தைராய்டு இருக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன?

CWC
CWC
7 Min Read

தைராய்டு உடலில் ஹார்மோன் சுரப்புக்கு தேவையான மிக முக்கியமானதாகும். தைராய்டு சுரப்பு அதிகமாக இருந்தாலும் (ஹைப்பர் தைராய்டு) குறைவாக இருந்தாலும் (ஹைப்போ தைராய்டு) அவை உடலில் பல பிரச்சனைகளை உண்டாக்கும்.

ஆண்களை காட்டிலும் பெண்களில் தைராய்டு பிரச்சனை அதிகமாக காணப்படுகிறது. தைராய்டு பிரச்சனையை எதிர்கொள்ளும் பெண்கள் உடல் பருமன், ஒழுங்கற்ற மாதவிடாய் கோளாறு முதல் கருவுறுதல் வரை பல சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள்.

தைராய்டு இருந்தால் கருவுறுதல் பிரச்சனை வருமா?

கர்ப்பம் தொடர்பான ஹார்மோன்கள் இரத்தத்தில் தைராய்டு ஹார்மோன்களின் அளவை உயர்த்துகின்றன. வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு தைராய்டு ஹார்மோன் அவசியம்.

கர்ப்ப காலத்தில் தைராய்டு பிரச்சனை கண்டறிவது கடினமாக இருக்கும். கர்ப்பகாலத்தில் பொதுவாக ஏற்படும் ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் மாற்றத்தால் தைராய்டு துல்லியமாக கணிக்க முடியாது. கருத்தரிக்கும் முன் மற்றும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சோதிப்பது அவசியம்.

கட்டுப்பாடற்ற ஹைப்பர் தைராய்டிசம் மற்றும் ஹைப்போதைராய்டிசம் தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் பிரச்சனைகளை உண்டாக்கும். கர்ப்ப காலத்தில் மருந்துடன் சிகிச்சையளிக்கப்படாத ஹைப்பர் தைராய்டிசம் உண்டாகலாம்.

தைராய்டு கட்டுப்படாமல் இருக்கும் போது கர்ப்பத்தின் இறுதியில் பல பிரச்சனைகள் சந்திக்கலாம். குறிப்பாக குழந்தை முன் கூட்டிய பிறப்பது (39 முதல் 40 வாரங்களுக்கு முன் குழந்தை பிறப்பு அல்லது முழு கால) ப்ரீக்ளாம்ப்சியா, இரத்த சோகை போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம்.

ஹைப்போ தைராய்டு அல்லது ஹைப்பர் தைராய்டு இருந்தால் சரியான முறையில் கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால் கர்ப்பகாலம் பாதுகாப்பாக இருக்கும். தைராய்டு கொண்டிருக்கும் பெண்கள் என்ன மாதிரியான உணவுகளை எடுத்துகொள்ளலாம் என்ன தவிர்க்கலாம் என்பதை பார்க்கலாம்.

ஹைப்போ தைராய்டிசம் உணவுகள்:

ஹைப்போ தைராய்டிசம் கொண்டிருப்பவர்களுக்கு அயோடின் அத்தியாவசிய கனிமம் ஆகும். அயோடின் குறைபாடு கொண்டிருப்பவர்களுக்கு ஹைப்போ தைராய்டு ஆபத்து இருக்கலாம்.

செலினியம்:

தைராய்டு ஹார்மோன்களை செயல்படுத்த உதவுகிறது. இது ஆக்ஸிஜனேற்ற நன்மைகளை கொண்டுள்ளது. தைராய்டு சுரப்பியை ஃப்ரீ ரேடிக்கல்கள் எனப்படும் மூலக்கூறுகளால் சேதப்படுத்தாமல் பாதுகாக்கலாம். செலினியம் நிறைந்த உணவை சேர்ப்பது சிறந்த வழியாகும். பிரேசில் கொட்டைகள், டுனா, மத்தி, முட்டை மற்றும் பருப்பு வகைகள் இதில் அடங்கும்.

துத்தநாகம்:

செலினியம் போன்று துத்தநாகமும் உடலை தைராய்டு ஹார்மோன்களை செயல்படுத்த உதவுகிறது. தைராய்டு ஹார்மோன்களை வெளியிட சொல்லும் ஹார்மோனான TSH கட்டுப்படுத்த துத்தநாகம் உடலுக்கு உதவக்கூடும் என்று ஆய்வுகள் காட்டுகிறது. துத்தநாகம் நிறைந்த உணவுகளை எடுத்துகொள்வதன் மூலம் இந்த குறைபாடு நேராமல் பார்த்துகொள்ளலாம். இது சிப்பிகள், மட்டி, மாட்டிறைச்சி, கோழி, விதைகளில் காணப்படுகிறது.

மேலும் இதையும் தெரிந்து கொள்ள: கர்ப்ப காலத்தில் கால் வீக்கம் ஏன் உண்டாகிறது?

கோய்ட்ரோஜென் உணவுகள் தவிர்க்க வேண்டுமா?

கோய்ட்ரோஜென்ஸ் என்பது தைராய்டு சுரப்பியின் இயல்பான செயல்பாட்டில் குறுக்கிட கூடிய கலவைகள் ஆகும். பல பொதுவான உணவுகளில் கோய்ட்ரோஜென்கள் உள்ளன.

சோயா, டோஃபு, முட்டைக்கோஸ், ப்ரக்கோலி, காலிஃப்ளவர், கீரைகள் போன்றவை. பழங்கள் மற்றும் மாவுச்சத்து நிறைந்த தாவரங்கள், இனிப்பு உருளைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, பீச், ஸ்ட்ராபெர்ரி, கொட்டைகள் மற்றும் விதைகள், பைன் கொட்டை வேர்க்கடலை, போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

அதே நேரம் அயோடின் குறைபாடுகளுக்கு அல்லது அதிக அளவு கோய்ட்ரோஜென் உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு மட்டுமே இது பிரச்சனையாக இருக்கலாம். ஏனெனில் இந்த உணவுகள் தைராய்டு சேர்மங்களை செயலிழக்க செய்யலாம்.

தைராய்டு இருக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன? – Avoid Food for Thyroid in Tamil 

ஹைப்போ தைராய்டு இருந்தால் பல உணவுகளை தவிர்க்க வேண்டியதில்லை. எனினும் கோய்ட்ரோஜென் உணவுகளை மிதமாக சாப்பிட வேண்டும். சிறந்த முறையில் நன்றாக வேகவைத்து எடுத்துகொண்டால் இவை குறைவான தாக்கத்தை உண்டாக்கும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். இது அதிக கலோரிகளை கொண்டிருக்கின்றன. இது அதிக எடையை ஏற்படுத்தலாம். தினை, பதப்படுத்தப்பட்ட குக்கீஸ், கேக் வகைகள் தவிர்க்க வேண்டும்.

ஹைப்போ தைராய்டு இருந்தால் சாப்பிட வேண்டிய உணவுகள்

  • முட்டைகள் சிறந்தவை. அயோடின் மற்றும் செலினியம் இதில் உண்டு. வெள்ளையில் புரதம் நிறைந்துள்ளது.
  • இறைச்சி, ஆட்டிறைச்சி, கோழி, மீன், இறால், டுனா
  • சிலுவை காய்கறிகள் நன்றாக சமைத்து சாப்பிடவும். மருத்துவர் ஆலோசனையின் படி அளவாக எடுத்துகொள்ளவும்.
  • பழங்கள் பெர்ரி, வாழைப்பழங்கள், ஆரஞ்சு, தக்காளி போன்ற அனைத்து பழங்கள்.
  • பசையம் இல்லாத தானியங்கள், விதைகள், அரிசி, பக்வீட், குயினோவா, சியா விதைகள், ஆளிவிதைகள்
  • பால், பாலாடைக்கட்டி, தயிர் போன்ற அனைத்து பால் பொருள்கள்
  • தண்ணீர் மற்றும் காஃபின் இல்லாத பானங்கள் போன்றவை எடுக்கலாம்.

ஹைப்பர் தைராய்டிசம் இருந்தால் சாப்பிட வேண்டிய உணவுகள்

  • குறைந்த அயோடின் உணவுகள்: தைராய்டு ஹார்மோன்களை உருவாக்குவதில் தாது அயோடின் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. குறைந்த அயோடின் உணவு தைராய்டு ஹார்மோன்களை குறைக்க உதவுகிறது. தினசரி உணவில் இந்த உணவுகளை சேர்க்கலாம்.
  • அயோடின் இல்லாத உப்பு
  • காபி அல்லது தேநீர் ( பால் அல்லது சோயா அடிப்படையிலான க்ரீம்கள் இல்லாமல்)
  • முட்டையில் உள்ள வெள்ளை கரு
  • பழங்கள்
  • உப்பு சேர்க்காத கொட்டைகள் & கொட்டை வெண்ணெய்,
  • பால் மற்றும் முட்டை இல்லாமல் செய்யப்பட்ட ரொட்டி,
  • அயோடைஸ் இல்லாத உப்பு கொண்ட பாப்கார்ன்
  • ஓட்ஸ்
  • உருளைக்கிழங்கு
  • தேன்
  • சிலுவை காய்கறிகள்: சிலுவை காய்கறிகள் மற்றும் பிற வகைகள் தைராய்டு அயோடினை சரியாக பயன்படுத்துவதை தடுக்கலாம். இது ஹைப்பர் தைராய்டிசத்துக்கு பயனுள்ளதாக இருக்கும்.

வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்:

தைராய்டு ஆரோக்கியத்துக்கும் தைராய்டு ஹார்மோன் உற்பத்தியை சமநிலைப்படுத்துவதற்கும் பல ஊட்டசத்துக்கள் அவசியம்.

இரும்பு

தைராய்டு ஆரோக்கியம் உட்பட பல முக்கிய செயல்பாடுகளுக்கு அவசியாமனது. இரத்த அணுக்கள் உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஆக்ஸிஜனை கொண்டு செல்ல இந்த தாது உதவுகிறது.

குறைந்த அளவு இரும்புச்சத்து ஹைப்பர் தைராய்டிசத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது போன்ற உணவுகளுடன் உங்கள் உணவில் நிறைய இரும்புச்சத்து கிடைக்கும்.

  • உலர்ந்த பீன்ஸ்
  • பச்சை இலை காய்கறிகள்
  • பருப்பு வகைகள்
  • கொட்டைகள்
  • கோழி, வான்கோழி போன்ற கோழி இறைச்சிகள்
  • விதைகள், முழு தானியங்கள்.

செலினியம்

செலினியம் நிறைந்த உணவுகள் தைராய்டு ஹார்மோன் அளவை சமப்படுத்தவும் தைராய்டு நோயிலிருந்து பாதுகாக்கவும் உதவும். செல் சேதத்தை தடுக்கவும் தைராய்டு மற்றும் பிற திசுக்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் இவை உதவுகிறது.

செலினியத்தின் நல்ல உணவு ஆதாரங்கள்

  • பிரேசில் கொட்டைகள்
  • சியா விதைகள்
  • காளான்கள்
  • தேநீர்
  • மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி வகைகள், கோழி
  • அரிசி, ஓட்ஸ்
  • சூரியகாந்தி விதைகள்

துத்தநாகம்
இவை உடலில் நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் தைராய்டு ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. துத்தநாகம் நிறைந்த உணவுகள்

  • மாட்டிறைச்சி
  • சுண்டல்
  • கொக்கோ தூள்
  • முந்திரி
  • காளான்கள்
  • பூசணி விதைகள்
  • கால்சியம் மற்றும் வைட்டமின் டி
மேலும் இதையும் தெரிந்து கொள்ள: குறைப்பிரசவம் என்றால் என்ன?
  • ஹைப்பர் தைராய்டிசம் பலவீனமான மற்றும் உடையக்கூடிய எலும்புகளை ஏற்படுத்துகிறது. சிகிச்சையின் மூலம் எலும்பை மீட்டெடுக்கலாம். அதோடு எலும்புகளை வலுவாக்க வைட்டமின் டி மற்றும் கால்சியம் அவசியம்.

கால்சியம் நிறைந்த உணவுகள்

  • கீரைகள்
  • வெள்ளை பீன்ஸ்
  • காலே
  • வெண்டைக்காய்
  • கால்சியம் செறிவூட்டப்பட்ட ஆரஞ்சு சாறு
  • பாதாம் பால்
  • செறிவூட்டப்பட்ட தானியங்கள்
  • குறைந்த அயோடின் உணவுகளில் வைட்டமின் டி காணப்படுகிறது.

ஹைப்பர் தைராய்டு இருந்தால் தவிர்க்க வேண்டிய உணவுகள்

ஹைப்பர் தைராய்டு இருந்தால் அதிகப்படியான அயோடின் நிறைந்த அல்லது அயோடின் செறிவூட்டப்பட்ட உணவுகளை சாப்பிடுவது அதிகரிக்கும் அல்லது மோசமாக்கும்.

தேசிய சுகாதார நிறுவனங்களின் கூற்றூப்படி ஒரு டீஸ்பூன் அயோடைஸ் உப்பில் 304 மைக்ரோகிராம்கள் அயோடின் உள்ளது.

கடல் உணவுகளில் அதிக அயோடின் உள்ளது. மீன், கடற்பாசி, இறால்கள், நண்டுகள், பாசி, போன்றவற்றில் அயோடின் அதிகம் உள்ளது. அதை தவிர்க்க வேண்டும்.

  • பால் மற்றும் பாலாடைக்கட்டி
  • முட்டையின் மஞ்சள் கரு
  • அயோடின் உப்பு
  • அயோடின் கலந்த நீர்
  • சில உணவு வண்ணங்கள்

பசையம் சிலருக்கு வீக்கத்தை உண்டாக்கும். தைராய்டுக்கு தீங்கு விளைவிக்கும். பசையம் ஒவ்வாமாமை அல்லது சகிப்புத்தன்மை இல்லாவிட்டாலும் பசையத்தை கட்டுப்படுத்துவது நன்மை பயக்கும்.

  • கோதுமை
  • பார்லி
  • மால்ட்
  • ஈஸ்ட்
  • சோயாவில் அயோடின் இல்லை என்றாலும் விலங்குகளில் ஹைப்பர் தைராய்டிசத்துக்கு சில சிகிச்சைகளில் தலையிடப்படுவதாக காட்டப்பட்டுள்ளது.

சோயா பால் , டோஃபு அடிப்படையிலான க்ரீம்கள், காஃபின், டீ சோடா மற்றும் சாக்லேட் போன்ற காஃபின் உணவுகள் பானங்கள், ஹைப்பர் தைராய்டிசத்தின் அறிகுறிகளை அதிகப்படுத்தி கவலை, பதட்டம், எரிச்சல் மற்றும் விரைவான இதயத்துடிப்பு ஆகியவற்றை அதிகரிக்க வழிவகுக்கும்.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!

கருவுறுதலுக்கு முன்பே தைராய்டு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கர்ப்பகாலத்தில் தைராய்டு உறுதியானால் மருத்துவரின் ஆலோசனையுடன் வாழ்க்கை முறை உணவு முறையில் கவனம் செலுத்தினால் ஆரோக்கியமான பிரசவம் உண்டாகும். பிறக்கும் குழந்தைகளும் எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக பிறப்பார்கள்.

இறுதியாக கர்ப்பகாலத்தில் தைராய்டு பிரச்சனையை எதிர்கொள்ளும் பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த உணவுகள் அடிப்படையில் அவர்களது உடல் நலனுக்கேற்ப மாறுபடலாம். அதனால் மருத்துவர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் உணவு முறையை பின்பற்ற வேண்டும்.

3/5 - (1 vote)

பொதுத்துறப்பு

பொதுத்துறப்பு ஜம்மி ஸ்கேன்ஸ் (Jammi Scans) வழங்கும் கட்டுரைகள், தகவல்கள், வீடியோக்கள் போன்றவை தகவல் தொடர்பு நோக்கங்களுக்காக மட்டுமே. இவை எல்லாமே மகப்பேறு மருத்துவர்கள், ஸ்கேன் பரிசோதனை நிபுணர்கள், அதற்கான நடைமுறைகள் போன்றவை நிபுணர்களால் வழங்கப்படும் பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எங்கள் இணையதளத்தில் இருக்கும் கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் பொதுவான விஷயங்கள் குறித்து மட்டுமே வழங்கப்படுகின்றன. வீடியோக்களில் இருக்கும் தகவல்களும் , கட்டுரைகளும் தனிப்பட்ட நபர்களுக்கான நோயறிதல் குறித்தவை என்று கருதக்கூடாது. அதனால் இதன் வாயிலாக வெளியிடப்படும் சிகிச்சை முறைகளை சுயமாக செய்து கொள்ள கூடாது. ஜம்மி ஸ்கேன்ஸ் தளத்தில் வெளியான கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் மூலம் நோயறிதலையும், சிகிச்சையையும் சுயமாக செய்து கொள்ள கூடாது. மாறாக உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனை செய்த பிறகு உரிய சிகிச்சை பெறுவது நல்லது. ஜம்மி ஸ்கேன்ஸ் உருவாக்கும் (இணையதளம் மற்றும் அச்சு) தகவல்கள் மருத்துவ ரீதியிலான பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எந்தவொரு தனி நபருக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் கட்டுரைகள் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி கூறுகிறோம். அதனால் தனிப்பட்ட முறையில் சுயமாக ஒருவர் சிகிச்சை கொள்வதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது என்பதையும் இத்தருணத்தில் உறுதி அளிக்கிறோம். ******** உங்களின் பாதுகாப்பை எங்களின் முன்னுரிமையாகக் கருதி, குறைந்தபட்ச நபர்களுடன் செல்லுமாறு ஜம்மி ஸ்கேன்ஸ் கேட்டுக்கொள்கிறது. PC-PNDT சட்டத்தின்படி, உங்களுடன் வரும் நபர்கள் ஸ்கேன் அறைக்குள் உங்களுடன் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பானதாக்க இந்த கடினமான காலங்களில் நீங்கள் எங்களுடன் ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறோம்.
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »