங்களில் நடந்தால் இரத்த இழப்பு மற்றும் அதிர்ச்சியின் அறிகுறிகளை கண்காணிக்க வேண்டும்.

குழந்தையின் நிலையை கண்காணிக்க வேண்டும். இந்த சிகிச்சையானது இரத்தபோக்கு, குழந்தையின் நிலை மற்றும் குழந்தையின் வயதை பொறுத்தது.

நஞ்சுக்கொடி முந்துதல் கடுமையான இரத்தப்போக்கு இருந்தால் சிசேரியன் பிரசவம் செய்ய அறிவுறுத்தலாம். பிரசவ வலி சுருக்கங்கள் இருந்தால் அதை நிறுத்த ஐவி மருந்து கொடுக்கலாம்.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!

நஞ்சுக்கொடி முறிவு

யோனி பிரசவம் என்னும் சுகப்பிரசவம் அனைவரது விருப்பமாகும். சிசேரியன் பிரசவங்களை அவசரக்காலங்களில் மட்டுமே செய்ய பரிந்துரைக்கப்படும். குழந்தை 36 வாரங்களை கடந்தால் யோனி பிரசவம் கட்டுப்படுத்தப்படும்.

கர்ப்பம் 36 வரரங்களுக்கு குறைவாக இருந்தால் இரத்தபோக்கு இல்லாத நிலையில் மருத்துவமனையில் கவனிக்கப்படுவிர்கள். குழந்தையின் இதயத்துடிப்பு கண்காணிக்கப்படும் இரத்த சோகைக்கான இரத்த பரிசோதனை செய்யப்படும்.

கருப்பை உடைப்பு

கருப்பை சிதைவதற்கான அதிக வாய்ப்பு இருந்தால் நீங்கள் சி பிரிவு பிரசவத்தை விரும்பலாம். கருப்பை அகற்றப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியமான நிலை இருந்தால் மருத்துவர்கள் கருப்பை சரி செய்யலாம். கருப்பை சிதைவு அதிக சந்தேகத்தை உண்டாக்கினால் சிசேரியன் பிரசவம் செய்யப்படும்.

கர்ப்ப காலத்தில் இரத்தப்போக்கை (Bleeding During Pregnancy in Tamil) தடுக்க முடியுமா?

கர்ப்ப காலத்தில் இரத்தப்போக்கு மற்றும் இரத்தப்புள்ளிகளை தடுக்க சில விஷயங்கள் செய்ய வேண்டும்.

  • இரத்தப்போக்கு நிற்கும் வரை படுக்கையில் ஓய்வாக இருக்க வேண்டும்.
  • இரத்தபோக்கு போது நாப்கின், டேம்பன் பயன்பாடு வேண்டாம்.
  • இரத்தப்போக்கு இருக்கும் போது உடலுறவு கூடாது
  • வலியிலிருந்து விடுபட மருத்துவரின் ஆலோசனையுடன் மாத்திரை எடுக்கலாம். ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் மருத்துவரை அணுகுவது நல்லது.
  • இரத்தப்போக்கு மற்றும் தசைப்பிடிப்பு கடுமையாக் இருந்தால் திரவங்களை அதிகமாக குடிக்க வேண்டும்.
  • வீட்டை சுற்றி மிதமாக நடக்கலாம்.
  • இயன்றவரை மெல்லிய வேலைகளை செய்யலாம்.
  • கால்களை உயரமாக வைத்திருங்கள்.
  • 10 பவுண்டுகளுக்கு மேல் எடையுள்ள பொருள்களை தூக்குவதை தவிர்க்க வேண்டும்.
5/5 - (224 votes)
டாக்டர். தீப்தி ஜம்மி (இயக்குனர், ஜம்மி ஸ்கேன்கள்) எம்.பி.பி.எஸ்., எம்.எஸ் (மகப்பேறு மற்றும் பெண்ணோயியல்) கரு மருத்துவத்தில் பிந்தைய முனைவர் பெல்லோஷிப் டாக்டர்.தீப்தி சர்வதேச மற்றும் தேசிய மாநாடுகளில் கரு மருத்துவத்தில் தங்கப் பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார், மேலும் பல மதிப்புமிக்க பிராந்திய இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி நேர்காணல்களில் தோன்றியுள்ளார்.